சனி, 24 ஆகஸ்ட், 2013

வள்ளலார் எழுதியது தேன் மொழிகள் !

வள்ளலார் எழுதியது  தேன் மொழிகள் !

உலகில் வாழ்கின்ற மக்கள் பல வழிகளை கடைபிடிப்பவர்கள்.உயிர்கள் மீது கருணை காட்டுவோர்,உயிர்க்கொலை புரிவோர்,நீதியைப் போற்றுவோர்,நீதிக்கு மாறுபட்டு நடப்போர்,நன்மையே செய்வோர்,தீமையே புரிவோர்,நல்லனவற்றை பின்பற்றி வாழ்வோர்,தீமையைப் பின்பற்றுவோர்,

நல்ல எண்ணங் கொண்டோர்,தீய எண்ணங் கொண்டோர்,முரண் பட்ட எண்ணங் கொண்டோர்,போன்ற இருவேறு தன்மையினரைப் பார்க்கிறோம்.மனிதன் திருந்தி வாழ்வதற்கு நல்ல நூல்கள் பல இருக்கின்றன.இருந்தும் மக்கள் இருவேறு சிந்தனை உடையவர்களாகவே இருக்கிறார்கள் .மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு ஒரே சிந்தனையுடன் வாழ வேண்டும் எண்ணங் கொண்டு எழுதிய நூல்தான் திருஅருட்பா என்னும் நூலாகும்.

அன்பு,தயவு, கருணை கொண்டு நல்லதையே மக்கள் அறிந்து உணர்ந்து வாழவேண்டும் என்பதற்காக வள்ளல் பெருமான் திருஅருட்பா என்னும் அருட்பெரும் நூலை எழுதி வைத்துள்ளார்.

உலக நன்மைக்காக நல்லனவற்றை சிந்தித்து,நல்லனவற்றை செய்து ,நல்ல கொள்கைகளை விதைத்து ,நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து ,மக்களுக்கு வழி காட்டியவர் வள்ளல்பெருமான் ஆவார்கள்.

வள்ளல்பெருமான் எழுதிய ''திருஅருட்பா ''பாடல்கள் திருவருளால் பாடப் பெற்றவை .அவை உலகிற்கு வழிகாட்டும் உயர்ந்த பாடல்கள்.மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வநிலைக்கு கொண்டு செல்லும் பாடல்களாகும்.

திருஅருட்பா எழுதிய வள்ளல்பெருமான் உரை நடை நூல்களையும் எழுதி உள்ளார்கள்.வள்ளலாரின் கடிதங்கள் கடித இலக்கியங்களாக அமைந்துள்ளன்.மேலும் ஜீவ காருண்ய ஒழுக்கம் மனுமுறை கண்ட வாசகம் போன்ற நூல்கள் மக்கள் மனிதிலே நீங்காத இடம் பெற்றவைகளாகும்.

மேலும் ஒழிவில் ஒடுக்கம் ,தொண்டமண்டல் சதகம் நூற் பெயரிலக்கணம்,வழுபட்டு கடவுள் வணக்கப் பாட்டுரை முதலியவற்றையும் உரைநடையில் எழுதி வைத்துள்ளார்.

''மனுமுறை கண்ட வாசகம்'' என்னும்  நூலில் உள்ள உவமைகள்,பழமொழிகள் எடுத்துக் காட்டுகள்,கவிதைச் சொற்கள்,பேச்சுநடைச் சொற்கள் என பல   உதாரணங்கள் முதலியவற்றை எதுகை மோனைச் சிறப்புடன் எழுதி உள்ளார் வள்ளல்பெருமான்.

பெரிய புராணத்தில் மனுநீதி சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதி வைத்துள்ளார் .

மனுநீதிச் சோழன் வரலாற்றை மனுமுறை கண்ட வாசகம் என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் சொல்லும் முறையும் ,அவர் ஆளும் சொற்களும் வியக்க வைக்கின்றன.சில இடங்களில் வியர்க்கவும் வைக்கின்றன.

திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய சோழ மண்டலத்தில் நீதி தவறாது அரசாட்சி செய்து வந்தவர் மனுநீதி சோழர் என்பவராகும். அவர் செய்த தவப்பயனால் ஒருமகன் பிறந்தான் .அவன் பெயர் வீதி விடங்கன் என்பதாகும் .பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்ந்த அவன் இளவரசன் என்னும் நிலையை அடைவதற்கு உரிய காலம் நெருங்கியது/.

ஒருநாள் படை வீரர்களுடன் பலரும் சூழ்ந்து வர முரசுகள் அதிரவும்,சங்குகள் ஒலிக்கவும் தேரில் சென்றான்.செல்லும் போது ஒருவீதியில் தேரிலே கட்டிய குதிரைகள், தேர்பாகன் வசத்தைக் கடந்து தெயவத்தின் வசமாகி அதிவேகமாக அத்தேரை இழுத்துக் கொண்டு சென்றன.

அத்தருணத்தில் தாய்ப்பசுவானது பின்னே வர முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங் கன்றானது ''இளங்கன்று பயமறியாது ''என்ற மொழிப்படியே துள்ளி குதித்துக் கொண்டு எதிர்வந்து ,இராஜகுமாரனைச் சூழ்ந்து வருகிற சனத்திரள்களுக்கு உள்ளே ஒருவரும் அறியாத நேரத்தில் பாய்ந்து வந்து தேக்காலில் சிக்கி மாண்டது.அதைக் கண்ட தாய்ப்பசு அலறி ,சோர்ந்து உடல் நடுநடுங்கிச் சென்று அரண்மனை வாயிலில் தொங்கிய ஆராய்ச்சி மணியைத் தன கொம்புகளால் அசைவித்து ஒளி எழுப்பியது.

அரசனிடம் தன் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர் அந்த மணியை ஒலித்துத் தெரிவிப்பதற்காகத் தொங்க விடப்பட்ட மணியாகும்.அந்த மணி அன்றுவரை ஒலிக்காமல் தூங்கிய மணி அன்று ஒலித்தது .அதைக் கேட்டு ஓடிவந்த அரசன் ,தேர்க்காலில் கன்று சிக்கி இறந்ததை அமைச்சர் மூலமாக அறிந்து ,செய்து அறியாது மயங்கி இரங்கி ஏங்கி செவ்விது என் செங்கோல் என்று மயங்கித் துன்புற்றான் .கன்றின் இறப்பிற்குக் காரண மாணவனுக்குக் கொலைத் தண்டனை அளிப்பதே முறை என்றான் .

அமைச்சர்கள் அஞ்சினர் .தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அமைச்சன் தன்னையே மாய்த்து கொண்டான்.மனுவேந்தன் தன்மகனைக் கிடத்தி தேரினை ஏற்றித் தண்டனையை நிறைவேற்றினான் .நீதி தவறாத மன்னன் செய்கையைக் கண்டு இறைவன் காட்சி அளித்து பசுங்கன்றையும்,மன்னன் மகனையும்,அமைச்சனையும் உயிர் பெற்று எழ்செய்து அருள் புரிந்தார் .

அருட்பிரகாச வள்ளல்பெருமான் மனுமுறைகண்ட வாசகத்தில் கூறும் முறை அவர்தம் அருள் உரையாகவே அமைகின்றது  .திருவாரூரின் சிறப்பை சொல்லுகின்ற பொழுது அங்கிருந்த சோலைகளின் பெயர்கள் .மண்டபங்களின் பெயர்கள் ,வீதிகளின் பெயர்கள்,ஆகியவற்றைப் பட்டியலாக அடுக்கிக் கூறியுள்ளார் .

இறைமாட்சி,அறிவுடமை ,குற்றம் கடிதல்,பெரியாரைத் துணைக் கோடல் சிற்றினஞ் சேராமை ,வலியறிதல் ,காலமறிதல் ,இடம் அறிதல் ,சுற்றம் சூழ்ல்,கண்ணோட்டம் ,ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியாம் இலக்கணம் கூறும் கருத்துக்களை எளியமுறையில் பொருத்தமுற அனைவரும் பிரிந்து கொள்ளும் அளவிற்கு ,மனுவேந்தன் அரசாட்சிப் பற்றிக் தெளிவுபடுத்தி உள்ளார்.

அரசன் இல்லாத குடிமக்களுக்கு ஆபத்து நேரிடும் போது ,கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல,உடனே அந்த ஆபத்தில் இருந்து நீங்கும்படி கைகொடுப்பதினால் நண்பனை ஒத்தவராய் அரசன் இருப்பதாக மக்கள் மகிழ்ந்தனர்.என்று திருவாரூர் மக்களைக் கூறுகின்றனர் .

தெய்வம்,குரு,நண்பன் ,கண்,உயிர்,போன்று அரசன் அமைந்துள்ளான் எனக் குடிமக்கள் மகிழ்ந்தனர்.தெய்வம் முதலிய உவமைகளை ஒப்பிடும் போழுதும் பொருத்தமான காரணங்களை விளக்குகிறார்.நல்ல அரசாட்சியில் பகை உணர்வு இருக்ககூடாது என்பதை ,புலியும் பசுவும் ஒன்றாக நீர் குடித்து உலாவுதலையும்,சிங்கமும் யானையும் சேர்ந்து திரிதலையும் ,பருந்தும் கிளியும் பழகி மகிழ்தலையும்,குயிலும் காக்கையும் கூடிப் பறக்குதலையும்,பூனையும் எலியும் ஒரே இடத்தில் இருத்தலையும் ,கூறி விளக்கும் முறைகள் மிகவும் பொருத்தமாக உள்ளன்.

மகன் பிறந்துள்ள செய்தியைக் கூறக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியை பல உவமைகள் கூறி விளக்குகின்றார் வள்ளல்பெருமான்.

தீராக் குறைக்குத் தெய்வமே துணை ,இளங்கன்று பயமறியாது ,முற்றும் நனைந்தார்க்கு ஈரமில்லை ,முதலிய பழமொழிகளைப் பொருத்தமுற தக்க இடங்களில் பொருத்தி விளக்குகின்றார் .

இளவரசன் தந்தையிடம் அனுமதி பெற்றுச் சிவதரிசனம் செய்யத் தேரில் ஏறும் போது,கால் இடறி,இடது தோள் துடித்து, இடது கண்ணும் துடித்து உற்பாதங்கள் அதாவது சகுணங்கள் தோன்றியமையைக் கூறியுள்ளார்

.தேர்க்காலில் பாய்ந்து இளங்கன்று இறப்பதன் முன் ,இளவரசனுக்குத் தீய சகுணங்கள் தோன்றுவதை ,''மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு ''என்னும் பெரியோர் வார்த்தைப்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்கு நேரிட்டது என்று பேசும் மனுச்சோழன் ,இந்தப் பிறப்பில் நான் மனமறிந்து தீங்கு ஏதும் செய்யவில்லையே !முற்பிறப்பில் தீங்கு இழைத்து இருப்பேனோ ?என்று கூறும் பகுதியில் அடுக்கிக் கூறும் பாவச்செயல்களைப் படிப்போர் பாவம் செய்ய மாட்டார்கள்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ ?தானங் கொடுப்போரை தடுத்து நின்றோனோ ?மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தோனோ ?குடிவரி உயர்த்தி கொள்ளைக் கொண்டானோ ? ஏழைகள் வயிறு எரியச்செய்தொனோ ? வேலை இட்டுக் கூலி குறைத்தோனோ ?இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றோனோ ?கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தோனோ ?குருவை வணங்க கூசி நின்றோனோ ?பட்சியைக் கூண்டில் பதைக்கு அடைத்தோனோ ? ஊன்சுவை சுவை உண்டு உடல் வளர்தோனோ?தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ ?என்று பலவகையாகப்  பட்டியல் இடுகின்றார்.

இவ்வாறு முன் பிறவியில் என்ன தவறு செய்தோனோ என மனுவேந்தன் புலம்பி மனங் கலங்கியதாக வள்ளல்பெருமான் கூறும் வாசகங்கள் மக்கள் உணர்ந்து நடந்தால் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள்.

தன்னுடைய செங்கோல் கொடுங்கோல் ஆனதாகக் கருதும் மனுவேந்தன் சேங்கன்றைத் தெருவில் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோல் அளவுகோல் என்பேனோ ?எழுது கோல் என்பேனோ ?கொடுங்கோல் என்பேனோ ?ஏற்றுக் கோல் என்பேனோ ?கொடுங்கோல் என்பேனோ ?துலாக்கோல் என்பேனோ ?வைக்கோல் என்பேனோ ?பிணக்கோல் என்பேனோ ?என்பன போன்று பேசும் சொற்றொடர்கள் வள்ளல்பெருமான் உடைய அறிவின் அருள் ஆற்றலைக் வெளிப்படுத்து கின்றன.

முறையான காவலன் இல்லாத பாவியாகிய என்னை மனுவென்று பேரிட்டு அழைப்பது ,காராட்டையை வெள்ளை ஆடு என்றும் .அமங்கள வார்த்தை மங்கள வாரம் என்றும்,நாகப்பாம்பை நல்ல பாம்பென்றும்.வழங்குகின்ற வழக்கம் போன்றது அல்லது உண்மை அல்லவே ! என்று பேசிக்கலங்கும் மன்னனுக்கு ,அமைச்சர்கள் பிராயச்சித்தம் கூறினார்கள் .அதனை ஏற்காத அரசன் தராசுக்கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்க எண்ணி ,ஊழ் வினை நோக்காது செய்வினை நோக்கி ,தன்குலத்துக்கு ஒரு மகனே உள்ளான் என்பதையும் எண்ணாமல் ,தவறு செய்த தன் மகன் மேல் தேரினை ஏற்றித் தண்டனை அளித்தான் மனுவேந்தன்

அந்தோ திருவாரூரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் திருப்பெயரைத் தாங்கிய வீதிவிடங்கன் சின்னாப்பின்னப் பட்டு இறந்தான்.

மனுவின் செயலால் நீதி நிலைத்தது ,இறைவன் காட்சியளித்தான் .இறந்து கிடந்த பசுங்கன்றும்,கலாவல்லபன் என்னும் அமைச்சனும் ,வீதி விடங்கன் என்னும் மகனும் உயிர்த்து எழுந்தனர்.இவை எல்லாம் எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடல்கள் .

உலக மக்கள் நலம் கருதியும் ,படிப்போர் சிந்தனையைக் கிளர்ந்து எழ்ச்செய்யவும் கருதியும் மனுமுறை கண்ட வாசகம் எழுதப்பெற்றது .எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு .எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் .என்ற உண்மையை மக்களுக்குப் போதித்து,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்,என்ற நோக்கம் கொண்டு எழுதப்பட்டதுதான் மனுமுறை கண்ட வாசகமாகும்.

உயிர்க்கொலை செய்வதும் ,புலால் உண்பதும் பெரிய குற்றமாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியதான் மனுமுறை கண்ட வாசகம்.

உயிர்க்கொலைக்கு ஈடாக பிராய்சித்தம் செய்தால் போதும் என்று வேதங்களின் கூற்றுக்கு பதில் அடி கொடுக்கின்றார் வள்ளலார்.மனிதன் உயிர்வேறு மற்ற மிருகங்களின் உயிர்கள் வேறு என்று யாரும் நினைத்து விடக்கூடாது.எல்லா உயிர்களிலும் இறைவன் குடிகொண்டு உள்ளார் ,என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.நமது வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் கூறியுள்ள மனுமுறை கண்ட வாசகங்களே வாசகம்,வள்ளலார் எழுதிய தேனினும் இனிய மனுமுறை கண்ட வாசகத்தை அனைவரும் படிப்போம் கடைபிடிப்போம் உணர்வோம் உயர்ந்து வாழ்வோம்.

ஆன்மநேயன்;-- கதிர்வேலு.        .



  


                                                              

        

      .   

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கொடிய பாவங்களிலே கொடியது கொலை செய்வது ! புலால் உண்ணுவது !

கொடிய பாவங்களிலே கொடியது கொலை செய்வது ! புலால் உண்ணுவது !

ஆன்மாக்கள் தோறும் இறைவன் அருள் நிறைந்து இருக்கின்ற படியால் மாயையின் காரியமாகிய வேறுபட்ட அறிவை நோக்காமல் இறைவனை நோக்கி எல்லா உயிர்களையும்  சமமாக எண்ணி நடக்க வேண்டும்.

இறைவனுடைய அருள் ஆற்றல் அனைத்து உயிர்கள் இடத்தும் வேறுபடாமல் விளங்குகின்ற படியால் எவ்வுயிர்களையும் பொதுவாக நோக்க வேண்டும்.

அனைத்து உயிர்களும் சிற்சத்தியின் உருவமாகலாலும் எல்லா உயிர்களுக்கும் இறைவனே தணு கரணங்களைக் கொடுத்தலாலும்,அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன் கொடுத்து  அருளிய உடம்பில் இருந்தும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதம் ஆகலாலும் எந்த உயிர்களையும் இயல்பினால் அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் உயிர் பிரியும்படி நேரிட்டால் அந்த உயிர்கள்

இவ்வுடம்பை விட்டு நீங்கும்போது உண்டாகும் வருத்தம் மிகப்பெரியதாக இருக்கும்.கொலை செய்யப்படும் போது உடம்பை விட்டு உயிர் பிரிந்து வேறு உடம்பு எடுப்பதற்கு சிரமப்படும் .அதனால் அந்த உயிர்கள் வேறு உடம்பு எடுக்கும் வரையில் வெளியில் உடம்பு இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கும்.அந்தப்பாவம் கொலை செயதவர்களையே  சேரும் ,அதனால் கொலை செய்பவர்களுக்கு இறைவன் தண்டனை மிகவும் கொடுமையாக இருக்கும்

ஆதலால் எந்த உயிர்களையும் உணவிற்க்காகவோ ,வேறுவகையிற்க்காகவோ கொலை செய்தல் கூடாது.

கொலையினால் உயிர்கள் படும் துன்பங்கள்.!

கொலை செய்யும் போது கரும்பையும்,எள்ளையும் ஆலையிலும்,செக்கிலும் வைத்து ஆட்டும் போது,நெருக்கத்தில் அரையப்பட்டு நசுக்குண்டு சின்னா பின்னப்பட்டு அக்கரும்பிலும்,எள்ளிலும் இருந்து ரசமும்,எண்ணையும் எப்படிக் கலங்கி வருமோ

அப்படியே உடல் நசுக்குண்டு அரைப்பட்டுச் சின்னா பின்னமாக அதில் இருந்து நடு நடுங்கி அறிவுக் கெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது எவ்வுயிருக்கும் பொதுவானதாகும்.

தமக்குக் கொலை நேரிடுவதை அறிந்த போது உடம்பு நடுங்கியும்,...பதைத்தும்,வியர்த்தும்,....தடதடத்தும் ...,தள்ளாடியும் ,...கால் சோர்ந்தும்,..கண்கள் கலங்கியும்,..இருள் அடைந்தும் ...காதுகள் கும்மென்று அடைப்பட்டும்..நாசி துவண்டும்....வாய் நீர் உலர்ந்தும்....நாக்கு குழறியும்....வயுறு பகீர் என்று திகில் அடைந்தும் ....மனம் திகைத்துப் பறை அடித்தாற் போல் பதபதப்பென்று அடித்தும் துடித்தும் துக்கமும் ,சோர்வும் கொண்டு மயங்கவும் செய்யும் .

மேலும் பாய்மரச் சுற்றில் அகப்பட்ட காக்கை போலவும் ,

நீர்ச் சுழியில் அகப்பட்ட வண்டு போலவும்,

சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும்

உயிர் சுழன்று சுழன்று அலையவும்

உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும் இயல்பு ஆகலாலும் ,

இறந்தவுடன் அவ்வுயிர்கள் இறப்பினால் பட்ட இம்சையும் மின்றி உடனே பிறப்பு இல்லாமல் வருத்தம் அடைந்து துக்கப்பட வேண்டும் ஆதலாலும் ,

நாம் நமக்கு வேண்டி ஒரு உயிரை கொலை செயவதற்கு சுந்தரம் இல்லை.

இறப்பு கொடுப்பதற்கும்,..பிறப்பு கொடுப்பதற்கும்...இறைவனே சுதந்தரம் உள்ளவன் என்று எண்ணாமல் ,...நம் தேவைக்கு ஆகாமியத்தால் கொலை செய்வதால் மீளா நரகம் நேருமென்று அறிந்து கொள்ள வேண்டும்.;--நமக்கு வரும் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் ,உயிரைக் கொள்வதும்,அதன் புலாலை உண்பதும் தான் என்பதை அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.;---வள்ளலார் .

ஆன்மநேயன் ;--கதிர்வேலு.   

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் கிடைத்தது எப்படி !

சுதந்திரம் கிடைத்தது எப்படி !

உலக நாடுகள் எல்லாம் மனிதாபமுள்ள  இயற்கை குணங்கள் இல்லாமல் ,மக்களை அழித்து மற்றைய நாட்டைப் பிடித்து ஆட்சி செய்யும் அதிகார வெறியர்களாக இருந்தார்கள்.இதற்கு அடிப்படைக் காரணம்,ஆண்டவரைப் பற்றிப் பேசும் சாதிகள்,மதங்கள்,சமயங்களாகும்.ஒவ்வொரு மதங்களும் அனைத்து நாட்டையும்,நாட்டு மக்களையும் அடிமைப் படுத்திக் தங்களுடைய மதக் கொளகைகளை மக்கள் மனதிலே விதைக்க வேண்டும் எனற வெறிக் கொண்டு,செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நம்முடைய இந்தியாவில் உள்ள மதக் கொள்கைகள் மக்களுக்கு உண்டான நன்மைகள் செய்யாமல் ,மதம் என்ற போர்வையில் இருந்த சந்நியாசிகள் ,குருமார்கள்,அருளாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக மதத்தை பயன் படுத்தியதால் ,மக்கள் வறுமையில் உண்ண உணவு இல்லாமலும்,உடுக்க உடை இல்லாமலும்..இருக்க இடமில்லாமலும்,வாழ்வதற்கு வசதி இல்லாமலும் துன்பபட்டுக் கொண்டு இருந்தார்கள் .

இந்தியாவின் ஆன்மீகக் கொள்கைகள் மக்களுக்கு நன்மை செய்யவில்லை எனற ரகசியத்தை உணர்ந்து ,மக்களுக்கு நன்மை செய்வது போல் ஆங்கிலேயர்கள் .தங்களுடைய மதத்தை இந்தியாவிற்கு வந்து ,மக்கள் மனதில் பதிய வைத்து, நாட்டைப் பிடித்து விடலாம்.எனற எண்ணத்தால் .இந்தியாவிற்கு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் வந்து நாட்டையே பிடித்து விட்டார்கள்.இதேபோலத்தான் நம்முடைய நாட்டை,இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகலாய மன்னர்களும்,குறுநில மன்னர்களும் நாட்டைப் பிடித்து பலநூறு ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டு இருந்தார்கள் .

இன்றுவரை மனிதன் நாட்டை ஆட்சி செய்யவில்லை மதங்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறன்றன.எந்த நாட்டை ஆளுபவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.அவன் மத வெறிப் பிடித்தவனாகத்தான்  இருக்க முடியும்.இன்றுவரை மதவெறியர்களின் ஆட்டம் குறைந்தபாடில்லை.

ஆனால் அனைத்து மதங்களும் ஆண்டவரைப் பற்றித்தான் பேசுகின்றன.ஆண்டவர் யார் என்பதே தெரியாது அவரவர்கள் ஒவ்வொரு  கடவுளைப் பற்றி பேசுகின்றன.உங்கள் கடவுள் பெரியவர் ,எங்கள் கடவுள் பெரியவர் என்றும் கடவுள்களிலே வித்தியாசம் காட்டி,சண்டையிட்டு போரிட்டு,அழிந்து  வீண் போய் கொண்டு இருக்கின்றார்கள்.

உலக நாடுகளின் கடவுள் கொள்கைகளைப் பார்த்தால் ஒட்டுமொத்தமாகக் கற்பனைக் கடவுள்களையே மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் மதத்தை தோற்றுவித்த அருளாளர்கள்,அவர்கள் எதோ ஒன்றைப் பார்த்து இதுதான் கடவுள் என்றும் ,அந்த மதத்திற்கு உண்டான சில அற்பத்தனமான கொள்கைகளை மக்கள் மனிதிலே விதைத்து விட்டார்கள்.அதையும் உண்மை என்று நம்பி அந்தந்த மதத்தின் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை பின்பற்றி வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலைப்பாடு மனிதனுக்கு அறிவு தோன்றிய காலத்தில் இருந்தே நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

உண்மையானக் கடவுளை எப்போதுதான் மக்கள் தெரிந்து கொண்டு வாழ்வார்கள்.என்ற வேதனை கடவுளுக்கே இருந்தது.

இந்த உலகையும் உலக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணங் கொண்டு இறைவனே ! இந்த உலகத்திற்கு பக்குவமுள்ள ஓர் ஆன்மாவை அனுப்பி வைக்கிறார் , அந்த ஆன்மாதான் இராமலிங்கம் எனற பெயர்தாங்கி ,தமிழ் நாட்டிலே உள்ள மருதூரில் 1823,ஆம் ஆண்டு பிறந்தார் .பின் அருட்பிரகாச வள்ளலார் என்ற அருள் பெயர் தாங்கி உலக மக்களுக்கு உண்மையான கடவுளை அறிமுகப்படுத்தி உள்ளார் .

அந்த உண்மையான கடவுள்தான் ,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்பவராகும்.உலக மக்கள் யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு சாதி,சமயம்,மதம் அற்ற ஒரு பொதுக் கொள்கையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.அந்தக் கொள்கைதான் '' ஆன்மநேய ஒருமைப்பாடு ''என்னும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' எனற ஒரு அமைப்பை அமைத்துள்ளார் ,அதன் வாயிலாக அனைத்து மக்களும் உண்மையானக் கடவுளை அறிந்து சாதி சமயம்,மதம் என்ற பிடியில் இருந்து விலகி ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும் என்பதை போதித்தார்.

அவருடைய கொள்கைகளை பின்பற்றியவர்தான் நமது தேசப்பிதா என்னும் ''மகாத்மா காந்தி''ஆவார்கள்..அதனால்தான் ,சாதாரண ஆன்மா ,மகாஆத்மா என்று பெயர் பெற்றது.

சாதி,சமய மதம் என்ற பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எனற எண்ணங் கொண்டு ''சுதந்திரம்'' என்ற கருவியை தன்னுடைய ஆன்மாவில் இருந்து எடுத்து மக்களுக்கு போதித்தார்.மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுவான சத்தியம்,நேர்மை அகிம்சை,கொல்லாமைப் போன்ற ஒழுக்கமான கொள்கைகளை மக்களுக்கு போதித்தார்.அதேபோல் தானும் வாழ்ந்து காட்டினார்.

மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் ஆங்கிலேய அந்நியர்களை நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற்றி தனிமனித சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதை தம்முடைய முழு மூச்சாக செயல் பட்டார் .மக்கள்..கத்தி இன்றி ,ரத்தம் இன்றி,அகிம்சை என்ற சத்தியத்தின் வழியிலே சுதந்திரம் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அரும்பாடு பட்டார்.

இருப்பினும் நம்முடைய நாட்டிலே பல்லாயிரம் உயிர்களின் தியாகத்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.பல தியாகச் செம்மல்களால் கிடைத்ததுதான் நமது சுதந்திரம்.ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாக வாழ வேண்டும் ,சாதி,சமயம்,மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழ்வதுதான் சுதந்திரம்.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.இல்லாமை என்பது இல்லாமையாக இருக்க வேண்டும்.என்பதுதான் சுதந்திரம்.

பல தியாகிகளால் வாங்கிக் கொடுத்த சுதந்த்தை பாது காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்..இன்று உலகம் எங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப் படுகிறது.அரசு பள்ளிகளிலும் அரசு அலுவகங்களிலும் ,அரசு விழாவாக எடுக்கப் படுகின்றன.ஒரு சடங்காகக் கொண்டாடப் படுகின்றன்.
அதை மாற்றி ஒவ்வொரு இல்லங்களிலும் சுதந்திர தின விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

உலக நாடுகளும், நமது நாடும், நாட்டு மக்களும்,பசி பட்டினி வறுமை,வேலை இல்லாத் திட்டாங்கள் இல்லாமல்,அனைத்தும் பெற்று மக்கள் சுதந்திரமாக  மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் ,எக்காலத்தும் மக்கள் பயம் இல்லாமல் வாழ வேண்டும் அதுவே மக்களுக்கு கிடைத்த சுதந்திரம்.தனிமனித ஒழுக்கமுடன் வாழ்ந்து சுதந்தரத்தை பாது காக்க வேண்டும் .உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழக !

உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேலு.  

  

   

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மனிதன் குற்றம் செய்வதற்கு அடிப்டைக் காரணம் !


மனிதன் குற்றம் செய்வதற்கு அடிப்டைக் காரணம் !

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த நாள் தொடங்கி இறந்து போகிற வரை உணவு என்னும் ஆகாரம் உண்டு .

உண்ணும் உணவிலே காரம்,உப்பு,புளிப்பு,துவர்ப்பு,இனிப்பு,கசப்பு போன்ற ஆறு சுவைகள் உள்ளன.அந்த ஆறு சுவை உணவின் தன்மைக்குத் தகுந்தாற்போல் இரத்தமாக மாற்றம் அடைந்து ,அதன் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுக்கிலம் என்னும் விந்துவாக ரசாயன மாற்றம்போல் சுக்கிலப் பையில் சேர்ந்து விடுகின்றன.

அந்த சுக்கிலத் தனமைக்குத் தகுந்தாற்போல் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் வெவ்வேறு விதமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.

ஆறு சுவைகளிலே காரம், உப்பு,புளிப்பு அதிகமாக உண்பவர்கள் அதிக மான குற்றங்களைச செய்வார்கள்.காரம்,உப்பு,புளிப்பு ,துவர்ப்பு,இனிப்பு,கசப்பு,சமமாக கலந்த உணவை உட்கொள்பவர்கள்,சிறிய குற்றங்களை செய்பவர்கள்.கசப்பும் ,இனிப்பும் மட்டும் உண்பவர்கள் குற்றங்களை செய்யமாட்டார்கள்.

மேலும் காரம் ,உப்பு, புளிப்பு கலந்த ,மசாலா கலந்த மாமிசம் அதிகம் உண்பவர்கள் கொலைக் குற்றவாளிகளாகவும்,தீவரவாதி களாகவும்,நக்சல் பார்டிகளாகவும்,பயங்கர வாதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும்,திருடர்களாகவும்,கொள்ளை   காரர்களாகவும் அதிகமான மனிதாப மானமற்ற கொடுரமான செயல்களில் ஈடுபடுவார்கள்.

எல்லா குற்றங்களுக்கும் அடிப்டைக் காரண காரியம் உண்ணும் உணவே காரணமாகும் .உணவினால் உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்துதான் குற்றம் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கின்றன.அதுவே இளமை மாறி முதுமை அடைந்து இறுதியில் மரணத்திற்கும் காரணமாக இருகின்றன.இளமையில்,ஆண்கள் ,பெண்கள், காதல் என்னும் வலையில் சிக்குவதற்கு காரணமாக இருப்பதும் சுக்கிலமாகிய விந்துவே காரண காரியமாக செயல்படுகின்றன,என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.

பொருள் உணவு உண்ணாமல் அருள் உணவு உண்பவர்களுக்கு மரணம் நீங்கும் என்கிறார் வள்ளல் பெருமான்.அவர் சொல்லுவதைப் பாருங்கள்.

காரமும் மிகுப்புளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமுதுண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும்
ஆரமுது உண்டு என்னோடே ஆடடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதி கண்டு ஆடடேடி பந்து !

என்றும் ,
சோற்று ஆசையோடு காமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொள்ளக்
கூற்றாசைப் படும் என நான் கூறுகின்றேன்
உண்மை இனிக் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக்கு இன்று அருள்வார்
போலும் அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் அருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பெசுவீரே !

என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார் நமது வல்லபெருமான்.

மனிதன் தவறு செய்வதற்கும்,குற்றம் செய்வதற்கும் அடிப்படைக் காரணம் உணவுதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.           

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்.!

ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்.

ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாம் சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் .
ரமலான் பண்டிகை என்பது நம்மை எல்லாம் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் பண்டிகையாகும்.கடவுள் உயிர்களை எல்லாம் படைத்து ,அவைகள் யாவும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் ,என்பதற்காக கடுமையான விரதம் (நோம்பு ) இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுகிறோம்.மிகவும் மகிழ்ச்சியான செயற்பாடுகள் ஆகும்.

அதே நேரத்தில் வாயில்லாத இறைவன் படைத்த உயிர்களை உயிர்களை கொன்று தின்பது ,மக்களுக்கு பிரியாணி செய்து பரிமாறுவது மிகவும் பாவச்செயல்களாகும் ,இறைவன் எந்த உயிர்களையும் கொலை செய்ய சொல்லவில்லை.நபிகள் அவர்களும் உயிர்களைக் கொன்று படையல் செய்யச் சொல்லவில்லை .

உயிர்களை நேசிக்க சொல்கிறார்.துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யச்சொல்கிறார் .இறைவனை இடைவிடாமல் தொழச்சொல்கிறார்.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க சொல்கிறார்.

இஸ்லாம் சகோதரர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் ,நபிகள் அவர்கள் எழுதிய குர்ரானை நன்கு படியுங்கள்.எந்த நேரத்தில் எந்தக் காலக்கட்டத்தில் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதை என்ற நோக்கத்தில் சொன்னார் என்பதை புரிந்து கொண்டால்,நமக்கு நன்கு விளங்கும்.

வள்ளலார் அவர்கள வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார்.எல்லாம் உயிர்களும் இறைவன் படைப்பு எந்த உயிர்களையும் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை.அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு தாவரங்கள் இறைவனால் படைக்கப் பட்டுள்ளது.

தாவரங்களும் உயிர்கள்தான் ,ஆனாலும் அதில் கிடைக்கும் இலை,பூ,காய் ,கணி,தானியங்கள் போன்ற உயிர் இல்லாத பொருள்களை உண்ணவேண்டும் என்கிறார்.அவை கொலை அல்ல என்கிறார்.அவைகள் யாவும் உயிர்களைக் காப்பாற்றும் உணவாகும் என்கிறார் .

அடியேன் சொல்வதை தவறாக எண்ணவேண்டாம் .எல்லோரும் எங்களுடைய சகோதரர்கள் என்ற ஆன்மநேய உரிமையுடன் இதைச்சொல்கிறேன். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

அனைருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லாநெறியே குவலையம் எல்லாம் ஓங்குக !
ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !;---வள்ளலார்

ஆன்மநேயன்;--கதிர்வேலு.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

வள்ளலார் அழைக்கிறார் !ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு !


அருட்பெருஞ் ஜோதி            அருட்பெருஞ் ஜோதி !
தனிப்பெருங் கருணை         அருட்பெருஞ் ஜோதி !



வள்ளலார் அழைக்கிறார் !ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு ! 

எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே 
எல்லாம் வல்லான் தனையே எத்து ! 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

''வள்ளலார் அழைக்கிறார் '' மலேசியா நாட்டில் ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு ''வள்ளலார் வாழ்கிறார் ''என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

உலக மக்களையும் உலக உயிர்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் நியதியின் படி வாழ வைக்க வேண்டும் என்ற,பெருங்கருணையோடு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணைப்படி ,இந்த உலகிற்கு வருவிக்க உற்றவர்தான் அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்.

உயர்ந்த அறிவுடைய மனிதர்கள் அனைவரும் இறைவன் அருளைப் பெற்று பேரின்ப வாழ்வு என்னும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ வைக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு,உலகப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற ஒரு தனிநெறியை தோற்றுவித்து உள்ளார்.

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க அருள் நெறியை,சுத்த சன்மார்க்க மரபை,உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு ''வள்ளலார் அழைக்கிறார் ''என்ற தலைப்பின் கீழ் மலேசிய நாட்டில் ஆறாவது  உலக சுத்த சன்மார்க்க மாநாடு வருகிற ,
5--10--2013,  முதல் 6--10--2013,வரை இரண்டு நாட்கள் ,''கலா மண்டபம் பிரிக் பீல்ட்ஸ்'' என்ற மண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

வள்ளல்பெருமான் காட்டிய அருள் நெறியை விளக்கும் மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளப் பெற்று ஆன்ம லாபம் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு ;--''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் '' என்ற தலைப்பில் முழுமையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை தொகுத்து ... சுத்த சன்மார்க்க அருளாளர் ஈரோடு திரு ,செ, கதிர்வேலு அவர்கள் .எழுதிய நூலை,அருள் திரு ,டாகடர் லலிதா அவர்கள் ,அருள்திரு NCR, நாதன் அவர்கள் தலைமையில் மாநாட்டில் வெளியிடப்படுகிறது. அனைவரும் பெற்று படித்து அதன்படி வாழ்ந்து ஆண்டவரின் அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

இடம் ;--கலா மண்டபம் பிரிக்பீல்ட்ஸ் / KALA MANDAPAM BRICKFIELDS,
தேதி ;---5--10--2013,சனிக்கிழமை காலை ,7.00,மணி முதல் இரவு 10,00,மணி வரையும் .
                6--10--2013,ஞாயிற்றுக் கிழமை காலை ,6,00,மணி முதல் மாலை 7,00.மணி வரையும் நடைபெற உல்லது. மேலும் இரண்டு நாட்களிலும் அருட்பா இன்னிசை நடைபெறும்.

நமது மலேசிய நாட்டு அறிஞர்களும்,தமிழ்த் திருநாட்டின் சன்மார்க்க சான்றோர்களும்,இலங்கை,சிங்கப்பூர் ,பியன்மார்,பிரான்ஸ் நாட்டு சான்றோர்களும் வந்து அளிக்கும் அருள் விருந்தை சுவைக்க அன்புடன் அழைக்கிறோம். 

அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் ! ,இது மேலேறும் வீதி வாரீர் ! சுற்றத்துடன் வாரீர் ! நண்பர்களுடன் வாரீர்.! வாரீர் !வாரீர் !

வருங்காலம் பொற்காலம் ,சுத்த சன்மார்க்க காலம்,சிந்திப்பீர் செயல்படுவீர் .

அன்பெனும் பிடியுள் ;--

Pusat Jagaan Vallalar 
No,14,Lengkok Cumarasami
4th mile,Jalan lpoh,51200 Kuala Lumpur.
Contact;Mr,NCR Nathan ; 012-2182111
Dr,Lalita Veeriah ; 012-3160470
Dr,Dinakren ; 012-639 1511 

மகத்தான அறிய வாய்ப்பு ,திரளாக வாருங்கள் !முன் கூட்டியே இருக்கைகளுக்கு... குறைந்த கட்டணம் ,ரி ம்.100,00,பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்.

நன்றி வாழ்த்துக்கள் ,வந்தனம் .

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வள்ளலார் வாழ்கிறார் !

வள்ளலார் வாழ்கிறார் !

உலகில் உயர்ந்த ஞானம்  விளைந்த நாடாக உள்ளது இந்தியத் திருநாடாகும்.அந்த திருநாட்டில் உயர்ந்த ஞானம் விளைந்த மாநிலம் தமிழ் மாநிலமாகும்.அந்த மாநிலத்தில் இறைவன் அருள் பெற்ற தவசிகளும்,யோகிகளும்,சித்தர்களும்,முத்தர்களும் ஞானிகளும்.ஆழ்வார்களும்,நாயன்மார்களும்,தொன்று தொட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள்.அவர்கள் மக்களுக்கு அவரவர்களுக்கு தெரிந்த,அறிந்த முடிந்த அளவிற்கு அருள் நெறிகளை போதித்து உள்ளார்கள்.ஆனால் அனைவரும் முத்தி என்ற பெயராலும்,சித்தி என்ற பெயராலும்,சமாதி என்ற பெயராலும்,மோட்சம் என்ற பெயராலும் மறைந்து மாண்டு போனார்கள்.

இந்தியாவில் தோன்றிய ஞானிகள் மட்டும் அல்ல,உலகில் தோன்றிய அனைத்து சாதி,சமய,மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள் அனைவரும் அவரவர்களுக்குத் தெரிந்த கொள்கைகளை,கருத்துக்களை,மக்களுக்கு தெரிவித்து விட்டு மண்ணோடு மண்ணாக மாண்டு போனார்கள்.  

தமிழ் நாட்டு அருளாளர் !

தமிழ் திருநாட்டின் கடலூர் மாவட்டமான பொன்னி நதிபாயும் சோழ நாட்டில் முத்தி இன்பம் தித்திகின்ற தலமான தில்லை சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்னும் கிராமம்.அந்த கிராமத்தின் கிராமக் கணக்குகளை கவனிக்கும் கணக்கராகவும்,பிள்ளைகளைக் சேர்த்து பாடஞ் சொல்லும் ஆசிரியராகவும்    இராமய்யா இருந்து வந்தார்,அவர்க்கு ஐந்து மனைவிகள் மகப்பேறு இன்றி ஒருவர்பின் ஒருவராக இறந்து போய் விட்டார்கள்.ஆறாவது மனைவியாக சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் உள்ள,சின்னக்கா வணத்தில்,சின்னம்மை என்னும் பெண்ணை ஆறாவதாக மனம் முடித்துக் கொண்டார்.

சின்னம்மை கற்பு நெறி தவறாத பெண்ணாகவும்,உயிர்கள் மேல் அன்பு ,தயவு,கருணைக் கொண்டவராகவும்,அகம் ஒன்று ,புறம் ஒன்று பேசாத உயர்ந்த குணமுள்ள வராகவும்,கணவன் சொல் தட்டாது நடக்கும் கண்ணியம் மிக்கவராயும்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் உள்ளவராகவும்,இறைவன் மீது அளவில்லா பக்தி உள்ளவராகவும்,இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை எனாமல் கொடுக்கும் தயவு உள்ளவராகவும்,கடவுள் விரும்பும் கருணை உள்ளவராகவும்,பெண் குலத்திற்கே பெருமை சேர்க்கும் பெண்ணாக வாழ்ந்து கொண்டு வந்தார்.  

இராமய்யாவுக்கும் சின்னம்மைக்கும் சாபாபதி,பரசுராமன்,உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும், இரு ஆண் மக்களும்,இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.அதன் பின்பு நீண்ட வருடங்கள் கழித்து,ஐந்தாவதாக ஒரு ஆண் குழைந்தை பிறந்தது.அந்த குழைந்தை எப்படி பிறந்தது.

சிவனடியாராக அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்தார்.

1822,ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி அன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியாராக தோற்றம் கொண்டு,இராமய்யாவின் இல்லம் தேடி உச்சிப்போதில் வருகின்றார். வந்தவர் பசியினால் இளைப்பாய் இருக்கிறது புசிப்பதற்கு உணவு கிடைக்குமா?தருவீர்களா !என்று உரத்த குரலில் வினவுகின்றார்.அக்குரலினால் ஈர்க்கப்பட்டு வெளியே வந்த,சின்னம்மையார் அவ்வடியாரைக் தரிசித்துத் தம் மெய் சிலிர்த்தார்.அவ்வயோதிக சிவயோகியாரின் திருவருட் பார்வையும் தேகப் பொலிவும் பார்த்து எல்லாம் வல்ல சிவமே வந்து இருப்பது போன்ற உணர்வுடன் அம்மையார்,நாம் இச்சிவத்தைக் காண்பதற்கு பெரிய புண்ணியம் செத்துள்ளோம்,என நினைந்து அவரைப் பார்த்து இருகரம் கூப்பி வணங்கி,வாருங்கள்,வாருங்கள் என வீட்டின் உள்ளே அழைத்து சென்று அமரும்படி வேண்டினார்.

பெர்யதோர் தலைவாழை இலைவிரித்து அறுசுவை உணவு பரிமாறினார்.உணவு உன்ன உன்ன, மேலும் மேலும் பரிமாறினார் சின்னம்மையார்.போதும் போதும் என்று பசி ஆற உணவை உண்ட சிவனடியார்,அம்மையே ! என்னுடைய பசி தணிந்தது,  என்னுடைய பசியைப் போக்கிய உனக்கு உலகில் உள்ள ஜீவர்கள் அனைவருடைய பசியைப் போக்கும் ஒர் அருள் ஞான ஆண் குழைந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்தார் .எனக்கா இனிமேலா குழைந்தையா ? என்னே இறைவன் சோதனை,என்னே இறைவன் கருணை என்று சிவனடியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.சில நொடிகளில் தன்னை மறந்தார் .

சிவனடியார் வீட்டை விட்டு வெளியே வந்தார் .,அவரைத் தொடர்ந்து சின்னம்மை வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரைக் காணவில்லை ,எப்படி மறைந்தார் என்பதே தெரியவில்லை.உள்ளே சென்று பூசை அறையில் உள்ள நடராசர் சிலைமுன் அமர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க,இறைவா என்ன சோதனை? கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மறைந்து விட்டாயே, என்று அழுது வேண்டிக் கொண்டார் .அந்நாள் தொட்டு சின்னம்மை வயிற்றில் கருவும் உருவும் வளர்ந்து பத்துத் திங்கள் பூர்த்தியானது.

வெளியில் சென்ற ராமய்யா மாலையில் வீடு வந்து சேர்ந்தார்,காலையில் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் தன கணவர் ராமையாவிடம் சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தன மனைவி சொல்லியதை கேள்வியுற்று நீ புண்ணியம் செய்தவள் ,ஆண்டவரைக் காணும் பாக்கியம் பெற்றவள்,உன்னை என்னுடைய மனைவியாக அடைந்ததற்கு நான் கொடுத்து வைத்தவன் என்று மனைவியை போற்றி புகழ்ந்தார் .  

1823 ,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் ,தமிழ் வருடம் சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 5,30,மணியளவில் சிவனடியார் சொல்லியது போலவே சின்னம்மைக்கு அருள் ஞானக் குழைந்தை அவதரித்தது..ஊரே வந்து பார்த்து மகிழ்ந்தனர், அந்த அருள் ஞான குழைந்தைக்கு பெற்றோர்களால் இராமலிங்கம் எனப் பெயரிடப்படனர்.

இராமலிங்கம் சின்னம்மைக்கும் இராமய்யாவுக்கும் பிறக்கவில்லை,சின்னம்மைக்கும்,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கும்.பிறந்த குழைந்தையாகும்.இதற்கு சம்பு பஷ்ம் என்பதாகும்..

சிருஷ்டி வகைப்ப்ற்றி பின்னாளில் வள்ளலார் சொல்லியது.பின் பார்ப்போம் ,

சிதம்பர தரிசனம் !

இராமய்யாவும் சின்னம்மையும் குழைந்தைகள் பிறந்தால் முதலில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம்.அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் திங்களில் இராமய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றார்கள்.சிதம்பரம் கோயிலை சுற்றி வந்து சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின் சிதரமபர இரகசிய தரிசனத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.இராமலிங்கம் தாயின் கையில் இருந்தார்.அப்பையா தீஷிதர் என்பவர் சிதம்பர ரகசியத்தின் திரையை விளக்க
இரகசியம் தரிசனமாயிற்று.

அனைவரும் தரிசித்தனர் கைக் குழைந்தையாகிய இராமலிங்கம் அந்த தரிசனத்தை கண் கொட்டாமல் பார்த்து கலகல வென சிரித்தது.அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியம் ஐந்து திங்கள் குழைந்தையாக இருந்த இராமலிங்கத்திற்கு வெட்டவெளியாகப் புலப்பட்டது.அந்த இளம் வயதிலே இகசியத்தை வெளிப்படையாக இறைவன் காட்டி அருளினார்.இவ்வாறு இராமலிங்கம் ஓராண்டு பருவத்தில் பூர்வஞான
சிதம்பரமாகிய தில்லையில் ஒரு திரை விளக்கி தாம் கண்ட அனுபவத்தை தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் அருள் விளக்கமாலை என்னும் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.

தாய் முதலோரோடு  சிறு பருவத்திற் தில்லைத்
தலத்திடையே திரை துக்கத் தரிசித்த போது
மேய் வகைமேற்  காட்டாதே என்தனக்கே யெல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் யுருவாம் பொருளே
காய்வகை  இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணிமன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

என்னும் பாடல் வாயிலாக உண்மையை அறியமுடிகிறது.

அப்பைய தீஷிதர் !

இராமலிங்கம் சிரிப்பதை கண்ணுற்ற தீஷிதர்,இராமய்யாவிடம் வந்து,நான் இந்த சிதம்பர தில்லை கோயிலில் பல ஆண்டுகளாக திரை தூக்கி தர்சனம் காட்டி வருகிறேன்.பல ஆயிரம் குழைந்தைகளை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.இன்று ஒரு அதிசயத்தைக் கண்ணுற்றேன்,இந்த குழைந்தை சிரித்ததையும் ,அதன் சிரிப்பு ஒளியும் இதுநாள் வரையில் நான் கண்டதும் இல்லை,கேட்டதும் இல்லை.உங்களுக்கு ஒரு விண்ணப்பம் இந்த குழைந்தையை எடுத்துக் கொண்டு தயவு செய்து என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்.அவர் விருப்பபடியே இராமய்யா மனைவி மக்களுடன் அவர் வீட்டிற்கு சென்றார் .

தீஷிதர் அவர் இல்லத்தில் அவர்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்து அமரச்செய்தார்.பின் கீழே விரிப்பை விரித்து குழைந்தையை வாங்கி விரிப்பில் படுக்க வைத்து,சாஷ்டாங்கமாக குழைந்தையின் காலில் விழுந்து வணங்கினார்.இது சாதாரண குழைந்தை அல்ல,ஒரு ஞானக் குழைந்தை இந்த குழைந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு நான் பலகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.என்று இராமய்யா சின்னம்மையைப் பார்த்து வணங்கி வழியனுப்பி வைத்தார் .

இமாலிங்கம் எட்டாவது மாதத்தில் இமாய்யா காலமானார்.சின்னம்மை தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, சென்னையை அடுத்த சின்னக்காவனம் எல்லையில் உள்ள, தம் தாய் வீடான பொன்னேரிக்குக் குடி பெயர்ந்தார்.மூதத பிள்ளையாகிய சபாபதி சாஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம் பயின்று புராணச் சொற்பொழி ஆற்றலில் வல்லவராகிக் குடும்பத்தை இலகுவாக நடத்தி வந்தார் .

ஓதாது உணர்தல் ;--

இமாலிங்கம் பள்ளிப் பருவம் எய்தியதும் தமையனார் தாம் பயின்ற சாஞ்ச்ச்புரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பினார் .இலையைப் இமாலிங்கரின் அறிவுத் தரத்தையும்,பக்குவ நிலையையும் கந்தக் கோட்டம் சென்று கவிபாடும் திறத்தையும் கண்டு மகாவித்துவான் ஆச்சரியமும்,அதிசயமும் கொண்டார்.இச்சிறுவன் இமாலிங்கம் சாதாரண பிள்ளை அல்ல.கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும்,முற்றும் தெரிந்த வல்லவன் போல் யாவும் தெரிந்தவனாக இருக்கிறான்,இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்து கற்பிப்பதை கைவிட்டார்.

இராமலிங்கம் எப்பள்ளியிலும் பயின்றதில்லை,எவ்வாசிரியிடத்தும் படித்ததில்லை,இவருக்கு எப்படி படிக்காமல்,கேட்காமல் அனைத்தும் அறிந்து கொள்ளும் ஞானம் வந்தது ?

அவர்தான் இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே ! ஆதலால் கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.இராமலிங்கப் பெருமானின் கல்வியும்,கேள்வியும் இறைவனிடத்தே பெற்றதே யொழியே வேறு எவரிடத்தும் ,எந்த ஆசிரியர் இடத்தும் பெற்றதன்று.இறைவன் இராமலிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார் என்பதுதான் உண்மை .

அவரே அதற்கு பதில் சொல்லுகிறார்.

குமாரப் பருவத்தில் என்னைக் கலவியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது அறிவிலே உள்ளத்திலே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடப்பகுதியான ''சத்திய விண்ணப்பம்' என்ற பகுதியில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .

அருட்பா பாடல்களில் ;--

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் யொளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகிற் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே !            

நாதா பொன்னம்பலத்தே அறிவானந்த நாடகஞ்செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணி கொண்டு எல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென் நினைக்கேன் இந்த நீணிலத்தே !

கற்றது மற்ற்அவ்வழி மாசூதது என்று எண்ணாத்
தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டு மின்றுங் காணார்
ஏற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே உட் கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே
பெரியதவம் பிருந்தன் என் பெர்ரி அதிசயமே !

ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை
எடுத்துவிடுத்து அறிவு சிறிதேய் ஏந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர
உணர்வில் இருந்தி அருள் உண்மை நிலைகாட்டித்
தீது நெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திரு அருண் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கம் எலாம்
போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே !

சாதிகுலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித்
தனித்த திரு அமுதளித்த தனித் தலைமைப் பொருளே
ஆதி நடுக்கடை காட்டா அண்ட பகிரண்டம்
ஆருயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச் செய் உறவே
ஜோதி மயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூய நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

பள்ளியில் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து ஓதாது உணர உணர்விலிருந்து உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீ தான் எனது அருள் தந்தை என்பதை அவரே விளக்குகிறார்.

மேலும் ;--ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்.

ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த
அப்பா என் அன்பே என் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம்
மிகப் பெரிய பருவம் என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச் செய்து இனிய மொழி மாலை
தொடுத்திடச் செய்து அணிந்து கொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்தரசே இன்றடியேன்
நிகழ்த்திய சொன் மாலையும் நீ நிகழ்த்தி அணிந்தருளே !

உருவத்திலே சிறியேனாகி யூகத்திலே ஒன்றும் இன்றித்
தெருவத்திலே சிறுகால் வீசி யாடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல்லறிவு அளித்தே உனைப் பாடச் செய்தாய்
அருவத்திலே உருவானாய் நின் தண்ணளி யார்க்குளதே !

பாடும் வகை அணுத்துணையும் பரிந்தரியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்து பாடும் வகை புரிந்து
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவநெறியில்
நிறுத்தினை இச்சிறியேனை நின் அருள் என் என்பேன்
கூடும்வகை உடையர் எல்லாம் குறிப்பை எதிர் பார்க்கின்றார்
குற்றம் எல்லாம் குணமாகக் கொண்ட குணக்குன்றே !

ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது
அழுது களித்து ஆடுகின்ற அப்பருவத்து எளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் கழிக்க உனைப்பாடி
விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ !

ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து
என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன்மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்தருள் எனையே !

வெம்மாலைச் சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்றடிகுறித்துப் பாடுவகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந்தவப் மெய்ப்பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நற்றுணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே
அம்மலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே !

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் அகச்சான்றுகளாகும் இராமலிங்கம் என்னும் வள்ளல்பெருமான் அவர்களை,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... சிறுவயதிலே ஆட்கொண்டார் என்பது நன்கு விளங்குகின்றன.வள்ளல்பெருமானின் ஆன்மாவில் இறைவன் அமர்ந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை சன்மார்க்க அன்பர்களும் மற்றும் உலகமக்கள் அனைவரும் அறிந்து,தெரிந்து  கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் .

கந்த கோட்டவழிபாடு !