குழந்தை பாக்கியம் உண்டானது !
*குழந்தை பாக்கியம் உண்டானது*!
புதுச்சேரிக்கும் மஞ்சகுப்பத்திற்கும் இடையில் சுங்கம் வசூல் செய்யும் ரெட்டிச்சாவடியில் அமீனாக பணிபுரிந்தவர் *மாயூரம் சிவராமய்யர்* என்பவராகும்.
அவருக்கு நிறையசொத்து பெரிய பங்களாவீடு பொருள் நிறைந்தவர்.வசதி வாய்ப்புக்கள் நிறைய இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாக்குறையால் அவரும் அவரதுமனைவியும் மிகவும் வருந்தினர்.
மனவிக்கு *கிரகதோஷம்* உண்டு என ஜோதிடரும் மற்றும் பலர் சொல்லவும் பலபல பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை.
வடலூர் வள்ளலாரிடம் சென்று உங்கள் குறையை சொல்லுங்கள் என அன்பர்கள் சொல்லவும் சிவராமய்யரும் அவர்மனைவியும் வடலூருக்கு வந்து *வள்ளலாரிடம் விண்ணப்பித்தனர்*
*அன்னசத்திரம் கட்ட சொல்லியது*
பண்ருட்டிக்கும் வடலூருக்கும் மத்தியில் *பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள கன்றகோட்டைப் புலவனூரில் ஒருசத்திரம் கட்டி அன்னதானம் செய்யுங்கள்* என்று ஆணை இட்டார் வள்ளலார்.
*அவ்வாறு செய்தால் ஒரு அழகான ஆண்மகன் பிறப்பான் என்றார் வள்ளலார்*.
வள்ளலார் சொல்லியவாறு சிவராமய்யரும் மனைவியும் *சத்திரம் கட்டி அன்னதானத்தை மகிழ்ச்சியுடன் சிறப்பாக செய்தார்கள்.*
*வள்ளலார் சொல்லியவாறே அழகான ஆண்குழந்தை பிறந்தது வாரிசு இல்லாக்குறை தீர்ந்தது*.
*வள்ளலாரை சோதிக்க வந்த சாஸ்திரிகள்!*
ஒருநாள் சாஸ்திரிகள் நால்வர் *சாமவேத்த்தில்* உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தில் கேள்விகேட்டு
வள்ளலார்ரைச் சோதிக்க எண்ணி வடலூர் வந்து சேருகின்றனர்.
அச்சமயம் வள்ளல்பெருமான். *சாமவேதத்தில் அவர்கள் எண்ணிய பாகத்தையே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்.*
சாஸ்திரிகள் வள்ளலாரின் பூரண ஞானத்தை அறிந்து வியந்து பாராட்டி இன்பக்கடலில் மூழ்கினர். *என்ன புண்ணியம் செய்தோமோ* என ஆனந்தம் அடைந்தனர். பின்பு வணங்கி ஆசிபெற்று சென்றனர்.
*வள்ளலார்பாடல்!*
*அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்*
*ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்*
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றேஎந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல்* *வேண்டும்*
*தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே*.!
*வள்ளல்பெருமான் அவர்கள் சாதி சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் தன்னைத் தேடிவரும் மனிதர்கள் அனைவருக்கும்*
*எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமலும்.சித்து வேலைகள் செய்யாமலும் முறையான செய்யத்தகுந்த வழியைக்காட்டி நன்மைசெய்து*.
*துன்பம் தொலைத்து இன்பம் அளித்து அனுப்புவதே குறிக்கோளாகவும் லட்சியமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்*
அதேபோல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு தயவு கருணைகாட்டி *உயிர்இரக்கமே வாழ்க்கையின் முழுமூச்சாக கொண்டு எவ்வித பேதமும் இல்லாமல் தம்உயிர்போல் நேசித்து பாராட்டி வாழ்ந்துள்ளார்*.
ஆதலால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு *பூரண அருள்வழங்கி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி முத்தேக சித்தியை வழங்கினார்*.
மேலூம் *மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*
உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் வள்ளலார்போல் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு