குரு என்பவர் யார் ?
*குரு என்பவர் யார்* ?
*மனிததேகம் எடுத்துள்ளவர்கள் எல்லவரும் உயர்ந்த அறிவுள்ளவர்கள் என்பது கடவுளின் படைப்பாகும்*.
*உயர்ந்த அறிவுள்ளவர்கள் தாழ்ந்த அறிவுள்ளவர்கள் என மனிதர்களை பிரித்தது யார் ?*
*குரு என்பவர்கள் யார். ?*
*உயர்ந்த அறிவுள்ளவர்கள்* *குறைந்த அறிவுள்ளவர்களின் அறியாமையைப் போக்குகின்றவர்களையும் மேலும் உலகியல் கல்வி போதிப்பவர்களையும் குரு என்றும் சொல்லப்படுகின்றனர்*
*மாதா பிதா குரு தெய்வம் என்று மூன்றாவது இடத்தில் குருவை சொல்வதுண்டு*.( *மாதாவையும் பிதாவையும் குருவையும் காப்பாற்றுபவரே தெய்வம் என்பவராகும்*)
அறியாமை என்னும் குருட்டுத்தனமான இருளைப் போக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்.
*தெரியாத தொழிலை கற்றுக் கொடுப்பவர்களையும் குரு என்பார்கள்*.
*ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணவம் மாயை மாயாயை பெருமாயை கன்மம் போன்ற மலத்தை நீக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்*.
*மலத்தை நீக்குவதற்கு மந்திரங்களைச் சொல்லி தீட்சை வழங்குபவர்களையும் குரு என்பார்கள்*.
ஆலயங்களில் உள்ள சிற்பக்கலைகளான தத்துவ உருவங்களான தெய்வங்களுக்கு அருகில் இருந்து அபிஷேகம் ஆராதனை பிரார்த்தனை செய்து பிரசாதம் கொடுப்பவர்களும் குரு என்பார்கள்
*ஒவ்வொருவர் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் முன்னிருந்து நடத்தி வைப்பவர்களையும் குரு என்கின்றார்கள்*.
மேலும் *சமயம் மதம் சார்ந்த ஆதினங்கள் போதகர்கள் மற்றும் ஆன்மீக வேடம் தரித்த ஆடம்பரமான வாழ்க்கை நடத்துபவர்களையும் குரு என்கிறார்கள்*.
*மனிதன் பிறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது இறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது*
*இவ்வாறு அறியாமையில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நிறைய குருமார்கள் தேவைப் படுகிறார்கள்*.
*எல்லா குருமார்களுக்கும் குரு காணிக்கை செலுத்த வேண்டும்*
*உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் படைத்தவர்களுக்கு புற குரு தேவையில்லை*.
*உயர்ந்த குலம் தாழ்ந்த குலம்!*
*குருவாக இருப்பவர்களை உயர்ந்தகுலம் என்றும் கற்றுக்கொள்பவர்களைத் தாழ்ந்த குலம் என்று வகுத்து வைத்துள்ளார்கள்*.
*குருவாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.
*சீடர்களாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.
*இரு தரப்பினர்களும் மாண்டுபோனால் பூமியில் புதைக்கிறோம்.*
*மூன்று மாதம் கழித்து தோண்டி பார்த்தால் இருகுலமும் புழுத்து புழுக்குலமாக இருக்கின்றது*.
*புழுக்குலத்தில் உயர்ந்தவன். தாழ்ந்தவன்.குரு சீடன் என்ற பேதம் தெரியாது எல்லாம் புழுக்குலமாகவேகாட்சித்தருகிறது*.
வள்ளலார் பாடல்!
*நரை மரண மூப்பறியா நல்ல உடம் பினரே*
*நற்குலத்தார் என அறியீர்* *நானிலத்தீர்* நீவிர்
*வரையில் உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்*
*வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்* !
*புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேன்*
*புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே*
*உரைபெறும் என் தனித்தந்தை* *வருகின்ற தருணம்*
*உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே*.!
*இங்கே குரு என்பவர்! அருளைப்பெற்று அழியாமல் வாழும் வழியைக் காட்டுகின்றவர் எவரோ அவரே குரு என்பவராகும்*.
மேலும் வள்ளலார் அகவலில் குரு யார்? என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.
*மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குரு வாகிய அருட்பெருஞ்ஜோதி!*(அகவல்)
*வள்ளலார் ஆரம்பகாலத்தில் நிறைய அருளாளர்களை மற்றும் தெய்வங்களை குரு குரு என பாடிக்கொண்டும் வணங்கிக் கொண்டும் வந்தவர் இறுதியில் இவர்கள் எல்லோரும் குருவுக்குண்டான தகுதி இல்லாதவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்.. *இவர்களுக்கும் மேலான குரு ஒருவர் உண்டு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்கிறார்.*
*குருவிற்கு உண்டான தகுதி!*
*குரு என்பவர் மரணம். அடையாமல் வாழ்ந்துகொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்*
*பொருளும் அருளும் வழங்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும்*.
*இடைவிடாது எப்போதும் நம்மை இயக்குபவராக இருக்க வேண்டும்*.
*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் தெய்வம் அவரே எல்லோருக்கும் ஞானம் வழங்கும் குருவான தெய்வம்.*
*வள்ளலார் காட்டிய உண்மையான குரு!*
*அருளரசை அருட்குருவை* *அருட்பெருஞ் சோதியைஎன்*
*அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்*
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
*மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த*
*வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்*
*கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்*
*கண்டுகொண்டேன்* *கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!*
*தான் குருவாகக் கொண்டு வணங்கி அவர் கருணையினாலே பூரண அருளைப்பெற்று கனிந்து அழியும் உடம்பை அழியாத உடம்பாக மாற்றிய கருணை நடம் புரிகின்ற கனகசபாபதியைக் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன் என்கிறார்*
*சுத்த சன்மார்க்கிகளுக்கு அருட்குருவானவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்*.
( *சன்மார்க்கத்திலும் பணத்திற்காக நிறைய குருமார்கள் தோன்றி உள்ளனர்* *சன்மார்க்கிகள் எதிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது*)
*மேலும் அகவலில் தகவல் சொல்லுகிறார்*.
சிவ ரகசியமெலாந் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய *ஞானசற் குருவே* !
*சத்தியல்*
*அனைத்துஞ்* *சித்தியல் முழுதும்*
*அத்தகை தெரித்த வருட்சிவ குருவே*!
*அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே*
*பிறிவற விளங்கும் *பெரியசற் குருவே!*
*கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே*
*வேட்கையின் விளங்கும் *விமலசற் குருவே!*
*காண்பவை யெல்லாங்*
*காட்டுவித் தெனக்கே*
*மாண்பத மளித்து* *வயங்குசற் குருவே!*
*அருள் வழங்கும் அருட்குருவின் தன்மையை தெளிவாக விளக்கிச் சொல்லுகின்றார்.*
*எனவே சாகும் சாதாரண மனிதர்களை குருவாக ஏற்றுக் கொள்ளாமல் நம்மை படைத்து வாழவைக்கும் நிரந்தரமான அருட்குருவான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்*. *அவரே நமக்கு நல்வழியைக் காட்டி மேலே ஏற்றுவார்.*
*எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு