திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வரலாறுகள் !

வரலாறுகள் !
சாகும் மனிதன் வாழ்ந்து காட்டிய வரலாறுகள் செத்துக் கொண்டே இருக்கும்.சாகாதகல்வியைக் கற்று அருள் பெற்றவர்களின் வரலாறுகள் மனித குலத்தை வாழ வைக்கும்
சாகாதவர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ளுங்கள் அதனால் அறிவு விளக்கமும்,ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும்,கிடைக்கும் அதனால் மனிதன் மேன்மை அடையலாம்,
அதைத்தான் வள்ளலார் மக்களுக்கு சொல்லுகிறார் .அந்தப் பாடலை நன்கு படித்துப் பாருங்கள் உண்மைகள் விளங்கும்.
பாடல் !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலரே
வினடதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !
நம்முடைய வரலாறுகள் சாகும் வழியைத்தான் காட்டி உள்ளன .அதனால் நமக்கு என்ன பயன்.எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறதே .மரணத்தை வெல்லும் வழி ஒன்று இருக்கின்றது என்பதை நம்முடைய வரலாறுகள் சொல்லவில்லையே .வரலாறுகளில் வாழ்ந்தவர்களும் .வரலாறுகளை எழுதியவர்களும் மாண்டு போய் விட்டார்களே .
மாண்டு போன வரலாறுகளைப் படிப்பதால் என்ன் பயன் ?என்கிறார் நமது வள்ளல் பெருமான்.
கண்டது,கேட்டது,கற்றது,களித்தது,உண்டது உட் கொண்டது எல்லாம் குறைபாடுகளாகவே உள்ளனவே அதனால் மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளல்பெருமான் சொல்லிய சாகாத வரலாறுகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...மனிதன் மனிதனாக வாழ்ந்து அருளைப் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழலாம் .அதுதான் மனித பிறவிக்கு இறைவன் கொடுத்த வாழ்க்கை முறைகளாகும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு