வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

வடலூர் வள்ளலார் தோற்றுவித்த அமைப்புக்கள் !

 *வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த அமைப்புக்கள்*


வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்கள் என்ற பெயர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வைத்ததே தவிர வள்ளலார் வைக்கவில்லை. அந்த பெயர் சரியானதாக தோன்றவில்லை.

*சாதி சமயம் மதம் சார்ந்த பெயராகவே உள்ளது.*


*வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சங்கம். சாலை. சபை என்று பெயர் வைக்கலாம்*


உலக ஆன்மீக ஒற்றுமைக்காகவும்.உலக மனித சமுதாய முன்னேற்றத் திற்காகவும். 

உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மையை வெளிப்படுத்தும் காரணத்திற்காகவும். *உலகில் உயர்ந்த அறிவுபெற்ற மனித சமுதாயம் மரணத்தை வென்று வாழவேண்டும் என்பதற்காகவும்*.சாதி சமயம் மதம் சாராத  மூன்று முக்கிய புதிய சுத்த சன்மார்க்க அமைப்புக்களை வடலூரில்  வள்ளலார் தோற்றுவித்துள்ளார் அவை

 1. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*.

2. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* .

3. *சமரச சுத்த* *சன்மார்க்க சத்திய*

*ஞானசபை*  என்ற பெயரில் தான் அமைத்துள்ளார்.

மேலும் வடலூருக்கு அடுத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்

வள்ளலார் *சித்திபெற்ற இடம் மேட்டுக்குப்பம்.*

*அதற்கு சித்திவளாக திருமாளிகை என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.அங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படுகிறது. அதற்கு திருவறை தரிசனம்  என்று பெயர் வைத்துள்ளார்கள்* இதுவும் வள்ளலார் சொல்லாத செயலாகும். என்பதை சன்மார்க்கிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


*முக்கிய இடங்கள்*


வள்ளலார் பெயரைச் சொல்லக்கூடிய முக்கிய இடங்கள்.

*1 .மருதூர்*

*2. சின்னகாவணம்*

*3.சென்னை*

*4.கருங்குழி*

*5.வடலூர்*

*6.மேட்டுக்குப்பம்.*

என்னும் ஆறு இடங்கள் மிகவும் முக்கியமான இடங்களாகும்.


*சங்கம் சாலை சபை என்ற மூன்று அமைப்புக்களும் வடலூரில் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட வேண்டும்* என்பதே வள்ளலாரின் முக்கிய குறிக்கோளாகும். இந்த மூன்று அமைப்புக்களுக்கும் *தலைவர் யார்? என்றால் இவைகளை படைத்த *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவராகும்.*

*செயல் தலைவர் யார்? என்றால் திருஅருட்பிரகாச வள்ளலார் ஆவார்கள்.*


*வள்ளலார் பாடல்*


உலகமெலாம் போற்ற *ஒளி வடிவனாகி*

இலகஅருள் செய்தான் இசைந்தே

 - திலகன் என

*நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து*!


என்னும் பாடல் வாயிலாக தெளிவாக வள்ளலார் வெளிப் படுத்தியுள்ளார்.


வள்ளலார் தோற்றுவித்துள்ள சங்கம். சாலை.

ஞானசபைக்கு தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி சன்மார்க்க சங்க கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்பவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.*


*வடலூர் வந்தால் என்ன பெறலாம்*


வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் *நல்ல வரமே* என்று  வள்ளலார் அழைக்கின்றார்.

வடலூருக்கு வந்தால் நல்ல வரம் பெறலாம்  என்கிறார்.நல்ல வரம் என்றால் என்ன ? என்பதை இதுவரையில் எவரும் தெரிந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். 


*வடலூர் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*.


உலகில் *அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர்* என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். *அருள் வழங்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.  அருள் பெறுவது சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. ஆதலால் தான் *சாகாதவனே சன்மார்க்கி* என்று அழுத்தமாக சொல்லி உள்ளார். *நல்ல வரமான அருள் வழங்கும் இடமே வடலூர் என்பதால் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறார்*. 


*உலகம் எல்லாம் போற்றக் கூடிய ஒரே இடம் வடலூர்*


*வள்ளலார் பாடல் !*

உலகம் எலாம்  தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே


இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம் எனாநின்றது உத்தர ஞான சிதம்பரமே.!


என்னும் பாடல் வாயிலாக *உத்தர ஞான சிதம்பரம்* என்றும் வடலூருக்கு பெயர் மாற்றம் செய்து தெரிவிக்கின்றார்.


*வடலூருக்கு வருபவர்கள் வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை முழுமையாக பின்பற்றி கடைபிடித்தால் மட்டுமே* *வடலூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு     நல்ல வரமான அருளைப் பெற்று மரணத்தை வெல்லமுடியும்.* 


மேலே கண்ட உண்மைத் தெரியாமல் உலகியல் பற்று உள்ளவர்கள் வடலூருக்கு வந்து தருமச்சாலையில் உணவு உட்கொண்டுவிட்டு ஜோதி தரிசனம் பார்த்துவிட்டு செல்வதால் எந்த பயனும் இல்லை.


*வடலூர் வருபவர்கள் உண்ணுவது.உறங்குவது.ஜோதிதரிசனம் பார்ப்பது சென்றுவிடுவது இதுதான் நடைமுறையில் உள்ளது.* வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளை முழுமையாக எவரும் கடைபிடிக்காததால் எவராலும் மரணத்தை வெல்ல முடியவில்லை.


 வள்ளலார் சொல்லி உள்ள *ஜீவகாருண்யம் என்னும் உயிர்இரக்கம்*.

 *இறைவனை தொடர்பு கொள்ளும் சத்விசாரம்* என்னும் இரண்டும் சுத்த சன்மார்க்கத்தின் இரண்டு கண்கள் போன்றதாகும்.


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் காப்பாற்றும் ஒரே இடம் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூராகும்*.


*மேலும் ஆன்ம இன்ப லாபம் பெற வேண்டிய ஒரே இடம் வடலூராகும்* 


உலக வாழ்க்கைக்கு தேவையான *மண்ணாசை.*

*பெண்ணாசை.*

*பொன்னாசை* போன்ற உலக ஆசைகளில் பற்று

உள்ளவர்கள் வடலூருக்கு  வருவதால் *அருள் பெறுவதற்கோ  *ஆன்ம இன்ப லாபம் பெற்றுக் கொள்வற்கோ* *மரணத்தை வெல்லுவதற்கோ* *துளிகூட வாய்ப்பே இல்லை.*


*சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்.* 


*ஞானசரியை* (மரணம் இல்லாப் பெருவாழ்வு) என்னும் தலைப்பில் 28 பாடல்கள் பதிவு செய்துள்ளார்

அதில் வள்ளலார் சொல்லியவாறு வாழ்க்கையில் தடம் பிறழாமல் கடைபிடிப்பவர்கள் மட்டுமே வடலூரில் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு. *நல்ல வரமான அருளைப்பெற்று* மரணத்தை வென்று *மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழமுடியும்.   மேலும் என்றும் அழியாத.எதனாலும் அழிக்க முடியாத  *பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழலாம்*.


*தற்போது வடலூர் உள்ள சூழ் நிலைகள் மிகவும் வேதனை அளிக்கிறது.*


வள்ளலார் தோற்றுவித்த சங்கம்.சாலை.சபை வள்ளலார் சொல்லியவாறு எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது உலகமே அறியும்.


*கிராமவாசிகளின் ஆதிக்கம்*


அக்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் அந்த அந்த கிராமத்தில் எந்த சாதிக்காரர்கள் அதிகம் உள்ளார்களோ அவர்களில் ஒருவரை நியமனம் செய்து பரிவட்டம் கட்டி அவர் தலைமையின் கீழ்  மாரியம்மன் விழா மற்றும் ஆன்மீக விழா எடுப்பது வழக்கம்.


அதே போல் வள்ளலார் தெய்வநிலையங்கள்  கிராமவாசிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டுள்ளன.


வள்ளலார் பிறந்த மருதூர் தங்கி இருந்த கருங்குழி வாழ்ந்த இடம். சங்கம் சாலை.சபை அமைத்த வடலூர். மற்றும் சித்திபெற்ற  இடமான மேட்டுகுப்பம் யாவும்  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ஆட்சித்துறையின் துணை கொண்டு அந்த அந்த கிராமவாசிகளின் ஆக்கிரப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன.


உதாரணத்திற்கு வள்ளலார் பிறந்த மருதூரில் மருதூர் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது.


கருங்குழியில் கருங்குழி கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது.


வடலூரில் வடலூர் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது..


மேட்டுகுப்பத்தில் மேட்டுக்குப்பம் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடி ஏற்றி விழா எடுக்கப்படுகிறது.


அடுத்து வள்ளலார் சித்திபெற்ற தினத்தன்று வடலூரில் இருந்து மேட்டுகுப்பத்திற்கு ஊர்மக்கள் புடைசூழ மாலை மரியாதையுடன்  பல்லக்கு எடுத்து பரிவாரங்களுடனும்.மேலதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் எடுத்துவந்து திருவறை தரிசனம் திறக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.


இவைகள் யாவும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு நேர் விரோதமானது.என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது


சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது


மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது


மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது 


அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே  என்று வடலூரை போற்றி புகழ்ந்து உலகுக்கு பறை சாற்றுகிறார்.


யார் வேண்டுமானாலும் கொடி ஏற்றி விழா எடுக்கட்டும் தவறில்லை.

வள்ளலார்  சொல்லிய சாதி.சமயம்.மதங்கள் அற்ற சுத்த சன்மார்க்க கொள்கையை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவரவர்கள் விருப்பம் போல் சாதி. சமய. மத ஆச்சார சங்கற்ப விகற்பங்களுடன் நடைபெற்று வருகிறது என்பதை சுத்த சன்மார்க்கிகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. 


எல்லா தவறுகளுக்கும் குற்றங்களுக்கும்  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக அதிகாரிகளே காரண காரியமாக துணையாக இருந்து செயல் பட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.


இவற்றை தட்டிக் கேட்கவும் சரிசெய்யவும் துணிவு தைரியம்  இல்லாமல் சன்மார்க்கிகள் மனம் வெந்து நொந்து  வேதனைப்பட்டுக் கொண்டு உள்ளார்கள். 


*வடலூர் திருந்தினால் உலகமே திருந்திவிடும்*


வடலூர் திருந்தினால் உலகமே திருந்திவிடும் என்ற உண்மை தெரிந்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூரை தேர்வு செய்து திருவருட்பிரகாச வள்ளலார் முன்னிலையில்  சங்கம் சாலை.சபையைத் தோற்றுவித்துள்ளார்.

*கொலை புலை தவிர்க்க வேண்டும்*


வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமானது.

உயிர்க்கொலை செய்யக்கூடாது.

புலால் உண்ணக்கூடாது என்பதாகும்.


*மருதூர்.*

*கருங்குழி* 

*வடலூர்.*

*மேட்டுகுப்பம்* 

இந்த நான்கு கிராமங்களிலும் வள்ளலார் சொல்லியவாறு உயிர்க்கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமலும் வாழக்கூடிய மக்களை அக்கிராமவாசிகள் உருவாக்கினால் அவர்கள் காலில் விழுந்து வணங்க தயாராக உள்ளோம்.


மேலும் வள்ளலார் காட்டிய அருட்பெருஞ்ஜோதி வழிபாடு தவிர வேறு எந்த சமய மத தெய்வ வழிபாடுகளும் நடைபெற அனுமதி வழங்ககூடாது என்ற உண்மையை உணர்ந்து அக் கிராமவாசிகள் கடைபிடிக்க வேண்டும்.


அவ்வாறு அவர்கள் செய்தால் வள்ளலார் தோற்றுவித்த சங்கம்.சாலை.

சபையை அவர்களே முன்நின்று தலைமை ஏற்று நிர்வாகம் செய்ய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணையாக இருப்பார் என்பது சத்தியம். 


*சத்தியவான் வார்த்தை நிச்சயம் நடக்கும்*


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!


வள்ளலார் சொல்லியவாறு எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு