செவ்வாய், 28 மார்ச், 2023

பணம் மோசடிக் கார்ர்கள் !

 *10, 000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில்..*

*SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை..* 

*முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை..*


*நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள்..*

👇

1) விஜய் மல்லையா

2) மெஹுல்சோக்ஷி

3) நீரவ் மோடி

4) நிஷான் மோடி

5) புபேஷ் பெய்டியா

6) ஆஷிஷ்

7) சன்னி கல்லாரா

8) ஆர்த்தி கல்லாரா

9) சஞ்ஜய் கல்லாரா

10) வர்ஷா கல்லாரா

11) சுதீர் கல்லாரா

12) ஜித்தின் மேத்தா

13) உமேஷ் பாரீக்

14) கமலேஷ் பாரீக்

15) நிலேஷ் பாரீக்

16) வினய் மிட்டல்

17) ஏகலைவா கர்ஹ்

18) சேட்டன் ஜெயந்திலால்

19) நிதின் ஜெயந்திலால்

20) தீப்தி பென் சேட்டன்

21) சாவியா சேய்ட்

22) ராஜீவ் கோயல்

23) அல்கா கோயல்

24) லலித் மோடி

25) ரித்தீஷ் ஜெயின்

26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்

27) மயூரிபென் படேல்.

28) ஆஷிஷ் சுரேஷ் பாய்.

இவர்கள் வங்கியில் கடன் வாங்கி ஆட்டைய போட்டது ரொம்ப அதிகமில்லை, வெறும் *பத்து லட்சம் கோடி* மட்டும் தான்.


இதில் சிறப்பு என்னவென்றால்,

ஒரு தமிழன் இல்லை.

ஒரு முஸ்லிம் இல்லை.

ஒரு கிறிஸ்துவர் இல்லை, ஒரு பிற்படுத்தப்பட்டோர், ஒரு பட்டியலினத்தவர் மற்றும் ஒரு பழங்குடியினர்  சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.

ஆனால், *10,0000000000000 பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த இந்த 28 பேரில் 27 பேர் குஜராத் காரர்கள்,ஒருவர் மட்டும் விஜய் மல்லையா கர்நாடகா பார்ப்பனர் .


*அப்ப தேச விரோதிகள் / துரோகிகள் யார்.?*


*இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம் ? 

யார் பொறுப்பேற்பது.?

இதுவே மில்லியன்                    டாலர் கேள்வி ???

வெள்ளி, 24 மார்ச், 2023

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?

 🙏☘️🔥🌻🌲🪔🐥🦚🌹🌀🌸         


*"சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?"*

____________________________


 விளக்கம்:--

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா


பழமையான நெறிகள் பலவாகக் குறிக்கப்பட்டன. அது புறநிலை நின்று காணப்பட்டதால் அப்படி அமைந்தன.


 அம்மார்க்கம் முற்றும் யோக நெறிகள் பாற்படும்.


 *"யோகம் என்றாலே சேருதல், கூடுதல் என்றே பொருளாம்."*


அன்று காணப்பட்ட அந்த யோக நெறி முக்கியமாக - 4 பிரிவோடு விளங்கியது.


 அவையாவன ;--


- (1) ஞான யோகம்

 (2) பக்தி யோகம்

 (3) கர்ம யோகம்

 (4) ராஜ யோகம் என்னும் மகா யோகம் ஆம். 


இவை எந்த ஒன்றாலும் கூடக் கடவுளைக் கலந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் கருத்து.


 இவர்களுடைய முடிவான, *"கடவுட் கலப்புதான்"*- முன்பே *_உடலை விட்டு நீங்கி மறைந்து போவதுதான்"* என்று அறிந்திருக்கின்றோம்.


அந்த முடிவால் *"கடவுள் அனுபவ வாழ்வில்,"* அக்கடவுளைப் போன்ற *"நிலைத்திருத்தற்கு வழியில்லாக் குறை"* அன்று தோன்றவில்லை.


 ஆனால் இப்பொழுது தோன்றிவிட்டதால், அக்குறை தவிர்க்கும் ஒரு பரிகாரம் காண வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டு விட்டதாம்.


இதனை நிறைவேற்றுவதற்கு என்றே நம் இராமலிங்க அடிகளார் தோற்றுவிக்கப்பட்டார்.


*"அனக சுத்த சிவநெறி;---"*

--------------------------------------------


அவர் புற நெறிகளை எல்லாம் மறுத்து, *"அகத்திலிருந்து உதிக்கும் "அனக" நெறியைக் கண்டுபிடித்து"* வெளிப்படுத்தினார்.


 அந்த அனக நெறியும் சைவ தெய்வக் கற்பனையின் மீது அமைக்கப்பட நேர்ந்ததால், *"சுத்த சிவ நெறியாகப்"* போற்றிக் கொள்ளப்பட்டது.


*"சுத்த சிவம் என்பது"* உண்மையில் உள்வளர் *"அருட்பெருஞ்ஜோதியே"* ஆம். 


மற்றபடி சகள, நிஷ்கள (உருவ, அருவ) தோற்றங்களையோ, சகுண நிர்க்குண தத்துவங்களையோ கொண்ட *"சிவசம்பந்தங் குறிக்கும் நெறி அல்ல"* இந்தச் சுத்த சிவ சன்மார்க்கம் என்பது.


சச்சிதானந்த பரம் பொருளின் எல்லாம் வல்ல *"அருள்"* அல்லது *"தயவு"* தான் அந்த மெய்ப்பை உடன் கொண்டு வாழும் உத்தம நெறியாய்க் கற்பிக்கின்றார். 


இதனை ;---


ஒன்றே சிவ(ம்) அதை ஒன்றுஞ் சன்மார்க்கமும்

ஒன்றே !! யென்றீ(ர்) இங்கு வாரீர்!!

நன்றே நின்றீ(ர்) இங்கு வாரீர் (திருவருட்பா)

என்ற பாவால் குறிப்பிடுகின்றார்.

 *"அருட்பெருஞ்ஜோதிபதியை ஒன்றுவதற்கு அவர்தம் அருளே வழியாகும்."*


அன்பறிவோடு இன்பாம்(அன்பு+ அறிவு+ இன்பு) அவனை அடைதற்கு

*"வன்பற்ற அன்பே வழி"*


 ---(தயவுக் குறள்)


என்ற தயவுக் குறளாலும்,


 *"அன்புருவக் கடவுளை அடைவதற்கு அன்பே மார்க்கம்"* எனத் தெளிவுறலாகின்றதாம்.


வேறு வேறாகிய புற நெறிகள் எல்லாம் மனிதனை மறைத்துவிடுகின்றன.


 *_அருளொடு உண்ணின்று(உள் நின்று) உதிக்கும் இந்த அருள் அனக நெறி ஒன்றே மனிதனை அவ்வருள் வடிவாக மாற்றி அழிவின்றி வாழச் செய்வதாம்._*


 இம்மாதிரியான இன்ப வாழ்வு, முந்தின உலக நெறிகளுக்கு அதீதமானது.


*"எல்லாம் ஒரு வழி ?"*:--

-------------------------------------------


எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக் கொண்டும், எதிற் சென்றாலும் இறுதியில் அடையும் முடிவு ஒன்றே என்றும் கூறுகின்ற சமரச ஞானிகள் அடைகின்ற முடிவு யாவரும் அறிந்ததே !


 அம்முடிவு சூனியமான ஏமாற்றமே ஆகும்.


 இவர்கள் ஒன்றான உண்மைக் கடவுளை அறிந்தவர்கள் அல்லர்.


 பலவான பேதத் தோற்றமும், குண சக்திச் செயல்களும் கொண்ட கற்பனா தெய்வங்களையே, தெய்வச் சின்னங்களையே கருத்திற் கொண்டு வழிபட்டு அடைகின்ற முடிவு நிலைகள், எல்லாம் *"இறப்பைத் தவிர வேறு எந்த ஒன்றாக இருக்க முடியும்?!!"*


மேலும் இவர்கள் வழிபடும் பலவாகிய நாம ரூபங்களைக் கொண்ட தெய்வங்களும் ஒன்றையே குறிக்கும் என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா ? அது எங்ஙனம் பொருந்தும் ?


 அவர்களில் எல்லா விதமான வந்தனை வழிபாடுகளையும் ஏற்றுப் பலன் அளிக்கின்ற ஒன்றான கடவுளை அவர்கள் எங்கே அறிகின்றார்கள் ?


*"உண்மைச் சத்விசாரமாகிய கண்ணைத் திறந்து அருள் ஒளியில் இருந்து கண்டால்தான் அந்த ஒன்றான கடவுளைக் காண்பார்கள்"*. 


முதலில், கண்டு, புறநிலை வழிபாட்டால் ஓரளவு பயனடைந்து------


 மேல்,  *"முழுப் பயன்பெற்று வாழவேண்டி, அந்தக் கடவுள் நிலையிற் பொருந்தி, அருள் வாழ்வு மேற்கொண்டு வாழ வேண்டியவர்களாகின்றார்கள்."*


ஆகையால், எல்லோருக்கும் உரிமையான - ஒன்றான அருட்ஜோதி ஆண்டவரை அறிந்து - அகத்திற் கலந்து நின்று - அருளாகிய பெருநெறி பற்றி ஒழுகுதலே - சிறந்த முறையாகும்.


*"இந்த அருட்பெருநெறியே எவர்க்கும் பொருந்தும் சுத்த சன்மார்க்கமாம்"*


☘️🌻🔥 *"தயவு "*🔥🌻☘️

ஜீவன் என்றால் என்ன ?

 🌲🌴🌞🌸🏵️☘️🔥🌀🌹🍎🙏


1) ஜீவன் என்றால் என்ன?


2) ஆத்மாவிற்கும் ஜீவனுக்கும் என்ன ஒற்றுமை ?


🌲🌴🌞🌸🏵️☘️🔥🌀🌹

அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம்.


பொதுவாக *"ஜீவன்"* என்ற சொல் *"உயிர்"* ஆகும்.


இந்த தேகத்தில் *"நித்திய ஜீவன், அநித்திய ஜீவன்"* எனும் இரண்டு வகை உண்டு.



*"நித்திய ஜீவன்"* என்பது *"ஆன்மா"* ஆகும். இதுவே *"சாமான்ய ஜீவன்"* எனப்படும். இது சிரநடுவில் நிராதாரநிலையில் சதா ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இது அனாதியானது; பிறப்பு இறப்பு அற்றது. என்றும் உள்ளது. அறிவே வடிவமானது. இதை *"அக வானம்"* என்பர் மெய்ஞ்ஞானிகள். இது *"அறிவு ஆகாயமாய்"* உள்ள சிற்சபை ஆகும்.


இந்த ஆன்மா ஆகிய நித்திய ஜீவனிட த்திருந்துதான்  *"உயிர்ச்சக்தி"*(உயிர்) வெளிப்படுகின்றது, தாயின் கருவறையிலே முதல் நாளிலே.


இந்த உயிர்ச்சக்திக்கு உணர்வும், ஆற்றலும், ஓர் வடிவும் உண்டு. அதாவது *"உயிர் உணர்வு ஆற்றல் வடிவம்"*  கொண்டது.


 இந்த உயிர்ச்சக்தி, ஆண்- பெண் தேகப் புணர்ச்சியின் போது சுக்கில- சுரோணித சேர்க்கையான அந்த நொடியிலே (தாயின் கருப்பையில்) *"ஆன்மாவிலிருந்து வெளிப்படுகின்றது"*. இது வெளிப்படுகின்ற அதே கணத்தில், பௌதிக பிண்ட அணுக்கள் சூழ்ந்து உடல் உருவமாய் வளரத்தொடங்குகின்றது. 10 மாதம் பூர்த்தியாகி ஒரு குழந்தையாய் இவ்வுலகுக்கு வாழ்வனுபவம் ஏற்க வருகின்றது.


இந்த *"அநித்திய ஜீவன்"*(உயிர்) பௌதிக உடலின் ஒவ்வொரு திசுக்களின் ( . Body cells ) உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும்.


 அகத்தே இருக்கும்

*"ஆன்மாவாகிய காரண சரீரத்தையும்"*  புறத்தே இருக்கும் *"தூல சரீரத்தையும்"* இணைப்பது இந்த *"சூக்கும சரீரமாகிய"* உயிர்ச் உணர்வு சக்தியே. 


*"அதாவது, தலைநடுவில் உள்ள அருவமான ஆன்மாவையும், புறத்தே தோன்றும் உருவமான உடலையும் இணைப்பது நடுவில் உள்ள அருவுருவமான உயிர்."*


இந்த அநித்திய ஜீவனாகிய *"உயிர் உணர்வு"* மூலம்தான் இவ்வுலகில் *"வாழ்வனுபவம்"* பெறுகின்றோம்.


 புற உலகில் இன்ப துன்ப அனுபவம் ஏற்கின்றோம்.


*"வாழ்வின் அந்தியத்தில் இந்த உயிர் உணர்வு சக்தி ஆன்மாவில் உள்ளொடுங்குகின்றபோது மரணம் நிகழ்கின்றது."*


 உடல் தனித்து விடப்பட்டு, ஆன்மா வேறு தேகம் ஏற்க வெளியேறிவிடுகின்றது. 


அநித்திய *"ஜீவனாகிய இந்த உயிர்ச்சக்தி இதயஸ்தானத்தையே இருப்பிடமாகக் கொண்டது"* எனினும், 

மூலாதாரம்.

சுவாதிட்டானம்,

மணிபூரகம்,

அனாகதம்,

விசுத்தி,

ஆக்ஞை ஆகிய அந்தந்த இடங்களிலும் வியாபித்து நின்று விளங்கும்.  


முடிவாக, சுத்த சன்மார்க்கத்தில் இந்த *"அநித்திய ஜீவனாம் உயிர்-ஆற்றல்- உணர்வு- வடிவத்தையே"* ( சூக்கும தேகம் ) பிரணவ தேகமாக மாற்றிக்கொண்டு,


 தூல தேகத்தை *"சுத்த தேகமாகவும்"* , 


காரண ஆன்மாவை *"ஞானதேகமாகவும்"* மாற்றி, 


என்றென்றும் அழியாது நித்தியானந்தத்தோடு வாழ்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.


கருத்து:----

திருவருட் பிரகாச வள்ளலார், தயாநிதி சுவாமி சரவணானந்தா

திங்கள், 20 மார்ச், 2023

மனம் ! குணம்!

 *மனம்!குணம்!!*


*மிருககுணம், தேவகுணம், மனிதகுணம், கடவுள்குணம்* *என நான்கு குணங்கள் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் உண்டு*


*மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணங்கள் மாறி மாறி தோன்றி கொண்டே இருக்கும், அதில் மிகவும் முக்கியமானது, நல்லகுணங்கள் தீயகுணங்கள் என இரண்டு வகையாக இரண்டு பிரிவுகளாக  இருக்கின்றது,இந்த குணங்கள் "மனத்தின்" செயல் பாட்டால்  உண்டாகின்றது*


*அதேபோல் மனம்,பன்முகமனம்,விரிந்த மனம்,பாய்மனம் என நான்கு வகையான மனங்கள் உண்டு!*


*நல்ல குணம்,நல்ல மனம் நன்மையைத் தரும்,தீயகுணம்,தீயமனம் துன்பத்தைத் தரும்* 


*நம் உடம்பில் "எண்ணம்" என்பது மிகவும் முக்கியமான ஆற்றல் மிகுந்த கருவியாகும். அந்த எண்ணத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டு, அதே போல் எண்ணத்திற்கும்  மனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.* 


*எண்ணம் அகத்திற்கும் புறத்திற்கும் மத்தியில் உள்ள பேராற்றல் கொண்ட கருவியாகும்*


*மனித உடம்பில் புறம் என்னும் கரணங்களில்முதல் இடத்தில் உள்ளது மனம், மனம் எண்ணத்தின் துணை கொண்டு உலகியல் வாழ்க்கையில் நீந்தி செல்கின்றது. மனம் எண்ணம்  இரண்டும் உருவமற்றது, ஆனாலும் அதிகமான வல்லமை பெற்ற உணர்வு கொண்ட ஆற்றல்(சக்தி) பெற்றது.*


*மனித உடம்பில் மனம் என்ன நினைக்கின்றதோ! அதற்கு எண்ணத்தின் துணை பெற்று அதுவே புற உலக  வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது.*


*ஆனாலும் உயிரில் தோன்றும் ஆற்றல்,ஆன்மாவில் தோன்றும் ஆற்றல் இரண்டும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் புறக் கருவிகளுக்கும்,கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் புறப்புறக் கருவிகளுக்கும் தன் சக்தியை எண்ணத்தின் வாயிலாக கொடுத்து கொண்டே இருக்கும், வேறு வழியில்லாமல் கருணையோடு துணை போகின்றது.*


*ஆகையினால் குணங்களுக்குத் தகுந்தாற்போல் எண்ணம், சொல், செயல் என்னும் மனம்,வாக்கு,காயம்(உடம்பு) என்னும் மூன்றினாலும் நன்மை தீமைகள் மாறி மாறி உண்டாகி, நல்வினை, தீவினை என்னும் செயல்பாட்டு வினைகள் மனித ஆன்மாவில் திரைகளாக மறைப்புகளாக பதிவாகி விடுகின்றது.இதுவே பாவங்கள் புண்ணியங்களாக இன்பம் துன்பங்களாக வெளிப்பட்டு  உடம்பில் நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,துன்பம்,இறுதியில் மரணம் போன்ற வாழ்க்கை மாற்றம் தொடர்ந்து கொண்டே உள்ளது* 


*மனித வாழ்க்கையில் மிருககுணம்,தேவகுணத்தை விட்டு,மனிதகுணம் கடவுள்குணம் என்ன? என்பதை அறிந்து அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் பரிசுத்த எண்ணங்களைத் துணைக் கொண்டு,புறம் புறப்புறம் என்னும் கரணங்கள்,இந்திரிங்களை  அடக்கி,பரிசுத்த ஆன்மாவைத் தொடர்பு கொள்வோமானால், அருள் என்னும் ஆற்றல் வெளிப்பட்டு எல்லா நன்மைகளும் உடனுக்குடன் விளங்கும்.*


*வள்ளலார் தன் குணத்தையும் எண்ணத்தையும் மாற்றுகின்றார் !* 


*வள்ளலார் பாடல்!*


குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்

கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து


மணமுறு பே ரருள்இன்ப அமுதமெனக் களித்து

மணிமுடியும் சூட்டிஎனை வாழ்க என வாழ்த்தித்


தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்

தானும் ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே


அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!


*மனித குலத்தின் இயற்கை குணமான தயவு என்னும் கருணை தான் என்ன ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது என்கிறார் வள்ளலார்.* 


*ஆதலால் மனித குணத்தை பயன் படுத்தி எண்ணத்தின் துணைக் கொண்டு கடவுள் குணத்தை அடைந்து, கடவுளின் தனிப்பெருங் கருணையால், என்றும் அழியாத நன்நிதியாகிய அருள் பெற்று,தன்னுடைய ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, மரணத்தை வென்று ஞான தேகத்துடன், அருட்சோதி அருளாட்சி புரிந்து வாழ்ந்து கொண்டுள்ளார்*


எல்லா உயிரும் ஒன்று என உணர வேண்டும்!


*எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்று நினைக்கின்ற ஒருமை வரவேண்டும், ஏன்?  என்றால் எல்லா உயிர்கள் உள்ளும் ஆன்மா இருக்கின்றது, ஆன்மாவின் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு இருப்பவரே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை  ஆன்ம அறிவின் மூலமாக எண்ணத்தை வெளிப்படுத்தி எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல், நன்மையே செய்து வந்தால்,வள்ளலார் போல் நாமும் மரணத்தை வென்று ஏறா நிலைமிசை ஏற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.*


*வள்ளலார் பாடல்!*


எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - 


உண்ணுகின்றேன்

தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்

வள்ளல் நட ராயன் மகிழ்ந்து.! 


*மேலும் வள்ளலார் பதிவு செய்கின்றார்!*


எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

உண்ணுகின்றேன் உண்ண உண்ண ஊட்டுகின்றான் 


நண்ணு திருச்

சிற்றம்பலத்தே திருநடஞ் செய் கின்றான் என்

குற்றம் பல பொறுத்துக் கொண்டு.!


மேலும்...


எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்

எண்ணிய வாறே இனிது தந்தென்னைத்

திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி! 


என்கின்றார் *இதுபோல் பல நூறுபாடல்கள் பதிவு செய்துள்ளார்.*


*ஒவ்வொரு  மனித ஆன்மாவிற்கும் நல்லகுணம், நல்லஎண்ணம்,நல்லமனம்,நல்லசொல், நல்லசெயல், நல்ஒழுக்கம்,மேலும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதியர்! என்கின்ற உண்மை தெரிந்து இருந்தால் போதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே வந்து அருள் வழங்கி ஆட்கொள்வார்*


*மனித உடம்பில் 96 தத்துவங்கள், ஆறு ஆதாரங்கள்,64 கலைகள் 4 நான்கு கரணங்கள், ஒருஜீவன், ஒருஆன்மா கொண்ட நுண்ணிய கண்களுக்குத் தெரியாத, உறுப்புக்கள் யாவும் தன்னைத்தானே இயங்கிக் கொண்டுள்ளது. இவற்றை யாவையும் ஆன்மாவின் (உள்ஒளி) வாயிலாக இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பேரொளி என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.*


*இந்த உண்மையை தெளிவாக வெளிப்படுத்தியவர் வள்ளலார் ஒருவரே!*


*ஒரேத் தன்மைஉள்ள உயிர்களை நமது சகோதர உரிமை உள்ளதாக நினைக்காமல்,அவைகளை எதிரியாக, விரோதமாக, பாவித்து  நினைத்து, அவற்றை அழித்து வாழ்வதால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும்,அவரிடம் இருந்து அருள் பெற முடியாமலும், பிறந்து பிறந்து,இறந்து வீண் காலம் கழித்துக் கொண்டே உள்ளோம்.*


*இனியும் வீண்காலம் கழிக்காமல், ஜீவர்களாகிய நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை அறிந்து அன்பு செய்து,உண்மை அறிவு,உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையவர்களாய்,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொதுநெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும் சுகத்தையும் பெரும் களிப்பையும் அடைந்து வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

74 ஆம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

 *74 ஆம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!* 


*எனது துணைவியார் அமுதா கதிர்வேல் அவர்களின் 74 ஆம் ஆண்டு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்* 


*வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் தோள்கொடுத்து உற்ற துணையுடன், சிறப்புடன் ஜீவகாருண்ய பணிசெய்து,சோதனைகளையும் சாதனைகளாக்கி வாழ்ந்து வருகிறார்*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணைக்கு அனேக கோடி வந்தனம் வாழ்த்துக்கள்* 


*எங்கள் மீது அளவில்லா அன்புகொண்ட உங்கள் வேண்டுதலாலும்,பிரார்த்தனையாலும் இன்றுவரை நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்.*


*மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும் உங்கள் வாழ்த்தும் வேணுமாய் அன்புடன் விண்ணப்பம் செய்கிறோம்*


அன்புடன் ஆன்மநேயர்கள் *அமுதா கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 18 மார்ச், 2023

அறிவு விளங்கியவர்! அறிவு விளங்காதவர்!

 *அறிவு விளங்கிவர் ! அறிவு விளங்காதவர்!*


*வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும்* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனித ஜீவர்கள் ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கவில்லை என்றால் தாழ்ந்த அறிவுள்ளவர்களாக மாற்றப்படுவான்!*


*அறிவு விளங்கிய சீவர்களுக்கு எல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்பட வேண்டும்.*


*அறிவு விளங்கினால்தான் இயற்கை உண்மைக் கடவளான எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவே முடியும்*


*அன்றியும், இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா ஆகிய நான்கு வகையான  சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகள் எல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள்.*


*மேலும் சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள்.* 


*அவர்களை ஆன்மவிளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. சீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.*


*அறிவில்லாதவர்கள் யார்? என்பதை வள்ளலாரே தெரிவிக்கின்றார்*


*புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களில் ஆடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் தவம் செய்தல், விரதம் செய்தல், யாகம் செய்தல், பூசை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்,*


*மேலும் உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து (ஆன்ம இன்ப லாபத்தை) இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும்*


*மேலும் அறிவுள்ளவர்கள் யார் ? என்பதை வள்ளலார் விளக்குகின்றார்*


*பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வ கர்மத்தாலும், அஜாக்கிரதையாலும் அச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்,என்பதை அறிந்து கொண்டவர்களே அறிவுள்ள ஜீவர்களாவார்கள்*  


*ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.*


*மேலே கண்ட கருத்துப்படி ஜீவகாருண்யத்தைக் கடைபிடித்து  வாழ்பவர்களே அறிவு விளங்கிய ஜீவர்களாவார்கள்* 


*மேலும் ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் !*


*வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளில் முக்கியமானது,*

*ஞானசரியை*ஞானகிரியை*ஞானயோகம்*ஞானத்தில் ஞானம் என்னும்   நான்கு படிகளாகும்,*


*ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கமான ஜீவகாருண்யம் என்பதாகும்,*


*ஞானகிரியை என்பது இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்ளும் கரண ஒழுக்கமான சத்விசாரம் என்பதாகும்*


*ஞானயோகம் என்பது ஜீவ ஒழுக்கம்,அதாவது எல்லா மனிதர்களிடத்தும் சாதி,சமயம்,மதம்,ஆசிரமம்,கோத்திரம்,சூத்திரம்,சாத்திரம்,குலம்,தேசமார்க்கம்,உயர்வு,தாழ்வு முதலியவைகளாகிய பேதம் அற்றுத் தானாக நிற்றல் ஜீவ ஒழுக்கமாகும்*


*ஞானத்தில் ஞானம் என்பது* *ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்,*

*84 எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதமுள்ள ஜீவர்களிடத்தும்,இரக்கம் வைத்து,ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ஒளியே பதியாகவும் கண்டு பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம் என்னும் ஞானத்தில் ஞானம் என்பதாகும்*


*இந்த நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிப்பவர் எவரோ? அவரே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தகுதி உடையவர்கள்.அவர்களே அறிவில் சிறந்தவர் என்று  எல்லோராலும் போற்றப்படுவார்கள்*


*ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும், அதனால் உபகாரசக்தி விளங்கும், அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்பதை மனித தேகம் எடுத்தவர்கள் ஒவ்வொருவரும் அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்ள வேண்டும்*


*மேலும் ஜீவ காருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் உடனாக மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்*


*ஆதலால் அறிவு விளங்கிய ஜீவர்கள் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாக கடைபிடிக்க வேண்டும்*


*அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்* *ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்,*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வெள்ளி, 10 மார்ச், 2023

கடவுளைக் கண்டேன்! பாகம் .13.

 *கடவுளைக் கண்டேன் பாகம் 13 .*


நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்கிறது !..


*சினிமா உலகத்திற்கு சென்றது !*


*சுமார் 1979 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்,சினமாவில் நடிப்பதற்கு புதுமுக நடிகர் நடிகைகள் தேவை என்ற விளம்பரம் தினத்தந்தி பேப்பரில் வந்தது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி "வெங்கரை அம்மன் மூவீஸ்" சேலம் (ஒரு ஹோட்டல் லாட்ஜ்) என்று வந்திருந்தது.ஈரோட்டில் இருந்து நானும் எனது மனைவியின் தாய் மாமா கலையரசன் என்பவரும் சென்று இருந்தோம், (கலையரசன் என்பவர் ஈரோட்டில் சிறந்த நாடக நடிகர் ரமாபிரபு நடிகையுடன் நாடகத்தில் நடித்துள்ளார்.) ஆண்களும் பெண்களும் சுமார் 20 பேர் வந்திருந்தார்கள்,* 


*டைரக்டர் துரை என்பவரும் மேனேஜர் வேலாயுதம், மற்றும் கேமரோமேன் மேக்கப்மேன் என ஒரு ஆறு நபர்கள் இருந்தார்கள்.எல்லோருக்கும் ஒரு அறையில் மேக்கப் டெஸ்ட நடந்தது பல கோணங்களில் போட்டோ எடுத்தார்கள்.அனைவருடைய முகவரிகளையும் பெற்றுக் கொண்டு, தபால் அனுப்புகிறோம் அப்போது நீங்கள் வந்தால் போதும் என்று அனுப்பி விட்டார்கள். அக்காலத்தில் செல்போன் கிடையாது, லேண்ட் லைன் போன் நெம்பரும் வாங்கிக் கொண்டார்கள்.*


*ஒருவாரம் கழித்து அதே சேலம் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள்.நானும் கலையரசனும் சென்று இருந்தோம்,வேறு ஒரு நான்கு நபர் வந்திருந்தார்கள்*


*பணம் கேட்டார்கள்!* 


*நடிப்பதற்கு கண்டிப்பா வாய்ப்பு தருகிறோம் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் நீங்களும் பங்குதாரர்கள் ஆகிவிடுங்கள் படம் ரிலீஸ் ஆனதும் வருகின்ற லாபத்தை அனைவரும் சமமாக பிரித்து கொள்ளலாம் என்றார்கள், அப்போதெல்லாம் 20 லட்சம் ரூபாய் இருந்தால் பெரிய நடிகரை வைத்து நல்ல படம் எடுத்து விடலாம்*


*நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்கள் எல்லாம்,பணம் கேட்டதும் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னார்கள்,உங்களால் முடிந்த அளவு கொடுங்கள்,அதற்குத் தகுந்தாற்போல் நடிக்க வாய்ப்பு தருகிறோம் என்றார்கள். வந்தவர்கள் இவர்கள் ஏமாற்று பேர்வழிகளாக இருக்குமோ ! என்று நினைத்து எங்களிடம் பேசினார்கள்.  பிறகு யோசித்து சொல்கிறோம் என கூறிவிட்டு சென்று விட்டார்கள். நானும் எனது உறவினர் கலையரசனும் அவர்களுடை உண்மை நிலவரத்தை வெளிப்படையாக விசாரித்தோம்தயக்கத்தோடுஉண்மையைச் சொன்னார்கள்.*


*உண்மை அறிதல்!*


*துரை மற்றும் வேலாயுதம் என்பவர்கள் நாமக்கல் வேலூர் வட்டம் "வெங்கரை" என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்,கிராமங்கள் தோறும் நடக்கும் விழாக்களில் சேலத்தைச் சேர்ந்த சின்ன சின்ன நாடக நடிகைகளைக் கொண்டு நாடகம் நடத்தியும், நடித்தும்,கதை வசனம் எழுதி  இயக்கி வந்ததையும் துரை அவர்கள் சொன்னார்.வேலாயுதம் என்பவர் M A.படித்தவர் வேலை எதுவும் இல்லாதவர். உள்ளூர் அன்பர்கள் தூண்டுதலாலும்,நாடகம் நடத்திய அனுபவத்தாலும், அவர்களுக்கு எப்படியோ சினிமா படம் எடுக்கும் ஆசை வந்துவிட்டது, "கிழக்கே போகும் ரயில்" சினிமா வெளிவந்த தருணம் அது.  இயக்குனர் பாரதிராஜா அவர்கள் போல் கிராமங்களை  மையமாக வைத்து படம் எடுத்து  பேர் புகழோடு வந்துவிடலாம்என்ற பேராசை அவர்களை தொற்றிக் கொண்டது*


*பணவசதி எதுவும் கிடையாது, சினிமா எடுப்பதாக விளம்பரம் கொடுத்தால் எப்படியும் நடிக்க ஆசைப்பட்டு வசதி படைத்த பணக்கார இளைஞர்கள் பெண்கள்  கிடைத்து விடுவார்கள்,மற்றும் சினிமா ஆசையில் பைனான்சியர்கள் கிடைத்து விடுவார்கள், அவர்கள் பணத்தை கொண்டு முதலில் கொஞ்சம்  சினிமா படம் எடுத்து விட்டால், படம் பார்த்து பெரிய பைனான்சியர் கிடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன்,தினத்தந்தி இதழில் சினிமா விளம்பரம் கொடுத்தோம் என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்கள்*


*இதுவரை பணம் யாராவது கொடுத்துள்ளார்களா ? என்று கேட்டோம்,  இதுவரையில் யாரும் கொடுக்கவில்லை எங்கள் பணம் 25000 ஆயிரம் மட்டும் இதுவரை செலவாகி உள்ளது என்றார்கள். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றோம்* 


*எங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் இணைந்து செயல்படுவோம் என்றார்கள்,யாரிடமும் பணம் இல்லாமல் எவ்வாறு சினிமா படம் எடுப்பது என்றோம். முயற்சி செய்வோம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒத்த கருத்தோடு செயல்பட துணிந்தோம்.*


*சிறந்த கதை தயார் செய்தோம்!* 


*ஒவ்வொருவரும் ஒரு கதைச் சொன்னார்கள்,நான் சொல்லிய கதை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கதையின் தலைப்பு "கிழக்கே பொழுது வெளுத்தாச்சு" அக்கதையை சென்னை சென்று,சென்னை பிலிம் சேம்பரில் கலைஅரசன் என்பவர்  பெயரில் பதிவு செய்தோம். மேலும் துரை என்பர் திரைப்பட இயக்குனர்,வேலாயுதம் MA என்பவர் தயாரிப்பு மற்றும் நிர்வாக அதிகாரி, எனக்கு சினிமாவின் கதாநாயகன் என பிரித்து வகுத்துக் கொண்டோம்.மேற்கொண்டு நான்கு பேரும் திரைப்பட தயாரிப்பாளர்கள் என ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம்.* 


*எனக்கு சினிமா கதாநாயகன் என்ற பெருமையும் ஆர்வமும் என்னை பற்றிக் கொண்டது. அப்போது எனக்கு நல்ல இளமை நல்ல அழகு. சிவாஜி கணேசன் போல் ஸ்டெயில் என்று நண்பர்கள் சொல்வார்கள* 


*மேலும் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பத்து கிராமங்களின் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வொரு பள்ளிகளிலும் நாடகங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கிது.* 


*எங்கள் பள்ளியில் நடந்த "கடவுள் எங்கே?" என்ற நாடகத்தில் நான் கதாநாயனாக நடித்தேன், அதில் எனக்கு முதல் பாதி ஆணவம் உள்ள ராஜா வேடம், பிற்பாதியில் கண்கெட்ட  குருடனாக திருந்திய ராஜா வேடம் போட்டு நடித்துள்ளேன், எங்கள் பள்ளிக்கு சிறந்த முற்போக்கு கருத்துள்ள நாடகம் என்றும், எமக்கு சிறந்த நடிகன் என்ற  பரிசும் மாவட்ட அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது,அந்த சிறந்த கதைக்கு வசனம் எழுதி இயக்கியவர் "லூர்தமேரி" என்கின்ற தமிழ் ஆசிரியை அவர்கள்,இன்றுவரை மறக்கமுடியாத நினைவில் நிற்கும் அற்புதமான நாடகம் அது..*


*அதில் இருந்து எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை தொற்றிக் கொண்டதற்கு அந்த நாடகமே ஒரு காரணமாகும்*


*நம்மை படைத்து இயக்கும் கடவுள் நம்மை எங்கே அழைத்து செல்வார் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது!*


*நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை !*


*அடுத்து சென்னையில் சினிமா தயாரிப்பு அலுவலகம் திறப்பு !*


தொடரும்...


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணை !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

புதன், 1 மார்ச், 2023

இறைவன் நேரிடைப் படைப்பு வள்ளலார்!

 *இறைவன் நேரிடைப் படைப்பு வள்ளலார் !*


*உலகில் வாழும் எல்லா ஆன்மாக்களும் ஆன்ம லாபம் பெற வேண்டி இந்த பஞ்ச பூத உலகம் படைக்கப்பட்டதாகும்.* 


*ஆன்மாக்கள் யாவும் இங்கு வருவதற்கு முன்பு எங்கு இருந்தது என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.* 


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம்!*



*அறிவென்பது ஒரு சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம்  சிற்றணுப்பசுவாகி இருகிக்கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாகி இருந்து அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து, எல்லா பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம் மனிதப் பிறப்பு உடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த  தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன்! என்னவென்று சொல்வேன் ! என்கிறார்.* 


*இதில் ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்* 


*ஆன்மாக்களில் பக்குவ ஆன்மா,பக்குவா பக்குவ ஆன்மா,அபக்குவ ஆன்மா என மூவகையாக பிரிக்கப் படுகிறது.*


*வள்ளலாரை  இயக்கிய ஆன்மா இறைவனால் நேரிடையாக அனுப்பி வைத்த பக்குவ ஆன்மாவாகும்! முன் பிறவி எதுவும் எடுக்காமல் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர்கள் போல் வந்த ஆன்மா நான் அல்ல என்பதை தெரியப்படுத்துகிறார்.* 


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !*


*வள்ளலார் பாடல்!*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.! 


*மேலே கண்ட பாடல் உண்மையை வெளிப் படுத்துகின்றது* 


*பள்ளிக்குச் செல்லாமல் பாடம் கற்காமல் ஆசிரியர் இல்லாமல் எல்லாம் தெரிந்தவர் வள்ளலார்*


*ஆதலால் தான்  வள்ளலாருக்கு பள்ளியில் பயிற்றாது,  இறைவன் தானே எல்லாக் கல்வியும் பயிற்றினார் மேலும் வள்ளலாரே சொல்கிறார்*


*குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்கின்றார்* ( சமரச சுத்த சன்மார்க்க சத்தியபெரு விண்ணப்பம்)


*மேலும்.. கற்றதும் நின்னிடத்தே,பின் கேட்டதும் நின்னிடத்தே என்கின்றார்,மேலும் பள்ளியிற் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்று முழுதும் உணர்வித்தாய் என்கின்றார் ,மேலும் ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னதும் நீதான் என்கிறார், மேலும் ஓதும் மறை முதற்கலைகள் யாவையும் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்த்தினாய் என்கின்றார்* 


*மேலும் ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்த்தினாய் என்கின்றார்,ஓதாமல் அனைத்தும் உணர்கின்றேன் என்கின்றார்,""""ஓதாது  உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!"* *என்பன போன்ற அகச் சான்றுகள் திருவருட்பாவில் ஏராளமாக இருக்கின்றன.*


*வள்ளலார் பாடல்!*


*கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக்* *கற்றுக் கருணைநெறி*


*உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்*


*பெற்றேன் உயர்நிலை பெற்றேன்* 


*உலகில்* *பிறநிலையைப்*

*பற்றேன்* *சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!*


*என்னும் பாடலிலே உலகியலில் பிறர் நிலை எவற்றையும் நான் பின் பற்றவில்லை,சிவானந்தப் பற்றையே பற்றினேன் என்கின்றார்*


*இப்படிச் சொன்னவர் எப்படி வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மறபினில் வந்த ஒருவராவார் சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட

*மரபினில்யான் ஒருவன்அன்றோ* வகைஅறியேன் இந்த


ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ


மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ


கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.! 


*என்னும் பாடல் ஆறாம் திருமுறையில் "பிரியேன் என்ற தலைப்பில்" பதிவு செய்துள்ளார், அந்த பாடலை,மேலோட்டமாக படிக்காமல் ஊன்றி படித்தால் அதில் உள்ள உண்மைகள் விளங்கும்* 


*ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்!*


*வீதியிலே விளையாடித் திரியும் அச்சிறு பிள்ளைப் பருவத்திலேயே வள்ளல் பெருமானார்,அருட்பாடல்களைப் பாடும் வல்லமை பெற்று இருந்தார்கள்.பெருமானாரேசொல்லுகின்றார்.*


*உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவதிலே சிறுகால் வீசி ஆடிடச் சென்ற அந்தப் பருவத்திலே நல் அறிவளித்தே உனைப்பாடச் செய்தாய் என்கின்றார்.* 


*மேலும் பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும் வகை புரிந்தாய் என்றும்,ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது அழுது களித்தாடுகின்ற அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்தவரும் களிக்க விரும்பி அருள்நெறியில் நடக்க விடுத்தனை என்றும்,ஏதும் ஒன்ற்றியாப் பேதையாம் பருவத்து எனை ஆட்கொண்டு எனை உவந்தே ஓதும் இன்மொழியால்(தமிழ் மொழி) பாடவே பணித்த ஒருவனே என்றும்*


மேலும் *வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச் சிறிய பருவத்தே நினை நமது பெம்மான் என்றடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே ! என்றும்,மேலும் வீதியிலே  விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப்பெரிய பருவமென வியந்து அருளி அருளாம் சோதியிலே விழைவுறச் செய்து இனிய மொழிமாலை தொடுத்திடச் செய்தணிந்து கொண்ட துரையே என்பன பல சான்றுகளுடன் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பாடல்கள் வாயிலாகவும், உரைநடைப் பகுதி வாயிலாகவும் பதிவு செய்துள்ளார்.*


*இந்த உண்மைத் தெரியாமல் வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மறபில் வந்தவர் என்றும்.திருஞான சம்பந்தர் வள்ளலாருக்கு குரு என்றும்.வள்ளலார் பின்பற்றிய நூல் திருவாசகம் என்றும்,வழிபடும் கடவுள் முருகர் என்றும் திருஅருட்பா பதிப்பித்த வரலாற்று ஆசிரியர்கள் தவறாக பதிவு செய்துள்ளார்கள்* 


*வள்ளலார் பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்*


*வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே,எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற  அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர் என்று அழுத்தம் திருத்தமாக வெளிப் படுத்துகின்றார்*


*திருக்குறள் வகுப்பு !*


*அப்படியே உண்மை என்று நினைத்தாலும் வடலூரில் திருவாசகம் வகுப்பு நடத்தாமல், அனுக்கத் தொண்டர் வேலாயும் ஐயா அவர்களைக் கொண்டு  திருக்குறள் வகுப்பு வைத்து பாடம் நடத்தச். சொல்லி உள்ளார்,அவற்றில் இருந்து அவை உண்மை அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


மேலும் சொல்லுகின்றார்! 


*வாலிப்பருவம் தோன்றிய போதே,சைவம்,வைணவம்,சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச் சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும்,கதிகளும் தத்துவசித்தி விகற்பங்கள் என்றும்,*


*அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து ,அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர் என்று எல்லோருக்கும் புரிந்து,அறிந்து, தெரிந்து கொள்ளும் பொருட்டு வெளிப் படுத்துகின்றார்,நாம் இன்னும் சமய மதங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டே உள்ளோம்*.


மேலும் சொல்லுகிறார்.


*வேதாந்தம்,சித்தாந்தம்,போதாந்தம்,நாதாந்தம்,யோகாந்தம்,கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து,அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர் என்கின்றார்.*


*நாமும் சாதி சமய மதங்களின் கொள்கைகளை கடைபிடிக்காமல் வள்ளலார் சொல்லியவாறுசுத்த சன்மார்க்க கொள்கைகளைமட்டும் கடைபிடித்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிலே வந்து காட்சி கொடுத்து அருளை வழங்கி, அசுத்த பூமகாரிய தேகத்தை மாற்றி சுத்ததேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்* 


*இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*!


*வள்ளல்பெருமான் அவர்களுக்கு தனது சிறுவயது முதலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார்? என்கின்ற  எல்லா உண்மைகளும் தெரியும். மக்களை தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும்,சமய மதங்களின் பொய்யான கற்பனைக் கதைகளை பொய் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டும், அவ்வச் சமய மதங்களைப் பின்பற்றுவதுபோல் நடித்து.நம்மை எல்லாம் சமய மதங்களில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, அவைகளைப் போற்றி பாடுவதுபோல் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.*


*இறுதியாக பொய்யானவற்றை பொய் என்று அறிவித்து, உண்மைப் பொது நெறியாம் சுத்த சன்மார்க்க புதிய நன்நெறிக்கு அழைத்துச் செல்கின்றார்*


*வள்ளலார் பாடல்!*


திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மை உரைத்தேனே !   


என்னும் பாடலின் வாயிலாக  தெளிவுப் படுத்துகின்றார்


*சிருட்டி நியாயம்!*


*ஆகாசம் அனாதி,அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி,அனாதியாகிய ஆகாசத்தில் காற்று அனாதி,அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ,அப்படிக் கடவுளிடத்தில் அருள்சத்தி அனாதியாய் இருக்கின்றது,*


*ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன,அதுபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மா ஆகாயத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன,அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயராகும்* 


*மேலே கண்ட ஆன்மாக்கள் அபக்குவ பக்குவா ஆன்மா என்று சொல்லப்படும்.இந்த ஆன்மாக்கள் தாவரம்,ஊர்வன,பறவை,மிருகம்,அசுரர்,தேவர்,சாதாரண மனிதர்கள் போன்ற உயிர் இனங்களாகும்,வள்ளல்பெருமான் இறைவனால் வருவிக்கவுற்ற பக்குவ ஆன்மாவாக பிறப்பு எடுத்தவராகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*