புதன், 25 ஜூலை, 2018

மாமிசம் உண்பதால் உண்டாகும் வெறி குணம்!

மாமிசம் உண்பதால் உண்டாகும் வெறி குணம் !

வள்ளலார் சொல்லுவதை கவனித்து படித்து உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுவது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமை.ஆன்ம நேய உரிமையாகும்..

பஞ்ச மகா பாதகங்கள் !

பஞ்ச மகா பாதகங்கள்.ஐந்து.

கள், காமம், கொலை, களவு, பொய் -

இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும்

***கொலை விசேஷ பாவம்***

எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது,

கொலை செய்யத் துணிவு வாராமலிராது,

களவு செய்யாமலிரான்,

பொய் பேச அஞ்சான்.

ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவ னானாலும் மற்றவை தொடாமல் இருக்க மாட்டான்...

மேலே கண்ட ஐந்து மகா பாதகங்களும் அவன் உண்ணும் உணவினால் தான் உண்டாகிறது....

மாமிசம் உண்பவன் இந்த ஐந்து மகா பாதகங்களை  செய்வான்..

உண்ணும் உணவினால் மனிதனுடைய குணங்கள் மூன்று வகை யாக மாற்றம் அடைகின்றது.
...
****சத்துவ குணம்
*****தாமச குணம்
*****ராட்சத குணம்...

1.தாவர உணவு களான கீரை.காய்கறிகள் மட்டும் உண்பவருக்கு சத்துவ குணம் உண்டாகும்.அதாவது தன்னை உணர்ந்து அதிக விகாரமான தவறுகளை செய்யாமல்.
மனசாட்சிபடி
வாழ்வார்கள். பிறருக்கு  நன்மை செய்பவர்களாக இருப்பார்கள்.தானாக நிற்றல் சத்துவகுணம்,

2.ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம்,குணம்

பால் தயிர் மோர்.நெய் கிழங்குகள் வகைகள் பருப்பு வகைகள் அதிகம் உண்பவர்கள் ராட்சத குணம் உடையவர்கள் சுய நலம் அதிகம் உடையவர்கள்.

3.தாமசம் குணம் ..ஆடு மாடு கோழி பன்றி போன்ற உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பவர்களுக்கு உண்டாகும் குணம் தாமச குணம் என்பதாகும்..

ஆன்மாவின் இயற்கை குணங்களை அறிந்து கொள்ள முடியாமல்
செயற்கை குணங்களால் தவறு செய்பவர்கள்.மாமிசம் உண்பவர்கள் மட்டுமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்..

மாமிசம் உண்பவர்கள்.கொலை.கொள்ளை.கற்பழிப்பு..
தீவரவாதம்.பயங்கரவாதம்.கள்ளகடத்தல்.நாடு கடத்தல்.நக்சல் பார்டி போன்ற கொடூரமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் மாமிசம் உண்பவர்களாகத்தான் இருப்பார்கள்....

இன்று பச்சிளம் குழந்தைகளை.பலபேர் சேர்ந்து கற்பழிக்கும் காம கொடூர்ர்கள் எல்லாம் மாமிசம் உண்பவர்களே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

எல்லா குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணம்...போலியான சாதி.சமய.
மதங்களினால்  வழிகாட்டும்  ஆன்மீகம்..

அரசியல்.
சினிமா..Tv உணவு விளம்பரம்.மற்றைய விளம்பரம்.Tv சீரியல்..தேவையற்ற நாகரீகம்.உணர்ச்சியை தூண்டும் ஆபாச படங்கள்.ஆபாச ஆடைகள். ஆபாச நடனங்கள்.தேவை அற்ற உணவு வகைகள் எல்லாமே ஒட்டு மொத்த குற்றங்களுக்கு காரண மாக இருக்கின்றது...

இவற்றை எல்லாம் பார்த்து *"காதல் என்னும் போதையில்** ஆண்.பெண் முதியவர் போன்ற அனைவரும் ஆடுமாடுகள் போல் திரிகின்றார்கள்.

உயிர்களை கொலை செய்து புலால் உண்பது.மன்னிக்க முடியாத பெரிய குற்றம்  என்பதை வள்ளலார் தான் துணிவுடன் உலக மக்களுக்கு சொல்லி உள்ளார்.....

*ஒரு பெண்ணை கற்பழிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பது போல....வாய் பேசாத.தெரியாத  ஆடு.மாடு்.கோழி.பன்றி போன்ற உயிர்களை துடிதுடிக்க கொன்று திண்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்..*.

ஒரு பெண்ணை கற்பழிப்பதும்.ஒரு உயிரைக் கொன்று தின்பதும் சம்மான குற்றமேயாகும் ...

வள்ளலார் மனிதர்களை இரண்டு பிரிவாக பிரித்துள்ளார்..

புலால் உண்பவர்கள்..
புலால் உண்ணாதவர்கள்
என இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளார்

வள்ளலார் பாடல் !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.!

என்று தெளிவாக பதிவு செய்துள்ளார்.ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்....

புலால் உண்பவர்களுக்கு அறிவு தெளிவு இருக்காது.அவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.சிந்திக்க மாட்டார்கள்.அவர்கள் நல்வழிக்கு வரும் வரை அறிவுரை சொல்ல வேண்டாம்...

பசி என்று வந்தால்.
பசியைப்போக்க தயவோடு உணவு கொடுங்கள் என்கிறார்

ஏன் அப்படி சொல்கிறார் என்றால்..இறைவன் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதால்..ஒரு உயிரைக் கொலை செய்வதால் ஆன்மா துடிதுடித்து வெளியேறுகிறது...அது மன்னிக்க முடியாத குற்றமாகும் பெரியப் பாவச்செயல் என்கின்றார்...

வள்ளலார் பாடல் !

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை  நான் அறிந்தேன் அதனால்.ஆனமநேய உரிமையுடன் சொல்கின்றேன் என்கின்றார்.

எனவே தான் சுத்த சன்மார்க்கம் என்னும் பொது நெறியைத் தோற்றுவித்துள்ளேன்..

சுத்த சன்மார்க்கத்தில் உள்ள.இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே.உலகமும் உலகத்தில் உள்ள மனிதர்களும்.குற்றம் செய்யாமல் மனிதன் மனிதனாக மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்..

இன்னும் விரிக்கில் பெருகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

திங்கள், 23 ஜூலை, 2018

கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும் !

கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும் !

உண்மையில் கடவுளை நேசித்து அன்பு செலுத்துபவர்களின் அடையாளம்.

அழுத கண்ணீர் மாறுமோ ! ஆகாரத்தில் இச்சை செல்லுமோ  என்கின்றார் வள்ளலார்...

இடைவிடாது இறைவன் மேல் அன்பு கொண்டு நேசிப்பவர்களுக்கு.பசி எடுக்காது. இறைவனை காணவேண்டும் என்ற ஏக்கத்தால் எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்களாம்..

வள்ளலார் அப்படித்தான் வாழ்ந்துள்ளார்..

பசித்திருந்தும்.தனித்திருந்தும்.விழித்திருந்தும்.இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு வாழ்ந்துள்ளார்...

வள்ளலார் பாடல் !

புண்படா உடம்பும் புரைபடா மனமும்பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்

கண்படா திரவும் பகலும்நின் தனையேகருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்

உண்பனே எனினும் உடுப்பனே எனினும்உலகரை நம்பிலேன் எனது

நண்பனே நலஞ்சார் பண்பனே உனையேநம்பினேன் கைவிடேல் எனையே.!

என்று பதிவு செய்துள்ளார்.

புன்படா உடம்பு என்கிறார். என்னை எவரும் தொடமுடியாத உடம்பு .பெண் உறவு கொள்ளாத உடம்பு.நோய் இல்லாத உடம்பு என்பதாகும்..

புரைபடா மனம்...சலனம் இல்லாத மனம்.வெளி உலகில் இச்சை
செல்லாத இறைவனையே  தொடர்பு கொள்ளும் ஆழ் மனம் என்பதாகும்.

பொய்படா ஒழுக்கம் என்கிறார் வெளியே பகட்டு ஒழுக்கம் இல்லாமல்.
சிற்சபையில் உள்ள  ஆன்மாவையே தொடர்பு கொள்ளும் அக ஒழுக்கம் என்பதாகும்.

இந்த ஒழுக்கத்தை கடைபிடித்து கண்படாது .தூக்கம் என்னும் சோம்பல் கண்களைத் தொடாமல்.இரவும் பகலும் இறைவனையே நினைத்து கொண்டே விழிந்துக்  இருப்பது..

கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தேன்..உள்ளத்தில் சலிப்பு இல்லாமல் ஒரே நிலையில் நிறுத்தி உறுதியுடன் இருப்பதாகும்.

உண்பனே எனினும் உடுப்பனேன் எனினும் உலகத்தாரை நம்பாமல்.

எனது உயிரையும் உடம்பையும் கொடுத்து நலமுடன் வாழ வைத்துக்கொண்டு இருக்கும்.. நன்மையே செய்யும் நண்பனாகவும் பன்பு மாறாமல் செயல்படும் இறைவன் மீது நம்பிக்கையோடு.கைவிட மாட்டான் என்ற உணர்வோடு உனையே  நம்பினேன். கைவிடேல் எனையே என்று வாழ்ந்தவர் வள்ளலார்....

மேலும் வள்ளலார் பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலே கண்ட பாடல்படி
இறைவன் மீது நம்பிக்கை வைத்து ..நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து..

அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று போல் எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அழுது கொண்டே இருந்தால் மட்டுமே..

என்றும் அழியாத நல்நிதியாகிய அருளை வழங்கி ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி.மரணத்தை வெல்ல முடியும்....

மரணம் இல்லா பெருவாழ்வு வாழ்வதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கும் ஏற்ற வழி இதுவேயாகும்.

வள்ளலார் போல் வாழ்வோம்.இறைவன் அருளைப் பெறுவோம்.மரணத்தை வெல்வோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 3 ஜூலை, 2018

என்னைப்போல் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை !

என்னைப்போல் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை !

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும்

எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் -

தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும்

எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.

என்னும் பாடல் வரிகளில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இடமே கேள்வி கேட்கிறார்...

என்போல் பேர் அருளை  பெற்றவர்களோ. என்போர் சாகாவரமும் சார்ந்தவர்களோ உலகில் எங்கேயாவது இருக்கிறார்களா என்று வள்ளலார் கேட்கிறார்..

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரும் பதில் சொல்லுகின்றார்... உன்னைப்போல் ஒருவரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறவும் இல்லை என்கிறார்...

வள்ளலார் பாடல் !

நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.

என்கின்றார்....மேலும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது...

நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்றநின்வார்த்தை யாவும்நமதுநீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்நெஞ்சம்அஞ் சேல் உனக்கே

ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்அழியாத நிலையின்நின்றேஅன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீஆடிவாழ் கென்றகுருவே

நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்நான்இளங் காலைஅடையநல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையேநண்பனே துணைவனேஎன்

ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனேஒருவனே அருவனேஉள்ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலேஓங்குநட ராஜபதியே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்...

வள்ளலாருக்கு சம்மானவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் மட்டுமே...வேறு ஒருவரும் இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டு..வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்தால் மட்டுமே நாம் மேல்நிலைக்கு செல்ல முடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

திங்கள், 2 ஜூலை, 2018

விதியா ? மதியா ?

விதியா ? மதியா ?

வள்ளலார் பாடல் !

மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்

பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்

கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.!

மேலே கண்ட பாடலை நன்கு உற்று நோக்கி படிக்கவும்.

சமய மதங்களின் கொள்கைகள் அனைத்தும் .அச்சம்.
பயம்.ஏழ்மை.துன்பம் மரணம் என்பது இயற்கையின் விதி என்றும் இறைவன் கட்டளை என்றும்.அனுபவித்து தான் ஆகவேண்டும் என்று.. பொய்யான கற்பனைக் கதைகளை மக்கள் மனதிலே விதைத்து விட்டார்கள்..

எனவே மக்கள் அவற்றை உண்மை என்று நம்பி எல்லாம் விதியால் வந்த வினை என்றும்.ஏற்றுக் கொண்டு அப்பாவி மக்கள் வாழத்தெரியாமல் வாழ்ந்து .இறுதியில் மரணம் என்பதும் விதிப்பயன் தான் என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்...

அச்சம் பயம் துன்பம்.ஏழ்மை மரணத்தை வெல்லும் வழி தெரியாமல் .அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் அறிந்து தெரிந்து கொள்ளாத சமய மதங்கள் கண்ணை மூடிக்கொண்டு உளறி உள்ளார்கள்.நாமும் கண்ணை மூடிக்கொண்டு.அவற்றை நம்பிக்கொண்டு விதிதான் கதி என்று வாழ்ந்து வருகின்றோம்..

விதி என்ற வார்த்தையை அழித்து ஒழித்து பதியைக் காட்ட வந்தவர்தான்... வந்து உள்ளவர்தான் வள்ளலார்..

சமய மதங்கள் எல்லாம் உண்மையான இறைவனை நேரில் கண்டு. தெரிந்து அறிந்து புரிந்து கொள்ளாமலும்.புழுகிய புளுகு மூட்டைகளை .கண்டு கொள்ளாமல் சமய மத நெறியை மேவாது தடுத்து அருளைப் பெறும் மெய்நெறியாம் சுத்த சன்மார்க்க பொது நெறியான மெய்நெறியில் பற்று வைத்தாய் ...
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உமக்கு கைமாறு ஏது கொடுப்பேன் என்று.மெய்பொருளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்கின்றார்...

விதியைச் சொல்லி மக்களை ஏமாற்றும்  பொய் நெறியாம் சமய மதங்களில் மனதைச் செலுத்தாமல்...வள்ளலார் காட்டிய உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியைப் பின்பற்றி .அறிவைப் பெருக்கி அருளைப் பெற்று.மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

சமய மதங்கள் சொல்லியவிதியை அழித்து. மதியைப் பெருக்கி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்....

படைக்கப்பட்ட விதியை மதி என்னும் அறிவால் அழிப்பது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்..

வள்ளலார் பாடல் !

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார்...

மனித குலத்தை நல் ஒழுக்கத்தில் மாற்றி இறைவனுடன் தொடர்பு கொள்ளும் ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கம்..

எல்லா உலகத்திற்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரொளி ஒன்றே ஒன்று மட்டுமே !

எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...