வியாழன், 29 பிப்ரவரி, 2024

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாகம் 2,

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது !*

 *பாகம்-2* 

*சுத்த சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஜீவகாருண்ய ஒழுக்கம்  என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்கங்களை ஊன்றி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் முதல் பகுதியை வெளியிட்டோம் அதன் தொடர்ச்சி இரண்டாம் பாகம் கீழே !*

*கேள்வி பதில்!*

8,*சீவர்கள் துக்கப் படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாயிருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதர உரிமை இல்லாமற் போவது ஏனெனில்:-?*
 *துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க "ஆன்ம அறிவு என்கிற கண்ணானது" அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று.* 

*அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாம லிருந்ததென்று அறிய வேண்டும். இதனால் சீவகாருணியமுள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கமுள்ளவர் என்று அறியப்படும்.*

9,*சீவர்களுக்குப் பசி தாகம் பயம் முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்கள் அல்ல; அதனாற் சீவகாருணியங் கொள்வதில் விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:-?* 

*இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவ தசடங்களே யல்லது சித்துக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனஞ் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது*
 *செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான நகரணேந்திரியங்களால் சீவவாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது.*

*அன்றியும் காசத்தினால் ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே யல்லது, கண்ணாடி நீர் சொரிய மாட்டாது* 

*ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.*

*10,ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில், சுகதுக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:-?*

 *அறியப் படாது. பளிங்கினாற் செய்த வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப் பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின் மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும்,* 

*சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் மனம் முதலான கரணேந்திரியங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகுமென்று அறிய வேண்டியது.*

11,*கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:-?* 

*முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.* 

*மேலே கண்ட உண்மை விளக்கத்தை ஊன்றி  படித்து தெளிவு பெறவும்*

தொடரும்....

*அடுத்துவருவது முன் தேகம் உண்டு என்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்* 

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாகம் 1

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை !*

*சுத்த சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது* 

*வள்ளல்பெருமான் எழுதி வெளியிட்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்* 

*கேள்வியும் நானே, பதிலும் நானே என்பது போல் வள்ளல்பெருமானே கேள்வி கேட்டு பதில் சொல்லி புரிய வைப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பகுதி நூலாகும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கம் முதற்பிரிவு !*

*ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு!*

*உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.*

1,*அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:-?*

 *எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*

 *எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.*

2,*இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:-?* 

*கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.*

3,*கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-?*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.*

4,*கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி என்னில்:-?*

*அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.*

*அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும்.*

*சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும்.*

*சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.*

*ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.*

*சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்*

5,*ஆனால், சீவகாருணிய ஒழுக்கமென்பது என்னெனில்:-?*

*சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.*

6,*சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்:-?*

*சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.*

7,*சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:-?*
 *சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்* 

*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை படித்து பயன் பெறுவோம்*

தொடரும்....

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
   *9865939896*

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன்!

*யோக மாந்தர்க்கு காலம் உண்டாக உரைத்தேன்!*

*வள்ளலார் பாடல்!*

ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.!

*மேலே கண்ட பாடலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*

*என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்பார் வள்ளல்பெருமான் அவர்கள்* 

*சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு மார்க்கம் இருக்கின்றது நான்கிலும் நான்கு என16 பதினாறு படிகள் உள்ளன* 

*சரியை கிரியை எனும் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் எட்டு படிகளையும் கடந்து ஒன்பதாவது படியான யோக மார்க்கத்தில் வந்தால் தான் சுத்த சன்மார்க்கத்தைப்பற்றி தெரிந்து மேலே ஏற முடியும் என்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்* 

*என் மார்க்கம் உலகியலிலே வாழ்ந்து கொண்டு இருக்கும் போக மாந்தர்க்கு உரைத்திலேன்* 

*இது சகம் உன்னும் யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் என்கின்றார்* 

*ஞான யோகம்!*

*அந்த யோக மாந்தர்களும் இதுவரையில் கண்ணை மூடிக் கொண்டு தவம் யோகம் தியானம் செய்து கொண்டு இருந்தாலும் மேலே செல்ல வாய்ப்பு இல்லை* 

*ஞானத்தில் சரியை என்னும்  ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் ஞான கிரியை என்னும் சத்விசாரத்தையும் பூரணமாக கடைபிடித்தால் ஞானயோகம் என்னும் 15 படிக்கு உயர்ந்து  உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியும் இதுவே யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் என்கின்றார்*

*அதுவே நல்யோகம் ஞானம் என்கின்றார் அவற்றையும் தாண்டி 16 ஆம் படியான ஞானத்தில் ஞானத்திற்கு உயர வேண்டும்* 

*16 ஆம் படிக்கு வருபவர்களுக்காகவே சுத்த சன்மார்க்கம் வழிகாட்டும் சாகாக்கலை கைகூடும்* 

*இவற்றை எல்லாம் கடைபிடிக்காமல் விடுத்து வடலூருக்கு லட்சக்கணக்கான ஜீவர்கள் வந்து வந்து  கூடினாலும், எள்ளு போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கோடானகோடி மக்கள் கூட்டம் வந்தாலும், மேலும் சர்வதேச மையம் அமைத்தாலும்  அது பக்தி மார்க்கமாக இருக்குமே தவிர ஞானமார்க்கம் ஆகாது. அதனால் மக்களுக்கு எந்த அருள் சார்ந்த பயனும்  ஆனமலாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.*

*இதுவரை வடலூருக்கு வந்தவர்களும் செத்துதான் போனார்கள்.வருபவர்களும் சாகத்தான் போகிறார்கள்*

*எனவே வள்ளலார் பதிவு செய்துள்ள ஞானசரியை யில் உள்ள 28 பாடல்களில் சொல்லியவாறு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார்* 

*வள்ளலார் பாடல்!*

சரியைநிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்

உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்

அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்

பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 

*மேலே கண்ட பாடலில் தான் கடைபிடித்து வாழ்ந்து வந்து மேலே ஏறிச்சென்ற பாதைகளை எல்லாம் தெளிவாக விளக்கி யோக மாந்தர்களுக்காக காலம் உண்டாகவே சுத்த சன்மார்க்கத்தை உரைத்தேன் என்கின்றார்*

*வடலூர் சத்திய ஞானசபையில் எல்லாம் வல்ல  அருட்செங்கோல் நடத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் வழங்கும் இடமாகும்*

*நாம் யாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் சரியை கிரியை தாண்டி யோகநிலையைக் கடைபிடித்து ஞானநிலைக்கு சென்று விட்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து ஆட்கொள்வார் இது சத்தியம் சத்தியம் சத்தியமே.*  

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர்  *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
*9865939896*

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகள்!

*சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்!*

 *நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு அவையாவை எனில்?*

1,சாகாக்கல்வி,
2,தத்துவ நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்தி,
4,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பனவாகும்,

*வள்ளல்பெருமான் அவர்கள் சன்மார்க்கிகள் அவசியம்  பின்பற்ற வேண்டிய,கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றி தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்கள்!*

*இன்றுவரை சன்மார்க்கத்தைப் பற்றி பேசும் சமயமத சன்மார்க்க வாதிகளும், நீண்டகாலமாக  சன்மார்க்கத்தைப்பற்றி மேடைதோறும் பேசுபவர்களும், மற்றும் சுத்த சன்மார்க்கத்தைப்பற்றி மேடைதோறும் பேசுபவர்களும்,சாகாக்கல்வி பயிற்சி தருபவர்களும் கீழே கண்ட சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை முழுமையாக பின்  பற்றுகிறீர்களா என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.*

*நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு அவைகளைப் பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்:? அவை நான்கு வகைப்படும்.*

1. இந்திரிய ஒழுக்கம்.

2. கரண ஒழுக்கம்.

3. ஜீவ ஒழுக்கம்.

4. ஆன்ம ஒழு

*அவற்றுள் 1,இந்திரிய ஒழுக்கம் என்பது !*

*நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல்,* 

*கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல்,*

 *கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல்,*

*சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

*இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல்,*

*பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்*

*உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்,*

*மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

2,*கரண ஒழுக்கம் என்பது -!* 

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல்,*

*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்,*

*தன்னை மதியாதிருத்தல்,*
*செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல்,*

*பிறர்மேற் கோபியா திருத்தல்,*

*தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,*

*அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

3,*ஜீவ ஒழுக்கம் என்பது -!* 

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*4,ஆன்ம ஒழுக்கம் என்பது -!* 

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.* 

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.*

*மேலே கண்ட நான்கு ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*மேலும் சொல்கின்றார்!*

*சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை,சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்,சாகாதவனே சன்மார்க்கி என்கின்றார்*

மேலும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும்,*

*கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்*

*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*

*மேலும் சொல்கின்றார்!*

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*

*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,* 

*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*

*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*

*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!* 

*மேலே கண்ட சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறிகளை எவ்வாறு  கடைப்பிடிக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தமாக தெளிவாக சொல்லி உள்ளார்*

*மேலும் இங்குள்ள நாம் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக்  கொண்டு இருக்காதீர்கள் நமக்கு காலம் இல்லை என்கின்றார்*

*நாம் அனைவரும் வள்ளலார் சொல்லியவாறு கடைபிடிக்க வேண்டுவதே ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமைகளாகும்*

*மேலும் சொல்லுகின்றார்!*

*இங்கு உள்ளவர்களால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது,அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் ( அகம் புறம்) உபத்திரவம் பண்ணுகின்றது,ஆதலால் இங்கிருப்பவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து "வாயடங்கி மனமடங்கி" இருக்க வேண்டும்*

*என்மேற் பழியில்லை சொல்லிவிட்டேன் பின்பு வந்ததைப்பட வேண்டும்  என்று எச்சரிக்கை செய்கிறார் வள்ளல்பெருமான்.*

*சாதி சமய மதங்களை பிடித்துக்கொண்டும் அரசியல் ஆதாயத்திற்காக சன்மார்க்கத்தைப் பிடித்துக்கொண்டும், காலத்தை கழிக்கலாம், கெடுக்கலாம் பணம் சம்பாதித்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டி விடுவார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*

*சுத்த சன்மார்க்கத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்*

*நாம் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் இல்லையேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிட்டுவிடுவார்,அனைவரையும் ஓரம் கட்டிவிடுவார்* 

*அறிவுசார்ந்த புதியவர்களை  ஒழுக்கம் உள்ளவர்களை,மேலும் தகுதியுள்ளவர்களை அழைத்துக் கொள்வார்,சேர்த்துக் கொள்வார், அணைத்துக்கொள்வார் சுத்த சன்மார்க்கத்தை எவ்விதப்பட்ட தடைகளும் இல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு செல்வார் என்பது சத்தியம்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
*9865939896*

கூச்சல் குழப்பம் உண்டாக காரணம்!

*என்னை தூக்கிவிட்டது எவை ?* 

*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்*

*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.*

*ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்* 

*நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா!*

*அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.* 

*ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.*

*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* 

*என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** 

*என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* 

*தயவுதான் என்னைத் தூக்கிவிட்டது என்று மிகவும் அழுத்தமாக ஆழமாக பதிவு செய்கிறார். அதேபோல் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வாழ்ந்து கொண்டுள்ளார்*

*தயவுதான் ஒவ்வொரு சன்மார்க்கிகளின் முக்கிய கொள்கையாக  வழிபாடாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் எல்லா குற்றமும். நீங்கிவிடும் பாவமும் நீங்கிவிடும் புண்ணியம்  வளர்ந்து ஆன்ம லாபம் பெற்று அறிவு விளங்கிக் கொண்டே இருக்கும்* 

*தயவும் இரக்கமும்  உயர்ந்தால் அருள் தானே கிடைக்கும் அருள் கிடைத்தால் எல்லா நன்மைகளும் தன்னைத்தானே தோன்றும்* 

*வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாதி சமயம் மதம் கடந்த புனிதமான தனிப்பெருங் கருணை நிறைந்த தனி மார்க்கமாகும்* 

*வள்ளலார் வழியைப் பின்பற்றுவோம் ஆன்மலாபம் அருள் லாபம் பெற்று மரணத்தை வென்று முத்தேக சித்திப் பெற்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம்..*

*அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்*

பேருபதேசத்தில் பதிவு செய்துள்ள ஒரு முக்கிய செய்தி !

தயவு தான் என்னை தூக்கிவிட்டது !

சனி, 3 பிப்ரவரி, 2024

வள்ளலார் காதலித்த கணவர்!

*வள்ளலார் காதலித்த கணவர்!*

*அனுபவமாலை97 ஆவது பாடல்!*

அருட்சோதித் தலைவர் எனக் கன்புடைய கணவர்
அழகியபொன் மேனியை நான் தழுவிநின்ற தருணம்

இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம் போ யினவால்
எங்கணும் பே ரொளிமயமாய் இருந்தன ஆங் கவர்தாம்

மருட்சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம்
மன்னு சிவா னந்தமயம் ஆகி நிறைவுற்றேன்

தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
திருச்சபைக் கண் உற்றேன் என் திருக்கணவ ருடனே.! 

*அருட்பெருஞ்ஜோதியை காதலித்தார்,அருட்ஜோதியை  மறைக்கும் ஜட தத்துவங்களை கடந்தார் வென்றார், அருபெருஞ்ஜோதியுடன் கலந்தார் அருட்பெருஞ்ஜோதி யாகவே ஆனார்!*

*வள்ளல்பெருமான் போல் ஆண்டவரை காதலித்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை*

*வள்ளல் பெருமானே ஆறாம் திருமுறையில் நற்றாய் கூறல் என்னும் தலைப்பில் பதிவு செய்கின்றார்!*

காதல் கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதை நான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.! 

*மேலும் எக்காலத்திலும் உன்னை நான் மறக்கவே மாட்டேன் ஏன்? என்றால் என்னை நீ மறப்பதே இல்லை நான் எவ்வாறு உன்னை மறப்பேன் என்கின்றார்*

*வள்ளலார் பாடல்!*

நான்மறந்தேன் எனினும் எனைத் தான்மறவான் எனது
நாயகன் என் றாடுகின்றேன் எனினும் இது வரையும்

வான்மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை
மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என் னுடைய

ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன் இங் குன்னை மறந் தறியேன்

பான்மறந்த குழவியைப்போல் பாரேல் இங் கெனையே
பரிந்து நின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.! 

 *மேலும் எக்காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன் மறந்தால் உயிர்விடுவேன் என்று சத்தியம் வைத்து சொல்கின்றார்,அந்த அளவு இடைவிடாது காதல் கொள்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*வள்ளலார் பாடல்!*

உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ

என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்

அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே

இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.! 

*இவ்வாறு இடைவிடாது நம் பெருமகனார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு காதலிப்பதை தெரிந்து அறிந்து புரிந்து கொண்ட ஆண்டவர் வள்ளல் பெருந்தகையை ஆறத்தழுவி இணைந்து அணைந்து தன்னுடைய அருளை வாரி வழங்கி மகிழ்கின்றார் அனுபவித்த இன்பத்தை வெளிப்படுத்துகின்றார்.*

*வள்ளலார் பாடல்! அனுபவமாலை!*

கண்கலந்த கணவர் எனைக் கைகலந்த தருணம்
கண்டறியேன் என்னையும் என் கரணங்கள் தனையும்

எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
இறை அளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்

விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
வினைத்துயர் தீர்ந்தடைந்த சுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்

உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
துற்றதென எனை விழுங்கக் கற்றதுகாண் தோழி.! 

*அதன் பின் கண் கலந்த கணவர் அருட்பெருஞ்ஜோதியர்  ஊனில் கலந்து, உயிரில் கலந்து வினைத் துயர் தீர்ந்து அருள் ஒளிஉடம்பு பெற்று தான் அடைந்த பேரின்ப சித்திப் பெருவாழ்வில்  அடைந்த வெற்றியின் பதவியைப் போற்றி முரசு கொட்டுகிறார்,கீழே உள்ள பாடல்!*

*வள்ளலார் பாடல்!*

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!  

*என்னைப்போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்  காதலித்தவரும், என்னைப்போல் பூரண அருளைப் பெற்றவரும், என்னைப்போல் சாகாவரம் பெற்றவரும், என்னைப்போல் அருள்ஆட்சி பெற்றவரும், என்னைப் போல் அருட்ஜோதியில் கலந்தவரும், எவ்வுலகிலும் எவரும் இல்லை என்கின்றார் வள்ளல் பெருமான்.*

*நாமும் வள்ளல் பெருமானைப்போல் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதியை அடைய வேண்டும் என்பதே வள்ளலாருடைய விருப்பமாகும்*

*எல்லா மனித ஆன்மாக்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிக்கும் தகுதி உண்டு என்கின்றார்*

*வள்ளலார் பாடல்!*

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - 

தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் 

எவ்வுலகில்
யார்உளர் நீ சற்றே அறை.!

*மேலே கண்ட பாடல்களும் மேலும் திருஅருட்பா பாடல்கள் யாவும் வள்ளல்பெருமான் வகுத்துதந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை  பின்பற்றுவதற்கும்,இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும், அளவிடமுடியா ஆக்கமும் ஊக்கமும் பெருமுயற்சியும் ஒளி பெறும் ஏக்கமும், உணர்ச்சியும் ஆசையும் அன்பும் காதலும் மோகமும் வேகமும் நமக்கு இடைவிடாது தொடர்பு கொள்ள தூண்டுகின்றன.*

*என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பதே வள்ளல்பெருமான் அருள் வாக்காகும்*

*அருள் பெறுவதற்கும் மரணத்தை வெல்வதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிப்பதற்கும் ஆசைப்பட வேண்டும்!*

*வள்ளலார் பாடல்!*

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 

*நான் சொல்வது எல்லாம் மற்றவர்கள் சொல்வதுபோல் மோசமான உரை என்று நினைந்து தயங்காதீர்கள் உண்மையைச் சொல்லுகின்றேன் வாருங்கள் வாருங்கள் என்று ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அனைவரையும் அழைக்கின்றார்*

*மாயையால் மயக்கும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யை விட்டுவிட்டு அருட்பெருஞ்ஜோதிமேல் ஆசை கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம்.*

தொடரும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*