சாகும் கல்வி ! சாகாக்கல்வி !
சாகும் கல்வி ! சாகாக்கல்வி !
கல்வி என்பது அன்பு,அறிவு,ஒழுக்கம்,போன்ற நற்குணங்களைப் பெற்றுத் தருவதாகும்.ஆனால் இன்று கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டும் பயன் தரக்கூடியதாக உள்ளது.அதுவும் நேர்வழியில் பணம் சம்பாதிக்க அந்த கலவி பயன்படாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது .
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கலவி ,அவர்களையும் அவரை சார்ந்தவர்களையும் அழித்து விடுகிறது என்பதை உணர வேண்டும் .
கலவி என்பது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் .தங்களைப் போல மற்றவர்களையும் வாழ வைக்கும் பண்பு உடையதாக இருக்க வேண்டும் .அன்பு,அறிவு ஒழுக்கம் நேர்மை,வாய்மை,இறக்கம் பொது நோக்கம் உள்ள கல்வியே சிறந்த கலவியாகும்.எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழ வைக்கும் கல்வியே சிறந்த கல்வியாகும்..கொலை செய்யாமை ,புலால் உண்ணாமை போன்ற ஒழுக்கத்தை கடைபிடிப்பதே சிறந்த கல்வியாகும் .
கல்வி இரண்டு வகைப்படும் !.
ஒன்று சாகும் கல்வி,மற்றொன்று சாகாக்கல்வி !எந்தவகையிலும் பொருள் சேர்ப்பது சாகும் கலவி ,அறிவுக் கல்வியைக் கற்றுக் கொண்டு இறைவன் அளிக்கும் அருளைப் பெறுவது சாகாக்கலவி யாகும்....சாகாக் கல்வியைக் கற்று வாழ்வதே மனித பிறப்பின் லஷ்யமாகும் .இதை அறிந்தவன் எவனோ அவனே மனிதன்...அவனே இறைவன் ...மனிதனும் தெய்வமாகலாம் ,,என்பது சாகாக் கலவியாகும் ...
சாகாக் கல்வியை கற்றுத் தருவது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .அவர்தான் உலக மக்களுக்கு சாகாக் கல்வியை கற்கும் வழியைக் காட்டி உள்ளார் .அனைவரும் படித்து அதன் வழியில் நின்று மேல் நிலைக்கு செல்லலாம்...
வள்ளலார் மக்களுக்கு போதிக்கும் பாடலைப் பாருங்கள் !
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழிலாகும் இந்நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாம்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே .
மனிதன் மரணம் அடையாமல் ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ,அருளைப் பெறுவதே சாகாத கல்வியாகும்.அதற்கு வழி என்ன வென்றால் .கடவுள் ஒருவரே என்று அறிந்து கொள்ளும் அறிவே மனித அறிவாகும்.அந்த அறிவினால் ,உடம்பையும் உயிரையும் ஆன்மாவையும் தெரிந்து கொள்ள முடியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் ,ஆணவம் ,மாயை,மாமாயை ,பெருமாயை ,கன்மம் ,போன்ற ஐந்து மலங்களையும் ,நீக்கும் வழியைத் தெரிந்து கொள்ளும் வல்லபமே சிறந்த வல்லபமாகும்.
உடம்பானது மண்ணுக்கோ,நீருக்கோ ,நெருப்புக்கோ,காற்றுக்கோ ,கதிர் வீச்சுக்கோ,எமனுக்கோ,கொலைக் கருவிக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயலுக்கோ ,வேறு ஏதாவது அழிக்கும் சக்திக்கோ ,மற்றும் எதனாலும் அழிக்க முடியாத உடம்பையும்.உயிரையும் காப்பாற்ற வேண்டுமானால் வேகாத கால் என்னும் அருள் காற்றை சுவாசிக்க வேண்டும்.
காற்றில் நான்கு வகைகள் உள்ளன..
பூதக்காற்று.அசுத்தக்காற்று.விஷக்காற்று.அமுதக்காற்று என உள்ளன.
நாம் சுவாசிக்கும் காற்று பூதக்காற்று.விஷக்காற்று.அசுத்தக்காற்றை மட்டுமே சுவாசிக்கிறோம்.அமுதக் காற்றை சுவாசிப்பதில்லை.வேகாத காலாகிய அம்முதக் காற்றை சுவாசித்து அருள் உடம்பாக மாற்றும் தொழிலே சிறந்த தொழிலாகும்.அதாவது மெய்த் தொழிலாகும் .
இறைவன் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வதே பேரின்பமாகும்.அதுவே ஐந்தொழில் செய்யும் வல்லபமாகும் .அதுவே என்றும் அழியாத இன்பமாகும்.அந்த இன்பத்தைப் பெற்றுக் கொள்வதே மனிதப் பிறவியின் பிறவிப்பயனாகும்.
என்றும் அழியாத அருளைப் பெற்று ஆன்ம தேகத்துடன் (ஒளி தேகம்) வாழ்வதே,சாகாக் கல்வியாகும் மற்ற கல்வி எல்லாம் சாகும் கல்வியாகும்.
சாகாக் கல்வியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்து வழி காட்டியவர் நமது அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .
அந்த அருளாளர் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து ,உண்மை ஒழுக்கமுடன் வாழ்ந்து அருளைப் பெறுவோம் !மரணத்தை வெல்வோம்.
ஆண்மநேயன் ;--கதிர்வேலு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு