சனி, 29 ஆகஸ்ட், 2020

ஒருமையில் உலகம் எல்லாம் ஓங்குக !

 *ஒருமையில் உலகம் எல்லாம் ஓங்குக!* 


ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயமாய்.பிரிவினை இல்லாத.

பேதமில்லாத உலகமாய். ஒற்றுமையாய்  உலகம் எல்லாம் ஒரே கொள்கையைப் பின்பற்றி.ஒரேத் தன்மையாய் ஒரே சமநோக்கோடு சீராய் மனிதகுலம் மகிழ்ச்சி யுடன் வாழ்வேண்டும் என்பதே வள்ளலாரின் வேண்டுகோளாகும். 


பலவகையான சாதி சமயம் மதக் கொள்களைக் கொண்ட இவ்வுலகில் இவை எப்படி சாத்தியமாகும் ? எந்த வழிமுறையில் சரிசெய்து நடைமுறைப் படுத்த முடியும் ? இவற்றை சமநோக்கான செயல்பாட்டிற்கு எவ்வாறு கொண்டுவர முடியும். என்பைதை சிந்தித்து பல அறிஞர் பெருமக்கள்.

சிந்தனையாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் பல புரட்சிக் கருத்துக்களை எடுத்துரைத்தும்.

அவற்றிற்காக

போராடியும் வெற்றிபெற முடியாமல் தோல்வியே கண்டார்கள்.


இன்னும் பல சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டும் வருகிறார்கள். 


*வள்ளலார் கொண்டுவந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*.


*முடியாததை வள்ளலார் எப்பொழுதும் சொல்லமாட்டார்*. *வள்ளலார் வாக்குகள் யாவும் அருள் வாக்காகும்*.


வள்ளலார் பாடல் ! 


அத்தா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ் சோ தியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்*

*ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்*


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.! 


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்பதே வள்ளலாரின் கொள்கையாகும்.

அவரின் உண்மையான பேராசையாகும். 

 

உலகின் பழைய வரலாற்றை.

பழைய சமுதாயத்தை.

பழைய குப்பைகளை  அகற்றி.உலகம் 

முழுவதிலும் புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையைத் தோற்றுவித்து புதிய சமுதாயத்தை புதிய வரலாற்றை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். இதுவே *இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்*. 


வள்ளலார் பாடல் ! 


திருநெறி ஒன் றே அதுதான் சமரச சன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


மேலே கண்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க திருநெறியின் வாயிலாக புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.என்பதே வள்ளலாரின் எண்ணத்தில் எழுந்த எழுச்சியாகும்.


*வள்ளலார் பாடல் !*

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்


பெருமை கொள் சமரச சுத்தசன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்


அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே


இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.!  


உலகமே ஒருமையில் ஓங்கவும். பெருமை பெறும் சுத்த சன்மார்க்கத்தின் பெரும் புகழை பெரியவர்கள் எல்லாம் சூழ்ந்து பேசிமகிழவும் இம்மை இன்ப வாழ்வும். .மறுமை இன்ப வாழ்வும் .பேரின்ப வாழ்வும் பெற்று ஆனந்தமுடன் வாழ்வாங்கு வாழவும் அருள் வழங்க எழுந்து அருள்வாய் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற வேண்டும்.

உலகில் இயங்கிக் கொண்டுள்ள கருணை இல்லா ஆட்சியை இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் முதல் பணியாகும்.


*வள்ளலார் பாடல் !*  

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - 


தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று நினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து.


எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல். சாதி.சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் சரி சமமான வாழ்க்கையும்.மகிழ்ச்சி நிறைந்த  வசதியோடும்  ஒற்றுமையாய் ஒருமையுடன் வாழ வேண்டும்.அப்போதுதான் அனைவரும் இசைந்து வாழமுடியும்.


*சரிசமம் என்றால் எங்கனம் எவ்வாறு !*


உலகில் உள்ள ஒவ்வொருவரும் தாம் செய்யும் தொழிலும். பொருளாதாரம் தான் ஏற்றத்தாழ்வை  நிர்ணயம் செய்கிறது.

 மக்களில்  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்து வைத்து இருக்கின்றது.


*இவற்றை சமப்படுத்த ஒரேவழி*


 உலகில் உள்ள அனைவருக்கும் *தாம் செய்யும் தொழிலில் வித்தியாசம் வேறுபாடு இருக்கலாம்.ஆனால் ஊதியத்தில் பொருளாதாரத்தில்  வேறுபாடு இருக்கக்கூடாது.*


உலகில் உள்ள அனைவருக்கும் *ஒரே சம்பளம் ஒரே ஊதியம்* என்ற நிலை வரவேண்டும்.


*சாதாரண கக்கூஸ் துப்புறவு செய்பவராக இருந்தாலும்.உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக இருநதாலும் ஒரே சம்பளமாக ஒரே ஊதியமாக இருக்க வேண்டும்*.


*செய்யும் தொழிலில் வித்தியாசம் இருக்கலாம் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது* எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்  என்ற நிலை வந்தால் சமரசம் என்பது தானே வந்துவிடும்.


இதைத்தான் வள்ளலார் *ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும்* எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்றார்..


ஒரே உலகம். ஒரே கடவுள் .ஒரே ஆன்மகுலம் . ஒரே கொள்கை. ஒரே ஊதியம்.

ஒரே சமமான வாழ்க்கை. ஒரேத் தன்மையான மகிழ்ச்சி வந்துவிட்டால்.


உலகில் எல்லைத் தகராறு. தீவிரவாதம்.

பயங்கரவாதம்.

நக்சல்பார்ட்டி.லஞ்சம் லாவண்யம் .

கொலை கொல்லை.

கற்பழிப்பு . சொத்து அபகரித்தல்.ஏமாற்றுதல். தீங்கு விளைவித்தல். உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன்.பொய்.

சூதுவாது.

பொறாமை. போன்ற எந்த இடையூறுகளும் மக்கள் மனதில் தோன்றாது.


எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் வேற்றுமைக்கு இடமேஇல்லை.இது நடக்குமா ? என நினைக்கலாம் கண்டிப்பாக நடக்கும். இவற்றை சரிசெய்ய கொஞ்ச காலமாகும்.


இதுவே நடுநிலையான ஆட்சி நடத்தும் வழிமுறைகளாகும்.


வள்ளலார் பாடல் ! 


நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்


கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்


படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்


விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.! 


என்னும் பாடலிலே நடுநிலை இல்லா ஆட்சியின் கூட்டத்தைக் கண்டும். கேடு விளைவிக்கும் அதிகாரத்தைக் கண்டும்.அதனால் மக்கள் படும் துன்பம்.துயரம் அச்சம் .பயம் போன்றவைகளால் வரும் இன்னல்களை நினைத்தும்.பார்த்தும்.கேட்டும். நடுநடுங்கி  பயந்தேன் என்கிறார் வள்ளலார்.


இறைவன் படைத்த உலகில் இறைவனால் அனுப்பிய ஆன்மாக்கள்.இறுதியாக மனித தேகம் எடுத்து *அறம் பொருள் இன்பம் வீடு* என்ற நான்கையும் நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து. 


பின்பு அவற்றை முழுவதும் பற்றுஅற விட்டு விட்டு .இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.இயற்கையின் சட்டமாகும்.


 இயற்கை சட்டத்தை மீறி மனிதர்களால் புதிய சாதி சமயம் மதம் போன்ற துன்மார்க்க சட்டத்தை உருவாக்கி மக்களை துக்கம்  துன்பம் என்ற நரகத்தில்  தள்ளி விட்டார்கள்.


*வள்ளலார் பாடல்*! 


பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே


நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே


கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே


எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.! 


என்கிறார் வள்ளலார்.


 நினைத்துகூட பார்க்க முடியாத.சிந்திக்க முடியாத எதிர்பார்க்க முடியாத. பண்ணாத தீமைகளை உருவாக்கி. பைத்தியக் காரத்தனமாக  வாழ்ந்து கொண்டு இருக்கும்.

வாழ வைத்துக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும். மனித குலத்தை. மனிதனால் உருவாக்கிய அதிகாரத்தை  மாற்றி புதிய சமுதாயத்தை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெரும் பொதுக் கொள்கையாகும்.


வள்ளலார் பாடல் ! 


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் 

திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!


இது நானாக சொல்லவில்லை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி சொல்லுகின்றேன்.இனி வரும்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்.


எனவே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.


அவ்வாறு செயல்படவில்லை என்றால்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  நிச்சயம் ஓரம் கட்டப்படுவார்கள். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு