புலால் உண்பவர்கள் ! விட்டுவிடுங்கள் !
புலால் உண்பவர்கள் ! விட்டுவிடுங்கள் !
புலால் உண்பவர்களை மனித இனத்தின் மனித குலத்தின் தகுதியை இழந்தவர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான் .
எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும்.நாட்டை ஆண்டு கொண்டு உள்ள அரசர்களாய் இருந்தாலும் மந்திரிகளாக இருந்தாலும்.அணுஆராச்சியில் வல்லுனர்களாய் இருந்தாலும்
முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும்,தினமும் கடவுளை இடைவிடாது வழிபடும் பழக்கமுள்ள பக்தி உள்ளவர்களாக இருந்தாலும்,
இறந்தவர்களை எழுப்புகின்ற அருள் பெற்ற சித்தர்களாய் ,அருளாலர்களாய் இருந்தாலும்
அவர்கள் மாமிசம் என்னும் புலாலை உண்பவர்களாக இருந்தால் .
அவர்கள் மனித தகுதியை இழந்தவர்கள் என்கின்றார் வெறி பிடித்த காட்டு மிருகங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.
அவர்களை கடவுள் எக்காலத்திலும் மன்னிக்கவே மாட்டார் .
உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை உண்பதும் மாபெரும் குற்றம் என்பதை அறிவினால் அறிந்து விட்டுவிட்டால் மட்டுமே பாவ மன்னிப்பு கிடைக்கும்.
உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே
மயற்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்
மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !
புலால் உண்பவர்கள் கடவுள் அருகில் செல்ல தகுதி அற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் பசியினால் துன்பப்படுகின்ற போது தாவர உணவினால் பசியைப் போக்குங்கள் என்கின்றார்.
அவர்கள் உண்மை அறிந்து புலால் மறுத்து சுத்த சன்மார்க்கத்திற்கு வரும் வரையில் அவர்களுக்கு போதிக்க வேண்டாம் என்கின்றார்.
ஏன் என்றால் அவர்கள் புலால் உண்ணும் வரையில் அவர்கள் அறிவு உண்மையைத் தெரிந்து கொள்ளும் தெளிவு இல்லாமல் இருக்கும். ஆதலால் போதிக்க வேண்டாம் என்கின்றார்.
இருந்தாலும் எப்படியாவது அவர்களை நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு துன்பம் வரும் போது துன்பத்தைப் போக்கினால் சுத்த சன்மார்க்கத்திற்கு விரைவில் வந்துவிடுவார்கள்.
புலால் உணவு இறை அருள் பெறுவதற்கு தடையாக உள்ளது எனவே புலால் என்னும் மாமிச உணவை உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
என்று வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்து உள்ளார்..
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,