சனி, 31 ஜூலை, 2021

குரு என்பவர் யார் ?

 *குரு என்பவர் யார்* ? 


*மனிததேகம் எடுத்துள்ளவர்கள் எல்லவரும் உயர்ந்த அறிவுள்ளவர்கள் என்பது கடவுளின் படைப்பாகும்*.


*உயர்ந்த அறிவுள்ளவர்கள்  தாழ்ந்த அறிவுள்ளவர்கள் என மனிதர்களை பிரித்தது யார் ?*


*குரு என்பவர்கள் யார். ?*


*உயர்ந்த அறிவுள்ளவர்கள்*  *குறைந்த அறிவுள்ளவர்களின்  அறியாமையைப் போக்குகின்றவர்களையும் மேலும் உலகியல் கல்வி போதிப்பவர்களையும் குரு என்றும் சொல்லப்படுகின்றனர்*


*மாதா பிதா குரு தெய்வம் என்று மூன்றாவது இடத்தில் குருவை சொல்வதுண்டு*.( *மாதாவையும் பிதாவையும் குருவையும் காப்பாற்றுபவரே தெய்வம் என்பவராகும்*)


அறியாமை என்னும் குருட்டுத்தனமான இருளைப் போக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்.


*தெரியாத தொழிலை கற்றுக் கொடுப்பவர்களையும் குரு என்பார்கள்*.


*ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணவம் மாயை  மாயாயை பெருமாயை கன்மம் போன்ற  மலத்தை நீக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்*.


*மலத்தை நீக்குவதற்கு மந்திரங்களைச் சொல்லி தீட்சை வழங்குபவர்களையும் குரு என்பார்கள்*.


ஆலயங்களில் உள்ள சிற்பக்கலைகளான  தத்துவ உருவங்களான தெய்வங்களுக்கு அருகில் இருந்து அபிஷேகம் ஆராதனை பிரார்த்தனை செய்து பிரசாதம் கொடுப்பவர்களும் குரு என்பார்கள்


*ஒவ்வொருவர் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும்  முன்னிருந்து நடத்தி வைப்பவர்களையும் குரு என்கின்றார்கள்*. 


மேலும் *சமயம் மதம் சார்ந்த ஆதினங்கள் போதகர்கள் மற்றும் ஆன்மீக வேடம் தரித்த ஆடம்பரமான வாழ்க்கை நடத்துபவர்களையும் குரு என்கிறார்கள்*.


*மனிதன் பிறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது இறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது*


*இவ்வாறு அறியாமையில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும்  நிறைய  குருமார்கள் தேவைப் படுகிறார்கள்*.


*எல்லா குருமார்களுக்கும் குரு காணிக்கை செலுத்த வேண்டும்*


*உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் படைத்தவர்களுக்கு புற குரு தேவையில்லை*.


*உயர்ந்த குலம் தாழ்ந்த குலம்!*


*குருவாக இருப்பவர்களை உயர்ந்தகுலம் என்றும் கற்றுக்கொள்பவர்களைத் தாழ்ந்த குலம் என்று வகுத்து வைத்துள்ளார்கள்*.


*குருவாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.

*சீடர்களாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.  


*இரு தரப்பினர்களும் மாண்டுபோனால் பூமியில்  புதைக்கிறோம்.*

*மூன்று மாதம் கழித்து தோண்டி பார்த்தால் இருகுலமும் புழுத்து புழுக்குலமாக இருக்கின்றது*.


*புழுக்குலத்தில் உயர்ந்தவன். தாழ்ந்தவன்.குரு சீடன் என்ற பேதம் தெரியாது எல்லாம் புழுக்குலமாகவேகாட்சித்தருகிறது*. 


வள்ளலார் பாடல்! 


*நரை மரண மூப்பறியா நல்ல உடம் பினரே*

*நற்குலத்தார் என அறியீர்* *நானிலத்தீர்* நீவிர்


*வரையில் உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்*

*வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்* ! 


*புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேன்*

*புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே*


*உரைபெறும் என் தனித்தந்தை* *வருகின்ற தருணம்*

*உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே*.!  


*இங்கே குரு என்பவர்! அருளைப்பெற்று அழியாமல் வாழும் வழியைக் காட்டுகின்றவர் எவரோ அவரே குரு என்பவராகும்*. 


மேலும் வள்ளலார் அகவலில் குரு யார்? என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.


*மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குரு வாகிய அருட்பெருஞ்ஜோதி!*(அகவல்) 


*வள்ளலார் ஆரம்பகாலத்தில் நிறைய அருளாளர்களை மற்றும் தெய்வங்களை குரு குரு என பாடிக்கொண்டும் வணங்கிக் கொண்டும் வந்தவர் இறுதியில் இவர்கள் எல்லோரும் குருவுக்குண்டான தகுதி இல்லாதவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்.. *இவர்களுக்கும் மேலான குரு ஒருவர் உண்டு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்கிறார்.*  


*குருவிற்கு உண்டான தகுதி!*


*குரு என்பவர் மரணம். அடையாமல் வாழ்ந்துகொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்* 


*பொருளும் அருளும் வழங்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும்*.


*இடைவிடாது எப்போதும் நம்மை இயக்குபவராக இருக்க வேண்டும்*.


*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும்  தெய்வம் அவரே எல்லோருக்கும் ஞானம் வழங்கும் குருவான தெய்வம்.*


*வள்ளலார்  காட்டிய உண்மையான குரு!*


*அருளரசை அருட்குருவை* *அருட்பெருஞ் சோதியைஎன்*

*அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்*


தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


*மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த*

*வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்*


*கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்*

*கண்டுகொண்டேன்* *கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!*


*தான் குருவாகக் கொண்டு வணங்கி அவர் கருணையினாலே பூரண அருளைப்பெற்று  கனிந்து அழியும் உடம்பை அழியாத உடம்பாக மாற்றிய கருணை நடம் புரிகின்ற கனகசபாபதியைக் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன் என்கிறார்*


*சுத்த சன்மார்க்கிகளுக்கு அருட்குருவானவர்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்*.


( *சன்மார்க்கத்திலும் பணத்திற்காக நிறைய குருமார்கள் தோன்றி உள்ளனர்* *சன்மார்க்கிகள் எதிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது*)


*மேலும் அகவலில் தகவல் சொல்லுகிறார்*.


சிவ ரகசியமெலாந் தெரிவித் தெனக்கே

நவநிலை காட்டிய *ஞானசற் குருவே* !


*சத்தியல்*

*அனைத்துஞ்* *சித்தியல் முழுதும்*

*அத்தகை தெரித்த வருட்சிவ குருவே*!


*அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே*

*பிறிவற விளங்கும் *பெரியசற் குருவே!*


*கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே*

*வேட்கையின் விளங்கும் *விமலசற் குருவே!*


*காண்பவை யெல்லாங்*

*காட்டுவித் தெனக்கே*

*மாண்பத மளித்து* *வயங்குசற் குருவே!*


*அருள் வழங்கும் அருட்குருவின் தன்மையை தெளிவாக விளக்கிச் சொல்லுகின்றார்.*


*எனவே சாகும் சாதாரண மனிதர்களை குருவாக ஏற்றுக் கொள்ளாமல் நம்மை படைத்து வாழவைக்கும் நிரந்தரமான  அருட்குருவான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்*. *அவரே நமக்கு நல்வழியைக் காட்டி மேலே ஏற்றுவார்.*


*எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 29 ஜூலை, 2021

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்!

 *துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்!*


*வள்ளலார் பாடல்!*


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்  *சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கம்* தலைப்பட்டேன்* - என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே *வான் நாட்டார்* *புகழ்கின்றார்*

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் என்கிறார் வள்ளலார். *துன்மார்க்கம் என்றால் எந்த மார்க்கம் ?* 


*உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கத்தை சார்ந்தது என்கிறார்*. 


அப்படியானால் *மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சாதி.சமயம் மதம்சார்ந்த  மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கங்களே* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற்று அங்கும் இங்கும்


போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை* *உணர்த்தி* எல்லாம்


*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ*

*என்பிள்ளை ஆதலாலே*

*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்த பரநாதாந்த வரை ஓங்கு

நீதிநட ராஜபதியே.!


உலகில் தோன்றிய சாதி சமய மதம் சார்ந்த நெறிகள் யாவும் *பேய்பிடித்த பைத்தியக்காரத்தனமாக* போருற்று (சண்டைப்போட்டு) *இறந்து வீண்போய் கொண்டுள்ளார்கள். *இன்னும் உயிர்கள் அழிந்து வீண்போகாதபடி காப்பாற்ற வேண்டும் என்பதே ஆண்டவரின் அவசரமான விருப்பம்*.


ஆதலால் *புனிதமுறும் சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து அம்மார்க்கத்தின் வழியாக *உண்மையான மெய்ப்பொருளை(கடவுளை)* மக்களுக்கு உணர்த்தி வெளிப்படையாக காட்டி உண்மை ஒழுக்க நெறிகளைப் பின்பற்றச் செய்து *மரணம் அடையாமல் காப்பாற்றி பேரின்ப சித்தி சுகநிலை அடைந்திட புரிந்திட செய்திட வேண்டும்*.


அதற்கு தகுதியான  *ஒரே நபர் நீ தான்* *என்பிள்ளை* ஆதலாலே *இவ்வேலை புரிக என்று ஆணை இட்டுள்ளேன்*.

மனத்தில் வேறு எதையும் நினைத்து மயங்கிட வேண்டாம்.பயம் கொள்ள வேண்டாம் என்று *மெய்ப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முழு சம்மதத்தோடு வள்ளல்பெருமானுக்கு அந்த உயர்ந்த  பொருப்பை அளிக்கிறார்* 


*துன்மார்க்கத்தை அழித்து சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிக்க இறைவனால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார்.*


மேலும்  சொல்லுகிறார்!


*பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்*  *ஓர்*

*பவநெறி* *இதுவரை பரவியது* அதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி *நீ*

*புன்னெறி* *தவிர்த்தொரு* *பொதுநெறி எனும்வான்*

*புத்தமு தருள்கின்ற* *சுத்தசன் மார்க்கத்*

*தன்னெறி* *செலுத்துக* என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே! 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகிறார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையைத் சிரமேற்கொண்டு வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1872 ஆம் ஆண்டு மாற்றம் செய்து வடலூரில் தோற்றுவிக்கிறார்*.


*மக்கள் சுத்த சன்மார்க்க சங்கத்தில்  உறுப்பினராகும் தகுதிகள் என்ன* ? என்பதை வள்ளலார் சொல்லுகிறார். 


*சுத்த சன்மார்க்க தகுதிகள்*


சுத்த சன்மார்க்கத்திற்கு *முக்கிய  தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் கை விட்டவர்களும் காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில்  ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும்.*

*கொலை புலை தவிர்த்தவர்களும்.மேலும் ஜீவதயவு உடையவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்*.


*இவர்கள்தான் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலியவைகளை தவிர்த்துக் கொள்வார்கள்*.


மேலும் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்* *முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்ககூடாது*.


*சமய மதங்களில் சொல்லிய காட்டிய பொய்யான பலப்பல தத்துவ தெய்வங்களை வணங்காமல் வழிபடாமல்*.

*வள்ளலார் காட்டிய உண்மைக்கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மைக் கடவுளை அறிந்து தெரிந்து உணர்ந்து புரிந்து வணங்கவும் வழிபடவும் வேண்டும்*.


*வள்ளலார் பாடல்!*


உருவராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்

*ஒருவரே உளார் கடவுள்* கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி

இருவராம் என்றும் மூவரே யாம் என்றும் இயலும் 

ஐவர்கள் என்றும்

எருவராய் உரைத் துழல்வதென் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ.! 


*ஒரு உடம்பில் ஒரே உயிர்தான் இருக்கமுடியும் இருக்கவேண்டும்*. *இரண்டு மூன்று ஐந்து உயிர்கள் இருக்கிறது என்றால் எவ்வாறு நம்ப முடியாதோ* ! அதேபோல் உலகத்தை இயக்குவது *ஒரேக் கடவுள்தான் உண்டு என்பதுதான் உண்மை* என்பதை மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவாகப் பதிவு செய்கிறார்.


*அந்த ஒரேக்கடவுளைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே* 


அந்தக் கடவுளுக்கு *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!*

என்று பெயர் சூட்டியவரும் வள்ளலார் ஒருவரே. 


*வானாட்டார் புகழ்கின்றார்*


*பஞ்ச பூதங்களில் கலந்தவர்களில் வானத்தில் கலந்தவர்கள் உயர்ந்தவர்கள்*


*வானாட்டார் என்பது மரணத்தை வென்று வானத்தில் (ஆகாயத்தில்) கலந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அருளாளர்கள்.* அதாவது *மாணிக்கவாசகர்* போன்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்.. 


(கடவுளிடம் எவரும் சேரவில்லை கலக்கவில்லை.)


அவர்கள் துன்மார்க்கத்தை தொலைத்து சுத்த சன்மார்க்கத்தை நிறுவிய

வள்ளலாரைப் போற்றி புகழ்கின்றார்கள் என்கின்றார். 

*ஏன்என்றால்?  அவர்களுக்கு எது உண்மை மார்க்கம்  எது பொய்யான துன்மார்க்கம் என்பதை அறிந்தவர்கள்* மேலும் அவர்கள் பொது உணர்வுடன் வாழ்ந்து முக்தி சித்திப் பெற்றவர்கள் ஆவார்கள் அவர்கள் வள்ளலாரைப் போற்றுகிறார்கள். 


*இனி சுத்த சன்மார்க்கம் எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.*


*வள்ளலார் பாடல்!*


*பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே*

*சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே* - 


*சொன்மார்க்கத்*

*தெல்லா உலகும் இசைந்தனவே* *எம்பெருமான்*

*கொல்லா* *நெறிஅருளைக் கொண்டு*.!


*இறைவனால் படைத்த எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தாரால் மட்டுமே முடியும்.*


*சாதி சமய மதத்தை பின்பற்றிக் கொண்டு சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அருள்பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்*.


உலகினில்  உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை! (அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 9865939896

அறிவு இருந்தும் அருள் விளக்கம் இல்லை !

 *அறிவு இருந்தும் அருள் விளக்கம் இல்லை*


மனித தேகம் எடுத்த ஆன்மாக்களுக்கு மட்டுமே *அறிவு விளக்கமும் அருள் விளக்கமும்* கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது. 


*அறிவு விளக்கம் அருள் விளக்கம் இருந்தும் நாம் ஆன்மீக அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஞானிகள் போதகர்கள் ஆட்சியாளர்கள் சொல்வதைக் கேட்டு வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அதற்கு காரணம் என்ன ?* 


*வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம்.*!


ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும்.

இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பஞ்ச பூத தேகங்களே உரிமையாக இருக்கின்றன என்றும்.


*அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும்* என்றும்.


*ஆதலால் ஆன்மாக்களுக்கு உயிரும் உடம்பும் கொடுத்ததால் ஆன்மாக்களுக்கு ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்பட்டது.*


*ஆன்மாக்களுக்கு ஜீவதேகம் கொடுக்கபடாவிட்டால் அறிவும் அருளும் இருந்தும் மூடம் உண்டாகும் என்பதால் ஜீவதேகம் கொடுக்கப்பட்டது.*


*இங்குதான் நாம் கவனிக்க வேண்டியதில்லை அவசியம்* 


*பூதகாரிய ஜீவதேகம் எடுப்பதற்கு மாயை முதற்காரணமாக இருப்பதால் அந்த மாயையின்  விகற்ப ஜாலங்களால் ஆன்மாக்களுக்கு பசி தாகம் பிணி  இச்சை எளிமை பயம் கொலை போன்ற ஏழுவகையான அபாயங்களை அடிக்கடி தேகத்திற்கு கொடுக்கப்படுகின்றது*.


அவற்றை நீக்கிக் கொள்ளத்தக்க அறிவும் அருளும் அன்பும் ஆன்மாவிற்கு இருந்தும். *கரணேந்திரங்கள் சகாயங்களைக் கொண்டு*  தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டிய சுதந்தரம் ஆன்மாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.


*அந்த சுதந்தரத்தை பயன்படுத்திக் கொள்ளாமலும் கரணங்களை தன் வசமாக மாற்றி கொள்ள தவறியதாலும் மனம் போனபடி போவதற்கு அனுமதி வழங்கியதாலும்*

அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. *அதனால் ஆன்மலாபம் பெற முடியாமல் ஆன்மாக்கள் தங்களுக்கு கொடுத்த உடம்பை இழந்து இழந்து  உடம்பை மாற்றிக் கொண்டே உள்ளது.*


*பலவிதமான வழிமுறைகள்*


ஆன்மலாபம் பெற்று ஆன்ம இன்பத்தை அடைவதற்கு பலஞானிகள் பல அருளாளர்களும் பலவிதமான வழிமுறைகளைச்சொல்லியும் ஆன்மாக்கள் முழுமையான அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறமுடியாமல் தவித்துக் கொண்டே உள்ளது.ஆதலால் யார் யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள் என்கிறார் வள்ளலார்


*வள்ளலார் பாடல்*


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என் இனி நீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே


எண்டகு சிற் றம்பலத்தே எந்தை அருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!


மேலே கண்ட பாடலில் எளியதமிழில் புரியும்படி சொல்லி உள்ளார்.


*மாயையின் விகற்ப  ஜாலங்களாகிய பசி பிணி தாகம் இச்சை எளிமை பயம் கொலை போன்ற செய்கைகளைக் கொண்டே  ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் பெறவேண்டும்*.

அவைதான் சரியான நேர்வழி என்பதை வள்ளலார் அருள்பெற்று ஆன்மலாம் அடைந்து மரணத்தை வென்று மக்களுக்குச் சொல்லுகிறார்.


*முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் ஜீவகாருண்யத்தைக் கொண்டே ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டும்* ஆன்மநேய உறவு உடைய ஜீவன்களைக் காப்பாற்றினால் நம்முடைய  ஜீவனையும் உடம்பையும் வெளியேற்றாமல் அருளால் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை.


எனவேதான் *அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார் வள்ளலார்*.


கடவுளிடம் அருளைப் பெறுவதற்கு ஜீவர்களிடத்து ஜீவர்கள் உயிர் இரக்கமான பரோபகாரம் செய்வதே தயவு என்பதாகும். ஒவ்வொரு ஜீவர்களிடத்தும் தயவு செய்வதே கடவுள் சம்மதம் என்று சத்தியமாக அறியவேண்டும்.


*சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப்பெறுதலும்*. *சிறிய வெளிச்சத்தைக்கொண்டு பெரிய வெளிச்சம் உண்டாக்குவதுபோல்*.

*ஜீவதயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெறவேண்டும்*. 

*என்று தெளிவான விளக்கத்தோடு சொல்லுகின்றார்*.


*ஜீவகாருண்யம் இல்லாதபோது அறிவு விளக்கம் அருள் விளக்கம் தோன்றாது.அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது*.  


*மாயையின் மாயா ஜாலத்தை மாற்றுவதே ஜீவகாருண்யம்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

திங்கள், 26 ஜூலை, 2021

ஆன்மசுதந்தரம் அருள்சுதந்தரம் பெற வேண்டும்!

 *ஆன்ம சுதந்தரம் அருள் சுதந்தரம் பெற வேண்டும்!*

*வள்ளலார் பாடல்*!

*படமுடியாது இனித்துயரம்* *படமுடியாது அரசே*

*பட்டதெல்லாம் போதும்*  இந்தப் பயந்தீர்த்து இப் பொழுது *என்*

உடல் உயிராதியை எல்லாம் நீ எடுத்துத் கொண்டு *உன்*

*உடல் உயிராதியை எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்*

வடலுறு சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே என் குருமணியே மாணிக்க மணியே

நடனசிகாமணியே என் நவமணியே ஞான

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.!

என்ற பாடல் வாயிலாக சொல்லுகிறார். *இவ்வுலகியல் வாழ்க்கையில் துன்பம் துயரம் அச்சம் பயம் சூழ்ந்து கொண்டே உள்ளது*. *அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை.என்னுடைய பயத்தை நீக்க வேண்டும் ஆதலால் நீங்கள் வழங்கிய உடல் பொருள் ஆவியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்னுடைய உடல் பொருள் ஆவியை உவந்து (மகிழ்ந்து) எனக்கு அளிக்க வேண்டும் என்று முறையிடுகிறார்*.

*ஆன்மா பஞ்சபூத உலகில்  வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி அனுமதியோடு மாயையால் கொடுக்கப்பட்ட  சுதந்தரம் மூன்று.*

அவை *தேகசுதந்தரம்*

*போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்பவைகளாகும்*

மூன்று சுதந்தரத்தையும் வைத்துக்கொண்டு இவ்வுலகில் பொருள் சம்பாதித்து எந்த எந்த வகையில்  எவ்வாறு வேண்டுமானாலும் விருப்பம் போல் வாழலாம். *ஆனால் அருள் சுதந்தரம் பெறமுடியாது*

*அருள் சுதந்தரம் பெறவில்லை என்றால்   துன்பம் துயரம் பிணி மூப்பு அச்சம் பயம் மரணம் வந்து கொண்டே இருக்கும்*.

மேலும் இறந்து இறந்து பிறந்து பிறந்து  வீண்போது கழித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

*மீண்டும் மனித்தேகம் கிடைப்பது என்பது உறுதியல்ல*

*ஆன்ம சுதந்தரம் அருள் சுதந்தரம் பெறும் ரகசியத்தை கண்டுபிடித்தவர் வள்ளலார்*.

*உயர்ந்த அறிவு பெற்ற மனித்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ள வேண்டும்*.

*எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும்  எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைக்கிறார் வள்ளலார்*.

*வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது*

*எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடும்* *என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க அறிந்து கொண்டேன் என்கின்றார்.*

*திருவருட் சுதந்தரம் நமக்கு எந்தவழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே*.

*எனது யான் என்னும்* *தேகசுதந்தரம்* *போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும்* *நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்*.

*ஆதலால் மூவகைச் சுதந்தரத்தையும் திருவருட்கே சர்வ சுதந்தரமாக திருவருட் சாட்சியாக கொடுத்துவிட்டேன்*

*ஆதலால் தேவரீர் திருவருட் (ஆன்மசுதந்தரம்) சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத  பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வித்தல் வேண்டும்* என்கிறார்.

*ஆன்மா எந்த சுதந்தரம் இல்லாமல்   இவ்வுலகில் தனித்து வாழமுடியாது.*

*ஆதலால் வள்ளலார் வேண்டுதல்படியே ஆண்டவரின் அருள் சுதந்தரத்தை ஆன்மாவிற்கு கொடுத்து மகிழ்கின்றார்*.

வள்ளலார் பாடல்! 

என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே

*தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும்* *எனக்கே*

*தந்துகலந்* *தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே*!

மேலும்

*சுதந்தரம் உனக்கே கொடுத்தனம்* *உனது*

*தூயநல் உடம்பினில்* *புகுந்தேம்*

*இதந்தரும் உளத்தில் இருந்தனம்* *உனையே*

*இன்புறக்* *கலந்தனம்*   *அழியாப்*

*பதந்தனில் வாழ்க* *அருட்பெருஞ் சோதிப்*

*பரிசுபெற்றிடுக* *பொற் சபையும்*

*சிதந்தரு சபையும்* *போற்றுக என்றாய்*

*தெய்வமே வாழ்கநின் சீரே.!*

தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்

என்னைவே தித்த என்றனி யன்பே!(அகவல்)

வள்ளலார் விரும்பி கேட்டவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ந்து நன்நிதியான அருள் சுதந்தரத்தையும் ஆன்ம சுதந்தரத்தையும்  கொடுத்துள்ளார் என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்கிறார்.

மேலும் மனித தேகம் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவர்களையும் உரிமை உடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும் என நமக்காக வேண்டுகிறார்.

என்வே உயர்ந்த அறிவுபெற்ற  மனித தேகம் எடுத்த நாம் அறிவைப் பயன்படுத்தி அருளைப்பெற்று அருள்தேகமாக மாற்றி மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த உயர்ந்த பேரின்பசித்திப் பெரு வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

மனதை சிற்சபையின்கண் செலுத்தவேண்டும் !

 *மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும்!* 

*வள்ளலார் சொல்லும் தியானமுறை!*

*குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்*

*கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்*

*வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன்* *எனது*

*மெய்யுரையைப்*பொய்யுரையாய்*வேறுநினை யாதீர்*

*பொறித்த மதம் சமயம் எலாம்* *பொய்பொய்யே அவற்றில்**புகுதாதீர்* 

*சிவம் ஒன்றே பொருள்எனக் கண் டறிமின்*

*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!* 

மேலே கண்ட பாடல் *ஞானசரியை*  (மரணம் இல்லாப்பெருவாழ்வு ) என்னும் தலைப்பில் 20 ஆவது பாடலாகும்.

*இந்த பாடலில் சத்தியம் வைத்து சொல்கிறேன் கேளுங்கள் என்கிறார் வள்ளலார்.*

உலக வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் மனதை அருள்வாழ்க்கைக்கு மாற்ற  வேண்டுமானால் மனதை அடக்குவதற்கு பதில் மாற்றுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. *அவை சிற்சபையின் கண் மனத்தை செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்* *அதுவே சிறந்த தியான முறையாகும்*

 *சிற்சபை என்பது உடம்பில் ஆன்மா இயங்கும் இடம்*

*(அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியில் தனித்து இயங்குவதே ஆன்மா என்னும் உள் ஒளியாகும்)*

மனித உடம்பின் ஒழுக்கத்தை  நான்கு வகைகளாக பிரிக்கிறார் வள்ளலார்

*1. இந்திரிய ஒழுக்கம்*

*2.கரண ஒழுக்கம்*

*3.ஜீவ ஒழுக்கம்*

*4.ஆன்ம ஒழுக்கம்*

என்பதாகும்.

*உடம்பு ஒன்றாக இருந்தாலும் நான்கு பிரிவுகளாக பிரித்து ஒன்றாக இணைத்து செயல்பட வைத்துள்ளது கடவுளின் மாயையின் அபாரமான படைப்பாகும்.*

*புறப்புறம் என்னும் இந்திரியங்களும்*

*புறம் என்னும்  கரணங்களும்  இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்*

*அதேபோல் அகப்புறம் என்னும்* *ஜீவனும்(உயிர்)*

*அகம் என்னும்* *ஆன்மாவும்* *ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்*

*இந்நான்கிற்கும் தலைமைஇடம் சிற்சபா அங்கமான ஆன்மாதான்*

*இந்த நான்கு ஒழுக்கங்களும் கடைபிடித்தால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் விலகி ஆன்மாவில் உள்ள  அருள் சுரந்து உடம்பெல்லாம் நிறைந்து கலந்து பொன்னுடம்பு பெற்று என்று அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்*. 

*சமய மதங்கள்!* 

*பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் என்கிறார்*.

இதுவரையில் சமய மதங்களில் சொல்லிய கடவுள்களும்.

கடவுள் பெயரால் செய்யப்படும் புற வழிபாட்டு முறைகளும் மற்றும் புற ஒழுக்கங்களையும் கடைபிடிப்பதால் எந்த விதமான ஆன்ம லாபமும். அருள் லாபமும். பயனும் பெறமுடியவில்லைபொய்யான வழிமுறைகளையே காட்டியுள்ளது  ஆதலால் அவற்றில் புகுதாதீர்.

*அவைகள் யாவும் பொய் பொய்யே* இனியும் பின்பற்றி ஏமாறாதீர்கள் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள்.

உங்களால் எனக்கு எந்த பயனும் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லுகின்றார்.

*மனமே காரணம்* 

*எல்லாவற்றுக்கும் காரணம் கரணங்களில் உள்ள மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் சூக்கும கருவிகளாகும்*.

*மனம் நினைப்பதை புத்தி விசாரித்து* *சித்தம் நிச்சயித்து* *அகங்காரம் அகங்கரித்து.*

*இந்திரியங்களான கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பு  போன்ற உறுப்புக்களை செயல்பட வைக்கிறது.*

*கரணங்களும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு காரணம் மனம் என்னும் சூக்கும கருவியாகும்*. *வெளியில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்துவதே கரண ஒழுக்கம் என்பதாகும்.*

எனவே மனத்தைச்  சிற்சபை இடத்தே இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும். *அதுவே சிறந்த சுத்தசன்மார்க்க தியானம்*

*மனதை அடக்க முடியாது மாற்ற முடியும் என்கிறார் வள்ளலார்* 

மனதை ஆன்மாபக்கம் மாற்றினால் இந்திரியங்கள் கரணங்கள் யாவும் தானே மாற்றம் அடையும்.

*வள்ளலார் பாடல்!*

*மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே* *நீதான்*

*மற்றவர்போல்* *எனைநினைத்து*மருட்டாதே கண்டாய்*

இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்

இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை ஆனாலோ

*தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன்* *உலகம்*

*சிரிக்கஉனை* *அடக்கிடுவேன்* *திருவருளால் கணத்தே*

நனவில்எனை அறியாயோ யார் என இங்கிருந்தாய்

*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே*.! 

மனதை மாற்றிய வள்ளலார் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே என்கிறார். 

நமது முயற்சியால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கத்தை கடைபிடித்தால் போதும். ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் தானே மேல்நிலைக்கு அழைத்துசெல்லும்

மனக்குறை நீக்கி நல் வாழ்வளித் தென்றும்

எனக்குற வாகிய என்னுயிர் உறவே!(அகவல்)

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட

இனம்பெறு சித்த மியைந்து களித்திட! (அகவல்)

மனம் ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மனம் புத்தி சித்தம் அகங்காரம் யாவும் கனிந்து உருகி. *ஜீவன் ஆன்மா மகிழ்ந்து அறிவு அருள் நிறைந்து உடம்பெல்லாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி பொன்னுடம்பு பொருந்திடும் பொருட்டாய் என் உளம் கலந்த என்தனி அன்பே என்ற நிலை  பெறலாம்*.   

அருளைப்பெற்று மரணத்தை வெல்வதற்கு நான்கு ஒழுக்கங்களே சாகாக்கல்வி கற்கும் பயிற்சியாகும்.

எனவே மனத்தை மாற்றி ஒழுக்கத்தை கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 24 ஜூலை, 2021

ஆன்மா உயிர் உடம்பு வந்த வழி !

*ஆன்மா  உயிர் உடம்பு வந்த வழி !* 

*வள்ளலார் பாடல்!

*உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்*

*உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்*

*மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர்*  *மனத்தை*

*வசப்படுத்தீர்* *வசப்படுத்தும் வழிதுறை கற் றறியீர்*

*இடம்பெறு பொய் வாழ்க்கையிலே* *இன்பம் துன்பம் அடுத்தே*

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 

*ஆன்மாவிற்கு *உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொண்டால்தான்  உடம்பையும் உயிரையும் பாதுகாத்து ஆன்மா அருள் பெற்று புண்ணியம் என்னும் பேரின்பத்தை அடையமுடியும் என்கிறார் வள்ளலார்*.  

அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் தினமும் மூன்று வேலையும் உண்ணுதற்கும் உறங்குதற்கும் மட்டுமே தெரிந்து கொண்டு *பேய்பிடித்த மனம்* போல் கண்டபடி தாவி தாவி அலைந்து கொண்டு உள்ளீர் என்று சொல்கிறார். 

*நாம் முதலில் ஆன்மாவைப் படைத்தவர் யார்?*என்பதையும்* *இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து உடம்பு உயிர் எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ?  அருளைப்பெற வேண்டிய அவசியம் ஏன்? யாரிடம் அருளைப் பெற வேண்டும் ? அருளைப்பெறுவதால் ஆன்மா அடையும் லாபம் என்ன ? என்பதை தெரிந்து கொண்டால்தான் நாமும் அருளைப் பெறுவதற்குண்டான ஆசை வரும்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகம்!*

சுருக்கமாக சொல்கிறேன் ! .

*அருட்பெருவெளி என்ற ஓர் மாபெரும் இடம் உண்டு.அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாம்ராஜ்ஜியம் ( ஆட்சிபுரியும் இடம்)* *அந்த எல்லைக்குள் ஆன்ம ஆகாயம் என்ற ஓர் இடம்உண்டு*. *அங்கு அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.*

*அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்* 

*அவ் ஆன்ம அணுக்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே யார்? என்பதும் தெரியாது வெளி  உலகம் எதுவும். தெரியாது* 

*பஞ்ச பூத உலகம்!*

*ஆன்மாக்கள்  உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே  பஞ்சபூத உலகம் படைக்கப்பட்டது*.

பஞ்சபூத உலகத்தை நிர்வாகம் பண்ணும் உரிமையை *மாயை   மாமாயை பெருமாயை* என்னும் மாயாசத்தியிடம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. *ஆண்டவர் கட்டளைப்படி மாயாசக்திகள்தான் ஆன்மாவிற்கு பஞ்சபூத அணுக்களைக் கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக்கொடுத்து உயிர் இயக்கத்தினை ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி ஆன்மாவை குடியிருக்க வைக்கிறது* *அதற்கு ஜீவதேகம் என்றுபெயர்* 

*அந்தவீடு ஆன்மாவிற்கு வாடகை வீடாகும். வீட்டின் வாடகைதான் தினமும் கொடுக்கும் உணவாகும்*.

*ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஜீவதேகம் என்னும் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்*.

*அதற்கு அருள்தேகம் ஒளிதேகம் ஆன்மதேகம் என்று பெயர்.*

*பஞ்சபூத அணுக்களால் பிண்ணப்பட்ட ஊன் உடம்பை (ஒளிஉடம்பாக) அருள் உடம்பாக மாற்றும் முறையைக் கற்றுத் தருவதுதான் *சுத்த சன்மார்க்கம்*

சுத்தசன்மார்க்கத்தில் கற்கும் கல்விக்கு சாகாக்கல்வி என்பதாகும்.*

*வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம்*. 

அறிவு என்பது ஒர் சிறிதும் தோன்றாத *அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் *சிற்றணுப்பசுவாகி* அருகிக்கிடந்த அடியேனுக்குள் *உள்ளொகியாகி இருந்து* அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து *எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய  உயர்ந்த அறிவுள்ள இம்மனித தேகத்தில்* என்னை விடுத்துச் சிறிது *அறிவு* விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன்! என்னவென்று சொல்வேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருமையைப் போற்றுகிறார். 

மேலும் *இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில்? *நான் ஆன்மா! சிற்றணு வடிவின்ன்* . *மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது* *இருப்பிடம் லலாடஸ்தானம் அதாவது *உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேல் புருவமத்தி (சிற்சபாஅங்கம்) என்னும் இடத்தில் பாதுகாப்பாய் இயங்கிக் கொண்டு உள்ளது*

அதன் வண்ணம் *கால்பங்கு பொன்மை.*

*முக்கால் பங்கு வெண்மை* கலந்த வண்ணமாக உள்ளன.

*இப்படிப்பட்ட ஆன்ம்பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழுதிரைகளால் மறைக்கப்பட்டுள்ளது.*

*இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்*

*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்?*  

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது* *அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;* 

*இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்*.

*மஞ்சள் வர்ணம் என்பது பொன் வர்ணம் அருளைக் குறிப்பதாகும்*

*வெள்ளை வர்ணம் என்பது பிரகாசத்தைக் குறிப்பதாகும்*

*ஆதலால் அருட்பிரகாசவள்ளலார் என்பதாகும்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படுகிறது*.

*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உடம்பைஇயக்கும் உயிரையும் அழிக்காமல் பின்னம் செய்யாமல் பாதுகாத்து மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆன்மா ஆன்ம இன்ப லாபம் அடையவேண்டும்.*( உடம்பு அழிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு)

*ஆன்ம இன்ப தேகமான சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் மாற்றத்தினால் முத்தேக சித்திப்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக சேர்ந்து பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே.ஆன்மாக்களை இந்த பஞ்சபூத உலகத்திற்கு வருவிக்க உற்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*. 

வள்ளலார் சொல்லியவாறு ஆன்மாக்கள் இவ்வுலகில் உடம்பு உயிர் எடுத்து வாழ்ந்து இன்பம் துன்பம் அனுபவித்தால் மட்டுமே நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்கிறார் வள்ளலார்

*கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி* *கூத்தாடுகின்றோம் என்று சின்னம்பிடி*

*அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம்பிடி*

*அருளமுதம் உண்டோம் என்று சின்னம்பிடி !*

என்றும் மேலும்

*அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு*

*மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு* 

என்று ஆனந்தக் கூத்தாடுகின்றார் வள்ளலார். *ஒவ்வொரு ஆன்மாவும் வள்ளலார் பெற்ற பேரின்ப நிலையை அடையவேண்டும் என்பதாலே என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்று நமக்காக  ஆண்டவர் இடத்திலே விண்ணப்பம் செய்து வேண்டுகிறார்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 22 ஜூலை, 2021

மோட்சவீட்டின் திறவுகோல் !

 *மோட்ச வீட்டின் திறவுகோல்!* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் இடம் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த கோட்டையாகும்*. *அவரைத் தொடர்பு கொள்ள அருள் என்னும் சாவி வேண்டும்*


*அவ்அருள் அன்பினால் அல்லது வேறு வகையில் அடைவது அரிது*


( *அன்பு இரண்டு  வகையாக உள்ளது* *உயிர்கள்மேல் காட்டும் அன்பு ஒன்று கடவுள்மேல் காட்டும் அன்பு ஒன்று*)


*இரண்டு அன்பும் ஒன்று சேர்ந்தால் பேரின்பம்* 

*அன்பால்தான் ஆன்ம இன்பமும் கடவுள் இன்பமும் பெறமுடியும்*


*உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யத்தால். உலகியலில் உள்ள உயிர்களுக்கு செய்யும் உபகாரத்தின் மூலமாக கிடைக்கும் அன்பு. அதுவே ஜீவ காருண்யத்தின் லாபம் என்னும் அன்பாகும்*.


*ஜீவகாருண்யம் எவ்வாறு உண்டாகும்?* *அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நன்மை செய்தலே  ஜீவகாருண்யம் என்பதாகும்*.


*ஜீவ காருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம  உருக்கும்*. *ஆன்ம மகிழ்ச்சி  உண்டாகும்*. *அதை செய்பவருக்கும் பெறுபவருக்கும் இரு தரப்பினருக்கும் உண்டாகும்*

*அந்த அன்பு மகிழ்ச்சி செய்பவர் ஆன்மாவில் பதிந்து அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் தயவின் அன்பின் மகிழ்ச்சியின் தன்மைக்குத் தகுந்தவாறு ஒன்று ஒன்றாய் விலக்கும்*  


*கடவுள் மேல் காட்டும் அன்பு!*


*இயற்கை உண்மை கடவுளான *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது பெருமையும் நம்முடைய தரத்தையும் ஊன்றி விசாரித்துக் கொண்டே இருந்தால் ஆண்டவருடைய  அன்பு நமக்கு கிடைக்கும்* 


*ஜீவகாருண்யத்தால் ஜீவர்களிடத்தில் அதாவது உயிர்களிடத்தில் பெற்ற அன்பால் அருள் என்னும் திறவுகோல் கிடைக்கும் அதுவே ஆன்ம இன்ப லாபமாகும்*


*நாம் ஆண்டவரிடத்தில் தொடர்பு கொண்டு இடைவிடாது*

*சத்விசாரம் செய்து* *உடல் பொருள் ஆவி* *என்னும் தேகசுதந்தரம் போகசுதந்தரம் ஜீவசுதந்தரம் ஆகிய மூன்றையும்*ஆண்டவரிடத்தில் கொடுத்து சரணாகதி அடைந்தால் *ஆண்டவரிடத்தில் இருந்து கிடைக்கும் அன்பு  தயவு அருள் கருணை  என்பது  பேரின்ப  லாபமாகும்*. 


*ஜீவ காருண்யத்தால்  ஆன்ம இன்ப லாபமான அருளைப்பெற்று கிடைத்ததுதான் மோட்சவீட்டின் திறவுகோல் என்னும் சாவியாகும்*. 


*அந்த மோட்ச வீட்டின் திறவுகோலான அருள் என்னும் சாவியைக் கொண்டு திறந்தால் பூட்டு திறக்கும் கதவு திறக்காது*.


*உலகியல் பற்று அனைத்தையும் அதாவது பூரணமாக பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றை பற்ற வேண்டும். நம்வாழ்க்கை நம்செய்கை நம் உணர்வு ஆகிய அனைத்தையும் ஆண்டவர் அறிந்து. பேரன்பின் பெருந்தயவால் பெருமகிழ்ச்சி பொங்க  தனிப்பெருங் கருணையுடன் ஆண்டவரே கதவு திறந்தால் மட்டுமே.அருள் நிறைந்த  கோட்டையின் கதவு திறந்து உள்ளே நாம் செல்லமுடியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரில் காணமுடியும்.*


*எனவேதான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள* 

*உயிர் இரக்கம் எனும் ஜீவகாருண்யமும்*.

*ஆண்டவரைத் தொடர்புகொள்ள உண்மையான வேண்டுதலாகிய தோத்திரம் செய்கின்றதாலும் உண்மையான*

*தெய்வத்தை இடைவிடாது நினைக்கின்றதாலும் ஆகிய சத்விசாரம் என்பது அவசியம் வேண்டும் என்கின்றார்*


*உயிர் இரக்கம் என்னும் பரோபகாரம் சத்விசாரம் இவை இரண்டும் இரட்டை மாட்டு வண்டிபோல் சம்மாக சென்றால் தான்  மேல்வீட்டுக் கதவு திறந்து உள்ளே செல்ல முடியும்*


*ஜீவர்களிடத்தில் பெற்ற  அன்பும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் பெற்ற அன்பும் இனைந்தால் மட்டுமே மோட்சம் என்கின்ற வீட்டின் பூட்டும் கதவும் திறக்கும். பின்பு உள்ளே சென்று பேரின்ப லாபத்தின் பெருமையை தங்கு தடையின்றி அனுபவிக்கமுடியும்* 


*வள்ளலார் சொல்லுவதை பார்ப்போம்*


*அருள் என்பது கடவுள் தயவு கடவுள் இயற்கை குணம்.ஜீவகாருண்யம் என்பது ஜீவர்கள் தயவு சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்* *இதனால் தயவைக்கொண்டு தயவைப் பெறுதலும்*.

*விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதல் கூடும் என்கிறார்*


*கடவுள் தனிப்பெருங் கருணை உடையவர்*

*எல்லாம் வல்லவர்*.

*ஆகையால் நம்மையும் சர்வ ஜீவ தயவு உடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்துள்ளார்*.


*எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாய் இருக்கும்.மற்றவர்களிடத்தில் காரியப்படாது.*


ஆதலால் கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் இரக்கம் என்னும் பக்தியும் செலுத்த வேண்டும். *பக்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம்.*

*அன்பு என்பது ஆன்ம நிகழ்ச்சி ஆன்ம உருக்கம் என்பதாகும்.*


எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே கடவுள் பக்தியாகும்.


*எனவேதான் ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பதாகும்*

*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும் என்று மிகத் தெளிவாக அழுத்தமாக சொல்லுகிறார்*


*ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் அன்பு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்* 


*அன்பு தயவு கருணை அருள் ஒன்று சேர்ந்தால் ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்*


*இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


*அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே*

*அன்பெனும் குடில்புகும் அரசே*

*அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே*

*அன்பெனும் கரத்தமர் அமுதே*


*அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே*

*அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே*

*அன்பெனும் *அணுவுள் ளமைந்தபே ரொளியே*

*அன்புரு வாம்பர சிவமே*.! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்

ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 19 ஜூலை, 2021

மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்று !

 *மூட நம்பிக்கையில்  இதுவும் ஒன்று !*

*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்* 

*மனைவி இறந்தால் கணவன்  மறுமணம் செய்ய வேண்டாம்* 

என்று வள்ளலார் அழுத்தமாக கண்டிப்பாக  சொல்கிறார்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதலும். மனைவி இறந்தால்

கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளுதலும்

 மூட பழக்க வழக்கங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன.

ஒருஆணும் ஒரு பெண்ணும் இனைந்து வாழவேண்டும் எனபதையே திருமணபந்தம் என்பதாகும்.

குடும்பம் என்பதாகும். *அதற்கு அடையாளமாக ஆண் பெண்ணுக்கு கட்டுவதே மங்களகரமான மஞ்சள் கயிற்றால் ஆன தாலியாகும்*.

*ஏதோ ஒரு காரணத்தால் கணவன் இறந்தால்* *சிறிய வயதுடைய பெண்ணாக இருந்தாலும்* *மனைவி தாலி அறுக்க வேண்டும்*.

*பூ சூடக்கூடாது*.

*பொட்டு வைக்கக் கூடாது*. *கூந்தலை கலைத்துவிட வேண்டும்*

*வெள்ளை ஆடை உடுத்தி* *விதவைக் கோலத்தில்* *பெண்கள் காட்சி அளிக்கவேண்டும்.*

*என்ற கொடுமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டது*

மேலும் அந்தனர்களில் பெண் விதவைக்கோலம் மிகவும் கொடியது.

*மொட்டை அடித்து மொட்டைப்பாப்பாத்தி என்ற வழக்கம் அதிகமாக இருந்து வந்தது*

*சமுதாயத்தில் மதிப்பில்லை* 

விதவைகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு இல்லை. *சமுதாயம் கணவன் இழந்த பெண்களை தள்ளி வைத்து வேடிக்கை பார்த்தது ஒதுக்கியது.*

வெளியில் செல்வோர் *விதவைப்பெண் எதிரில் வந்தால் *சகுனம் சரியில்லை என்றும் போகும் காரியம் தடைபடும் எனக்கருதி அந்தப் பெண்ணைத் திட்டிக்கொண்டே பயணத்தை நிறுத்தி விடுவார்கள். *வீட்டில் வெளியில் நடக்கும் எந்த நல்ல காரியத்திற்கும் விதவைப் பெண்களை முன் நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள்*.

கலந்து கொள்ளவும் வேண்டாம் கண் முன்னாடி வரவே வேண்டாம் என ஒதுக்கியே வைப்பார்கள்.

*அந்த மூட பழக்கவழக்கத்தை ஒழித்தவர் வள்ளலார்* கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்குதல் வேண்டாம் என்ற புரட்சியைக் கொண்டு வந்தவர் வள்ளலார்.

*ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நீதி வழங்க வேண்டும் என்றார்* 

*வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தி*.

*ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைப்பாட்டை போதித்தார்*.

*ஆண்கள் பலதாரங்கள் செய்து கொள்ளலாம் என்பது தவறு*

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.

முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்றாலும் வேறு ஒருபெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

இப்படி ஆண்கள் பலதாரங்கள் செய்து கொள்ளலாம் என்று சாதி சமய மதங்கள் ஆதரவு தந்து அனுமதி வழங்கி உள்ளன.

அதேபோல் கணவன் இறந்தால் மனைவி வேறு திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள். கேள்வி எழுகின்றது நியாயம் தானே. *ஆண்கள் தவறுசெய்தால் புண்ணியத்தில் சேர்ந்து விடுமாம் பெண்கள் தவறு செய்தால் பாவத்தில் சேர்ந்துவிடுமாம்* 

*(கடவுள்களுக்கும் இரண்டு மூன்று மனைவிமார்கள் உண்டு)* *கடவுளுக்கும் திருமணம் செய்து வைக்கும் மேதாவிகள் இவ்வுலகில் உண்டு*.

இந்த *மூடநம்பிக்கையை குழித்தோண்டி புதைக்க வந்தவர்தான் வள்ளலார்*

*(வள்ளலாரே தந்தை இராமய்யாவின்  ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தவராகும்)* தன் தந்தையின் உண்மை தெரிந்தும் யாராக இருந்தாலும் செய்தது தவறு தவறுதான் என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.

ஆணுக்கு ஒருநீதி பெண்ணுக்கு ஒருநீதி இருக்ககூடாது என்பதால்.

*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் என்றும்* *அதேபோல் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும்* அனைவருக்கும்  சம உரிமையைக் கொண்டுவந்தவர் வள்ளலார். 

*ஒத்தாரும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் எவரும் ஒறுமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்றார்*

 *கற்பு என்பதும் ஒழுக்கம் என்பதும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும் சமமானதாகும்*

சன்மார்க்கத்தில் ஒரேத் தாரம்தான்  (ஒரேத்திருமணம்).

பல தாரத்திற்கு இடம் இல்லை என்பது வள்ளலார் கட்டளை அதுவே சன்மார்க்க கொள்கையின் பண்பாடாகும்.

*மேலும் வேறு ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.

கணவன் இறந்தாலும் மனைவி இறந்தாலும் யாரும் இவ்வுலகை விட்டு வெளியே போகமுடியாது.

*அருள் பெறுகின்றவரை யார் இறந்தாலும் மீண்டும் மீண்டும்  பிறப்பு எடுத்து கொண்டே  வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்* மீண்டும் வேறு ஒரு உருவத்தில் பிறந்து *கணவனும் மனைவியும்* சந்திக்கும் வாய்ப்புகளும் உண்டு.

*ஆதலால் இறந்தவிட்டார்*.

*பிரிந்துவிட்டார்* *காணாமல் போய்விட்டார்* *என்ற எண்ணத்தில்.*

*மனைவியும் தாலி வாங்கவேண்டாம் கணவனும் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டாம்*. 

*வள்ளலார் சொல்லியவாறு மூடநம்பிக்கையை புறம்தள்ளி விட்டு இப்போது பெண்களின் விதவைக்கோலம் காணாமல்   சமுதாயம் மாற்றம் அடைந்து வருகிறது* 

ஆணுக்கும்  பெண்ணுக்கும் சம்மான உரிமை வழங்க வேண்டும் என்ற சட்ட ரீதியான   கொள்கை முடிவு  வளர்ந்து கொண்டே வருகிறது.

*இதுவே வள்ளலார் கண்ட புதுமைப் பெண்களின் வளர்ச்சியாகும்* அதற்குமேலும் வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

ஞாயிறு, 18 ஜூலை, 2021

மூட பழக்க வழக்கங்கள்!

 *மூட பழக்க வழக்கங்கள்!*


மக்கள் அளவுகடந்த மூட பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வருகின்றனர். *ஏன்? எதற்காக ? என்று தெரியாமலே செய்து வருகின்றனர். அவற்றை எல்லாம் *கண்மூடி வழக்கம்* என்கிறார் வள்ளலார்.


வள்ளலார் பாடல் !


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே


உலைவறும் இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் *வன் மனங்கரைத்துத்* *திருவமுதம் அளித்தோய்*

*சித்தசிகா மணியேஎன் திருநடநாயகனே*.! 


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்கள் எல்லாம் மண்மூடிப்போக வேண்டும் என்று *வள்ளலார் கொடுக்கும் முதல் அடியும் கடைசி அடியும் மரண அடியாகும்*.


வள்ளலார் சொல்லி 147 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உண்மை அறியாமல் கண்ணை மூடிக் கொண்டுதான் பின்பற்றி வருகிறோம்.


 *உதாரணமாக காதுகுத்தல் மூக்கு குத்தல் வேண்டாம் என்கிறார்*.


குழந்தை பிறந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் மொட்டை அடித்து காது குத்தும் பழக்கம் வழக்கம் இன்றுவரை உள்ளது. ஆண்களுக்கு கடுக்கன் இடுதலும்.

பெண்களுக்கு தோடு முதலியன அணியும் பழக்கமும் உள்ளது.


அதேபோல் பெண்களுக்கு மூக்கு குத்தி மூக்குத்தி அணிவதும் பழக்கமாக உள்ளது.


ஆண் குழந்தைகளுக்கும் மூக்கு குத்தும் பழக்கம் இருந்தது. இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்து ஒருவர்பின் ஒருவர் இறந்துவிட்டால்.

மூன்றாவது ஆண் குழந்தைபிறந்தால் .இதுவாவது தங்கட்டும் என்று பெண்குழந்தைக்கு மூக்கு குத்துவதுபோல் ஆண் குழந்தைக்கும் மூக்குக் குத்தி மூக்கன் என்று பெயரிடும் பழக்க வழக்கமும் இருந்தது.

இப்போது நாளடைவில் அந்த பழக்கம் குறைந்துவிட்டது.


*காது குத்துவதையும்*.

*மூக்கு குத்துவதையும் வள்ளலார் கண்டிக்கிறார்*


*மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் கொடியேற்றி பேருபதேசம் செய்த தருணத்தில் வள்ளலார் சொல்லியது*  


இப்படியே காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் (ஆண்டவர்)  *ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் (ஆண்டவருக்கு) சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா* என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பட்சத்தில், 


காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலட்சியம் தோன்றினால், *நிராசை உண்டாம்*, ஆதலால், 


*சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில் மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம்* செய்கின்ற பலனாகிய *நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்* என்று சன்மார்க்கிகளுக்குத் தெளிவாக சொல்லுகின்றார்.


*மனித உடம்பை படைத்த இறைவன்*


 96 தத்துங்ங்களையும் (ஆறு ஆதாரங்களையும்) படைத்து அவைகளை  இயக்கும் *உயிரையும் ஆன்மாவையும்* அவை அவைகள் இயங்கும் இடத்தையும் படைத்து. *உள் உருப்புக்கள் வெளி உருப்புக்கள் யாவையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து அதனதன் வேலைகளை ஒழுங்காக செயல்படவும்     *மிகவும்* 

*அற்புதமாகவும் அதிசயமாகவும் பிரமிப்பை உண்டாக்கும் விதத்தில் எவராலும் செய்யமுடியாத வகையில் படைத்துள்ளார்*.


மேலும் *கண் காது மூக்கு வாய் சிறுநீர் துவாரம்.மலத்துவாரம் என்னும் ஒன்பது  துவாரங்களைப் படைத்த* இறைவனுக்கு.

*காதில் கடுக்கன் இடுதலும் மூக்கில் மூக்குத்தி போடவும் சம்மதம் இருந்து இருந்தால் அவரே காதிலும் மூக்கிலும் ஓட்டைப்போட்டு (துவாரம்) அனுப்பி இருக்க மாட்டாரா? என்பதை அறிவு கூர்ந்து சிந்தித்து விசாரம் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்*. 


*மக்களின் குணம்* 


நம் உடம்பில் விருப்பம் போல் துளையிட்டு *(அதாவது நல்ல சுவரில் ஆணி  அடிப்பது போல்)* காதிலும் மூக்கிலும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நகைகள் அணிவதற்காக ஓட்டைப்போடுவது ஆண்டவருக்கு சம்மதம் இல்லை என்கிறார். *ஆண்டவர் படைத்த உடம்பில் துவாரம் போடுவது அணிகலன்கள் அணிவது உடம்பை அழிப்பது இயற்கைக்கு மாறான செயலாகும் என்கிறார்*  


*இறந்தபோது நடக்கும் சம்பவங்கள்* 


*ஆசையாக காதிலும் மூக்கிலும் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் விரல்களிலும் தகுதிக்கு தகுந்தவாறு நகைகளை அணிந்து கொண்டீர்கள்*.


மரணம் வந்துவிடுகின்றது அவர்கள் ஆசையுடன் போட்டு இருந்த நகைகளை எல்லாம் கழட்டாமல்  அப்படியே போட்டு இருக்கட்டும்.

அவரே கொண்டு போகட்டும்  என்று விட்டு விடுகின்றீர்களா? ஒரு கிராம் கூட விடாமல் கழட்டி எடுத்துக் கொள்கிறீர்கள் *இது என்ன ஞாயம்* ? என்று சிந்திக்க வேண்டும். 


*செத்த பிணத்திடும் இருந்த ஆபரணங்களை  சாகும் பிணங்கள் பறித்துக்கொள்கிறது*


காது அறிந்து ஊசியும் கடைவழிக்கு வாராது காண். என்பதுபோல் *இறைவன் படைத்தை உடம்பையும் உயிரையும் ஆன்மாவையும் காப்பாற்றத் தெரியாமல் *கண்டதை எல்லாம் உடம்பின் மேல் பூசிக்கொண்டும் அணிந்து கொண்டும் அலைவது. சாதி சமய மதங்களின் ஆன்மீகத்தின் கலையுரைத்த கற்பனை செயல்களாகும்.*  


உண்மையை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து பற்று அற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை !

 *ஆன்மநேய ஒருமைப்பாடு!* 


ஒவ்வொரு உயிரையும் இயக்குவது *ஆன்மா* என்பதை அறிந்தவர் வள்ளலார். 

ஆன்மாவிற்குள் இருந்து *ஆன்மாவை இயக்குபவர்தான் கடவுள்* என்பதைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.  


உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று  உரைத்தமெய்ச் சிவமே! (அகவல்)


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே! (அகவல்)


*கடவுளைப் புறத்தில் தேடிக்கொண்டே உள்ளார்கள்*


*கடவுளைக் கண்டகண்ட இடங்களில் புறத்திலே தேட வைத்து விட்டார்கள் சாதி சமய மதவாதிகள்*.


ஆகவேதான் நாம் கடவுளை நேரிடையாக தொடர்பு கொள்ளமுடியாமல்அருள்பெற முடியாமல்  *மூடமாக கண்மூடித்தனமாக குருடர்கள் யானையைக் கண்டதுபோல்* பல பல தெய்வவழிபாடுகளைச் செய்து.நரை.திரை.பிணி.மூப்பும்.

பயமும் இறுதியில் மரணமும் வந்து விடுகிறது. மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்.


*வள்ளலார் பாடல்*! 


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

*பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!*


*ஒவ்வொரு உயிரிலும் பொதுவாகத் திருநடம் புரியும் ஒரு திருப்பொதுவானவர் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொண்டேன். *அந்த மெய்ப்பொருள்தான் அருள் வழங்கும் ஆற்றலும் தயவும் தனிப்பெருங்கருணையும் உள்ளதாகும். அந்த தனிப்பெருங்கருணைக் கடவுளை (கடலை) தொடர்புகொள்ளும் வழியைக் (சாலையை) கண்டுகொள்ளவே தோற்றுவிக்கப்பட்டதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய தர்மச்சாலை.சத்திய ஞானசபையாகும்* 


*கடவுளைத் தொடர்புகொள்ளும் வழி*


சாதி சமயம் மதம் இனம் மொழி நாடு உயிர்கள் என்கின்ற  பேதம்இல்லாமல் *எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிக்கும் பொது உரிமையே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்* 


சன்மார்க்கத்தை பின்பற்றும் ஆன்மநேயமுள்ள அன்பர்கள் மனிதநேயமே முழுமையாக பெற இயலாமல் சாதி சமயம் மதத்தில் பற்று வைத்துக்கொண்டு ஏதோ அவர்களால் முடிந்தளவு  அன்னதானம் மட்டும் செய்து வருகிறார்கள். *உயிர்நேயம் இல்லாமல் வேற்றுமை உணர்வோடும் கருத்துவேறுபாட்டுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்*.

*இவர்கள் எப்போது ஆன்மநேயத்தை கடைபிடித்து. ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப்  போகிறார்களோ  தெரியவில்லை*.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும்*.


*ஆன்மநேயம் இல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எக்காலத்திலும் தொடர்பு கொள்ளவே முடியாது*


*வள்ளலார் பாடல்!* 


எத்துணையும் பேதமுறாது *எவ்வுயிரும்*

*தம்உயிர்போல் எண்ணி* உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் *அவர் உளந்தான் சுத்த*


*சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்*

*இடம்எனநான் தெரிந்தேன்* அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!


*ஒழுக்கம் நான்கு*


*இந்திரிய ஒழுக்கம்.*

*கரண ஒழுக்கம்* *.ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்த ஞானிகள் நிறையபேர் வாழ்ந்துள்ளார்கள் வாழ்ந்துகொண்டும் உள்ளார்கள்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒழுக்கத்தை கடைபிடித்தவர்கள் ஒருவரும் இல்லை*.


*ஆன்ம ஒழுக்கம்*


யானை முதல் எறும்பு வரை தோன்றிய *சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்* *யாதும் நீக்கமறக்கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்* 


இவ்வண்ணம் நின்றால் 

*1.சாகாக்கல்வி* *2.தத்துவ நிக்கிரகம் செய்தல்*

*3.ஏமசித்தி.*

*4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்*

போன்ற  நாம் பெறும் அரும் புருஷார்த்தங்கள் நான்கும் கைகூடும்.


*வள்ளலார் சொல்லுவதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.*


நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய *ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்* *குறிப்பிக்கின்றேன்* *குறிப்பிப்பேன்* 


என்னை *ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில். *தயவு* தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்தத் தயவுக்கு *ஒருமை* வரவேண்டும் *அந்த ஒருமை இருந்தால்தான் தயவுவரும்*. தயவு வந்தால்தான் பெரியநிலைமேல்  ஏறலாம்.


*இப்போது என்னுடைய அறிவு அண்ட அண்டங்களுக்கும்அப்பாலும் கடந்திருக்கிறது*.

*அது அந்த ஒருமையினால் தான் வந்தது என்று மிகத் தெளிவாகப் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்* 


மண் உயிரெலாம் களித்திட (மகிழ்ச்சிஅடைய) நினைத்திட்ட ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*வள்ளலார் பாடல்!* 


*வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்* *பசியினால் இளைத்தே*

*வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்*


*நீடிய பிணியால் வருந்துகின்றோர்* *என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்*

*ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்*!


*கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றி துன்பத்தைப் போக்கி அருட்ஜோதியாம் ஆட்சியில் அமர்ந்து ஐந்தொழில்  வல்லபத்தை பெற்று ஆட்சிபரிபாலனம் செய்துகொண்டு இருப்பவர் வள்ளலார்* 


*வள்ளலார் பாடல்!*


துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்

சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே

*சுத்தசன் மார்க்கநிலை* *அனுபவம்* *நினக்கே*

*சுதந்தரமதானது* உலகில்


வன்பெலாம் நீக்கி நல்வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்று  *மிகவும்*

*மன்னுயிர்* *எலாம்களித் திடநினைத்தனை* உன்றன்

மனநினைப் பின்படிக்கே

அன்பநீ பெறுக உலவாது 

நீடூழி விளை

யாடுக *அருட்சோதியாம்* *ஆட்சிதந்தோம்* உனைக் கைவிடோம் கைவிடோம்

*ஆணைநம் ஆணைஎன்றே*


இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்

திசைவுடன் இருந்தகுருவே*

எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்

இலங்குநட ராஜபதியே.! 


*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் மட்டுமே அருளைப் பெறமுடியும்.* 


மேலே கண்ட பாடலும் அதில் உள்ள கருத்துக்களும் மிகவும் முக்கியமானது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 14 ஜூலை, 2021

வள்ளலார் திருமணம் !

 *வள்ளலாரின் திருமணம்!* 

சென்னையில் இராமலிங்கத்தின் தாயார் சின்னம்மை உடன்பிறந்தோர் *சபாபதி* *சுந்தராம்பாள்* *பரசுராமன்*

*உண்ணாமுலை* ஐந்தாவதாக இராமலிங்கம் என்னும் வள்ளலாரும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

*ஓதாது உணர்ந்தவர் இராமலிங்கம்*

இளமையிலே இராமலிங்கம் ஓதாது உணர்ந்தவராக விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

உலகியல் இன்பத்தில் நாட்டம் கொள்ளாமல் இறை சிந்தையிலே அதிக பற்றும் விருப்பமும் கொண்டு பல ஆலயங்கள் தோறும் சென்று கவிபாடும் ஆற்றல் உள்ளவராக திகழ்ந்தார்.  

*இராமலிங்கம் மன்மதனைவிட அழகில் சிறந்தவர் அதனால் தம் உடம்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்துக்கொள்வார்*

*திருமணம் ஏற்பாடு*

தாயார் சின்னம்மை மற்றும் உற்றார் உறவினர் வற்புறுத்தலால். இராமலிங்கத்திற்கு  திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து முயற்சி மேற்க் கொண்டார்கள்.

*இராமலிங்கத்திற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.* விருப்பம் இல்லாதிருந்தும் தாயார் சின்னம்மைக்கு. தன் உயிர் உள்ளபோதே  தம் கடமையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம்  செய்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தோடும் வேகத்தோடும் பெண்பார்க்கும் படலம் ஆரம்பமானது. 

*உண்ணாமலை மகள் தனம்மாள்* ! 

(வள்ளலார்) அக்காள் மகள் தனம்மாளுக்கு தன் இராமலிங்க மாமாவைப்பற்றி சிறுவயதுமுதல் நன்கு அறிந்தவர்.அவர் தன் அம்மாவிடமும் பாட்டியிடமும் *ராமலிங்கம் மாமாவை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று அன்புடனும் ஆசையுடனும் சொன்னார்.* அதைக்கேட்ட பாட்டி சின்னம்மையும் தாய் உண்ணாமுலையும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

தனம்மாள் விருப்பத்தை இராமலிங்கத்திடமும் எடுத்து சொன்னார்கள்.

*தடை சொல்ல  முடியாமல் இறைவன் சம்மதம்  எதுவாக இருந்தாலும் நடைபெறட்டும் எல்லாம் இறைவன் செயல் என அமைதியானார்*.

*உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ தனம்மாள் கழுத்தில் இராமலிங்கம் மாங்கல்யத்துடன் தாலியைக்கட்டவும் திருமணம் சிறப்பாக நிறைவாக ஆண்டவர் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக நடைபெற்றது.*

*முதல் இரவு நிகழ்ச்சி* 

*இராமலிங்கரையும் தனம்மாளையும் முதல்இரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்*. பால் பழங்கள் வைத்திருந்தனர். *இருவரும் பாயில் அமர்ந்து கொண்டார்கள்*.

சற்றுநேரம் அமைதிக்குபின் இராமலிங்கம் பேசுகிறார்.

*நீ எதற்காக என்னைத் திருமணம் செய்துகொண்டாய்* *என்னிடம் என்ன இன்பம் அனுபவிக்கப் போகிறாய் என்று தனம்மாளிடம் கேட்கிறார்* 

*அதற்கு தனம்மாள் நீங்கள் எனக்கு தாலிகட்டும்போது உங்கள் கரங்கள் என்மீதுபட்டது அப்போதே என் உடம்பெல்லாம் ஓர் அருள்சக்தி ஊர்ந்து செல்வதை உணர்ந்தேன்.அப்போதே எனக்கு எல்லா இன்பமும் கிடைத்துவிட்டது என்கிறார்* *அதற்குமேல் வேறு எந்த இன்பமும் எனக்கு வேண்டாம் என்கின்றார்*.

அந்த வார்த்தையைக் கேட்டவுடன் இராமலிங்கம் அதிர்ந்து ஆச்சரியத்துடன் அமைதியானார்.

*மேலும் தனம்மாள் சொல்லியது* 

உங்களை சிறுவயதுமுதலே எனக்கு நன்குத்தெரியும்.

நீங்கள் இறைவனின் குழந்தை என்பதும் தெரியும். உங்களுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டி பாட்டியும் அம்மாவும் வேறு பெண்ணைத் தேடியதும்தெரியும்.

*வேறு பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் அருள்பயணம் துண்டிக்கப்படும் தடைபடும் என்பதாலும்*. தடையில்லாமல்  தொடர்ந்து உங்கள் அருள்பயணம் வெற்றிபெற வேண்டும் என்பதாலும்.

*என் தாய் மாமாவாகிய நீங்கள் என்னை மட்டுமே தொடவேண்டும் என்ற அன்புகலந்த விருப்பம் மற்றும் பேராசையால்தான் திருமணம் செய்து கொண்டேன்* *என்று ஆனந்த கண்ணீர் மல்க தெளிவாக எடுத்துரைத்தார்.*

தனம்மாள் சொல்வதைக் கேட்ட இராமலிங்கத்தின் பார்வைக்கு *தனம்மாள் அருள்சத்தியாகவே காட்சி அளித்தார்.*   

*நான் வணங்கும் அருள் சத்தியாகவே உன்னை நினைக்கிறேன் என்றார். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள்தான் எனக்கு கண்கண்ட தெய்வம் என்றார் தனம்மாள்* இருவரும் உரையாடிக்கொண்டே இருக்க இரவு விடிந்தது.

*விடைப்பெற்று செல்லுதல்* 

இனிமேல் *உங்கள் அருள் பயணம் தடையில்லாமல் வெற்றிபெற வேண்டும்.இறைவன் உங்களை ஆட்கொள்ள வேண்டும்* என்று சொல்லிக்கொண்டே தனம்மாளும் இராமலிங்கமும்  கதவைத்திறந்து  வெளியே வருகிறார்கள்.

*வெளியே காத்திருக்கும் உறவினர்கள்* 

பாட்டி அம்மா பெரியம்மா மாமன்மார்கள் அனைவரின் முன்பு தனம்மாள் ஒரு நீண்ட அருள் உரைபோல் தெளிவான விளக்கம் நிகழ்த்தி தன் அன்பு கணவர் மாமா இராமலிங்கத்தின்  அருள்பயணத்திற்கு யாரும் தடை  செய்யவேண்டாம் சஞ்சலப்படவேண்டாம் என்று ஆனந்த கண்ணீர்விட்டு  வழிஅனுப்பி வைக்கிறார். 

அதைக்கண்ட உறவினர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மெய்ப்பொருள் காணச்செல்லும் இராமலிங்கத்திற்கு ஆனந்த கண்ணீர்விட்டு அழுது புலம்பி *தனம்மாள் விருப்பபடி தடைசொல்லாமல் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார்கள்*.

இராமலிங்கம் என்னும் வள்ளலார்  அனைவரின் அன்பையும் ஆசியையும் சிரமேற்க்கொண்டு வணங்கி மகிழ்ந்து வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய  அருள்பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்து செல்கிறார். 

*வள்ளலார் பாடல்!* 

முனித்த வெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்

தனித்தனி ஒருசார் மடந்தையர் *தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்*

குனித்தமற் றவரைத் *தொட்டனன் அன்றிக் கலப்பிலேன்* மற்றிது குறித்தே

பனித்தனன் நினைத்த தோறும் உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.! 

மேலே கண்ட பாடலில் ஒரு பெண்ணை தாலிகட்டும்போது தொட்டுள்ளேன் அன்றி

கலப்பிலேன் ( உடல் உறவு கொள்ளவில்லை) என்கிறார் வள்ளலார். 

*உலகியலார் கேள்வி*

*வள்ளலார் ஒரு பெண்ணை திருமணம் முடித்து அம்போ என்று விட்டுவிட்டு போய்விட்டார் என்று சிலபேர் ஏளனமாக பேசுவதும் உண்டு* 

*என்னிடமே சிலபேர் வள்ளலார் திருமணம் முடித்து மனைவியை விட்டுவிட்டு செல்வது சரியா ? என்று  கேட்பவர்களும் உண்டு*.

வள்ளலார் வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் திருமணம் முடிந்து முதல் இரவில் தன்மனைவி தனம்மாளிடம் *திருவாசகம் என்ற நூலை* கொடுத்துவிட்டு இராமலிங்கம் சென்றுவிட்டார் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.அதனால் மக்கள் குழப்பத்தினால் பலவிதமான கேள்வி கேட்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த அனுபவத்தின் வாயிலாக இக்கட்டுரையைத் தந்துள்ளேன்.

இக்கட்டுரை மக்கள் சந்தேகத்திற்கு விடைதரும் என நினைக்கிறேன்.(விரிக்கில் பெருகும்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சிமையம்

9865939896

செவ்வாய், 13 ஜூலை, 2021

அருள். பெறுவதற்கு திருமணம் தடையா ?

 *அருள் பெறுவதற்கு திருமணம் தடையா*? 

வள்ளலாரின் சிறுவயதுமுதல் நெருங்கிய நண்பர்   சென்னையில் வாழ்ந்த இரத்தினமுதலியார் என்பவராகும் அவர் தமிழ் ஆசிரியர். *வள்ளலாருக்கு வேட்டி வேண்டும் என்றாலும் கூட அவரிடம்தான் சொல்லுவார்* அவர்தான் வாங்கியும் அனுப்புவார் அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர். 

சென்னையை விட்டு வடலூர் வந்து தங்கியிருந்த காலத்தில். வள்ளலார் அதிகப்பழக்கமும் அதிக கடிதத் தொடர்பும் கொண்டதும் இரத்தினம் அய்யா அவர்களிடமே. 

ஒவ்வொரு கடிதத்திலும் உடம்பை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றும்.

*ஜீவகாருண்யம்**பாசவைராக்கியம்*.

*சிவபக்தி*  அவசியம் கடைபிடிக்க வேண்டும். *இவை கிடைப்பதற்கு சாதுக்கள் சார்பு அவசியம் வேண்டும்*. இக்காலத்தில் சாதுக்கள் கிடைக்காவிடினும் நம்மை எழுபிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துக் பேரின்பம் என்னும் கரையில் ஏற்றும் சைவத் திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்து சிவபெருமான் திருவடிகளைப் பற்றவேண்டும் என ஒவ்வொரு கடிதத்திலும் தெரிவிப்பார்.

*திருமணம் ஏற்பாடு நடைபெறுகிறது.*இரத்தினம் அய்யா அவர்களுக்கு அவரது வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்வதை வள்ளலாரிடம் கடிதம் மூலமாக  தெரிவிக்கிறார்.

*வள்ளலார் சொல்லும் பதில் மிகவும் சிந்திக்க வைக்கிறது* 

தாம் எழுதிய கடிதம் வரக்கண்டு அதில் உள்ளவைகளை அறிந்து கொண்டேன்.

*பரம சிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம் என பதில் கடிதம் அனுப்புகின்றார்*( இதனுடைய உள் அர்தத்தை சிந்திக்கவும்)

அன்றியும் விவாகஞ் செய்துக் கொண்டாலும் அதனால் வருத்தப்பட நம்மை சிவபெருமான் செய்விக்கமாட்டார்.ஆதலால் சந்தோஷமாக விவாகத்துக்குச் சம்மதிக்கலாம்.

தாம் தடைசெய்ய வேண்டாம்.

*எந்தகாலத்தில் எந்தஇடத்தில்*.

*எந்தவிதமாக எந்தமட்டில்* *எதை அனுபவிக்க வேண்டுமோ* *அதை அந்தக்காலம்* *அந்த இடம்* *அந்தவிதம்*.*அந்தமட்டு பொருந்தப் பொசிப்பிக்கின்றது.*

*திருவருட் சத்தியிருந்தால் நமக்கென சுதந்தரம் இருக்கின்றது.**எல்லாம் திருவருட்சத்தி காரியம் என்று அதைத் தியானித்து இருக்க வேண்டும்.*

*உண்மை இது இதைக்கொண்டு தெளிந்திருக்க வேண்டும்*.

*எனக் கடித்த்தில் தெரிவிக்கிறார்*.

வள்ளலார் சம்மதம் தெரிவித்துவிட்டார் எனக்கருதி இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.

திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தி அருளவேண்டும் என்று இரத்தினம் அய்யா வள்ளலாருக்கு கடிதம் எழுதுகிறார். 

*வள்ளலார் திருமணவிழாவிற்கு போகவில்லை* அதற்கு பதில் கடிதம்.

*தங்கள் மணக்கோலத்தை காணக்கொடுத்து வையாதவனாக இருந்தாலும் கேட்டு மகிழும்படி பெற்றேன்*. என்று விரிவாக கடிதம் எழுதுகிறார். 

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்? திருமணம் செய்துகொண்ட இரத்தினம் அய்யா அவர்கள் வள்ளலார் சொல்லியவாறு வாழ்ந்து அருள்பெற்று மரணத்தை வென்றுவிட்டாரா ? 

மரணம்தான் அடைந்தார்.

*உண்மையில் கடவுள்மீது பற்று இருந்தால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார்* 

மேலும் சொல்கிறார்.

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்

*உகுந்தருணம்* *உற்றவரும்* *பெற்றவரும்* *பிறரும்**உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே*

மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனேமெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியேசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.! 

மேலே கண்ட பாடலில் எந்த பற்றும் இருக்ககூடாது என்கிறார்.

மேலும் இரண்டாம் திருமுறையில் ஒருபாடல்!

புண்ணைக் கட்டிக்கொண்டே அதன்மேல் ஒருபுடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்

பெண்ணைக் கட்டிக்கொள் வார் இவர் கொள்ளிவாய்ப்பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்

மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்

கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.!  

மேலே கண்ட பாடலையும் கவனிக்கவும்.

*அருள் பெறுவதற்கு திருமணம் தடையா ? இல்லையா ? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்*

*வள்ளலாருக்கு பின்பு ஒருவரும் தேறவில்லை என்று கேட்பவர்களுக்கு என்னபதில் என்ன காரணம் சன்மார்க்கிகள் சொல்லப்போகிறீர்கள்  ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடுகதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

அய்யரை தூக்கி எறிந்த குதிரை!

 *அய்யரை தூக்கி எறிந்த குதிரை.!*

மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட பின்பு வெளியில் எவர்க்கும் தோன்றாமல் இருந்தார். 

வள்ளலார் சித்திவளாக அறைக்குள் செல்லும் முன்னே தெளிவாகச் சொல்லுகிறார்.

நான் உள்ளே சென்று பத்துப் பதினைந்து தினம் இருக்கப்போகிறேன். *இந்த கதவைச் சாத்திவிடப் போகிறேன்* பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னை காட்டிக்கொடார் என்று மக்களுக்கு சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

மேலும் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்றார். 

*அய்யரைக் குதிரை முட்புதரில் தள்ளியது* 

திருக்காப்பிட்டுக் கொண்ட வள்ளலார் என்ன ஆனார் என்பதை தெரிந்துகொள்ள சிலநாள் கழித்து *கலெக்டர்*. *பெரியடாக்டர்*.

*தாசில்தார்* *அய்யர்* மூவரும் குதிரைமேல் ஏறிக்கொண்டு மேட்டுக்குப்பம் வந்தனர்.பின்பு சித்திவளாகத்தை சுற்றி சுற்றி பார்த்து வந்தனர்.

அதுசமயம் தாசில்தார் வெங்கடராம அய்யர் அங்குள்ளவர்களை மிரட்டும் தோரணையில் கடும்மொழி சிலகூறி திருக்கதவைத் திறக்கவேண்டும் என்று அங்குள்ளவர்களிடம் திறவுகோல் கேட்டனர். திறவுகோல் இல்லை தாள்மட்டும் போட்டுள்ளது. என்றார்கள்.

கலெக்டர் டாக்டர் இருவரும் இவர்போல் எல்லா மதங்களிலும் அருள்பெற்ற பெரியோர்கள் உள்ளார்கள் என்று தாசில்தாரிடம் சொல்லி *அவர் செய்கையை சற்று கடிந்து கொண்டார்கள்*.

அதன்பின்பு கதவைத் திறந்துபார்த்தார்கள். *வள்ளலார் சொல்லியவாறு வெறும் வீடாகத்தான் இருந்த்து*.

கலெக்டர்துரை அவர்கள் மக்களிடம் இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.

*வள்ளலார் ஆணையின்படி அன்னதானம் செய்தலும் கடவுளை மெல்லென துதித்தலுமாகிய தொண்டு புரிகிறோம் என்று விடை கூறினர்.*

*கலெக்டர் டாக்டர் இருண்டு பேரும் அன்னதானம் செய்ய இருபதுரூபாய் கொடுத்தனர்*.

பின்பு மூவரும் குதிரையில் ஏறிச் சென்றனர்.

கலெக்டர் டாக்டர் இருவரும் முன்னாடி சென்றனர் *பின்னாடிவந்த தாசில்தாராகிய அய்யரை அவருடைய குதிரை மிரண்டு முட்புதரில் தள்ளியது*

முன் சென்ற இருவரும் தாசில்தாரைக் காணோம் என்று திரும்பிவந்து பார்த்தனர்.

முட்புதரில் அய்யர் விழுந்து இருப்பதை பார்த்தவர்கள்

*சித்தரை வைதபலன்*  இதுவென்று கூறி அய்யரை ஒரு கட்டைவண்டியில்  ஏற்றுக்கொண்டு சென்றனர்.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில் ? 

*வள்ளலார் போன்ற சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.* 

*வள்ளலார் பாடல்!* 

அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்

பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்

*பிச்சையிட் டுண்ணவும்* *பின்படு கின்றீர்**பின்படு தீமையின் முன்படு கின்றீர்*

*இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்**எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சிமையம்

9865939896.

அருளாளர்கள் மகாசபை அவசரக்கூட்டம் !

 *அருளாளர்கள் மகாசபை அவசரக் கூட்டம்* ! 


*30-01-1874 ஆம் நாள் அன்று அருட்பெருவெளியில் நடக்க இருக்கும் அருளாளர்கள் மகாசபை அவசரக் கூட்டத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அண்டங்கள் உலகங்கள் எங்கும் உள்ள அருளாளர்களுக்கு  அழைப்பு விடுகிறார்.*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைப்பை ஏற்று அனைத்து அருளாளர்களும் *அருட்பெருவெளிக்குள் வந்து அவரவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டு இருக்கும் மூன்று அடுக்கு வரிசையின் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்*.


*(மூன்று அடுக்கு என்பது *ஞானதேகம்*.

*பிரணவதேகம்*.

*சுத்ததேகம் கொண்டவர்கள் அமரும் வட்டம் கொண்ட வரிசையாகும்)*


அண்டகோடிகள் எல்லாம் அருள்ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *ஞானசிங்காதன பீடம் என்னும் சிம்மாதனத்தின் மத்தியில் வந்து அமர்ந்து கொண்டார்*.


அருளாளர்கள் யாவரும் என்ன நடக்கப்போகிறது என்ற உண்மைத்தெரியாமல் அவரவர்களும் பேசிக்கொண்டும். விழித்துக்கொண்டும் உள்ளார்கள்.


*திரு அருட்பிரகாச வள்ளலாரை அழைக்கிறார்* 


*அருளாளர்கள் மத்தியில் *திடீர்என* *வள்ளலாரை அழைத்து* *ஆண்டவர் அறிமுகம் செய்து வைக்கிறார்*.

எல்லோரும் அதிசயமாக ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.


*வள்ளலார் பாடல்!*


பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்


மெய்பிடித்தாய் வாழிய நீ சமரசசன் மார்க்கம்

விளங்க உல கத்திடையே விளங்குக என்று எனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனை நாம் கைவிடோம் என்றும்


*மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண*

*மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!* 


மேலே கண்ட பாடலின் விளக்கம் யாதெனில்?   கடவுள் யார் ?  என்ற உண்மையை மக்களுக்குச் சொல்லாமல் உண்மைக்கு புறம்பான பொய்யான கற்பனைக் கதைகளை உருவாக்கி அதில் வரும்  தத்துவக் கதாபாத்திரங்களை கடவுளாக படைத்து. உண்மையாக இருப்பது போலவே சொல்லி.இடம் வாகனம். ஆயுதம். வடிவம். ரூபம் முதலியவைகளை ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து மக்களை நம்ப வைத்து பொய்சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்.


ஆதலால் *ஒளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு உண்மையை ஆழமாக எடுத்து உரைத்து இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை மக்களுக்கு காட்டி அவற்றைத் தெரிந்துகொள்ள   ஜீவகாருணய ஒழுக்கத்தை தெரியப்படுத்தி.தானும் அதேபோல் வாழ்ந்து வழிகாட்டி. மக்களை வாழவைத்துக் கொண்டு இருக்கும்  வள்ளலாருக்கு*.


*உங்கள் முன்பு* 

*மெய்பிடித்தாய் வாழிய நீ என்று வாழ்த்துகிறேன்* 


 சமரச சுத்த சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளக்குக என்று வள்ளலாரின் கையைப்பிடித்து களித்திடுக என்றும் *அருள்ஆட்சி அதிகாரங்களை வழங்கி மணிமுடியும் சூட்டி கையிற் பொற்கங்கனமும் கட்டி* *அருள் மாலை அணிவித்து*. பொய்பிடித்த விழி உலகர் எல்லோரும் காண ஆட்சி பீடத்தில் வள்ளலாரை அமரவைத்து அழகுபார்க்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


*தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே*!


*தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என்தனித் தந்தையே!*


மீண்டும் பொய் பிடித்த அருளாளர்கள் மத்தியில் ஆண்டவர் சொல்கிறார். நீங்கள் பொய்மட்டும் சொல்லவில்லை. இந்த  

*ஞானசிங்காதன

பீடத்தில்*  அமரும் தகுதியும் பொருத்தமும் உங்களில் ஒருவருக்கும் இல்லை என்கிறார்*.


*வள்ளலார் பாடல்!*


பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங் 

கண்டு வந்துநிற்கும் போது தனித் தலைவர்


திருத்தமுற அருகணைந்து *கைபிடித்தார்* நானும்

தெய்வ மல ரடிபிடித்துக் கொண்டேன் 

சிக்கெனவே


வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் *அழியா*

*வாழ்வுவந்த துன்தனக்கே* *ஏழுலகும் மதிக்கக்*

*கருத்தலர்ந்து* *வாழியஎன் றாழிஅளித்து* *எனது*

*கையினில்பொற் கங்கணமும்* *கட்டினர்காண் தோழி.!*


என்னும் பாடல் வாயிலாக அருளாளர்கள் முன்னாடி மேலும் வள்ளலாரை புகழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறார்.


அருளாளர்கள் யார் யார் என பட்டியல் இடுகிறார் வள்ளலார்.


*பாடல்*


உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி


பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்


திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ


வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!


*அனுபவமாலை* என்னும் தலைப்பில் வள்ளலார் தம் அனுபவத்தை 100 பாடல்களில் தெரிவிக்கின்றார். 


நாம் போற்றும் வணங்கும் வழிபடும் அருளாளர்கள் மத்தியில் தான் வள்ளலாருக்கு அருள்ஆட்சி வழங்கி உள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


*வள்ளலார்பாடல்!*

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் 

தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு.!  


*உலகம் எங்கும் இனி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபடவேண்டும் என்பதே உண்மையான கடவுள் வழிபாடாகும்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திருஅருட்பாவின் விளக்கம் அறிவது எங்கனம ?

 *திருஅருட்பாவின் விளக்கம் அறிவது எங்கனம்?*


கடலூரில் உள்ள காரணப்பட்டு என்ற ஊரில் பிறந்ததால் காரணப்பட்டு கந்தசாமி என்று பெயர் பெற்றார்.இளம்

வயதில் கல்வியில் சிறந்து விளங்கினார்.

பாகூர் என்னும் ஊரில் கணக்கு வேலை பார்த்துவந்தார்.


இவருக்கு உடல்நடுக்கமும் தலை சுற்றலும் என்னும் பிணி ஏற்பட்டது.பல மருத்துவர்களை நாடியும் மருத்துவங்கள் செய்தும் குணமாகவில்லை.


ஒருநாள் ஒரு பெரியவர் கந்தசாமி அய்யா வீட்டிற்கு வந்தார் அவரிடம் தமக்கு உள்ள  நோயின் தன்மையை எடு்த்துரைத்தார்.(அந்தபெரியவர் யார் என்பது தெரியாது)


அது கேட்ட அப்பெரியவர் வடலூரில் இராமலிங்க அடிகள் இருப்பது பற்றியும், அவர் பலருக்கு பல்வேறு பரோபகாரங்கள் செய்து கொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். அவரிடம் சென்றால் இவ்வுடல் நடுக்கமும், தலை ஆட்டமும் மாறும் நிற்கும் உடனே குணமாகும் எனவும் கூறினார்.


அவர் சொல்லியவாறே வடலூர் சென்று வள்ளலாரைச் சந்தித்து ஆசிபெற்று பூரண குணமானார்.

அதிலிருந்து வள்ளலார் மீதும் அவர் எழுதிய திருஅருட்பா மீதும் அளவில்லாத பற்றுக்கொண்டார்.வள்ளலாரிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிடைத்தது.

வள்ளலாரைத் தனக்கு கிடைத்த அருட்குருவாகவே எண்ணிக்கொண்டார். 


திருஅருட்பாவை தமிழகம் எங்கும் இசையோடு பாடி மக்கள் மத்தியில் பரவச் செய்தவர்தான் *சமரச பஜனை காரணப்பட்டு கந்தசாமிபிள்ளை என்பவராகும்*.

*அவர் எப்போதும் திருஅருட்பாவை தன் கையிலே வைத்திருப்பார்*.


*திருஅருட்பா விளக்கம் அறிதல்!*


*ஒருநாள் கந்தசாமி அய்யா அவர்கள் திருஅருட்பாவை கையில் வைத்துக்கொண்டு மாயவரம் சென்றார்*.அதே நாளில் மாயவரம் வித்வான் நடராஜபிள்ளயும்.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும் மற்றும் பல அறிஞர்களும் இருந்தனர்.அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.


மீனாட்சிசுந்தரம் அவர்கள் கந்தசாமிபிள்ளையைப் *பார்த்து கையில் உள்ளது என்ன புத்தகம்* என்று கேட்க *வள்ளலார் எழுதிய *திருஅருட்பா* என்றார்.


உடனே மகாவித்வான் அதனைப்பெற்று *மகாதேவமாலையில்* *கருணைநிறைந்து* என்னும் முதல் பாசுரத்தை அங்குள்ள வித்வான்களிடம் காட்டி பொருள் விளங்குமாறு சொல்லவேண்டும் எனக்கேட்டார்.


ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றிய விளக்கங்களை எடுத்துக்கூறினர். *மகாவித்வான் எழுந்து  திருஅருட்பாவைத் தன் தலைமீது வைத்துக்கொண்டு* போற்றித்துதித்து ஆனந்தித்து இருப்பதே அப்பாடலுக்கு உரை என்றனர்.


இதில் இருந்து *நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?* திருஅருட்பாவிற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு மனித தரத்தில் விளக்கம் சொல்லி வருகிறார்கள். அதனால் திருஅருட்பாவின் உண்மைவிளக்கம் தெரிந்து கொள்ள சாதாரண மக்களால் முடியவில்லை.


*எப்படித் தெரிந்து கொள்வது?* 


*ஒரேகடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்ற உண்மை உணர்ந்து.

அத்தெய்வத்தை *ஸ்தோத்திரம் செய்கின்றதாலும் இடைவிடாது நினைக்கின்றதாலும் அதிக உஷ்ணம் உண்டாகும்*.


அந்த விசார உஷ்ணத்தால் நம் ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடிஇருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகள் நீங்கும் .(மாயாத்திரை)


ஒரு ஜாமநேரம் மனத்தில் இகவிசாரமின்றிப் பரவிசாரப்புடன் ஆன்மநெகிழ்ச்சியோடு  தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம். 


*ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள முதல்திரை விலகினால் மட்டுமே ஓர்அளவிற்கு திருஅருட்பாவின் விளக்கம் புரியும்*


திருஅருட்பாவின் விளக்கம் எளிதில் அறிந்துகொண்டு அருளைப்பெற்று பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 8 ஜூலை, 2021

படிக்காமல் படிப்பது !

 *படிக்காமல் படிப்பது* ! 

திருநெல்வேலியில் சைவ வேளாண்மரபில் உதித்தவர் தண்டபானிசுவாமிகள் என்னும் முருகதாசர்.

தனது சிறுவயதுமுதல் செந்தமிழ்ச்சுவை பொலிந்த  திருப்புகழ்களால் முருகப்பெருமானைப்பற்றி தம்காலம் முழுவதும் துதித்து பாடிக்கொண்டே வந்துள்ளார்.இலக்கணம் இலக்கியம் தெரிந்த சிறந்த புலவர்.ஆதலால் அவருக்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.திருப்புகழ் சுவாமிகள் என்றும் முருகதாசர் என்றும் பெயர் சூட்டப்பெற்றார்.

*வடலூர் வள்ளலாரைச் சந்தித்தல்*

முருகதாசர் ஒருநாள் வடலூருக்கு வந்து வள்ளலாரிடம் சிலநாள் தங்கி முருகரது திருவருளைப்பற்றி அங்குள்ளவரிடம் சொல்லி வியந்து கொண்டே இருந்தனர்.வள்ளலாரும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

முருகதாசர் தாம்பாடிய முருகரைப்ற்றிய திருப்புகழ் பாடல்களை எழுதி வைத்துள்ளனவற்றை வள்ளலாரிடம் எடுத்து காட்டிக்கொண்டேவரவும்.அவற்றை *வள்ளலார் படிக்காமல் ஏடுகளை சிறிது தள்ளினார்*.

*(அருள்பெற்ற வள்ளலாருக்கு படிக்காமலே அதில் உள்ளது அனைத்தும் தெரியும் என்பது முருகதாசருக்கு தெரியாது.)*

அதனால்  அலட்சியங் கொண்டதாக முருகதாசர் எண்ணினார்.

*அதைக் அறிந்துகொண்ட வள்ளலார் முருகதாசரை அருணகிரிநாதரே என்று சிறப்பித்து பேசினார்*.

எனினும் முருகதாசருக்கு திருப்தியில்லை.

*வள்ளலார் ஏடுகளை படிக்காமல் தள்ளினதால்* கணக்கில்லாமற் பாடிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதால் *அனுபவஞானம்* இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர் ஐயமுற்றார். *( அதுதான் உண்மை)*

*வள்ளலாரை தாயுமானவர் என நினைத்தல்* 

முருகதாசர் அங்கு முருகர்வழியில் தியானம் செய்துகொண்டு இருந்தபோது *வள்ளலார் தாயுமானவரே* என்று அவருக்கு விளங்கியது.

*நான் தாயுமானவர் அல்ல என்பதை புரியவைத்த வள்ளலார்*.

*தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர்*.சமய மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். *இதில் நித்தியதேகம் கிடையாது*. *இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல*. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீளவும் வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள். சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் என விளக்கம் அளித்தார். 

*சாதி சமய மதங்கள் சார்ந்தவர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும் சுத்த சன்மார்க்கிகள் ஆகமுடியாது*

*ஞானிகளை வினை தாக்குமோ?*

ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது அபக்குவம் அடைய  எதனால் வந்தது என வள்ளலார் கேட்க *வினையால் வந்தது* என்றார் முருகதாசர். 

வள்ளலார் *இங்கேயும் வினை உண்டோ*? என்று கூறி *சந்நியாசிகளை வினை தாக்குமோ* என்பதைக் குறித்துப் பிரசங்கம் செய்தார். *உண்மையான அன்பு தயவு கருணை உயிர்இரக்கம்  ஜீவகாருண்யம் செய்வோரை வினை தாக்காது என புரியவைத்தார்*. 

பின்பு வள்ளலாரைக் குறித்து வினாப்பதிகமும்.அனுபவப்பதிகமும் பாடி ஜீவகாருண்யம் விளக்கவந்த *பூரண அனுபவஞானி* என வள்ளலாரைப் புகழ்ந்து போற்றிபாடினார்.

முருகதாசர் வள்ளலார் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்யத்தை கடைபிடித்து வந்தார்.அதனால் தண்டபானிசுவாமிகள் என்னும் முருகதாசருக்கு *ஜீவகாருண்ய மூர்த்தி* என்ற பெயரோடு புகழ்பெற்று விளங்கினார். 

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில்? 

*ஜீவகாருண்ய ஒழுக்கம்  இல்லாமல் ஞானம் யோகம் தவம் தியானம் விரதம் ஜெபம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத வெற்று மாயாஜாலச் செய்கைகளே ஆகும் என்று அறிய வேண்டும்* என்று வள்ளலார் தெளிவுபட சொல்லுகின்றார்.

அருள் பெற்றவர்களால் மட்டுமே *படிக்காமல் படிக்கவும்* *படிக்காமல் உணர்ந்து கொள்ளவும்* *படிக்காமல் எதையும்* *பற்றிக் கொள்ளவும் முடியும்*. 

*வள்ளலார்பாடல்*

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந் திடவும் ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்

*எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்*

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றது இது தொடங்கிநிகழ்ந் திடும் நீர்

*பயின்றறிய விரைந்துவம்மின்* *படியாத படிப்பைப்*

*படித்திடலாம்* *உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!*

என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரிவிக்கின்றார். 

*இதுவரை படியாதபடிப்பான சாகாக்கல்வியைக் கற்றவர் வள்ளலார் ஒருவரே* வள்ளலார் பாடல்!

*கற்றேன் சிற் றம்பலக் கல்வியைக்* *கற்றுக்* *கருணைநெறி*

*உற்றேன்*

*எக் காலமும் சாகாமல் ஓங்கும்* *ஒளிவடிவம்*

*பெற்றேன்* *உயர்நிலை பெற்றேன்*

*உலகில்* *பிறநிலையைப்*

*பற்றேன்* *சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே*.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 7 ஜூலை, 2021

போட்டோவிற்குள் அடங்காத வள்ளலார் !

 *போட்டோவிற்குள் அடங்காத வள்ளலார்!*

வள்ளலார் புகழ் தமிழ்நாடு எங்கும் புகழ்பெற்று விளங்குகின்ற காலம்.

வள்ளலார் திருஉருவத்தைப் புகைப்படம் எடுக்க விருப்பம் கொண்ட சென்னை அன்பர் புகழ்பெற்ற புகைப்படக்காரர் *மாசிலாமணிமுதலியார்* அவர்கள் புகைப்பபடம் எடுத்தார் வள்ளலார் திருஉருவம் விழவில்லை.

மீண்டும் எட்டுமுறை தொடர்ந்து புகைப்படம் எடுத்தார்.

*வள்ளலார் திருமுகமும் திருக்கரங்களும் திருவடிகளும் புகைப்படத்தில் விழாமல்* *வெள்ளைவேட்டி மாத்திரம் விழுந்ததைக்கண்டு* *அதிர்ச்சியுடன் அற்புதத்தைக்* *கண்டு மனம்* *நெகிழ்ந்து**போனார்*.

*வள்ளலாரின் அருள் உடம்பு (ஓளிஉடம்பு) ஆதலால் புகைப்படத்தில் விழவில்லை. என்பதை உணர்ந்த வள்ளலாரின் மாணாக்கர்கள் வேலாயுதனார் இரத்தினம். போன்ற அன்பர்களும் மேலும் மக்களும் வள்ளலாரைப் போற்றி புகழந்து கடவுளாகவே துதிக்க மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்*.

*பொன்னான உருவத்தை மண் உருவமாக்கியது!*

வள்ளலார் மீது பேரன்புகொண்ட  குயவன் ஒருவன் பண்ணுருட்டியில் வாழ்ந்துவந்தான் அவன் வள்ளலாரின் திருஉருவத்தை மண்ணால் அமைத்து உரிய வர்ணங்களைத் தீட்டி பாதுகாப்பாக  கொண்டுவந்து *வடலூர் தருமச்சாலையில் இருந்த வள்ளலாரிடம் கொடுத்தார். வள்ளலார் அந்த மண்பொம்மையை பெற்றுக்கொண்டு தருமச்சாலைக்கு வெளியே வந்து *பொன்னான மேனி மண்ணாயிற்றே* என்றுகூறி இருகையையும் விட்டுவிட்டார்.

*அந்த  மண்பொம்பை கீழே விழுந்து தூளாகியது*.

*பின்பு வள்ளலார் உருவம் செய்வதை நிறுத்திவிட்டனர்*.

வள்ளலார் சித்திபெற்ற பிறகு மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவன். வேறு ஒரு வள்ளலார் உருவம் அமைத்தான்.அந்த உருவத்தில் இருந்து தான் பலவிதமான உருவங்கள்  புகைப்படங்கள் எடுத்து வழக்கத்தில் வரத்தொடங்கியது.

*என்னை வணங்க வேண்டாம் என்றவர் வள்ளலார்!*

*சன்மார்க்கிகள் சொன்ன பேச்சை கேட்கவே மாட்டார்கள் என்பது வள்ளலாருக்கு முன்கூட்டியே தெரியும்*

வள்ளலார் சொல்லியதை செவிச் சாய்க்காமல் தங்கள் தங்கள் விருப்பம்போல் சன்மார்க்க சங்கங்களில் சமய மத வழிபாடுகள் போன்று *வள்ளலார் உருவத்தை வைத்தும் விபூதிபட்டை அடித்தும் மாலைபோட்டும் படையல் வைத்தும்  தீபாராதனை காட்டியும் வணங்கியும் வழிபாடுசெய்து வருகிறார்கள்*.

*சாதி சமயம் மதம் போன்ற ஆச்சாரங்கள் வேண்டாம் என்று சொன்ன வள்ளலாருக்கே விபூதி பட்டையை அடித்து வழிபாடு செய்துவருகிறார்கள்.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வழிபடுங்கள்*

*உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே*!  அவரை வணங்காமல் என்னை தெய்வமாக வணங்காதீர்கள் என்று பேருபதேசத்திலும் பாடலிலும்  தெளிவாக சொல்லி உள்ளார்.

*பேருபதேசத்தில் சொல்லியது*

*தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகின்றார்கள்*.

*ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்*.

என்று  *நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்*. *இருக்கின்றேன்*. *இருப்பேன் என தெளிவாக சொல்லி புரிய வைக்கின்றார் வள்ளலார்*. 

மேலும் சன்மார்க்க அன்பர்களுக்கு பாடல் வாயிலாகவும்.  சொல்லுகின்றார் ! 

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் *உமது*

*தாள்வணங்கிச்* *சாற்றுகின்றேன்* *தயவினொடும் கேட்பீர்*

என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்

*எல்லாம்செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்*

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

*புந்திமயக்கம் அடையாதீர்* பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் *சுத்தசிவம் ஒன்றே*

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! 

என்ற பாடல்வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் வணங்குங்கள் என்று சத்தியம் வைத்து சொல்கின்றார். 

*புதியவர்கள் வருகை*

பழைய சன்மார்க்கிகள் அனைவரும் சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.

*ஆதலால் ஒருவரும் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதியானவர்கள்  அல்ல என்பது தெளிவாக தெரிகின்றது*

எனவே அருள்பெறும் வாய்ப்பையும் மரணத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்துகொண்டே உள்ளார்கள்.

இனிமேல்  வரக்கூடியவர்கள் சாதி சமயம் மதம் அற்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்க  மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து அருளைப்பெறும் தகுதியுடையவர்களாக வந்துகொண்டே உள்ளார்கள்.

*அருள்பெறும் வாய்ப்பை கண்டிப்பாக பெறுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்*. 

*இனி சுத்த சன்மார்க்க காலம். சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உலகம் முழுவதும் வள்ளலார் கொள்கைகள் நிறைந்து விளங்கும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருவருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 6 ஜூலை, 2021

குழந்தை பாக்கியம் உண்டானது !

 *குழந்தை பாக்கியம் உண்டானது*!

புதுச்சேரிக்கும் மஞ்சகுப்பத்திற்கும் இடையில் சுங்கம் வசூல் செய்யும் ரெட்டிச்சாவடியில் அமீனாக பணிபுரிந்தவர் *மாயூரம் சிவராமய்யர்* என்பவராகும்.

அவருக்கு நிறையசொத்து பெரிய பங்களாவீடு பொருள் நிறைந்தவர்.வசதி வாய்ப்புக்கள் நிறைய இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாக்குறையால் அவரும் அவரதுமனைவியும் மிகவும் வருந்தினர்.

மனவிக்கு *கிரகதோஷம்* உண்டு என ஜோதிடரும் மற்றும்  பலர் சொல்லவும் பலபல பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை.

வடலூர் வள்ளலாரிடம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் என அன்பர்கள் சொல்லவும் சிவராமய்யரும் அவர்மனைவியும் வடலூருக்கு வந்து *வள்ளலாரிடம் விண்ணப்பித்தனர்*

*அன்னசத்திரம் கட்ட சொல்லியது*

பண்ருட்டிக்கும் வடலூருக்கும் மத்தியில் *பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள கன்றகோட்டைப் புலவனூரில் ஒருசத்திரம் கட்டி அன்னதானம் செய்யுங்கள்* என்று ஆணை இட்டார் வள்ளலார்.

*அவ்வாறு செய்தால் ஒரு அழகான  ஆண்மகன் பிறப்பான் என்றார் வள்ளலார்*.

வள்ளலார் சொல்லியவாறு சிவராமய்யரும் மனைவியும் *சத்திரம் கட்டி அன்னதானத்தை மகிழ்ச்சியுடன் சிறப்பாக செய்தார்கள்.*

*வள்ளலார் சொல்லியவாறே அழகான ஆண்குழந்தை பிறந்தது வாரிசு இல்லாக்குறை தீர்ந்தது*.

*வள்ளலாரை சோதிக்க வந்த சாஸ்திரிகள்!*

ஒருநாள் சாஸ்திரிகள் நால்வர் *சாமவேத்த்தில்* உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தில்  கேள்விகேட்டு

வள்ளலார்ரைச் சோதிக்க எண்ணி வடலூர் வந்து சேருகின்றனர்.

அச்சமயம் வள்ளல்பெருமான்.  *சாமவேதத்தில் அவர்கள் எண்ணிய பாகத்தையே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்.*

சாஸ்திரிகள் வள்ளலாரின் பூரண ஞானத்தை அறிந்து வியந்து பாராட்டி இன்பக்கடலில் மூழ்கினர். *என்ன புண்ணியம் செய்தோமோ*  என  ஆனந்தம் அடைந்தனர்.  பின்பு வணங்கி ஆசிபெற்று சென்றனர்.

*வள்ளலார்பாடல்!*

*அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்*

*ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்*

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றேஎந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல்* *வேண்டும்*

*தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே*.!

*வள்ளல்பெருமான் அவர்கள் சாதி சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் தன்னைத் தேடிவரும்  மனிதர்கள் அனைவருக்கும்*

*எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமலும்.சித்து வேலைகள் செய்யாமலும் முறையான செய்யத்தகுந்த வழியைக்காட்டி நன்மைசெய்து*.

*துன்பம் தொலைத்து  இன்பம் அளித்து அனுப்புவதே குறிக்கோளாகவும் லட்சியமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்*

அதேபோல் எல்லா உயிர்களிடத்தும்  அன்பு தயவு கருணைகாட்டி *உயிர்இரக்கமே வாழ்க்கையின் முழுமூச்சாக கொண்டு எவ்வித பேதமும் இல்லாமல் தம்உயிர்போல்  நேசித்து பாராட்டி வாழ்ந்துள்ளார்*.

ஆதலால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு *பூரண அருள்வழங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி முத்தேக சித்தியை வழங்கினார்*.

மேலூம் *மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*

உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் வள்ளலார்போல் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 5 ஜூலை, 2021

ஜீவ காருண்யத்தின் எல்லை !

 *ஜீவ காருண்யத்தின் எல்லை!*

ஒருநாள் சில அன்பர்கள் *ஜீவ காருண்யத்தைக் குறித்து* நெடுநேரம் வாசாஞானமாய்ப்

(முடிவு தெரியாமல்) பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அவற்றை அறிந்த வள்ளலார் *ஜீவகாருண்யம் எவ்வளவு தூரம்* பரந்துள்ளது என்பதை அறிவீர்களா ? என்று கேள்விகேட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.

தெருவில் பெரியோர் இருவர் செல்லும்போது. ஒருவர் கால்பட்டு *ஒரு மண்கட்டி உடைந்துவிட்டது*

*அதைக்கண்ட மற்றொருவர் மூர்ச்சையாயினர்* மற்றொரு பெரியவர் மூர்ச்சையானவரைக் காரணம் கேட்க.

*தமது கால்பட்டு மண்கட்டியின் இயற்கை நிலையாகிய நேர்த்தி குலைந்துவிட்டது*  *அதனால் மூர்ச்சியாகிவிட்டேன் என்றனர்*.

அவ்வாறு *ஜீவ காருண்யத்தின்  எல்லையை* *அவர்களுக்கு வள்ளலார் விளக்கினார்.*

*உணவு வழங்குவது மட்டுமே ஜீவகாருண்யம் ஆகாது* 

எல்லா உயிர்களுக்கும் பசி பொதுவானது.அது  இறைவனால் கொடுக்கப்பட்ட

*உபகாரக்கருவி* என்பதாகும்.

*பசி முதலிடம் வகிக்கிறது. *பசியைப் போக்குவது அடிப்படை செயலாகும்*

*பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை என ஏழுவகையான துன்பம் ஒவ்வொரு ஜீவனுக்கும் வருகிறது* இவையாவையும் *அவரவர் தரத்திற்கு தகுந்தவாறு போக்குவதே ஜீவகாருண்யம்*.

அருள் பெருவதற்கு உணவு வழங்குவது  மட்டும் போதாது. எல்லா உயிர்கள் மீதும் *இரக்கமும்* ( பரோபகாராமும்) இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது *அன்பும்* *(சத்விசாரம்)* அதாவது இடைவிடாது தொடர்பும் கொள்ள வேண்டும். 

நமது ஆன்மநேய அன்பர்கள் உணவு வழங்கினால் மட்டும் போதுமானது என நினைந்து உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் *கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*

என்பதை உணர்ந்து நமது உயிர்மூச்சாக ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றி வழிபடவேண்டும்.

*(வேறு ஜட தத்துவ கடவுள்களை வழிபட்டால் அருள் கிடைக்க வாய்ப்பே கிடையாது* என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்)

*வள்ளலார் பாடல்!*

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.

*இது நீவீர்  மேலேறும் வீதி மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி* ! 

*வள்ளலார் பாடல்!* 

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

*நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்*.! 

இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும். எல்லா உயிர்களையும் உடம்பையும் இயக்கும்

நமது சகோதர ஆன்மாக்கள் என்பதை  அறிவாலே அறிந்து ஆன்மநேய *ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்வதே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

பொய் உண்மையானது !

 *பொய் உண்மையானது!*


மேட்டுக்குப்பத்தில்  வள்ளலார் தங்கி இருக்கும் போது மக்கள் தங்கள் குறைகளையும் துன்பங்களையும் போக்கிக்கொள்ள கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர்.


ஒருநாள் கொங்கண தேசத்தில் இருந்து வந்த இருவர் தங்களுக்குண்டான *வெண் கருங்குஷ்டத்தால்* வருந்துவதை விண்ணப்பிக்க வள்ளலார் ஐந்துவேலை மருந்துகொடுக்க  பெற்றுக் குணமடைந்தனர்.


*பொய் உண்மையானது*


மக்கள் வள்ளலார் இடம் வந்து போவதை கவனித்த  இருபது வயதுள்ள  *துலுக்கப்பையன்*

(முஸ்லீம்பையன்) ஒருவன் *வள்ளலாரை சோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று *சிரங்கு* என்றுகூறி இவற்றை நீக்கவேண்டும் என்று வேண்டினான் *வள்ளலார் சிலநாள் பொறுத்துக்கொள் குணமாகும் என்றார்*.


வெளியில் வந்து பஞ்சை அகற்றினான் சிரங்கு இல்லாத  *உடம்பு முழுவதும் சிரங்காகியது.*


*விளையாட்டு*

*வினையாயிற்று**பின்பு வருந்தி சரணடைந்தான்*.


*வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் உள்ள கேணியில்* *மூழ்கச் சொன்னார்*.

*அவ்வாறே*

*மூழ்கியதும்* *குணமடைந்தான்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைத்த தேர்வில் (சோதனையில்) எல்லாவற்றிலும் வெற்றிபெற்றவர் நமது வள்ளல் பெருமான்*.


*வள்ளலார் பாடல்* ! 


வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் *வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்*


*தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்*.


அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!


*இரகசியமாக சொன்னது*


மேலும் ஒரு துலுக்க வைத்தியன் ஒருவன் வள்ளலாரிடம் வந்து என்னிடம் ஒரு ரகசியம் உள்ளது என்றான்.

*என்ன ரகசியம் என்று வள்ளலார் கேட்க*


*ரஸபஸ்பம் செய்ய  இன்ன மூலிகை உள்ளது* என்று  பிறர் கேட்காமல் ரகசியமாக வள்ளலார் காதில் மட்டும் கேட்கும்படி கூறினான். 


உடனே வள்ளலார் *ரஸபஸ்பம்* செய்வதற்கு *பல மூலிகைகள் உண்டு* என்று அனைவருக்கும்  கேட்குபடி உரத்தகுரலில் கூறினார். மேலும் மூலிகையின் பெயரையும் வெளிப்படையாக கூறினார். 


*தங்கம் செய்வதற்கும் ரஸபஸ்பம் செய்வதற்கும் ரஸம் கட்டுவதற்கும் பற்று அற்றவர்களுக்கே பலிக்கும்*


*வள்ளலார் பாடல்* !


*பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென*

*தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி*! (அகஙல் )


*நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே*

*வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே*! (அகவல்)


*துறையிது வழியிது துணிவிது நீசெயும்*

*முறையிது* *வெனவே மொழிந்தமெய்த் துணையே*! (அகவல்)


*நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற*

*அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே!* (அகவல்)


நாம் தெரிந்து கொள்ள வேண்டியுது யாதெனில் ?.


*உலகப்பற்றான மாயைப்பற்றை (பொருள்பற்றை) விட்டு* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றினால் எல்லாம் கைகூடும்* .


எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 


*வள்ளல் இருக்க வாட்டம் ஏன்* *நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 3 ஜூலை, 2021

சத்திய ஞானசபையில் நடந்த அற்புதம்!

 *சத்திய ஞானசபையில் நடந்த அற்புதம்*!

வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபை கட்டும்போது மேல்விதானம் ( மேற்கூரை) கட்ட மூன்றுபேர் நின்று வேலைசெய்ய சாரம் கட்டப்பட்டது.

அந்தசாரத்தின் மீது மூவரும் ஏறி வேலை செய்யும்போது சாரமாய் நின்ற மரம் ஒன்று ஒடிந்ததால் சாரம் சாய்ந்து விழுந்தது.

அதனால் அவர்களுக்கும் கீழே இருந்தவர்களுக்கும் சிறிதுகூட காயம் ஏற்படாமல் துன்பம் நேரமால் நிகழ்ந்தது.

*அலங்காரப்பந்தல் அமைத்தது* !

வடலூர் சத்திய ஞானசபை கட்டி முடிந்தவுடன் *தஞ்சாவூர் மராட்டியர்களைக் கொண்டு* பெரியதோர் அலங்காரப்பந்தல் வெகு விமரிசையாய்ப் பெரும்பொருள் செலவிட்டுச் சில அன்பர்கள் மூலமாக அமைத்தனர்.

ஆயினும் அலங்கார பந்தல் வேலைக்கு வந்த வெளியூர்காரர்கள் *மாமிசம் உண்ணும்  புறவினத்தார்* என்பதை அறிந்து கொண்டார் வள்ளலார்.

மேட்டுகுப்பத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது மாலையில் திடீரென வெளியில் வந்து இது *போதப்பந்தலாகும்* இது ஆண்டவருக்கு சம்மதம் இல்லை எனவே *அருட்பெருஞ்ஜோதி தரிசனம் பாருங்கள்* என்று கூறியவுடன் சில நிமிடத்திற்குள் மழை உண்டாகி *அப்பந்தல்மேல் இடிவிழுந்த்து.*

*வள்ளலார் தோன்றியது* !

அன்பர்கள் பயந்து நடுங்கினர்.

ஞானசபைக்கு கெடுதி நேரிடுமே என்று வருந்தியபோது. அங்கு *வள்ளலார் சபைக்குமுன்  தோன்றினர்* சபைக்கு ஒன்றும் நேரிடாது என்றும். தீயை அவிக்க வேண்டாம் என்றும் கூறினர்.

அவ்விதமே நெருப்பு நான்கு ஐந்து நாட்களாக எரிந்துகொண்டு இருந்தும் சத்திய ஞானசபைக்கு சிறிதும் அபாயம் செய்யவில்லை என்பதை அறிந்த மக்கள் வள்ளலாரின் அற்புதத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.

*சாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞானசபை நிலைப்பெற்றது*

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே.

*ஞானசபை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையால் கட்டப்பட்டது ஆதலால் தீமைகள் நெருங்காது* அதேபோல் நாம் எந்த காரியம் செய்தாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணைக்கொண்டு செய்தால் நன்மை உண்டாகும்.

*வள்ளலார் பாடல்!*

வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்

மரபினர்அன்று ஆதலினால் வகுத்தஅவர் அளவில்

அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக

அன்றி அருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே

இன்புற என் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்

ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே

துன்பறுமெய்த் தவர் சூழ்ந்து போற்ற திருப் பொதுவில்

தூய நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே.!

மேலும்..

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்

*குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது"*

*படியில்அதைப் பார்த்துகவேல்* *அவர்வருத்தம் துன்பம்*

*பயந்தீர்ந்து* *விடுகஎனப் பரிந்துரைத்த குருவே*

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண

அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!

மேலும்...

உயிர்க் கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

*உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார்* அவர்க்குப்

*பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக*

*பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல்* இங்கே

நயப்புறு சன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறு மெய்த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசே என் மாலைஅணிந் தருளே.! 

என்னும் பாடல்களால்  அறியலாம்.

*உயிர்க்கொலை செய்வதாலும் புலால் உண்பதாலும் கடவுளை நெருங்கவே முடியாத ஒரு பாவச்செயல் என்றாலும் அவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்க வேண்டும்  என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் வள்ளலார்*. 

வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் உயிர்க்கொலை செய்யாதவர்கள் புலால் உண்ணாதவர்கள் என்பது உலகமே அறியும்.

*அதேபோல் மற்றவர்களையும் உயிர்க்கொலை செய்யாமலும்*.

*புலால் உண்ணாமலும்*  *இருக்க தெளிவான அறிவுரை வழங்கி நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டும்* *ஒவ்வொரு சன்மார்க்கிகளும் நன்முயற்சி செய்து மக்களுக்கு போதிக்க வேண்டும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 2 ஜூலை, 2021

சத்திய ஞானசபை அமைந்த வரலாறு !

 *சத்திய ஞானசபை அமைந்த வரலாறு* !  

சபையெனது உளம் எனத் தானம் அமர்ந்து எனக்கே

அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! (அகவல்)

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமுதம் உண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் ! 

என்னும் இயற்கை உண்மை அனுபவத்தை  அனுபவித்து கண்ட பின்பு பாடல் வாயிலாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார். 

*அகத்தில் கண்ட இயற்கை உண்மை அனுபவத்தை இயற்கை விளக்கமாக புறத்தில் சத்திய ஞானசபையை அமைக்க தொடங்குகிறார்*.

வடலூரில் சத்திய ஞானசபை அமைப்பதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவளின் ஆணைப்படி அனுமதி வழங்கி  *வள்ளலாரால் ஞானசபை கட்டிட வரைபடம் தயாரிக்கப்பட்டது*. 

*எட்டு அம்பலம் எண்கோணம்*!

*உலகின் திசைகள் எட்டு. அதேபோல் எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது பெரியோர்களால் சொல்லப்பட்ட உண்மையாகும்*

*மேலும் எட்டு அடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன் என்றும் சொல்லுவார்கள்* *ஆதலின் எண்கோண வடிவமாக எட்டுக் கதவுகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளதே சத்திய ஞானசபையாகும்*. 

*மனிதனின் தலைப்பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கின் மேலே மத்தியில் ஆன்மா விளங்கும் இடத்தை குறிப்பிடும் வகையில்  அமைக்கப்பட்டதே சத்திய ஞானசபையாகும்*. *ஆன்மா என்பது அறிவு அருள் விளங்கும் சிற்சபை இடம்* *உடம்பையும் உயிரையும் இயக்க ஆணையிடும் (கட்டளையிடும்) இடம் ஆன்மா (உள்ஒளி) இருக்கும் இடம்*

*உள்ளொளி யோங்கிட உயிர் ஒளி விளங்கிட*

*வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே*! (அகவல்)

*ஞானசபை அமைக்கப்பட்ட காலம்*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி ஞானசபை கட்டிட வேலை 1871 ஆம் ஆண்டு ஆனிமாதம் ஞானசபை கட்டத் தொடங்கப்பெற்றது. 25-1-1872 பிரஜோத்பத்தி தைமாதம் 13 ஆம் நாள் வியாழக்கிழமை பூசநாளில் நிறைவு பெற்றது. 

*ஞானசபைக்கு இயற்கை விளக்கம் என்பார் வள்ளலார்.*

( *தைப்பூசம் ஜோதி தரிசனம் வள்ளலாரால் தொடங்கப்பட்டதா ? என்பதை பிறகு சிந்திப்போம்.*)

*சபை கட்ட பணம் எவ்வாறு வந்தது*?  

ஞானசபை கட்டுவதற்கு பணம் வெளியில் யாரிடமும் நன்கொடையாகவோ இனாமாகவோ பெறவில்லை.

*யாரிடமும் பணம் வாங்கவும் மாட்டார் வள்ளலார்*.

*தங்கம் செய்து பணம் பெற்றது*!

வள்ளலார் தங்கம் உண்டாக்கும்  மூலிகைகளைக்கொண்டு *வேதியல்* மாற்றம் போல் தங்கம் தயார் செய்து தக்கவர்களைக் கொண்டு விற்று வரச்சொல்லி  அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டே ஞானசபையைக் கட்டியுள்ளார்.

*ஞானசபைக் கட்டும் தொழிலாளர்களுக்கு பணம் எண்ணித் தரமாட்டாராம்.* 

*தன் மடியிலிருந்து கையில் எடுத்துக் கொடுப்பாராம்.*

*அவரவர் வேலைக்குத் தகுந்த கூலிப்பணம் அதில் சரியாக இருக்குமாம்*. 

அவ்வாறே பணம் தயார் செய்து ஞானசபையைக்  கட்டியதாகும்.

*தேவைக்கு மேல்  தங்கம் தயாரிக்கவும் மாட்டார்  கையில்  வைத்திருக்கவும் மாட்டார்.*

*வள்ளலார் தங்கம் தயார் செய்வது எப்படியோ வெளியில் தெரிந்துவிட்டது.*

வள்ளலார் அரசாங்கத்திற்கு தெரியாமல் தங்கம் தயார் செய்கிறார் என்பதை அறிந்து மாவட்ட  ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் வள்ளலார் தங்கி இருக்கும்  மேட்டுக்குப்பத்திற்கு வந்து விசாரணை செய்கிறார்கள்.

நீங்கள் தங்கம் தயார் செய்வதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது ஆதலால் உங்களை விசாரிக்க வந்துள்ளோம் என்று வள்ளலாரிடம் சொல்கிறார்கள்.

*தங்கம் தயாரிக்கும் தடயங்களோ*

*தங்கமோ இருந்தால்* *தாராளமாக*

*எடுத்துக் கொள்ளுங்கள்* *என்கிறார் வள்ளலார்* அவர்கள் அறை முழுவதும்

தேடுகிறார்கள் அதற்குண்டான தடையங்களோ தங்கமோ  எதுவும் கிடைக்கவில்லை. தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு வருவோம் எனச் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

*பிரம்பு தங்கமானது*

உடனே வள்ளலார் ஆட்சியர் கையில்    வைத்திருந்த இரண்டு பக்கமும் வெள்ளி பூண் போட்ட  பிரம்பினை கொடுங்கள் என்று வாங்கித் திரும்பவும் அவரிடம் கொடுக்கின்றார்.

*அதிகாரி பிரம்பை வாங்கி பார்க்கிறார். வள்ளலார் கரம் பட்டதும் அப்பிரம்பு தங்கமாக மாறிவிட்டது. மீண்டும் வள்ளலார் அப்பிரம்பை வாங்கி திருப்பித் தருகிறார் சாதாரண பூண்போட்ட பிரம்பாக மாறிவிட்டது.* 

அதிகாரிகள் வள்ளலார் காலில் விழுந்து வணங்கி எங்களை மன்னித்து விடுங்கள் என்றனர். 

*நீங்கள் முற்றும் அறிந்தவர். பற்று அற்ற உயர்ந்த ஞானி( அருளாளர்) என்பது தெரியாமல் வந்துவிட்டோம் என்று கூறனர்* பின் ஆசிப்பெற்று  சென்றார்கள்.

*வள்ளலார் தங்கம் செய்ததற்கு ஆதாரம்*

சென்னையில் உள்ள தனது நெருங்கிய அன்பர் இரத்தினமுதலியாருக்கு வள்ளலார் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் குறிக்கப்பட்டுள்ள விபரம்.

*தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகிறேன்*.

*அதாவது  பொன்னு உரைக்கின்ற உரைகல் ஒன்று* *வெள்ளி உரைக்கின்ற உரைகல் ஒன்று*. *இவைகளையும் இவைகளைக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்றும்*..

*ரஇம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்பவேண்டும்*. *சமார் 5 பலம்.8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்பவேண்டும்*.எனக் கடிதம் எழுதியுள்ளார். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

சத்திய ஞானசபை கட்டியது வள்ளலார் தன் சொந்த உழைப்பால் தங்கம் தயார்செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே சத்திய ஞானசபை கட்டியுள்ளார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

*சத்திய தருமச்சாலை*!

தருமச்சாலை என்பது பலர் சகாயத்தாலே நிலைபெற வேண்டும். ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து *அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள்கோரிக்கை என வள்ளலார் தெரிவிக்கின்றார்*. 

*தருமச்சாலைக்கு மக்கள் பணம் தேவை. ஞானசபைக்கு மக்கள் பணம் தேவை இல்லை  என்பது வள்ளலார் கொள்கை*

*நான்புரி வன எல்லாம் தான்புரிந்து  எனக்கே*

*வான்பதம் அளிக்க வாய்த்த நன்னட்பே*! ( அகவல்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.