சிற்சபை பொற்சபை ஞானசபை !
எங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.
*இந்து பாபா அவரகளுக்கு அநேககோடி வத்தனம் வணக்கம் வாழ்த்துக்கள்!*
*43 ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், ஈரோடு கதிர்வேல் ஆகிய அடியேன் சன்மார்க்கத்தில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன்.*
*அவ்வாறு உழைத்து வந்த எமக்கு, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு சன்மார்க்க சங்கங்களும்,நினைக்காத, கவனிக்காத, வழங்காத அரிய பெரிய சிறப்பு பட்டமுமான "சுத்த சன்மார்க்க சுடர்",என்கின்ற பட்டமும் மேலும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரபடுத்தி உள்ளீர்கள்,*
*09-09-2023 to 10-09-2023 ஆம் இரு நாட்கள் மலேசிய அருட்பேரொளி சமூகநல சமரசப் பேரவையின் சார்பாக,அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாட்டில்*
*மாநாட்டின் தலைவர் மற்றும் சிறப்புமிகு நர்வாகத் தலைவர் மாநாட்டின் கதாநாயகன் அருள்திரு இந்துபாபா அவர்களுக்கும்,அன்பு சகோதிரி திருமதி அருள்திரு வனிதா திருமலை நாயக்கன் அவர்களுக்கும்,அன்பு சகோதரர் அருள்திரு திருமலை நாயக்கன் அவர்களுக்கும் வாயார வாழ்த்த வார்த்தைகள் இல்லை,நன்றி நன்றி நன்றி மட்டுமே செலுத்த முடியும்.*
*நீங்களும் உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், அழியாப்புகழுடன்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பித்து கொள்கிறேன் தொடரட்டும் உங்கள் அருட்பணிகள்.*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *"சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
எத்தனை ஆயிரம் ஆண்டு
ஆனாலும் இந்த நோய்க்கு இது
தான் மருந்து; சித்தர்களின்
மருத்துவ பாடல் இதோ:
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!
*மலேசியாவில் மாநாடு !*
*200 வது ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாளை முன்னிட்டு*
*வருகின்ற 09-09-2023 to 10-09-2023 +ஆகிய இரண்டு நாட்கள் முதலாவது உலக அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாடு சிறப்புடன் நடைபெற உள்ளது*
இடம்...
*மலாயா பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபம் கோலாலம்பூர்,மலேசியா !*
*ஆனமநேய அன்புடைய "அருள்திரு இந்துபாபா" அவர்களின் பெருமுயற்சியாலும்,"அருள் திருமதி வனிதா மற்றும் திருமலைநாயக்கன்" அவர்களின் ஆதரவாலும்,மேலும் சன்மார்க்க அன்பர்களின் ஆலோசனைகளின்படி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.*
*பல நாடுகளில் இருந்தும், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், இசைக் கலைஞர்கள்,நடனக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்*
*தமிழ்நாட்டில் இருந்து சன்மார்க்க சான்றோர்கள் நிறையபேர் வருகை தருகிறார்கள்*
*இந்த மாபெரும் மாநாட்டில் ஈரோடு கதிர்வேல் ஆகிய நானும் கலந்துகொண்டு சன்மார்க்க சிறப்புரை ஆற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்*
அனைவரும் வருக!
ஆன்மலாபம் பெறுக! அருள்அமுதம் அருந்துக !
ஆதரவு தருக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எலரலாம் ஓங்குக !
இங்கனம்
ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896