அணிந்துரை !
*அணிந்துரை !*
அகத்தே கருத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்துவதற்காக.
இயற்கை உண்மை வடிவினராகிய அருட்பெருஞ்ஜோதிஆண்டவரால் வருவிக்க
உற்றவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.
அருள்நிறைந்து பிறந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
*சாகாக்கல்வி கற்றவர் கற்றுகொடுக்க வந்தவர்.மரணத்தை வென்று முத்தேக சித்தி பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*
உலக மக்களின் நன்மைக்காக.நலனுக்காக ஆறு திருமுறைகளை இறைமொழியான தமிழ்மொழியில் தந்தவர்.
*ஒன்றுமுதல் நான்கு திருமுறைகள் வரை இம்மை இன்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையையும்.* *ஐந்தாம் திருமுறை மறுமை இன்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையையும்.*
*ஆறாம் திருமுறை பேரின்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையை கற்பிக்கப்படும் அருள் நூல்களாகும்.*
*இம்மை இன்ப லாபத்தை இந்திரிய கரண ஒழுக்கத்தினாலும்.*
*மறுமை இன்ப லாபத்தை*
*ஜீவ ஒழுக்கத்தினாலும்*
*ஆன்ம ஒழுக்கத்தினால் பேரின்ப லாபத்தையும் பெறலாம் என்ற ஒழுக்க நெறிகளை மக்களுக்கு போதித்து வழிகாட்டி வாழ்ந்தும் காட்டி உள்ளார்.*
வள்ளலார் எழுதிய ஆறு திருமுறைகளுக்கும் விளக்கம் தருவது ஆறாம் திருமுறையில் உள்ள *அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்*. *1596 வரிகளைக் கொண்ட மிகப்பெரிய அருள்விளக்கம் நிறைந்த அருள் பொதிந்த அகவலாகும்* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அருளப்பட்டதால் அருட்பெருஞ்ஜோதி அகவல் என்று பெயரிடப்பட்டது.*
திரு அருட்பெருஞ்ஜோதிஅகவலுக்கு சன்மார்க்க அன்பர்கள் சிலர் அவரவர்களுக்கு தெரிந்த விளக்க உரைகள் எழுதிஉள்ளார்கள்.
*சங்கராபுரம் செந்தமிழ் அந்தனர் சுத்த சன்மார்க்க சாது தவத்திரு மகாமந்திர கற்கண்டு சிவஞான அடிகள்*
யாரை சந்தித்தாலும் முதலில் கற்கண்டு வழங்கிவிட்டுத்தான் பேசுவதற்கு தொடங்குவார்.
ஆதலால் கற்கண்டு அடிகளார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுபவராகும்.
தயவுத்திரு கற்கண்டு அய்யா அவர்கள் சங்கராபுரம் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருக்குறள் மீதும்.திருஅருட்பா மீதும் அளவற்ற பற்றும் ஈடுபாடும் கொண்டுவர். மாணவ மாணவிகளுக்கு ஒழுக்க நெறிகளை போதித்து.உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருக்க அறிவை விளக்கி. ஊக்கப்படுத்தி மேன்மை படுத்தி உயர்த்தி நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார்.
1983 ஆண்டு முதல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை தீவிரமாக பின்பற்றி. சங்கராபுரம் வள்ளலார் மன்ற ஆலோசகராக பணியாற்றி கொண்டும் வருகிறார். இடைவிடாது ஜீவகாருண்ய உயிர்இரக்கத் தொண்டும் செய்து வருகிறார். பல சுத்த சன்மார்க்கிகளை உருவாக்கி உள்ளார். பல சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்துள்ளார்
*வள்ளலார்கொள்கைகள்*!
1.கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!
2.சாதியும் மதமும் சமயமும் பொய்.
3.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
4.சிறுதெய்வ வழிபாடுகள் கூடாது.
5.வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்.சாத்திரங்கள் உண்மையை தெரிவிக்காது.
6.புலால் உண்ணக்கூடாது.கொலை செய்யக்கூடாது.
7.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும்
ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.
8.இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்க கூடாது.
9. கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்க கூடாது.
மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ள கூடாது.
10.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
மேலே கண்ட சுத்த சன்மார்க்க கொள்கைகளை தனது வாழ்க்கையில் அதி தீவிரமாக கடைபிடித்து வருபவர் தவத்திரு சாது கற்கண்டு அடிகளார் அய்யா அவர்கள்.
15 ஆண்டுகளாக என்னிடம் நெருங்கிய நட்பும் பற்றும் அன்பும் அரவணைப்பும் கொண்டவர்.
சங்கராபுரம் சன்மார்க்க விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும்
என்னை மேடையில் பேசவைத்து அழகுபார்த்து ரசிப்பவர். அய்யா அவர்கள் எனக்கு கிடைத்த மாபெரும் சுத்த சன்மார்க்க பொக்கிஷமாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
*அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு எளிய நடையில் எளிய தமிழில் சுருக்கமாக விளக்கம் அளித்து மிகவும் அற்புதமாக* *அவரது அருள் அனுபவத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ளார்.* *படித்து பார்த்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்*.
*அய்யா அவர்களின் அகவல் உரையின் அருள் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்*.
இந்நூலை சன்மார்க்க உலகம் படித்து பயன் பெற்றிட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்.
கற்கண்டு அய்யா அவர்கள் நீண்ட ஆயுள். நிறைந்த செல்வம். அழியாப்புகழும் அருளும் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரண அருள் வழங்க வேணுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
கல்பட்டு அய்யா நகர்
வடலூர்.
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு