வெள்ளி, 4 டிசம்பர், 2020

அன்பு தயவு கருணை அருள் !

 *அன்பு தயவு  கருணை அருள்* ! 

அன்பு. தயவு . கருணை. அருள் இந்த நான்கு சொற்களுக்கும் உள்ள கருத்துக்களின் விளக்கம் என்ன என்பதையும் அவற்றை எங்கே பயன்படுத்த வேண்டும்?. யாரிடம் பயன்படுத்த வேண்டும்?  எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? என்பதை தெரிந்துகொண்டு அவற்றை முறையாக பின்பற்றி வாழ்ந்தால் ஆன்மலாபம் பெறுவதற்கும் அருள் பெறுவதற்கும் மரணத்தை வெல்வதற்கும் இலகுவான வாய்ப்பாக இருக்கும்.

*அன்பு தயவு கருணை அருள் இந்த நான்கு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.* கேட்பதற்கு ஒரே பொருளைக் குறிப்பதாக இருந்தாலும் அர்த்தங்கள் வெவ்வேறானது என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 

இந்த நான்கு வார்த்தைகளின் தனித்துவம் மற்றும் சிறப்பு உண்மை தெரியாமல் பின்பற்றி வாழ்வதால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள முடியாமலும் அருளைப் பெற முடியாமலும்.மரணத்தை வெல்ல முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளோம்.

*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்லியது*.

*தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.* மேலும் 

*என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* என்பதை வெளிப்படையாக வள்ளல்பெருமான் சொல்லுகிறார்.

*உலகியலில் மற்ற ஞானிகள் சொல்லிய கருத்துக்கள் உண்மையானவை என நினைத்து பின்பற்றி வருகிறோம்*..

வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொல்லுகின்றார்.

இஙப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலே ஏற்றியிருக்கின்றார். *இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* 

என, *தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். *கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது *யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான்* என்னைத் தூக்கி விட்டது. என்று சொல்லுகிறார்.

மேலே கண்ட விளக்கத்தை நாம் புரிந்து கொண்டால் நேர்வழியில் செல்லவும்.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

*அன்பிற்கு என்ன அர்த்தம் எங்கு செலுத்த வேண்டும் ?*

உலகியலில் அன்பு என்பது காதல் என்றும் *அதற்கு அடையாளமாக  இருதயத்தையும் சுட்டிக்காட்டுவார்கள்*.உலகில் உள்ள உயிர் இனங்களில் மேல் எதாவது ஒருவகையில்  காட்டுவது அன்பு என்றும் சொல்லுவார்கள்.

*பிரதிபலனை எதிர்பார்க்காமல் செலுத்துவதே உண்மையான அன்பு* *அது இறைவன் இடத்தில் மட்டுமே உள்ளது.* 

அழியும் உயிர் இனங்களின் மேல் செலுத்தும் அன்பு நிலையானது அல்ல. *நிலையானது எதுவோ அதன்மேல் செலுத்துவதே உண்மையான அன்பாகும்.*

இவ்வுலகில் உள்ள உயிர்கள் மேல்  செலுத்தும் அன்பு மாறுபடுகிறது. அம்மா அப்பா அண்ணன் தம்பி சகோதரி உற்றார் உறவினர் நண்பர்கள் மேலும் உள்ள உயிர் இனங்கள் மேல் செலுத்தும் அன்பு ஒரே மாதிரியாக செலுத்தமுடியாது ஜீவன்களுக்கு தகுந்தமாதிரி வேறுபடுகின்றது.

அதனால் உண்மையான அன்பு ஒரேமாதிரியாக வெளிப்படாது.

எனவே உயிர்கள் மேல் உயிர் இரக்கமான தயவு மட்டுமே செலுத்த முடியும்.

தயவிற்குப் பெயர் பரோபகாரம் என்றும் வள்ளல்பெருமான் சொல்லுவார் மேலும் ஜீவகாருண்யம் என்றும் சொல்லுவார்.

*ஆன்மாவின் இயற்கை குணமே தயவு என்றும் சொல்லுவார்*

சீவகாருணிய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடு மென்பது எப்படி என்று அறியவேண்டில்:-?

*அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு.* *சீவகாருணிய மென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு.*  *இதனால், ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் கூடும்*. *சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல்போல என்றறிய வேண்டும்*.

இதனால் சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்றறியப்படும். *சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்*.

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள இயற்கை உண்மைத்தன்மை யான தயவு வெளிப்படுவதற்கு  ஜீவகாருண்யமே வழியாக உள்ளது.அதன் உண்மைத்தன்மை யான தயவு  வெளிப்பட்டால்தான் உண்மை அறிவும் அன்பும் வெளிப்படும்.

*அறிவு வெளிப்படும்போதுதான் அன்பை எங்கு செலுத்த வேண்டும்  என்ற உண்மை வெளிப்படும்*

*அன்புடையவர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தவர் என்று வள்ளல்பெருமான் சொல்லவில்லை*

*தயவுடையவர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர் என்றுதான் சொல்லுகிறார்.* எனவே *ஜீவர்களிடத்தில் தயவும்*. *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்* என்கிறார்.

தயவின் தொடர்ச்சியே கருணை என்பதாகும்.ஆதலால் தான்  *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* என்பார் வள்ளலார். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் உண்மையான அன்பை செலுத்தி அருள் பெறுதல் வேண்டும்.ஆண்டவர் மீது அன்பு செலுத்தினால் மட்டுமே உயிர்கள் மீது எதிர்பாராத அதாவது பிரதிபலனை எதிர்பார்க்காத  உண்மையான அன்பை செலுத்தமுடியும்.

ஜீவன்கள்மீது உண்மையான காருண்யம். உயிர்இரக்கம் கொண்டால் இயற்கையான கருணை வளர்ந்து முற்றுபெறும். அதனால்தான் கருணையும் சிவமும் ஒன்று என்று சொல்லுகிறார் வள்ளல்பெருமான். 

*ஜீவர்களிடத்தில் தயவும் கருணையும் செலுத்த வேண்டும்*

*ஆண்டவரிடத்தில் அன்பு செலுத்தி அருள் பெறுதல் வேண்டும்*

*வள்ளலார் பாடல்!* 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.! 

மேலே கண்டபாடலில் வள்ளலார் தெளிவாக அன்பின் வளர்ச்சியைத் தெளிவுப்படுத்துகின்றார்.

*மேலும் வள்ளலார் பாடல்* 

துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்

வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்வாழ்வெலாம் பெற்று *மிகவும்மன்னுயிர் எலாம்களித் திடநினைத்தனை* உன்றன்

மனநினைப் பின்படிக்கே*

அன்பநீ பெறுக உலவாது நீடூழிவிளை

யாடுக அருட்சோதியாம்

ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணைஎன்றே

இன்புறத் திருவாக் களித்து எனது உள்ளே கலந்துஇசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்இலங்கு நடராஜபதியே.! 

மேலே கண்ட பாடலில் துன்பம் எலாம் தீர்ந்து சுகம் பலித்த விதத்தை தெரிவிக்கின்றார். பாடலை ஊன்றி படித்து பயன் பெறவும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்9865939896.

1 கருத்துகள்:

13 ஜூலை, 2022 அன்று 6:01 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

அன்பு. தயவு . கருணை. அருள் ...how to clearly distinguish between these?. I am still confused. Could you please?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு