உயிர்க் கொலை செய்யக்கூடாது ! புலால் உண்ணக்க் கூடாது !
''வள்ளலார்'' உணவை இரண்டாக பிரிக்கிறார் .ஒன்று ''பொருள் உணவு ,''
மற்றொன்று ''அருள் உணவு '' இவை இரண்டும் மனிதர்களுக்கு மிகவும்
முக்கிய மானதாகும் .
பொருள் உணவு என்றால் என்ன ?
இவ்வுலகில் உ யிர் இல்லாத அனைத்துப் பொருள்களும் .
உலகில் உள்ள,அனைத்து உயிருள்ள ஜீவ ராசிகளும்,
வாழ்வதற்காக படைக்கப் பட்டவைகளாகும்.
இந்த உண்மை தெரியாத மனித சமுதாயம் உயிர் உள்ள ,
ஜீவராசிகளை கொன்று அதன் இறைச்சியை உண்ணுகிறார்கள் ,
இவை எந்த விதத்தில் நியாயம் ,எனறு கேட்கிறார் வள்ளலார்
அவர்கள் . அவர் உயிர் கொலை செய்வதை நினைத்து
வேதனையுடன் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளபாடல் ,
பாடல் ;---
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொள்ளத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினா ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வளையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என்னுள்ளே நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுலமறியும்.
எனறு வேதனைப்படுகிறார் வள்ளலார் .
மனிதன் மனிதனாக வாழாமல் ,வாயில்லாத
ஆடு ,மாடு ,கோழி ,பன்றி, மீன்கள் போன்ற உயிர்லுள்ள
ஜீவன்களை கொன்று ,உண்பதற்கு எப்படி மனம் ,
துணிந்தது ,இவைகளைப் படைத்த ,இறைவன்
இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார் ,இவர்களுக்கு
எப்படி கருணைக் காட்டுவார் ,இவர்களுக்கு அறிவு
எப்போது தெளிவடையும் ,எனறு நினைத்து ,
உள்ளம் நடுங்கி வேதனைப் படுகிறார் வள்ளலார் .
பொருள் உணவு இருக்க ,அருளுணவு இருக்க ,
இப்படி வாயில்லாத ,உயிர்களைக் கொன்று ,
உண்பது ,இயற்கையின் சட்டவிரோதமான ,
செய்கையாகும் ,இதை உலகிலுள்ள அனைவரும்
தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.
கடவுள் பெயரால் உயிர்கொலை செய்வது ;----
கடவுள் பேரால் உயிர் பலிக்கொடுப்பது
கொடுமையிலும் கொடுமையாகும்.என்கிறார் வள்ளலார் .
உயிரைக் கொடுத்த இறைவனுக்கு ,உயிரை பலிக்
கொடுக்கலாமா ? இவைகள் எவ்வளவு அறியாமை
செயல்களாகும் .இந்த வழிமுறைகளை ,உலக
மக்களுக்கு ,அறிமுகப் படுத்தியவன் யார் ?
அவன் மனிதனா ?மனிதனாக இருந்தால் இப்படிப்பட்ட
வழிமுறைகளை ,உலகிற்கு அறிமுகப் படுத்தி
இருக்கமாட்டான் .இவைகள் யாவும் மாயையின்
சேட்டைகள் .மாயையில் சிக்குண்டவன் ,
இந்தக்காரியத்தை செய்திருக்கிறான் .அதை
உண்மை எனறு நம்பி மக்கள் ஏமாந்து ,அப்படியே
கடைப்பிடித்து வருகிறார்கள்.
மக்களை அழிவு பாதையில் இருந்து மீட்டு
நல்வழிப் படுத்தவே வள்ளலாரை ,இந்த உலகத்திற்கு
அனுப்பியுள்ளார் ''அருட்பெரும்ஜோதி''ஆண்டவர் .
கடவுள் பெயரால் உயிர்பலி இடுவதை ப்பற்றி
ஒருபாடல் ;---
நலிதரு சிறிய தெய்வம் எனறு ஐய்யோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்கம் உற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் .
எனறு வேதனைப்படுகிறார் வள்ளலார் .
உயிர்களை பழிவாங்கும் ,தெய்வங்களை ,
கொடுமையான சிறிய தெய்வங்கள் என்கிறார் .
அந்த தெய்வங்களைப் பார்த்த போதெல்லாம் ,
என் உள்ளம் நடுங்கி பயந்தேன் என்கிறார் .
இன்னும் எத்தனை உயிகளை பலி வாங்கப்
போகிறதோ என்பதை நினைத்து வேதனைப்
படுகிறார் .
இந்த கோயில்கள் இந்த உலகத்தில் இருக்கலாமா?
அவைகளை அகற்றி விடுவது ,எவ்வளவு பெரிய
புண்ணியம் தெரியுமா !அந்த புண்ணியத்தை
செய்பவர் யார்?அப்படி அந்த புண்ணியத்தை
செய்பவரை கடவுளாகவே,கருதவேண்டும்
கற்பனைக் கதைகளையும் ,மூட நம்பிக்கைகளையும் ,
ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் மத்தியில் ,பரப்பி
விட்ட அந்த மாமனிதர் யார் ?அவர்விதைத்த விதை ,
உலகமெலாம் பரவி,வளர்ந்து பெரிய மரமாகி விட்டது ,
இதை வள்ளலார் தெளிவுப்படுத்துகிறார் ,
ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன்
மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை
அவன் பூட்டிய பூட்டை,ஒருவரும் திறக்கவில்லை ,
இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை ,
உடைக்கஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார் .
அவர் சொல்லியதன் அர்த்தம் அந்த பூட்டை திறந்து
விட்டேன்,அந்த பூட்டைஉடைத்துவிட்டேன் ,இனிமேல்
எந்த கவலையும் பயமும் வேண்டாம் என்கிறார் .
அவர் பதிவு செதுள்ள பாடல் ,
கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக !
வேத நெறி யாகமத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை யுள்ளபடி யுணர யுணர்த்தினையே
ஏதமற வுனர்ந்தணன் வீண் போது கழிப்ப பதற்கோர்
எள்ளளவு எண்ணம் இல்லேன் என்னோடு நீ புணர்ந்து
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே .
என்றும் ;--
கூருகின்ற சமய மெலாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாருகின்றார் அவர் போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் யாங்கே
இலங்கு திருக் கதவும் திறந்து இன்னமுதம் மளித்தே
தேறுகின்ற மெய்ஞ் ஞான சித்தியுறப்புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே .
எனறு பலபாடல்களில் தெரியப் படுத்தியுள்ளார் .
இப்படி நம் முண்ணோர்கள் வகுத்த வழிமுறைகள்
யாவையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளலார் .
உணவு பழக்கத்தில் இருந்து ,வாழ்க்கை முறை ,
வழிப்பாட்டு முறை,ஆட்சிமுறை ,அதிகாரமுறை ,
அனைத்தையும் ,பொய்யானது எனறு வெளிச்சம்
போட்டு காட்டிவிட்டார் ,வள்ளலார்
1874 ,ம்ஆண்டுக்கு பிறகு பகுத்தறிவு கொள்கைகள்
உலகமெங்கும் பரவியுள்ளது ,அதற்க்கு அடித்தளம்
போட்டவர் வள்ளலார் என்பது அனைவருக்கும்
தெரியும் ,
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உலகமெங்கும்
பரவிக்கொண்டு வருகிறது ,ஆன்மாவை அதாவது
அனைத்து உயிரையும் தம் உயிர்போல் பார்க்கும்
நிலை ஏற்பட்டால் ,எந்த உயிரையும் கொன்று ,
திண்ணும் பழக்கம் இருக்கும் இடம் தெரியாமல்,
அழிந்துவிடும்.
இதை உலக ஆட்சி யாளர்களும் ,அறிவியல்
வல்லுனர்களும் ,அணு ஆராட்சியாளர்களும்,
ஆன்மீக சிந்தனையாளர்களும் ,சிந்தித்து செயல்ப்
பட்டால் ,உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ,
துன்பமும் துயரமும் இல்லாமல் ,அமைதியான
உலகத்தை காணலாம் .
''கொல்லாநெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ''
அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .
.