உண்மை உரைக்கின்றேன் !
உண்மை உரைத்தாலும் இவ்வுலகத்தார் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்கிறார் வள்ளலார்.
ஏன் என்றால் ? புணைந்து உரைத்த பொய்யான கற்பனைக் கதைகளின் மூடநம்பிக்கைகள் அவர்களின் ஆன்மாவில் நிறைந்து அழுத்தமாக பதிவாகி உள்ளன.
*வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கினால் சில உண்மைகள் தெரியவரும்*.
வள்ளலார் சிறு குழந்தைப் பருவத்தில் தாய் தந்தையோரோடு சிதம்பர தரிசனத்திற்கு சென்ற போது .சிதம்பர ரகசியத்தை வெட்ட வெளியாக இறைவன் காட்டியுள்ளார்.
அடுத்து அப்பா இறந்துபோன பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் சின்னம்மை அவர்கள். தன்பிறந்த ஊரான சின்னகாவணம் சென்றார்.
அங்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் போதவில்லை என்று குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விடுகிறார்கள்.
வள்ளலாரின் சிறுவயது ஆறுவயது முதல் பண்ணிரண்டு வயதிற்கு மேல் சமய தெய்வங்களைப் பற்றி பாடியும் எழுதியும் வருகின்றார். 35 வயது வரை பல பக்தி சார்ந்த .சமயம் சார்ந்த .மதம் சார்ந்த தெய்வங்களையும் பாடி பக்தியின் உச்சிக்கு சென்றுவிடுகின்றார்.
வள்ளலார் பாடிய பக்தி பாடல்கள் மற்றும்.சமய தெய்வங்களான எல்லா தெய்வங்களையும் எவருமே பாட முடியாத அளவிற்கு ஆழ்ந்த கருத்தாழமுள்ள சமய மதக் கருத்துக்களை வெளியிடுகிறார்.போற்றி புகழ்கின்றார்.
*சமய மதங்கள் யாவும் பொய்*!
அடுத்து சமய மத வழிப்பாடுகள் கடவுள்கள் எல்லாமே பொய் என்று வெளிப்படையாக போட்டு உடைக்கின்றார். ஆனாலும் உண்மையான கடவுள் யார் என்பதைச் சொல்லவில்லை. எதன் மூலம் போட்டு உடைக்கின்றார் என்றால் ?
*ஜீவகாருண்யம்*
ஏழைகளின் பசியை போக்குவதே ஜீவகாருண்யம் என்றும்.ஏழைகளின் பசிக்கொடுமைப் பற்றியும்.பசிப்பிணியைப்பற்றியும். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து .இதுவரையில் எவரும் சொல்லாத வண்ணம் சொல்கிறார்.
ஜீவ காருண்யமே ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றும் .அருள் பெறுவதற்கு ஜீவகாருண்யத்தை விட்டால் வேறு வழியே கிடையாது என்றும்.ஜீவகாருண்யமே ஞான வழி என்றும் அருள் பெறும் வழி என்றும். அழுத்தமாக சொல்லுகின்றார்.
ஆன்மா!
ஆன்மாவைப் பற்றியும் .ஆன்ம லாபத்தைப் பற்றியும்.. இயற்கை உண்மை வடிவனரான இறைவன் என்றும் . இயற்கை விளக்கம் செய்விக்கின்ற அருளைப் பற்றியும். கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப்பற்றியும் மிக மிகவும் அழுத்தமாகவும் சொல்லி வருகின்றார்
*ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் உண்மைக் கடவுள் என்னும் உண்மையை எங்கும் சொல்லவில்லை*
*இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் வெளிப்படுத்தாது ஏன்.? என்ற கேள்வி எழுவது நியாயம். தானே*.
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை மூன்று பிரிவுகளை எழுதியுள்ளார்.
அதிலே இறுதியாக இதன் தொடர்ச்சி கூடிய விரைவில் வெளிப்படுமாறு இறைவன் திருவருள் புரிவாராக என்று முடிக்கிறார்.
சமய மதங்களைப்பற்றியும் சமயக் கடவுள்களைப்பற்றியும். போற்றியும்.பெருமைப்பட பாடியும் வணங்கியும்.பின்பு சமய மதங்கள் எல்லாம் பொய் என்றும்.எல்லாம் தத்துவங்கள் என்றும்.சமய.மதக் கடவுள்கள் யாவும் பொய் என்றும்.அவற்றை நம்ப வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு *அங்கும் உண்மைக்கடவுள் யார் என்பதைச் சொல்லவில்லை*..
1865 இல் சமரச வேத சங்கம் என்றும் ஆரம்பித்து அடுத்து ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்று ஆரம்பித்து.1872 ஆம் ஆண்டு நிரந்தரமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் செய்கிறார்.
1867 ஆண்டு தருமச்சாலை தொடங்குகிறார் அன்று ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பெயரில்.நான்கு ஒழுக்கங்களை வெளியிடுகின்றார்.
அதிலே இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்ற நான்கு ஒழுக்கங்களை ப்பற்றியும் வெளியிடுகிறார்.
ஜீவகாருண்யமே உலகில் சிறந்தது என்று சொல்லிவிட்டு.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று சொல்லிவிட்டு. தனிமனித ஒழுக்கத்தைப்பற்றி சொல்லுகின்றார். *அந்த நூலிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்பற்றி எந்த இடத்திலும் சுட்டிக் காட்டவில்லை*..
இந்த செய்திகள் எல்லாம் 1870 ஆண்டுவரை வள்ளலார் வாழ்க்கையில் நடந்து வருகின்றது.
*அதற்கு மேல் தன்னுடைய நிலைகளை முழுவதுமாக மாற்றிக் கொள்கிறார்*.
முதல் ஜந்து முறைகளில் சொல்லியதை முழுவதுமாக மாற்றிக் ஆறாம் திருமுறைகளில் புதிய கொள்கைகளையும்.புதிய கருத்துக்களையும்.புதிய பரிமாற்றங்களையும். புதிய உண்மைக் கடவுள் யார் என்பதையும் வெளிப்படுத்தி முழுவதுமாக மாற்றிக் கொள்கிறார்.
ஆறாம் திருமுறையின் பாடல்கள் .விண்ணப்பங்கள். மெய்மொழி விளக்கம்.பேருபதேசம் போன்ற உபதேசங்கள்.போன்ற அனைத்தும். கண்களை விழித்து நோக்கும் அளவிற்கு முக்கியமானது.கற்பனைகள் அற்ற முற்போக்கு அறிவியல் சார்ந்த சிந்தனைகள் கொண்டவைகளாகும்.
ஆறாம் திருமுறையில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற வார்த்தைகளை தேடிபிடிக்க வேண்டி உள்ளது.பரோபகாரம் சத்விசாரம் என்ற கொள்கைகளை மட்டுமே வலியுறுத்துகின்றார்.அதற்கு மேல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார்.
பேருபதேசத்தில் மிகத் தெளிவான வார்த்தைகளை கையாளுகின்றார்.
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தணையே ஏத்து ...என்கிறார்.
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விரைவில்...என்கிறார்.
ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.
அந்த விசாரத்தைவிட *ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும்* அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.
இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், *தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும்* - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
என்கிறார்.
இப்போது நாம் சிந்திக்க வேண்டும். பக்தியால் பெற முடியாததை.ஜீவகாருண்யத்தால் பெற முடியாததை எல்லாம்.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதாலும்.நினைக்கின்றதிலும் கோடி கோடி பங்கு அதிக உஷ்ணம் உண்டு பண்ணி அருளைப் பெறலாம் என்கிறார்.
மேலும் மனதில் இக் விசாரம் இன்றிப் பரவிசாரணையுடன் ஆன்ம நெகிழ்ச்சி யோடு தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்.
இறுதியாக ஞானசரியை 28 பாடல்களைச் சுட்டிக்காட்டி. அதில் சொல்லிய வண்ணம் வாழ்க்கை அமைத்துக் கொண்டால் மரணத்தை வென்று விடலாம் என்கிறார்.
ஞானசரியை முதல் பாடலே அருளைப்பெற அச்சாணி போன்ற பாடலாகும்.
பாடல் !
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!