திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!

வள்ளல்பெருமான் சொல்லிய மரணம் இல்லாமல் பெருவாழ்வு வாழலாம் என்பதை ,வள்ளலார் கொள்கைகளை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்களே சரியாக புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள்.அவர்கள் எப்படி மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியும்.என்பதை நினைக்கும் போது,மிகவும் வேதனையாக உள்ளது.

அவரவர்களுக்குத் தெரிந்த எதோ ஒன்றை சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

உண்மையைத் தெரிந்து கொள்ள ..உபாய மார்க்கம்,உண்மை மார்க்கம் .அனுபவ மார்க்கம் என்று மூன்று வழிமுறைகளை வள்ளல்பெருமான சொல்லி உள்ளார்.

உபாயத்தைக் கொண்டு அறிவது யாதெனில் ,...எதோ ஒன்றை பிடித்துக் கொண்டு கொஞ்சம் அருளைப் பெற்று மேலேறுவது.....

உண்மையை அறிந்து கொண்டு அறிவது யாதெனில் ...அருள் கிடைக்கும் வழியைத் அறிந்து அதை முக்கால் பங்கு அனுபவித்து நீண்ட வருடங்கள் மரணம் இல்லாமல் வாழ்ந்து அனுபவித்து மீண்டும் பிறப்பு எடுப்பவர்கள்.,..

அதை விட அனுபவத்தால் அறிவது யாதெனில்,,தான் முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்று பிறப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

சித்தர்களை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர் .உபாயத்தைக் கொண்டு சென்றவர்கள் கர்ம சித்தர்கள், உண்மையை அறிந்து கொண்டு சென்றவர்கள் யோக சித்தர்கள்.
கடவுள் நிலையை அறிந்து மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்பவர்கள் ஞான சித்தர்கள்.

அதற்குமேல் கடவுள நிலை அறிந்து அதன் மயமானவர்கள் ,அதாவது கடவுளாக மாறியவர் .உலகத்தில் ஒரே ஒருவர்,அவர்தான் வள்ளல்பெருமான்..

ஆதலால் நாம் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க மெய் நெறிக் கொள்கைகைகளை முழுமையாக கடைபிடித்து.மரணத்தை வென்று ,எல்லாம் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் எவ்வுலகமும் ஏத்திட வாழ்ந்திடலாம். .

அன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு