வியாழன், 19 டிசம்பர், 2019

மலேசியா நாட்டில் அற்புதம் !

*மலேசியா நாட்டில் அற்புதம்* !

*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை* பெக்கான் கர்ணி (சிம்பாங் தீகா ) சித்தியவான். பேராக் என்னும் இடத்தில் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.

14-12-2019 முதல் 15-12-2019 ஆகிய இரண்டு நாட்கள் *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை* திறப்பு விழா. **அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தலைமையில்** மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை அமைக்கவும் தோற்றுவிக்கவும் இடைவிடாது முயற்சி செய்து கடுமையான உழைப்பால் வெற்றி கண்ட. விழாவின் தலைமை இயக்குனராக.செயல் வீர்ராக *இந்துபாபா* அவர்களின் செயல்பாடுகள் அளவில் அடங்காத செயல்களாகும் பாராட்டுற்குரியதாகும்.

பொருளை கணக்கு பார்க்காமல் வாரி வழங்கி சபையைத் தோற்றுவிக்க துணைபுரிந்த   சபையின் தலைவர் *திரு.திருமதி வனிதா திருமலைநாயக்கன்* அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவும் அழகாகவும் வருபவர்களை வரவேற்று உண்மை அன்பால் உபசரித்து பணிகளை சிறப்பாக செய்தார்கள்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளும்.
*திருஅருட்பா இசை.திருஅருட்பா நாட்டியம்.திருஅருட்பா சொற்பொழிவுகள்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஜோதி வழிப்பாட்டுடன் நிறைவான நிகழ்ச்சிகளாக நடைபெற்றது* தொடர்ந்து கொண்டே இருக்கும்.

*இந்துபாபா.திரு.திருமதி வனிதா திருமலைநாயக்கன்* அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும்.சன்மார்க்க சங்க அன்பர்களுக்கும். உற்றார் உறவினர் நண்பர் அயலார் மற்றும்  அனைவருக்கும்  நீண்ட ஆயுள்.நிறைந்த செல்வம்.அழியாப்புகழ். அழியா அருள் வழங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்ள வேணுமாய் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழக முக்கிய சன்மார்க்கிகள் .
மலேசியா சன்மார்க்க சங்கங்கள் மற்றும் சன்மார்க்க சான்றோர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இரண்டு நாட்களும் தாவர உணவு வகைகள் முறையாக சிறப்பாக செய்து மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்து விட்டார்கள்.

*வழிபாடு*

*சன்மார்க்க சங்கங்களின் சகோதர சகோதரிகள் 24 மணி நேரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் தொடர்ச்சியாக பாராயணம்.மற்றும் அருட் பிரார்த்தனை செய்தார்கள்*.

*அற்புதம்* !

வள்ளலார் சொல்லிய வண்ணம் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல்.*

அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் தொடர்ச்சியாக ஓதி ஜோதி வழிபாடு செய்து சபை சிறப்புவிழா எல்லோராலும் பாராட்டும் வண்ணம் ஒரு புதிய கோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

*அதிசயம் அற்புதம்* !

*நான் பல ஆண்டுகளாக வள்ளலார் படம் வேண்டாம் .அதுவும் சமய சின்னங்கங்கள் அணிந்த படம்  வேண்டாம் விபூதி போன்ற சமய மத பிரசாதங்கள்  வேண்டாம்.படையல்கள் வேண்டாம் என்று மேடைகள் தோறும் சொல்லிக் கொண்டே வந்தேன் வருகிறேன்.இன்று மலேசிய நாட்டில் முதன் முதலாக அரங்கேற்றம் பெற்றன.அவற்றை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்*.

*மலேசியா நாட்டில் சபை திறப்பு விழாவில் வள்ளலார் உருவ படம் எங்கும் இல்லை*.

*அபிஷேகம் ஆராதனை படையல் இல்லை.விபூதி.குங்குமம் போன்ற சமய பிரசாதங்கள் இல்லை. சின்னங்கள் இல்லை.சமய வழிப்பாட்டு முறைகள் இல்லை*.

வடலூர் சபை.சாலை.தீஞ்சுவைஓடை தண்ணீர் கொண்டுவந்து கலச கோபுர உச்சியில் ஊற்றி குளிர வைத்தார்கள்.

*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே* முதல்இடம் கொடுத்து சபை திறக்கட்டது மிகவும் பாராட்ட வேண்டியதாகும் மகிழ்ச்சி அடைய வேண்டியதாகும்.

இதுவரையில் சன்மார்க்க சங்கம்.சாலை. சபை திறப்பு விழா சமய மத சடங்குகள் இல்லாமல் நடைபெற்றது இல்லை.

*மலேசியா நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட சித்திவான் சபை மட்டுமே உலக சன்மார்க்கம் சார்ந்த மக்களுக்கு வழிகாட்டியதாக திகழ்கின்றது*.

மலேசியா நாட்டு ஆன்மநேய அன்பர் இந்துபாபா.திரு.
திருமதி வனிதா திருமலைநாயக்கன்.
அவர்களை அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டு செயல்படுத்தி உள்ளார் என்பதை நினைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

வள்ளலார் பாடல் !

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை

நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்

புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை

அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.!

மேலும்

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

மேலே கண்ட வள்ளலார் பாடல்களில் கண்டுள்ளபடி மலேசியா நாட்டில் அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி  திருச்சபை அற்புதமாக தோற்றுவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் எல்லா சன்மார்க்க சங்கங்களும்.சபைகளும் சமய.மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல் செயல்பட்டால் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்கள் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி மக்கள் ஜீவகாருண்ய நல் ஒழுக்கம் பெற்று .உலகம் முழுவதும் அமைதி பூங்காவாக மலரும் என்பதில் ஐயம்இல்லை.

மலேசியா நாட்டு மக்கள் அனைவரும்.சித்திவான் சபைக்கு சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வதற்கு ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆன்மாவின் விடுதலை !

ஆன்மாவின் விடுதலை !

ஆன்மா என்னும் உள்ஒளி இந்த பஞ்சபூத எல்லையை விட்டு வெளியே செல்வதை வீடுபேறு என்றும் முக்தி என்றும் சித்தி என்றும் ஆன்ம விடுதலை என்றும் நம் அருளாளர்கள் பலவிதமான வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

சில அருளாளர்கள் சித்தி அடைந்து விட்டார்கள்.முத்தி அடைந்து விட்டார்கள்பரலோகம் சென்று விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.



அருட் பெரு வெளி !

அருட்பெரு வெளியில் அருட்பெரும் உலகத்
அருட்பெரும் தலத்து மேல் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட் பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !.....வள்ளலார் .

நாம் வாழும் இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது .இந்த பஞ்ச பூதங்களும்,வெளிக்குள் தான் அடங்கி உள்ளன்.இவைப்போல் பலகோடி உலகங்கள் ,அண்டங்கள் யாவும் வெளிக்குள் வெளியாக இயங்கிக் கொண்டு உள்ளன.

எல்லாவற்றிக்கும் வெளிதான் காரண காரியமாக இருக்கின்றன.ஒவ்வொரு அண்டங்களுக்கும்,உலகங்களுக்கும்  இடையே வெளிதான் .அதாவது வெற்று இடம்தான் உள்ளது அந்த வெற்று இடத்திற்கு, சக்தியை ஆற்றலை ,வேகத்தை,சுழற்சியை,தந்து இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளது எது ?

அதுதான் அருட் பெருவெளி என்பதாகும்.அதுதான் இயற்கை உண்மையாக வெளியாகும்.

மற்ற கோடானு கோடி வெளிகள் யாவும் செயற்கை வெளிகள் ஆகும் .

பெருவெளி !

அந்த செயற்கை வெளிகளுக்கு எல்லாம் தன்னுடைய சக்தியையும்,ஆற்றலையும், வேகத்தையும்,சுழற்சியையும்  இயக்கத்தையும் இடைவிடாது கொடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு பெரிய வெளி உள்ளது .அதற்கு பெயர்தான்  ''அருட்பெருவெளி '' என்பதாகும்.

அந்த அருட் பெரு வெளிக்குள்  பஞ்ச பூதங்கள் என்னும் மண்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம்,என்னும் ஜடப்பொருள்கள் கிடையாது.

அந்த பெருவெளியை  இதுவரையில் எந்த சமயங்களோ ,மதங்களோ,வேதங்களோ ,ஆகமங்களோ ,புராணங்களோ இதிகாசங்களோ ,சாத்திரங்களோ அதன் அதன் தலைவர்களோ , யோகிகளோ .ஞாநிகளோ .மற்றும் வேறு எந்த அருளாளர்களும் .பார்த்ததோ ,கண்டதோ  தெரிந்து கொண்டதோ,எவரும் இல்லை..

அந்த அருட்பெருவெளியில் என்ன இருக்கின்றது என்றால் ''அருள் '' நிறைந்து இருக்கின்றது.அவ்வாறு அருள் நிறைந்து  உள்ள இடத்தின் மத்தியில் ஒரு ''பீடம்'' இருக்கின்றது .

அந்த பீடத்தில் அருட் பெரும் வடிவில் .அருட்பெரும் வடிவமாக ..அருட்பெரும் வடிவமாக ,..அருட்பெரும் கருணையாக,, எல்லா அண்டங்களுக்கும் பதியாக ,..அழிவில்லாத அருட்பெரும் நிதியாக ,எல்லா ஆன்மாக்களுக்கும் ''முத்தி சித்தி'' வழங்கும் அமுதமாக .எல்லா உயிர்களும் இன்பம் அடையும் சக்தியாக ,எல்லாப் பொருள்களும் களிப்பு அடையும் சுகமாக இயங்கிக் கொண்டு உள்ளதாகும்.

அதனால்தான் அதற்கு ''தனிப் பெருங் கருணை'' என்று பெயர் வைத்துள்ளார் நமது வள்ளல்பெருமான் .அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் படைத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி  !

இயற்கை உண்மையர் என்றும்.இயற்கை அறிவினர் என்றும்.இயற்கை இன்பினர் என்றும்,நிற்குனர் என்றும்,சிற்குணர் என்றும் ,நித்தியர் என்றும் சத்தியர் என்றும் .ஏகர் என்றும்,அநேகர் என்றும்,

ஆதியர் என்றும்,அநாதியர் என்றும்,அமலர் என்றும்,,அற்புதர் என்றும் .நிரதிசயர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,எல்லாம் உடையவர் என்றும்,எல்லாம் வல்லவர் என்றும் .அளவு கடந்த திரு குறிப்புகளால் ,திரு வார்த்தைகளால்

சுத்த சன்மார்க்க ஞானிகளால் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும் ,புணர்ந்தும்,அனுபவிக்க விளங்குகின்ற

தனித்தலைமைப் பெரும் பதியாகிய பெருங்கருணைக் கடவுள்தான் ''அருட்பெருஞ்ஜோதி '' என்பதாகும்.

மேலே சொன்ன ''அருட்பெரு வெளியின் பீடத்தில்'' அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருப்பவர் தான் ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் அற்புதக் கடவுளாகும்..

அவர் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் !

அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆனவெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்டவெலாங் கொண்டு கொண்டு மேலுங்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே !

பலகோடி அண்டங்கள், அவற்றில் உள்ள பிண்டங்கள்,,அங்கு உள்ள உயிர்கள்,அங்குள்ள அனைத்து பொருள்கள்,,உயிர்களும்,பொருள்களும் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் உள்ள இடங்கள்.யாவும் நீக்கமற நிறைந்தும்,

அவைகள் சிரமம் இல்லாமல் வாழ்வதற்கும்,இயங்குவதற்கும்  மேலும் மேலும் அளவில் அடங்காத உயிர்கள்.பொருள்கள்  தோன்றினாலும், அவற்றிற்கு இடம் கொடுத்து கொண்டே சலிப்பு இன்றி இருக்குமாம்.

ஒவ்வொரு அண்டமும் தன்னைத்தானே விரிந்து சுருங்கும் தன்மை உடையதாகும்.

அந்த அந்த அண்டங்களில் ,உயிர்கள் பொருள்கள்,மற்றும் எதுவாக இருந்தாலும்,  அளவில்லாது நிறைந்து கொண்டே இருந்தாலும் அதற்கு இடம் கொடுத்துக் கொண்டே சலிப்பு இன்றி இயங்கிக் கொண்டு இருக்கும்.

நிறைகின்ற தருணம் தன்னைத்தானே விரியும்,..குறைகின்ற தருணம் போது தன்னைத்தானே குறையும்.

இவ்வாறு பல கோடி அண்டங்களையும்,அவற்றில் உள்ள உயிர்களையும்,பொருள்களையும் .பல கோடி வெளிகளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல்  தொடர்பு இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டே இருக்கும் .

பலகோடி அண்டங்களையும்,வெளிகளையும் தன்னுடைய் அருள் சக்தியால் இயக்கிக் கொண்டுள்ளதுதான் ''அருட்பெருஞ்ஜோதி'' என்னும் அருள் ஒளியாகும்.அதன் பெருமையும் ஆற்றலையும் செயல்களையும் விவரித்து சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை .

''அந்த அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்கு வள்ளலார் சொல்லும் வார்த்தைகள்''!

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளே !

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

எல்லாம் வல்ல இயற்கை உண்மைக் கடவுளே !
எல்லாம் வல்ல இயற்கை விளக்கக் கடவுளே !
எல்லாம் வல்ல இயற்கை இன்பக் கடவுளே !

எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே !

அருட்பெருஞ்ஜோதி தனித் தலைமைக் கடவுளே !
அகண்ட பூரண ஆனந்தராகிய அருட்பெருஞ்க் கடவுளே !

சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக் கடவுளே !

அருட்பெரு வெளியின் கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவராகிய
விகற்ப மில்லாது விளங்குகின்ற மெய்ப்பொருள் கடவுளே !

அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமுடைய பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே !

இவ்வாறு இங்கனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருஞ் கருணைத் திறத்தை ,என்னவென்று கருதி ! என்னென்று துதிப்பேன் 

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே !

என்று வள்ளல்பெருமான் போற்றிப் புகழுகின்றார் .


அந்த பேரொளி எங்கு உள்ளது ;--

கண்டம் எல்லாம் கடந்து நின்றே அகண்டமதாய் ,அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த அளவிடமுடியாத வெளியாய் ,அனைத்து வெளிகளையும் தன்னகத்தேக் கொண்டு தனி வெளியில்,அமர்ந்து கொண்டு தன்னரசு செலுத்தும் ஈடு இணையற்ற தலைவன்தான்  ''அருட்பெருஞ்ஜோதி''யாகும்/

அவர என்ன  உருவத்தில் உள்ளார் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார்  மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இறப்பு இல்லார் யாதும்
திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

ஒன்றும் மலார் இரண்டும் மலார் ஒன்றும் இரண்டுமானார்
உருவும் மலார் அருவுமலார் உரு அருவுமானார்
அன்றும் உளார்  இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தம் இலார் அருட்பெரும் ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும்  புறத்தும் விளங்கிடுவார்
யாவும்இலார்  யாவும் உளார் யாவும் அலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார்  திருச் சிற்றம்பலத்தே -
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேலே கண்ட பாடல்;-- வள்ளல்பெருமான் திருஅருட்பாவின்  ''பதி விளக்கம்'' என்ற தலைப்பில் 12,.13..வது பாடலில் பதிவு செய்துள்ளார். 

அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள் ;--உலகில் உள்ள சமய ,சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுள்,தேவர் ,அடியார்,யோகி ,ஞானி, முதலானவர்களில் ஒருவர் அல்ல !

அப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் ,எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும்,தாங்கள் தங்கள் அனுவங்களைக் குறித்து எதிர் பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித் தலைமைப் பெரும் பதிதான்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். 

மேலும் சமய மதங்களில் சொல்லிய தெய்வங்களும் ,மற்றைய தத்துவ விக்கிரங்களும் உண்மையான தெய்வம் அல்ல ! .அதில் சொல்லிய மந்திரங்களும் உண்மையான மந்திரங்கள் அல்ல !  

உண்மையானது !

வள்ளல்பெருமான் காட்டிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே உண்மையானக் கடவுள் .

உண்மையான மந்திரம் ''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் மந்திரம் ஒன்றுதான் உண்மையான மந்திரமாகும்..

இந்த உண்மையை உணர்ந்து கொண்டு .ஒவ்வொருவரும் பின்பற்றி வாழ்ந்தாலே எல்லா நன்மைகளும் ஆன்மாவையும் ,அவர்களது வீட்டையும் தேடிவரும்.



செவ்வாய், 10 டிசம்பர், 2019

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை !

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை !

இந்து பாபா அவர்கள்
இயக்குனர்
தோற்றுனர் கதை திரைக்கதை அவர்கள்.

சபையின் தலைவி
திரு.திருமதி வனிதா திருமலை நாயக்கன் அவர்கள்.

தவத்திரு
ஊரன் அடிகள் ஐயா அவர்கள்.

தயவுத்திரு
சுவாமி தருமலிங்கம் ஐயா அவர்கள்.

டாக்டர்
செல்வமாதரசி அம்மா அவர்கள்.

தயவுத்திரு
குப்புசாமி அய்யா அவர்கள்
சேலம்.

தயவுத்திரு
திருஅருட்பா பாடகர்
மழையூர் சதாசிவம் ஐயா அவர்கள்.

தயவுத்திரு
திருஅருட்பா பாடகர்
ஜீவ.சீனுவாசன் ஐயா அவர்கள்.

தயவுத்திரு
கதிர்வேல் ஈரோடு் அவர்கள்

தயவுத்திரு
சாது ஜானகிராமன் ஐயா அவர்கள்.

தயவுத்திரு
அருள்ராஜா அவர்கள்.
வடலூர்.

தயவுத்திரு
சுப்பிரமணிய அடிகளார் ஐயா அவர்கள்.

தயவுத்திரு
பத்மேந்திரா சுவாமிகள் ஐயா அவர்கள்.

டாக்டர்
லலிதா அம்மா மலேசியா அவர்கள்.

திரு.முத்துக்குமரன் அவர்கள்
விழாமலர் தட்டச்சு கோர்வை தொகுப்பாளர்.

மற்றும் அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபைக்கு தயவுடன்.கருணையுடன் உதவி செய்த அனைவருக்கும்.

மலேசியா சிங்கப்பூர் வாழ் சன்மார்க்க சகோதர சகோதரிகளுக்கும்.மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பான வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்கள்.


சத்திய ஞானசபை விளம்பரம் !


சத்திய ஞான சபை விளம்பரம்

          உலகத்தினிடத்தே பெறுவதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!

          அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணந் தொடங்கிக் கிடைக்கப்பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.

          நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

          இயற்கையிற்றானே விளங்குகின்றவரா யுள்ளவரென்றும், இயற்கையிற்றானே யுள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சித்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவி களையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் முதலிய பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவ ரென்றும், ஒன்றும் அல்லாதவரென்றும், சர்வகாருணிய ரென்றும், சர்வ வல்லபரென்றும், எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவற்றானும் ஒப்புயர் வில்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்றார்.

          அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள்.

          இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்க முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து “இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம்” என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

          ஆகலின், அடியிற் குறித்த தருணந்தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்.

                                      இங்ஙனம்
                   சிதம்பரம் இராமலிங்கம்

உலக மக்களிடையே ஒரு செய்தி சென்றடைய வேண்டுமெனில் அதற்கு விளம்பரம் செய்வது மிக அவசியமாகின்றது. இன்றைய தொழில் நுட்பத்தில் விளம்பரம் செய்வது மிக எளிதான ஒன்றாக இருக்கின்றது. முகநூல் (Facebook) போன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு செய்தியை பதிவிட்டால் அச்செய்தியானது உலகம் முழுதும் ஒரு நொடிக்கும் மிகக்குறைவான நேரத்தில் சென்றடைந்துவிடுகின்றது. ஆனால் வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்தில் அவ்வாறில்லை. எனினும் வள்ளற்பெருமான் இறை செய்தியை தமது திருவருட்பா பாடல்கள் மூலமும் உரைநடை மூலமும் விளம்பரப்படுத்தினார். அது சென்றடைய வேண்டியவர்களுக்கு சென்றடைந்தது.

தாம் வாழுகின்ற வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் தோற்றுவித்தார். அதனை உலக மக்களிடையே தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். உடனே தம் கைப்பட அச்சபையின் நோக்கம் என்ன? பயன் என்ன? என்பதைப் பற்றி உரைநடையாக எழுதி அடியில் *சிதம்பரம் இராமலிங்கம்* என தம் கையொப்பம் இட்டு இவ்வுலகிற்கு வெளியிட்டார். அவர் வெளியிட்ட மாதம் நவம்பர் 25-ஆம் தேதி 1972-ஆம் வருடமாகும்.  

இவ்வுலகிலே பலதரப்பட்ட எண்ணிலடங்காத தேக வகைகள் உள்ளன. அவ்வகைகளிலே மனித தேகம் கிடைப்பது மிக அரிது என்பது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் தெரிந்ததை புரிந்துக்கொள்வார் மிகச்சிலரே. அவ்வாறு புரிந்துக்கொள்வார்களை தமது நண்பர்களாக வள்ளற்பெருமான் அவ்விளம்பரத்தில் தொடக்கத்தில் எழுதுகின்றார்.

‘உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!’ என்று தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு ஞான சபை செய்தியை வெளிப்படுத்துகின்றார். இந்நிகழ்ச்சியை வெளிப்படுத்த என்ன காரணம்?

காரணம்: வள்ளற்பெருமானின் பேராசையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அப்பேராசை என்பது “ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை” என்பதாகும். இவ்வுரிமை சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.

அற்புத அறிவுகள், அற்புத குணங்கள், அற்புத கேள்விகள், அற்புத செயல்கள், அற்புத காட்சிகள், அற்புத அனுபவங்கள் போன்ற அற்புதங்களால் நான் மிகவும் களிப்புற்று இருக்கின்றேன். அக்களிப்பினை என்னைப்போன்று மனித தேகம் எடுத்த நீங்கள் எல்லோரும் பெறுதல் வேண்டும் என்ற பேராசையால் எழுதப்பட்ட விளம்பரம் இது என்று வள்ளற்பெருமானே உரைக்கின்றார். இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

நோக்கம்: உண்மைக் கடவுள் ஒருவரே.! அவர் தனிப்பெருந்தலைமாயான அருட்பெருஞ்ஜோதியர்! ஆவார், என்ற உண்மையை தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு தெரிவிப்பதுவே இவ்விளம்பரத்தின் நோக்கமாக இருக்கின்றது. இது பொது நோக்கம் எனலாம். இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?

உள்நோக்கம்: உண்மையான ஒரே கடவுளை, தம்மை ஒத்த இவ்வுலகர்களும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வாகிய மரணமிலா பெருவாழ்வை பெற்று வாழவேண்டும் என்பதும்,

அவ்வாறு வாழாமல் பலவேறு கற்பனைகளால், பலவேறு சமயங்களிலும், பலவேறு மதங்களிலும், பலவேறு மார்க்கங்களிலும், பலவேறு லக்ஷியங்களிலும் ஈடுபட்டு பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இல்லாது விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால்
 துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றவர்களை, இனியும் வீண் போகாமல் இந்த ஞான சபையையும் அதில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியரையும் வந்து வந்து வணங்கிச் செல்லுதல் வேண்டும்.

எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் இம்மக்கள் அடைதல் வேண்டும். நினைத்த வண்ணம் நிறைவேறும் அதிசயத்தையும், இறந்தவர் உயிர்பெற்றெழுதல், வயதானவர்கள் இளமையைப் பெற்று களிப்படைதல் போன்ற அற்புதங்களும் இந்த ஞான சபை வளாகத்தில் நடைபெறுவதை காண்பீர்கள் என்ற தமது உள்நோக்கத்தையும் வள்ளலார் இவ்விளம்பரத்தில் வெளிப்படுத்துகின்றார்.

இச்சத்திய ஞான சபையை நான் எனது உடல் உள்ளே ஆன்ம அறிவு அருள் அனுபவத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள் ஆவர். ஆனாலும் அவர்களும் புறத்திலே வடலூரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதியரை வந்து வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தால் அவர்களது உள்முகப் பயணம் தடைபடும். அகத்திலே பார்ப்பவர்கள் புறத்திலும் பார்க்க வேண்டும். புறத்தே பார்ப்பவர்கள் அகத்திலும் பார்க்க வேண்டும். அகமும் புறமும் நிறைந்தால்தான் மேற்சொன்ன அற்புதங்கள் நிகழும்.


வள்ளற்பெருமான் வடலூரில் அமைத்த சபை மட்டுமே சத்திய ஞான சபையாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் பாலிக்கும்இடமாகும்.அதனால்தான் வந்து வந்து தரிசிப்பீர்களே ஆனால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். 

மேலும் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று அனைத்துலக மக்களையும் வடலூருக்கு அழைத்து வரச்சொல்கின்றார்.

உலகியர்களால் ஆங்காங்கு கட்டப்பட்டு இதே பெயரிலோ அல்லது சற்று மாறுபட்ட பெயரிலோ வழங்கிவரும் சபைகளில் இவ்வற்புதம் நிகழாது. வள்ளற்பெருமான் மீது பற்று வைத்துள்ளவர்கள் ஞான சபைகளை கட்டுவித்தல் கூடாது. சன்மார்க்க சங்கங்கள் மட்டுமே தோற்றுவித்தல் வேண்டும் என்பதனையும் நாம் சத்திய ஞானசபை விளம்பரம் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

திருவருண் மெய்ம்மொழி !

திருவருண் மெய்ம்மொழி !


அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
 திருவருண் மெய்ம்மொழி

 சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும்
அருட்பிரகாசத்
 தந்தையார் திருவருண் மெய்ம்மொழி
வள்ளல் பெருமான் ஞானசபை தோற்றுவிக்கும் முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்த உண்மை விளக்க மெய்ம்மொழி.
உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:
இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் 
தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, 
அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்.
ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், 
எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு 
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, "இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" 
என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, 
அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் - அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, 
சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது.
சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.
அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது - நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் 
ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.
கரண ஒழுக்கம் என்பது - சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.
ஜீவ ஒழுக்கம் என்பது - எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.
ஆன்ம ஒழுக்கம் என்பது - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.
இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. 
ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும். அன்றியும்-
இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும். அன்றியும்-
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். 
ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, 
அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-
உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று, 
உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்; உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய், 
எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்

ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:
நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் - வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.
இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.

இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி யென்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை


திருவருண் மெய்ம்மொழி முற்றிற்று.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

புதன், 4 டிசம்பர், 2019

சுத்த சன்மார்க்க கொடி விளக்கம் !


சுத்த சன்மார்க்க கொடி விளக்கம் !

வள்ளலார் சுத்த சன்மார்க்க கொடி பற்றி என்ன சொல்லுகிறார்.

வள்ளலார் பேருபதேசத்தில் கீழே கண்டபடி விளக்கம் தருகிறார் !

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. 
அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். 
இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். 
இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
என்று சொல்லுகிறார்.

மேலும்
சிற்சத்தி துதி என்ற தலைப்பில் பாடல்கள்* !
  • சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
    பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே எனைஈன்ற
    ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
    நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
  • 2. பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
    வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
    தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
    கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
  • 3. நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
    பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
    நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
    கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
  • 4. மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
    சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
    காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
    கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 5. நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
    பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
    தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
    கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 6. மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
    வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
    கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
    குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 7. புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
    நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
    வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
    குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 8. வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 9. கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
    அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
    எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
    கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
  • 10. ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
    பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
    தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
    கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.


மேலே கண்ட பாடலில் கொடி விளக்கத்தைப்பற்றி எளிய தமிழில் தெளிவாக சொல்லுகின்றார்

கொடி என்றால் என்ன ? 

ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் வாழ்வதற்கு உயிர் உடம்பு இரண்டும் அவசியம். உயிர் தோன்றுவதற்கும் உடம்பு தோன்றுவதற்கும். ஒரு இணைப்பு தொடர்பு வேண்டும்.அதாவது அந்த இணைப்பு பாலமானது பூதவிந்து வாயிலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அதற்கு வினைத் தொடர்பு என்பார்கள்.

அந்த விணைத்தொடர்புதான் தொப்புள் கொடியாகும்.அந்தக் கொடிக்கு சிவகாமக்கொடி என்றும் சொல்லுவார்கள். அந்த கொடியில் சிக்காமல் வாழ்வதே மனிதனின் அருள் வாழ்க்கையாகும். அதாவது ஆண்.பெண் தொடர்பு இல்லாமல் வாழ்வதாகும்.

 அருள் பெறுவதற்கு தடையாக இருந்த அனைத்தையும் வென்றவர் வள்ளலார். அந்தக் கொடியை கட்டிக் கொண்டால் மட்டுமே மீண்டும் பிறப்பு இல்லை.

நாபிக்கும் புருவ மத்திக்கும் ஏறவும் இறங்கவும் இரண்டு கூறாக ஒருநாடி இருக்கும் நாடிதான் உயிரையும் உடம்பையும் இயக்கிக் கொண்டு இருக்கும் பூதவிந்து என்னும்  சக்தியாகும்.அவற்றை நிறுத்தி அருளால் ஆன்மாவை மட்டும் இயங்க வைக்கிறார்  வள்ளலார். அதுவே கொடி கட்டிக் கொண்டதாகும். எனவேதான் வெளிமுகத்தில் அடையாள வண்ணமாக  கொடி கட்டிகொண்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்கிறார் வள்ளலார்.

ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ள மலங்கள் ஆணவம்.மாயை.மாமாயை.பெருமாயை.
கன்மம் போன்ற மலங்களை அகற்றியதால் பிறப்பு இறப்பு அற்ற அருள் வாழ்க்கை  வாழ்வதற்கு இறைவன் அருள்பாலிப்பார்.மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே கொடி கட்டிக் கொண்டதாகும்.

மாயையையும் கன்மத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தால்.தவத்தால்.விசாரத்தால்.இடைவிடாத வேண்டுதலால் நீக்கிவிடலாம்.ஆணவமலத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே நீக்க முடியும்.ஆணவம் இயற்கையானது.இயற்கையான ஆணவம் ஆன்மாவில் பற்றிக்கொண்டு இருக்கும் வரை பிறப்பு உண்டு.அதுவே கடைசிதிரையாகும்.

ஆன்மாக்கள் எல்லாம் ஒரே தன்மை உடையது அதை உணர்ந்து அறிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கண்டு வாழ்ந்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என நினைத்தவர் வள்ளலார். எனவே கொடிக்கட்டிக் கொள்ளும் அறிய வாய்ப்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது.

அகவல் வரிகள் !

  • கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
    அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 408. பேருறு நீலப் பெருந்திரை யதனால்
    ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 409. பச்சைத் திரையாற் பரவெளி யதனை
    அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 410. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
    அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 411. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
    அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 412. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
    அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 413. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
    அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
    அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
    அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 416. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
    அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 417. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
    னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
    அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 419. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
    அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி!

பிறப்பு என்னும் பெருங்குழியில் விழாமல் .கீழும் மேலும்  செல்லும் சிவகாமக்கொடியை. அதாவது தொப்புள் கொடியை மேல்நோக்கி புருவ மத்தியில் நிறுத்திக் கட்டிக் கொள்கிறார் வள்ளலார்.இதுவேதான் மீண்டும் பிறப்பு இல்லாமல் மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதாகும்.

ஆணவம் என்னும் திரை நீங்கிய பின்பு அருள்தேகம் பொன்மை வெண்மை என்னும் வண்ணங்களில்.அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்.மேற்புறம் மஞ்சள் வர்ணம் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்.அதற்கு அடையாளம் அவித்த கோழி முட்டை தன்மைபோல் உள்ளதாகும்.

மேலும் அகவலில்.

பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி ! என்றும்.

பொன்னுடம்பு எனக்கே பொருந்திடும் பொருட்டு என்னுளங் கலந்த என்தனி அன்பே !

என்கிறார்.

இறுதியாக எல்லா வண்ணத்தையும் தாண்டி.இயற்கை உண்மை.இயற்கை விளக்கம் .இயற்கை இன்ப வடிவமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலாரை ஆக்கி அணைத்துக் கொள்கிறார்..


  • 781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
    அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
  • 782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
    அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
  • 783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
    துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
  • 784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
  • 785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
    இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
  • 786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
    சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
  • 787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
    அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
  • 788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
    அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி!


கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி 
கூத்தாடுகின்றாம் என்று சின்னபிடி
சிற்சபை கண்டோம் என்று சின்னம்பிடி 
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி.
தானே நானானேன் என்று சின்னம்பிடி
சத்தியம் சத்தியம் என்று சின்னம்பிடி.
ஊனே புகுந்தான் என்று சின்னம்பிடி.

என்ற பாடல் வழியாகத் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்.

கொடி கட்டிக் கொண்டோம் என்பது மீண்டும் பிறப்பு இல்லாமல் உயிரையும் உடம்பையும் அழிக்காமல் பஞ்ச பூத அணுக்களை அருள் அணுக்களாக மாற்றி கொண்டதாகும்.இயற்கையான ஆணவத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே திரும்ப பெற்றுக் கொண்டதாலே ஆன்ம தேகம் பெற்று அருள் தேகமாக மாற்றிக் கொள்வதாகும்.

மீண்டும் ஆன்மாவானது உயிர் உடம்பு எடுக்காமல்  அருட்பெருஞ்ஜோதி யுடன் கலப்பதாகும்.

இதுவே என் அனுபவத்தில் கிடைத்த செய்தியாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.