நான் அறிந்த வள்ளலார் ! பாகம்,3,
வடலூர் சத்திய ஞான சபையையும், தருமச்சாலையும் பார்த்து என்னுடைய மனமும் அறிவும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது. இவரைப்போல் ஒரு அருளாளர் எந்த உலகத்திலும் கேள்விப்பட்டதும் இல்லை படித்ததும் இல்லை,அறிந்ததும் இல்லை,பார்த்ததும் இல்லை,-ஆண்டவரை அடையும் வழி கருணை ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர் --.சொல்லியதோடு நில்லாமல் ,உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளுக்கு ஆலயம் அதாவது கோயில் என்று கல்லாலும் மண்ணாலும் கட்டிடங்களை கட்டி ,அதில் ஓர் தத்துவ ஜடப் பொருள்களை பொம்மைகளாக வடித்து,அந்த சிலைகளை வைத்து இதுதான் கடவுள் என்று வைக்காமல்,சொல்லாமல்.
அதில் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சன்மார்க்க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் .
அருட்செல்வர் மகாலிங்கம் - துறவி கந்தசாமி,-ஊரனடிகள் ,--பழ சண்முகனார் ,-வீர சண்முகனார் ,-சேலம் டாக்டர் துரைசாமி,-டாக்டர் ராஜமாணிக்கம் ,--புதுகோட்டை சந்தானகொபாலகிருஷ்ணன் ,-மூ,பாலு,--விழுப்புரம் கோவிந்தசாமி,--ராஜவேலு,--முத்துக்குமாரசாமி --மணி ,-பகிரதன் ,-கிரிதாரிபிரசாத் ,--சென்னை நீதிபதிகள் பழனிச்சாமி,-பஞ்சாட்சரம் ,-மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தியானேஸ்வரன் ,-மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,--மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .
தமிழ் நாட்டில் முதன் முதலாக வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாத கட்அவுட்டுகள்,தயார் செய்து ஈரோடு பிரப்ரோட்டில் பெரிய அளவில் பிரமாண்டமான ஆர்ச்சு வைத்தேன் .விழா மேடையில் வள்ளலார் படம் விபூதி இல்லாமல் ,-ஞானசபையை வைத்து ,-அருட்பெரும்ஜோதி தகரக் கண்ணாடி விளக்கு வைத்து விழா மேடையை ,அனைவரும் பாராட்டும் அளவிற்கு பிரமாண்டம் செய்து விழா எடுத்தேன் .
இவற்றை கண்ணுற்ற சமயவாதிகள் வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாமல் பார்க்க சகிக்காமல் சண்டைக்கு வந்து விட்டார்கள் .அவர்களுடைய எதிர்ப்பை காவல்துறை பாதுகாப்புடன் எதிர்கொண்ட வரலாற்றை சொல்ல வார்த்தைகள் இல்லை ,என்னுடைய நாக்கை அறுத்து எறிவோம் என்று ஒரு கூட்டம் என்னைச்சுற்றி வட்டமிட்டது .தனி ஒருவனாக இருந்து வள்ளல் பெருமான் கருணையால், துணையால் ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளால் விழா சிறப்பாக நடைபெற்று நிறைவேறியது ,இவை தமிழக சன்மார்க்க உலகம் அறியும் .
அந்த விழாவிற்கு பின் மகாலிங்கம் அவர்கள் ராமலிங்க பணிமன்றம் சார்பில் விபூதி இல்லாத வள்ளலார் படம் தயாரித்தார்கள் ,பின் நிறைய அன்பர்கள் அதை ஏற்றுக் கொண்டு சமயச் சின்னங்கள் வள்ளலார் படத்திற்கு அணிவிக்க கூடாது என்பதை உணர்ந்து கொண்டார்கள் .இன்னும் சில அன்பர்கள் விபூதி அணிந்த வள்ளலார் படம் தயாரித்துக் கொண்டு உள்ளார்கள் .அவர்களுக்கு வள்ளலார்தான் அறிவு புகட்ட வேண்டும் .
வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களில் வள்ளலார் படத்தை வழிபடுவதும் விபூதி பிரசாதம் வழங்குவதுமாய் உள்ளது அதை எதிர்த்து போராடி வருகிறோம் .என்னுடைய போராட்டம் ஓய்ந்தபாடு இல்லை இன்னும் நிறைய உள்ளது பின்பு தெரிவிக்கிறேன் .
சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் இப்படி எல்லாம் செய்வார்கள் என்பதை உணர்ந்து -என்னை வணங்காதீர்கள் அருட்பெரும்ஜோதியையே வணங்குங்கள் என்பதை தெளிவாக திருஅருட்பாவில் தெளிவுபடுத்தி உள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்.
பாடல்வருமாறு ;--
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாஞ் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரணச மெய்ச சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன்னானை என்னானை சார்ந்து அறிமின் நீண்டே !
என்று தெளிவு படுத்தியுள்ளார் வள்ளல் பெருமான் ,என்னை வணங்கினால் இறைவன் அருள் கிடைக்காது,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள் எல்லா நலமும் கிடைக்கும் என்கிறார் .
இதில் ஓர் உண்மை உள்ளது வள்ளலார் ஒளிதேகம் அடைந்து விட்டார்கள் .அவர் உருவமாக இல்லை உருவத்தில் இருந்தால் வணங்குவது தவறு இல்லை ,அருட்பெரும்ஜோதியை வணங்கினால் அதில் வள்ளலார் உள்ளார் .வள்ளலார் உருவத்தை வணங்கினால் அதில் அருட்பெரும்ஜோதி இல்லை என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்தால் தெளிவு கிடைத்துவிடும் .
வள்ளலார் உருவம் ஓர் அடையாளம் அவ்வளவுதான் அதற்காக அதை மதிக்கிறோம் ஆனால் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதை உணரவேண்டும் .அதேபோல் சுத்த சன்மார்க்கி யாருடைய காலிலும் விழக்கூடாது.அப்படி விழுந்தால் அவர்கள் சுத்த சன்மார்க்கி அல்ல .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் நம்முடைய சிரநடுவில் உள்ளார் என்பதை அறிந்தால் அவரை காலில் விழ வைக்கலாமா ? மரியாதை என்பது வேறு ?வந்தனம் சொல்வது வேறு ,காலில் விழுவது என்பது வேறு.இதை நாம் உணரவேண்டும்.
தொடரும் ;--