கடவுளைக் கண்டேன்! தொடர்ச்சி .10.
*கடவுளைக் கண்டேன்!*
தொடர்ச்சி..10
*நண்பனே பகைவன்,! நண்பனே எதிரி!*
*நண்பனே துரோகி!*
*நல்லோர் மனத்தை நடுங்க செய்யாதே !*
*மனம் மொத்த நட்பிற்கு வஞ்சகம் செய்யாதே !*
வள்ளலார் சொல்லியது !
*கடந்த வாரக் கட்டுரையை படித்துப் பார்த்த நண்பர் ஒருவர்,ஆடிட்டர் இராம சுப்ரமணியம் ஐயா அவர்கள் மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார் அவர் படித்து பார்த்துவிட்டு,என்னிடம் போனில் தொடர்புகொண்டு ரொம்ப நேரம் மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ந்தார், அவர்பெயர் சேகர் அவரும் ஆடிட்டராக உள்ளார்.*
*தொழிற்சாலை ஆய்வாளர் !*
*சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு மாற்றலாகி வந்தவர், தொழிற்சாலைகளின் ஆய்வாளராக பணிபுரிந்தவர் மணிவண்ணன் என்பவர். அவரும் அவருடைய மனைவியும்.துணி தைப்பதற்காக எங்கள் கடைக்கு வந்தார்கள், அவர்கள் விருப்பபடி துணி தைத்து கொடுத்ததால்நட்பும் பழக்கமும் அதிகமாயிற்று*
வீடு வாடகை !
*நல்ல தண்ணீர் வசதியான வீடு வாடகைக்கு வேண்டும் என என்னிடம் சொன்னார்கள்.நாங்கள் இடையன்காட்டுவலசு ஒத்தைப் பனைமரம் என்ற இடத்தில் லைன் வீட்டில் குடி இருந்தோம், அதில் ஒரு வீடு காலியாக இருக்கிறது. வந்து பாருங்கள் பிடித்தால் வந்து விடுங்கள் என்றேன்.அந்த வீட்டு உரிமையாளர் பழனிச்சாமி என்பவர் முன்னாள் வார்டு உறுப்பினர் எமக்கு நன்கு பழக்கமானவர் என்றேன்*
*வீட்டை வந்து பார்த்தார்கள் பிடித்துவிட்டது,உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடிவந்து விட்டார்கள்.*
*ஈரோடு டவுன் காவல்துறை துணை ஆய்வாளர் சாகுல்அமீத் அவர்கள் குடும்பமும் எங்கள் லைன் வீட்டில் குடி இருந்தார்கள்.*
*நாங்கள் மூன்று குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வந்தோம். சமையல் உணவுப் பொருள்கள் முதற்கொண்டு கொடுப்பதும் வாங்குவதும், பரிமாற்றம் செய்யும் அளவிற்கு மூன்று குடும்ப பெண்களுக்கும் நல்ல பழக்க வழக்கம் இருந்தது.அது கொஞ்சம் காலம்தான் நீடித்தது.*
*அவர்கள் இரண்டு குடும்பமும் அரசு சம்பளம் வாங்குபவர்கள்,நாங்கள் தையல் தொழில் செய்து சம்பாதித்து வாழ்பவர்கள், இருந்தாலும் எங்களின் குடும்ப வாழ்க்கை, கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தை வளர்ப்பு, போன்ற செயல்கள் அந்த இரண்டு குடும்ப பெண்களுக்கும் பொறாமை என்ற குணம் பற்றிக் கொண்டது. அவர்கள் தேவை இல்லாமல் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது,தற்பெருமை பேசுவது, வெட்டி பந்தா காட்டுவது என் மனைவிக்கு பிடிக்கவில்லை.பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்றேன்*
என் மனைவிக்கு உண்மை ஒழுக்கம்
நேர்மை மிகவும் முக்கியமானதாக கருதி வாழ்பவள்
*மேலும் அரசு அதிகாரிகளின் மனைவிகள் என்றால் பெருமை மிக்கவர்கள் அதிகாரம் பெற்றவர்கள். மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என நினைக்கும் அற்ப குணமுடையவர்கள்*,
*மேலும் அரசு அலுவலக பியூன்களைக் கொண்டு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கி வரச்செய்வது,மேலும் வண்டி வாகனங்களை சுத்தப் படுத்துவது. வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வது,குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அழைத்து வருவது,மேலும் எல்லா வேலைகளையும் தங்களுக்கு அடிமைபோல் வேலைக்காரனைப் போல் பயன் படுத்திக் கொள்வதால், எல்லோரையும்விட தங்களை உயர்ந்தவர்களாக வெளியே பந்தா காட்டிக்கொள்வது அப் பெண்களின் பழக்கம்.*
*மற்ற குடும்ப பெண்களைக் காட்டிலும் தாங்கள்தான் அறிவாளிகள் புத்திசாலிகள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டு மிகுந்த ஆணவத்துடன் ஒருவரை ஒருவர் புறம் பேசுவதும் கிண்டல் அடிப்பதும் வாடிக்கையாக கொண்டு அந்த இரண்டு அதிகாரிகளின் மனைவிகளும் பேசுவதால், என் மனைவி அவர்களுடன் பேசுவதையும் தொடர்பு கொள்வதையும் நிறுத்திக் கொண்டாள்.*
*அது அவர்களுக்கு மேலும் கோபத்தையும் வக்ர புத்தியும் உண்டாக்கியது.அவர்கள் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லை கண்மூடித் தனமாக நம்புபவர்கள்.*
*அவர்களுடைய கணவன்மார்களிடம் எங்களைப்பற்றி ஒன்று கிடக்க ஒன்று பொய்யான விஷயங்களைச் சொல்லி விரோதத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அந்த மணிவண்ணனும் சாகுல்அமீதும் என்னிடம் நன்றாக பேசியவர்கள் மனைவிகளின் பேச்சைக் கேட்டு என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.நான் எதையும் கண்டு கொள்ளாமல் என் தொழிலில் கவனமாக இருந்தேன். எங்களிடம் துணி தைப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள்*
*வேறு தையல் கடைகளில் ஜாக்கெட் (பிளவுஸ்) தைக்க துணி கொடுத்து உள்ளார்கள். அவர்கள் தைத்து கொடுத்தது, பிட்டிங் சரியில்லாத்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர்கள் ஆபீஸ் பியூனிடம் ஜாக்கெட் தைக்க துணி கொடுத்து அனுப்பி உள்ளார்கள். அவர் துணிகளை கொண்டு வந்து கொடுத்து நடந்த விபரத்தைச் சொல்லி துணி தைத்து தரும்படி கொடுத்தார். அவர் நல்ல மனிதர் என்னிடம் நல்ல அன்பு கொண்டவர்*
துணி வாங்காமல் திருப்பி அனுப்பியது!
*எங்கள் கடையில் வேலை அதிகமாக உள்ளது இப்போது தைத்துதர வாய்ப்பில்லை,ஒருமாத காலமாகும் என்றேன்,சரிங்க கேட்டு வருகிறேன் என்று துணி எடுத்துக் கொண்டு சென்று விட்டார்*
*என்மேல் புகார் கொடுத்தவன்!*
*பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் அவர் மனைவி, துணி தைத்து கொடுக்காமல் ஸ்பென்ஸர்ஸ் டெய்லர் வாங்க மறுத்து விட்டார் என்று மனைவி சொல்லியுள்ளார். அரசு அதிகாரி என்று தெரிந்தும், துணி தைத்துதர மறுத்தது அவருக்கு அதிக கோபத்தை உண்டாக்கிவிட்டது.*
*அவருக்கு அதிக கோபத்தை தூண்டி பழிவாங்கும் அளவிற்கு அவர் மனைவி சொல்லியுள்ளார், சரி நான் அவரை வேறு வழியில் பழி வாங்குகிறேன் என்று பழிவாங்க ஆரம்பித்து விட்டார்*
பொய் புகார் கொடுத்தல்!
*மனைவியின் பேச்சைக் கேட்டு, என்னுடைய "ஸ்பென்ஸர்ஸ்" தையல் கடைமீதும் என்மீதும் வருமானவரி அலுவலகத்திற்கு,வருமானவரிஏய்ப்பு செய்வதாக பொய்புகார் கொடுத்துள்ளார்.என்பதை ஆடிட்டர் இராம சுப்ரமணியம் ஐயா மூலமாக தெரிந்து கொண்டேன்*
உண்மை அறிந்த நான் அவர் மீது புகார் கொடுத்தேன்.!
*பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அவர்மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தேன். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் அரசு அதிகாரி என்பதால் மணிவண்ணன் அலுவலகத்திற்கு சென்று உங்கள் மீது லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது ஞாக்கிரதையாக இருங்கள் என அட்வைஸ் செய்துவிட்டு சென்றுள்ளார்கள், நான்தான் புகார் கொடுத்துள்ளேன் என்பதை அதிகாரிகளின் வாயிலாக தெரிந்து கொண்டார் மணிவண்ணன்*
*ஆள் வைத்து அடிக்க திட்டம் !*
*அக்காலத்தில் ஈரோடு மரப்பாலம் என்ற இடம் ரவுடிகள் அதிகம் உள்ள பகுதியாகும், பணம் கொடுத்தால் எதையும் செய்வார்கள். மணிவண்ணனுக்குத் தெரிந்த ஆட்களைக் கொண்டு என்னை அடிப்பதற்கு திட்டம் வகுத்து ஏற்பாடு செய்துள்ளார்.*
*நான் கடையின் வேலையை முடித்துக் கொண்டு இரவு 9-00 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.*
*எங்கள் வீட்டின் வெளியே நான்கு ரவுடிகள் என் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்து உள்ளார்கள் அவர்கள் மணி வண்ணனுடன் பேசிக் கொண்டு இருப்பதை என் மனைவி தெரிந்து கொண்டு பக்கத்து வீட்டில் உள்ள லேண்ட லைன் போனி்ல் பயத்துடன் விபரம் தெரிவித்தாள், சரி நீ எதற்கும் பயப்படாதே, குழந்தைகளை சாப்பிட வைத்து கதவை சாத்திக்கொண்டு உள்ளே படுத்துக் கொள், எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்என்னைத் தவிர வேறு யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்காதே என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன். எதையும் சந்திப்பேன் சாதிப்பேன் என்பது என் மனைவிக்கு நன்கு தெரியும்*
*கோவை S P க்கு தகவல் தெரிவித்தல் !*
*அப்போது ஈரோடு டவுன் தாலுக்கா தலைமை காவல் நிலையம் உள்ளது. அதில் புகார் கொடுக்கலாம் என்றால் நாங்கள் குடியிருக்கும் லைன் வீட்டில் குடியிருப்பவர் சப் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது,அவர் மணிவண்ணன் நண்பர் அதனால் நேர்மையாக கண்டிக்க மாட்டார், விசாரிக்க மாட்டார் என்ற எண்ணம் எமக்குத் தோன்றியது. அதனால் ஈரோட்டில் புகார் கொடுக்கவில்லை.*
*நேரடியாக கோவை மாவட்ட S P யிடம் புகார் கொடுக்கலாம் என எண்ணம் தோன்றியது.கோவை SP காவல் நிலையத்திற்கு என் கடையில் உள்ள போனில் அவசரகால லைட்டிங்கால் புக் செய்து தொடர்பு கொண்டேன்*
*அப்போது கோவை மாவட்ட காவல்துறை SP யாக திரு.பஞ்சாட்சரம் அவர்கள் பணியில் இருந்தார். நல்ல நேர்மையானகாவல்துறை அதிகாரி ஆவார்.*
அதன்பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
*வள்ளலார் பாடல்!*
தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனிஆற்றேன்!
*வள்ளலார் பாடிய பாடல்போல் அப்போது என் மனம் ஊசலாடியது.*
*எனக்கு தாயும் தந்தையும் சிறு வயதிலே காலமாகி விட்டார்கள் ஆகையால் என்னை ஆதரிக்க அரவணைக்க காப்பாற்ற ஆண்டவரைத் தவிர வேறு உற்ற துணை யாரும் இல்லை என்பதை எப்போதும் உணர்வேன். மனிதர்கள் யாரையும் நான் முழுவதுமாய் அப்போதும் இப்போதும் எப்போதும் நம்புவதே இல்லை.*
தொடரும்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு