ஞாயிறு, 23 ஜனவரி, 2011

சுதந்திரம் என்றால் என்ன ?

      சுதந்திரம் என்றால் என்ன எனபதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார் .


         உலக மக்கள் அனைவரும் சுதந்திரம் அடைந்து விட்டதாக நினைத்துக்
கொண்டு இருககிறோம் .சாதி, சமயம், மதம்,என்னும் கூண்டுக்குள்
இருந்து வேளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டுதான் இருககிறோம்.
இந்த உலகத்தை பல சித்தர்கள்,யோகிகள்,தவசிகள்,மதத்தலைவர்கள்,
ராஜாக்கள்,மன்னர்கள்,எஜமானர்கள்,
மற்றும் அன்னியர்கள்,அரசியல்
வாதிகள்,மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள்,குடியரசுதலைவர்கள்.
பிரதம மந்திரிகள்.ஐனாசபை உறுப்பினர்கள்.
போன்ற அனைத்து தரப்பினரும் இந்த உலகத்தை ஆட்சி செய்து வந்துள்ளார்கள்.
      அடுத்து சமயமத தலைவர்களின்  கற்பனை தெய்வங்களான பிரம்மா,
விஷ்ணு ,சங்கரன், மயேசசுவரன் ,சதாசிவன்,போன்ற தெய்வங்களும்
இந்த உலகத்தை ஆட்சிசெய்தாரகள்.மற்றும் பெண் தெயவங்களான சக்தி,
ஆதிசக்தி,பராசக்தி,லட்சுமி,சரஸ்வதி,பார்வதி போன்ற தெய்வங்களும் ,
இந்த உலகத்தை ஆட்சி செயததாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்கள்.
இவ்வளவு பேர் இந்த உலகத்தை ஆட்சி செய்தும், எந்த ஆட்சியாளரும்
மக்களுக்கு முழு  சதந்திரம் பெற்று தரவில்லை,துன்பங்களும்,துயரங்களும்
வறுமையும் ஒழிந்ததாக தெரியாவில்லை.மக்கள் சாதி சமய மத வேற்றுமை
என்ற கொடிய வியாதியிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லை         
என்றால், இவர்கள் எப்படி மக்களுக்கு சுதந்திரம் வாங்கித்தருவார்கள்.   

மக்கள் மீதும் உயிர்கள் மீதும் அக்கரை செலுத்தாமல்.சாதி.சமய.மதம்.நாடு.மொழி.என்ற சுயநலத்தின் அதிகாரத்திலே ஆட்சி செய்து செய்து வந்துள்ளார்கள்.  ஆதலால் ஒன்றுபட்டு வாழவேண்டிய மக்கள்.சாதி.சமய.மதம்.நாடு.மொழி என்ற பிரிவினையால் போரிட்டு அழிந்து வீண் போய்க்கொண்டு இருந்தார்கள்.

 ஒன்றே  குலம் ஒருவரே கடவுள் என்ற உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி வேற்றுமை இல்லா உலகத்தில் வேற்றுமை இல்லா சமுதாயத்தை உருவாக்கி.எல்லா உயிர்களையும் சுதந்திரத்தோடு வாழ வைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு. உயர்ந்த எண்ணம் கொண்டு  வள்ளலார் அருள் ஆட்சியை இறைவனிடம் பெற்றார் .   

  இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் மனிதனால் அழிக்கப்படுகிறது என்னும் உண்மை அறிந்து மிகவும் வேதனைப் படுகின்றார்..  

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தைப்பூச தரிசனம்

 தைப்பூச தரிசனம்.----------ஆன்ம்நேய அன்புடையீர் வணக்கம்.வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டச் சொல்லவில்லை.நம் அகத்தில் இருக்கும் ஆன்மாவான உயிர் ஒளியை அறிந்து தெரிந்து கொள்வதற்கு அடையாளக்குறிப்பாக அமைத்த்துதான் ஞானசபையாகும்.அகத்தில் உள்ள ஒளியைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால்.ஜீவகாருண்யத்தால் மட்டுமே தெரிந்து கொள்ள் முடியும் என்பதை திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலார்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்,.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகும்.ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற் அனைத்தும் மாயாஜாலங்களாகும்.கடவுளைக் காண வேண்டுமானால்,வெளியில் கடவுள் இல்லை,எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உயிர் ஒளியாக உள்ளார்,ஆதாலால் உயிர்களின் துன்பத்தை ,அறிந்து அத்துன்பத்தைப் போக்கினால் கடவுளின் அருள் நமக்கு தானே வந்து சேர்ந்துவிடும்.எல்லா உயிர்களையும் தம் சகோதரர்கள் என்று உண்மை உணர்வோடு உணர்ந்து.எத்துணையும் பேதமுறாது தொண்டு புறிய வேண்டும்.அதுவேகடவுள் வழிபாடாகும் வடலூரில் வரும் அன்பர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உணவு வழங்க வேண்டும் அவர்களின் பசியாற்றவேண்டும்.அதுவே கடவுள் வழிபாடாகும் .வடலூரில் காட்டும் ஜோதியை மட்டும் பார்த்தால் அருள் வந்து விடாது.கடவுள் அருள் வேண்டுமானால் ஜீவகாருண்யம் வேண்டும் என்பதால்தான் தருமச்சாலையை அமைத்தார்.தருமச்சாலை ஏழைகளின் பசியை மட்டும் தீர்க்காமல் அனைத்து உயிர்களின் பசியைப் போக்கிக் கொண்டு இருககவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் சுத்த சன்மர்க்க கொள்கைகளாகும்.அதை உணர்ந்து செயல்பட்டால் அனைத்தும் நன்மைகளாகும் அதுவே அருளைத்தரும் வழியாகும் .கொல்லாநெறியே குவலயம் ஓங்குக.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.அன்புடன் --கதிர்வேலு.