ஞாயிறு, 25 மார்ச், 2012

சக்தி என்பது யாது?


சக்தி என்பது யாது ?

எதை அறிந்து கொண்டால் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டதாகும்.

இக்கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டும் .

தன்னை அறியாமல் உலகத்தை அறிந்து பயன் இல்லை !தான் என்பது என்ன ?தன்னை இயக்கம் பிராணன் என்னும் சக்திதான் ஆன்மா என்னும் உயிர் ஒளியாகும் .தன் உடம்பை இயக்கம் தன் உடம்பில் உள்ள சக்தியான ஆன்மாவை அறிந்து கொண்டால்,நம்மையும் இப் பிரபஞ்சத்தையும் படைத்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்,

நம்முடைய பிராணன் என்னும் ஆன்மாவை அறியத் தொடங்கினால் அனைத்தும் நம் வசப்படும் .ஆன்மாவை வசப்படுத்த தெரிந்து கொண்டால் ,தன் மனத்தைக் கட்டிப் போடமுடியும்.மனத்தை கட்டிப்போட தெரிந்தவர்கள் தன் உடம்பை தன் வசப்படுத்த முடியும்,தன் உடம்பை வசப்படுத்தியவன், இயற்கையில் உள்ள அனைத்தையும் வசப்படுத்தி கட்டிபோட முடியும்.

ஆன்மா என்பது உண்மையானது உண்மையான சக்தியை அறிந்து வசப்படுத்தினால் அனைத்தும் தன் வசமாகும்
இதுவே சக்தி என்பதாகும் இதை அறிந்து கொண்டவர்களுக்கு மரணம் வராது .உண்மையை அறிந்து கொண்டால் .உண்மையானது நம்மை அழைத்துக் கொள்ளும் .உண்மையானது எது ?அதுதான் அருட்பெரும்ஜோதி என்பதாகும். ஆன்மா என்னும் ஒளியை அறிந்து கொண்டால் .நம்மை படைத்த அருட்பெரும்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ளலாம் .

இதை அறியாமல் மற்றவை அறிவது அனைத்தும் அனித்தியமானது.அதாவது அழிந்து போவது, எதற்கும் உதவாத குப்பைகள் என்பதாகும் .

இதை வள்ளலார் ஒரு பாடலில் விளக்குகிறார் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என்ன இனி நீர் சமரச சன்மார்க்க
மேய்ந நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என்தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே .!

உணர்ந்து உயிர்வாழ்வோம் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு