வியாழன், 12 ஜனவரி, 2023

கடவுளைக் கண்டேன்!

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி...12.


*இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !*


*வள்ளலார் பாடல்!*


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்


உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்


பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் 


பொய்மை

பேசாது இருக்க் வேண்டும்


பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 


மதமானபேய்

பிடியாது இருக்க வேண்டும்


மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் 


உனை

மறவாதிருக்க வேண்டும்


மதிவேண்டும் நின்கருணை 

நிதிவேண்டும் 


நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்!


*மேலே கண்ட பாடல் வள்ளலார் இயற்றியது என்பது எனது 35 வயதில் தெரியாது, என்றாலும் எனது வாழ்க்கையில் எனக்குத் தெரியாமலே, உண்மை, ஒழுக்கம், நேர்மை,நல்லோர் நட்பு, பொய் சொல்லாமை,உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, தூய்மையான இறை பக்தி,உயிர் இரக்கம்,ஈகை,கடின உழைப்பு,நோயற்ற வாழ்க்கை போன்ற நல்லொழுக்கங்களை கடைபிடித்து வாழ்ந்து  வந்துள்ளேன்* 


*கடவுள்பக்தி !*


*எனது அப்பா பெயர் சென்னிமலை எங்கள் ஊர் நாட்டான்மைகாரர், அம்மாபெயர் முத்தம்மாள் அவர்கள் இருவரும் தீவிரமான முருகபக்தி கொண்டவர்கள் அதனாலே என் அண்ணாருக்கு சண்முகம் என்றும்,எனக்கு கதிர்வேல் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்,* 


*எங்கள் அப்பா அவர்கள், மாட்டுச்சாணத்தை உலரவைத்து வேகவைத்து சாம்பலாக்கி சுத்தமாக தயாரிக்கப்பட்ட விபூதி பையை எப்போதும் தன் மடியில் வைத்திருப்பார். அடிக்கடி விபூதி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார், பிரச்சனை என்று யார் வந்தாலும் விபூதி  கொடுத்து நல்லது செய்வார்.*


*நான் ஒருவருட குழந்தையாக இருக்கும் போது எங்கள் அம்மா உயிர் அடக்கம் கொண்டார், நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வயிற்றுவலி காரணமாக உயிர் அடக்கம் கொண்டார், அப்பா உயிர் பிரிந்ததற்கு காரணம் விபூதி அதிகம் உட்கொண்டதால் வயிற்றில் தங்கி கட்டிபோல் உருவாகி  வயிற்று வலி தாங்கமுடியாமல் உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் சொல்லி உள்ளதை கேள்வி பட்டுள்ளேன்*


*தீவிர பக்தி!*


*அப்பாவிற்கு முருகபக்தி தீவிரமாக இருந்ததால் எனக்கும் பழனிமுருகன்மேல் அளவுகடந்த தீவிர பக்தி உண்டாயிற்று, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று பழனிக்கோயிலுக்குப் சென்று வழிப்பட்டு வருவது பழக்கமாகவும் விரதமாகவும் கடைபிடித்து  வருவது வழக்கமாக கொண்டு பின்பற்றி வந்துள்ளேன்*


*மேலும்

*ஒவ்வொரு  திங்கட்கிழமை அன்றும் மவுனவிரதம் கடைபிடித்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தோம், தலைமுடி தாடி மீசை எடுக்காமல் சிவனடியார் போல்,நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் அணிந்து சாமியார் போல் வாழ்ந்து வந்துள்ளோம்என்பது  அப்போது தொடர்புள்ள, எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்,அன்பர்களுக்கும்,உற்றார் உறவினர்களுக்கும் தெரிந்த அறிந்த செய்தியாகும்*


*ராஜயோகம்!*


*ஈரோட்டில் உள்ள பிரம்ம குமாரிகள் வித்தியாலயம் சென்று ராஜயோகம் பயிற்சி செய்து வந்தோம், அங்கே போதித்த "கல்பனா" என்ற பெயருடைய சகோதரி அவர்கள் தெளிவான சிந்தனை உள்ளவர், அவர்களுக்கு என் மனைவி மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கரைக் கொண்டவர்,நான் நிறைய கேள்விகள் கேட்பேன் சில கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வார், சில கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறுவார்கள்,*

 *ராஜயோகத்தின் வாசகம் "நான் ஆத்மா என் தந்தை மரமாத்மா" என்று சொல்லும் வாக்கியம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது, ஆனாலும் அந்த பரலோகத்தில் இருக்கும் பரமாத்மா யார் ? அவரின் உண்மையான பெயர் என்ன ? அவர் ஒளியா ?  உருவமா? அருவமா ? அவருக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு எவ்வாறு உண்டாயிற்று ?  ஆத்மா பரமாத்மாவை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏன் உண்டாயிற்று? என்பதை தெளிவாக விளக்கம் சொல்வதற்கு அவர்களுக்கு தெரிவதில்லை* 


*இருந்தாலும் சாத்வீகமான உணவு,  ஒழுக்கமான வாழ்க்கை, சமாதானத்தில்பற்று, அன்பான பழக்க வழக்கம் மற்றும்,இந்திரிய, கரண நல்லொழுக்கம்,மனித நேயத்துடன் சிறந்து விளங்குவார்கள். மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் நல் ஒழுக்கத்தை கடைபிடிக்க கற்றுத் தருவார்கள்*


*சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்றோம்*!


*1979 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், நானும் என் இளையமகன் நந்தகுமார் வயது 6ஆறு இருக்கும், அவரும் நானும் 48 நாட்கள் கடுமையான  விரதம் இருந்து, இருமுடிகட்டிக்கொண்டு, கல்லும் முள்ளும் நிறைந்த,வன விலங்குகள் நிறைந்த  அடர்ந்த காட்டு நடைபாதை வழியாக சபரிமலைக்குச் சென்று ஐய்யப்பனை வணங்கி  வழிபாடு செய்துவிட்டு வந்தோம்.* 


*சபரிமலைக்கு செல்வதற்கு முன் எங்கள் வீட்டில் ஐய்யப்பன் பூசை, பாடல் பஜனை  வழிபாடு அன்னதானம் வைத்திருந்தோம். அந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜயோக போதகர் "கல்பனா" சகோதரி அவர்களை அழைத்திருந்தோம்,அழைப்பை ஏற்று வழிபாட்டில் வந்து கலந்து கொண்டார்கள்*


*அவர்கள் அன்று வழிபாட்டில் பேசியது இன்றுவரை என் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. அவர்கள் சொல்லியது யாதெனில்?*


*நீங்கள் சபரிமலைக்கு போவதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து மது அருந்தாமல், புகை பிடிக்காமல், மாமிசம் உண்ணாமல் தவறான பாதையில் செல்லாமல், பனியையும் குளிரையும் பொருட் படுத்தாமல் காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு வழிபாடு செய்து,அனைத்து நல்லொழுக்கத்துடன் கடைபிடிக்கிறீர்கள், மனதார உளமார பாராட்டுகிறோம், 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தாலே கடவுள் அனுகிரகத்தால்(அருளால்) உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் நன்மை செய்வார் என்ற நம்பிக்கையுடன் விரதம் இருந்து ஒழுக்கத்தை கடைபிடிக்கிறீர்கள், அதேபோல் வருடம் முழுவதும் கடைபிடித்தால் கடவுள் எவ்வளவு பெரிய நன்மை செய்வார் என்பதை சிந்தித்து பாருங்கள் என்றார்.*


*(சிறிய லாபத்துடன் தொடர்ந்து பெரிய லாபம் கிடைக்கும்  என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும் என்றார்)*


*மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல் ஒழுக்கத்தை கடைபிடித்தால்,குடும்பமே கோயிலாக மாறிவிடும் என்றார். நீங்கள் யாவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் இன்பத்துடன் வாழ்வதற்கு கடவுள் கருணை காட்டி அருள் புரிவார் என்பதை நினைவு கொண்டு வாழ்ந்து பாருங்கள் அளவில்லா இன்பத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு கடவுள் அருள்புரிவார் என்றும்,எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவான விளக்கம் தந்தார் கல்பனா சகோதரி அவர்கள்.*


*அந்த வார்த்தைகள் என் மனதில் நீங்காது  நிலைத்துவிட்டது, வழிபாடு முடிந்தது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, வெளியில் சென்று எங்கும் உணவு உண்ணாத கல்பனா சகோதரி அவர்கள் எங்கள் வீட்டில் மட்டும் உணவு உட்கொண்டு அனைவரையும் உளமார வாழ்த்திவிட்டு  சென்றார் என்பது மறக்கமுடியாத உண்மைப் பதிவாகும்* 


*அடுத்து சினிமா உலகம் என்னை ஈர்த்தது அவற்றைப்பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு