சனி, 22 ஆகஸ்ட், 2020

சுத்த சன்மார்க்க கொள்கைகள் !

 *சுத்த சன்மார்க்கக் கொள்கைகள்* 


 மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுத்ததே உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்கே...


 வள்ளலார் கற்பித்துள்ள சுத்தசன்மார்க்க கொள்கையில்.

*சிறு தெய்வ வழிபாட்டிற்கு இடம் இல்லை.  *ஒரே தெய்வ வழிபாடு*  என்பதை மட்டுமே சுத்த சன்மார்க்கிகள்  பின்பற்ற வேண்டியது அவசியமாகும்..


வள்ளலார் ஆரம்பத்தில் எல்லா தெய்வங்கள் மீதும் பாடலும் பாடி  .

வழிப்பட்டும் வந்துள்ளார் .


*இறுதியாக என்ன சொன்னார் என்பதுதான் நமக்கு ரொம்ப முக்கியமானதாகும்*. 


உலகில் மனிதனால் படைக்கப்பட்ட.

தத்துவ தெய்வங்களை வழிப்பட்ட காலத்திலும் உண்மையான தெய்வத்தை அறிந்துகொள்ள பசித்திருந்து. தனித்திருந்து.

விழித்திருந்து தேடிக்கொண்டே இருந்தார்.


*வள்ளலார் பாடல்* !


தேடிய துண்டு நினது உரு வுண்மை

தெளிந்திடச் சிறிது நின் னுடனே


ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே

உரைத்ததும் உவந்ததும் உண்டோ


ஆடிய பாதம் அறியநான் அறியேன்

அம்பலத் தரும்பெருஞ் சோதி


கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்

கூறவுங் கூசும்என் நாவே.! 


மேலும்..


மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல்உன் தன்னையே மதித்துன்


சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவவே றெண்ணிய துண்டோ


தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்


நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே.! 


மாயையில் கலங்கி வருந்திய போதும் .பல தெய்வங்களை வழிப்பட்ட போதும் *உன் தூய பொற்பாதம் அறியவும்  உண்மை உருவத்தை அறிந்து கொள்ளவும்* .பல வண்ணங்கள் வடிவங்களால் தோற்றுவிக்கப் பட்ட தெய்வங்களையும் வழிபட்டேன் அவற்றில் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.எனக்கு உண்மை இறைவனைக்காட்டி அறிவை தெளிவிக்க வேண்டும்  என்கிறார்.


*வள்ளலார் பாடல் !*

வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்

மன்னிய உண்மை ஒன்றென்றே


எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்

திறையும்வே றெண்ணிய துண்டோ


அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்

அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்


திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்

தெளிவித்துக் காப்பதுன் கடனே.! 


மேலே கண்ட பாடல்களிலே மக்களுக்காக தெளிவாக விளக்கி விளக்கம் தருகின்றார்.


உலகில் உள்ள எல்லாவற்றுக்கும்

*அருட்பெருஞ்ஜோதி* யே காரண காரியமானது என்னும் உண்மையை அருளால் அறிந்து கொள்கிறார்.


வள்ளலார் சொல்வதை கவனிக்கவும் . 

 

சர்வ சித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர்.


 ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவ சித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள ஆன்மா ஜீவ அணுக்கள். 


மேற் குறித்தவர்களது பதப் பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் *சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள*. 


ஆதலால் இவர்கள் அந்தச் *சர்வ சித்தியை யுடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள்*. *ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. சுத்த சன்மார்க்க கொள்கை அல்ல*.


மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், 


*சர்வ சித்தியுடைய கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவருண்டென்றும்* அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, *பூரண சித்தியைப் பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கக் கொள்கையாகும்*


மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.


இதற்குப் பிரமாணம்:  *சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், *அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். 


வள்ளலார் பாடல் ! 


சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

*தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்*


என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

*எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்*


புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்


தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! 


*மேலும்...*


அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை

*அறிவறியார் வார்த்தை  எதனால் எனில் இம் மொழிகேள்*


உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்


மறங்குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்


இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.! 


மேலே கண்டபாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.உண்ணுவதும் உறங்குவதும் இறத்தலும் பிறத்தலும் உள்ள தெய்வங்களை வணங்குவது அறிவு அறியார் வார்த்தை என்று சொல்லுகின்றார்.


*மேலும் வருத்தமுடன் சொல்லுகின்றார்*.


மேட்டுகுப்பத்தில் திருக்கதவும் திறந்து திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் *இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் *சன்மார்க்க ஒழுக்கம்* இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை என்று வேதனையுடன் வெளிப்படுத்துகின்றார்.


யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; *எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார சங்கற்ப விகற்ப வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்* என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


பின்பற்ற வேண்டியது சமரச சுத்த சன்மார்க்க  சத்திய சங்க  கடமையாக இருக்கவேண்டும்


சமய மதத்தில் உள்ளவர்கள். மேல்படியாகிய சுத்த சன்மார்க்க ஞான மார்க்கத்திற்கு வரவேண்டும். வந்துதான் ஆகவேண்டும் .

இங்கே வந்தால்தான் அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப லாபத்தை அடைய முடியும்.


சமய மதத்தில் பின்பற்றுபவர்கள். சிலர் இங்கே வந்து சமயத்தையும் சுத்த சன்மார்க்கத்தையும் ஒன்று சேர்த்து குழப்பி புதியதாக வரும்  மக்களை குழப்பிக்  கொண்டுள்ளார்கள்.


*தெளிவான சன்மார்க்கிகள்* ! 


வள்ளலார் கொள்கையானது மூடநம்பிக்கை அற்ற  முற்போக்கு அறிவியல் விஞ்ஞானம் வேதியல் சார்ந்த ஆன்மீகம் என  அறிந்து பின்பற்றுவதற்கு ஆவல்கொண்டு.

சுமார்  15 பதினைந்து ஆண்டுகளாக நிறைய வாலிபர்கள்.

பெண்களை். மற்றும் 

புதியவர்கள் . *உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து கொண்டே உள்ளார்கள்* அவர்கள் தெளிவான சிந்தனையில் வருகிறார்கள்  தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்களை சில  அரைகுறை  சன்மார்க்கிகள் மூடநம்பிக்கையை புகுத்தி குழப்பம் செய்து கொண்டு உள்ளார்கள். 


அவர்கள் அப்படி செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது. 


எனவே சன்மார்க்க அன்பர்கள்.மற்றவர் சொல்வதை வைத்து குழுப்பம் அடையாமல். வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை நன்கு ஊன்றி  படித்தால் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.எளிய தமிழில்தான் எழுதி வைத்துள்ளார்.


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள்* !


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* ! 


சிறு தெய்வ வழிபாடு கூடாது.! 


தெய்வங்களின் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது ! 


உயிர்க்கொலை செய்யக்கூடாது புலால் உண்ணக்கூடாது.


ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்! 


எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் ! 


ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை பின்பற்ற வேண்டும் !


வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.

சாத்திரங்கள்  இதிகாசங்கள் உண்மையை தெரிவிக்கவில்லை பின்பற்ற வேண்டாம் ! 


கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல்  கூடாது ! 


மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளல் கூடாது! 


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது. 


கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும். கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப்போக வேண்டும் !


சமாதி பழக்கம் பழக்கம் அல்ல சகஜ பழக்கமே பழக்கம் ! 


எதிலும் பொது நோக்கம் வேண்டும்.


சாகாதவனே சன்மார்க்கி ! 


போன்ற புரட்சி கொள்கைகளை.

சுத்த சன்மார்க்கிகள் இடைவிடாது கடைபிடிக்க வேண்டும். 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!


சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், *காமக் குரோதம்* முதலியவைகள் நேரிட்ட காலத்தில் *ஞான அறிவினால்* தடுத்துக்கொள்பவரும், *கொலை புலை* தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் *சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்*. 


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம்* - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.! 


வள்ளலார் பாடல் ! 


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.!


மனித குலத்தை மேம்படுத்த சுத்த சன்மார்க்கமே  சிறந்த ஞான மார்க்கமாகும். 


*வடலூரை நோக்கி மக்கள் திரளாக வரத் தொடங்கி விட்டார்கள்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு