கடவுளைக் கண்டேன்! பாகம் .13.
*கடவுளைக் கண்டேன் பாகம் 13 .*
நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்கிறது !..
*சினிமா உலகத்திற்கு சென்றது !*
*சுமார் 1979 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்,சினமாவில் நடிப்பதற்கு புதுமுக நடிகர் நடிகைகள் தேவை என்ற விளம்பரம் தினத்தந்தி பேப்பரில் வந்தது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி "வெங்கரை அம்மன் மூவீஸ்" சேலம் (ஒரு ஹோட்டல் லாட்ஜ்) என்று வந்திருந்தது.ஈரோட்டில் இருந்து நானும் எனது மனைவியின் தாய் மாமா கலையரசன் என்பவரும் சென்று இருந்தோம், (கலையரசன் என்பவர் ஈரோட்டில் சிறந்த நாடக நடிகர் ரமாபிரபு நடிகையுடன் நாடகத்தில் நடித்துள்ளார்.) ஆண்களும் பெண்களும் சுமார் 20 பேர் வந்திருந்தார்கள்,*
*டைரக்டர் துரை என்பவரும் மேனேஜர் வேலாயுதம், மற்றும் கேமரோமேன் மேக்கப்மேன் என ஒரு ஆறு நபர்கள் இருந்தார்கள்.எல்லோருக்கும் ஒரு அறையில் மேக்கப் டெஸ்ட நடந்தது பல கோணங்களில் போட்டோ எடுத்தார்கள்.அனைவருடைய முகவரிகளையும் பெற்றுக் கொண்டு, தபால் அனுப்புகிறோம் அப்போது நீங்கள் வந்தால் போதும் என்று அனுப்பி விட்டார்கள். அக்காலத்தில் செல்போன் கிடையாது, லேண்ட் லைன் போன் நெம்பரும் வாங்கிக் கொண்டார்கள்.*
*ஒருவாரம் கழித்து அதே சேலம் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள்.நானும் கலையரசனும் சென்று இருந்தோம்,வேறு ஒரு நான்கு நபர் வந்திருந்தார்கள்*
*பணம் கேட்டார்கள்!*
*நடிப்பதற்கு கண்டிப்பா வாய்ப்பு தருகிறோம் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் நீங்களும் பங்குதாரர்கள் ஆகிவிடுங்கள் படம் ரிலீஸ் ஆனதும் வருகின்ற லாபத்தை அனைவரும் சமமாக பிரித்து கொள்ளலாம் என்றார்கள், அப்போதெல்லாம் 20 லட்சம் ரூபாய் இருந்தால் பெரிய நடிகரை வைத்து நல்ல படம் எடுத்து விடலாம்*
*நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்கள் எல்லாம்,பணம் கேட்டதும் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னார்கள்,உங்களால் முடிந்த அளவு கொடுங்கள்,அதற்குத் தகுந்தாற்போல் நடிக்க வாய்ப்பு தருகிறோம் என்றார்கள். வந்தவர்கள் இவர்கள் ஏமாற்று பேர்வழிகளாக இருக்குமோ ! என்று நினைத்து எங்களிடம் பேசினார்கள். பிறகு யோசித்து சொல்கிறோம் என கூறிவிட்டு சென்று விட்டார்கள். நானும் எனது உறவினர் கலையரசனும் அவர்களுடை உண்மை நிலவரத்தை வெளிப்படையாக விசாரித்தோம்தயக்கத்தோடுஉண்மையைச் சொன்னார்கள்.*
*உண்மை அறிதல்!*
*துரை மற்றும் வேலாயுதம் என்பவர்கள் நாமக்கல் வேலூர் வட்டம் "வெங்கரை" என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்,கிராமங்கள் தோறும் நடக்கும் விழாக்களில் சேலத்தைச் சேர்ந்த சின்ன சின்ன நாடக நடிகைகளைக் கொண்டு நாடகம் நடத்தியும், நடித்தும்,கதை வசனம் எழுதி இயக்கி வந்ததையும் துரை அவர்கள் சொன்னார்.வேலாயுதம் என்பவர் M A.படித்தவர் வேலை எதுவும் இல்லாதவர். உள்ளூர் அன்பர்கள் தூண்டுதலாலும்,நாடகம் நடத்திய அனுபவத்தாலும், அவர்களுக்கு எப்படியோ சினிமா படம் எடுக்கும் ஆசை வந்துவிட்டது, "கிழக்கே போகும் ரயில்" சினிமா வெளிவந்த தருணம் அது. இயக்குனர் பாரதிராஜா அவர்கள் போல் கிராமங்களை மையமாக வைத்து படம் எடுத்து பேர் புகழோடு வந்துவிடலாம்என்ற பேராசை அவர்களை தொற்றிக் கொண்டது*
*பணவசதி எதுவும் கிடையாது, சினிமா எடுப்பதாக விளம்பரம் கொடுத்தால் எப்படியும் நடிக்க ஆசைப்பட்டு வசதி படைத்த பணக்கார இளைஞர்கள் பெண்கள் கிடைத்து விடுவார்கள்,மற்றும் சினிமா ஆசையில் பைனான்சியர்கள் கிடைத்து விடுவார்கள், அவர்கள் பணத்தை கொண்டு முதலில் கொஞ்சம் சினிமா படம் எடுத்து விட்டால், படம் பார்த்து பெரிய பைனான்சியர் கிடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன்,தினத்தந்தி இதழில் சினிமா விளம்பரம் கொடுத்தோம் என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்கள்*
*இதுவரை பணம் யாராவது கொடுத்துள்ளார்களா ? என்று கேட்டோம், இதுவரையில் யாரும் கொடுக்கவில்லை எங்கள் பணம் 25000 ஆயிரம் மட்டும் இதுவரை செலவாகி உள்ளது என்றார்கள். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றோம்*
*எங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் இணைந்து செயல்படுவோம் என்றார்கள்,யாரிடமும் பணம் இல்லாமல் எவ்வாறு சினிமா படம் எடுப்பது என்றோம். முயற்சி செய்வோம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒத்த கருத்தோடு செயல்பட துணிந்தோம்.*
*சிறந்த கதை தயார் செய்தோம்!*
*ஒவ்வொருவரும் ஒரு கதைச் சொன்னார்கள்,நான் சொல்லிய கதை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கதையின் தலைப்பு "கிழக்கே பொழுது வெளுத்தாச்சு" அக்கதையை சென்னை சென்று,சென்னை பிலிம் சேம்பரில் கலைஅரசன் என்பவர் பெயரில் பதிவு செய்தோம். மேலும் துரை என்பர் திரைப்பட இயக்குனர்,வேலாயுதம் MA என்பவர் தயாரிப்பு மற்றும் நிர்வாக அதிகாரி, எனக்கு சினிமாவின் கதாநாயகன் என பிரித்து வகுத்துக் கொண்டோம்.மேற்கொண்டு நான்கு பேரும் திரைப்பட தயாரிப்பாளர்கள் என ஏகமனதாக ஏற்றுக் கொண்டோம்.*
*எனக்கு சினிமா கதாநாயகன் என்ற பெருமையும் ஆர்வமும் என்னை பற்றிக் கொண்டது. அப்போது எனக்கு நல்ல இளமை நல்ல அழகு. சிவாஜி கணேசன் போல் ஸ்டெயில் என்று நண்பர்கள் சொல்வார்கள*
*மேலும் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பத்து கிராமங்களின் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வொரு பள்ளிகளிலும் நாடகங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கிது.*
*எங்கள் பள்ளியில் நடந்த "கடவுள் எங்கே?" என்ற நாடகத்தில் நான் கதாநாயனாக நடித்தேன், அதில் எனக்கு முதல் பாதி ஆணவம் உள்ள ராஜா வேடம், பிற்பாதியில் கண்கெட்ட குருடனாக திருந்திய ராஜா வேடம் போட்டு நடித்துள்ளேன், எங்கள் பள்ளிக்கு சிறந்த முற்போக்கு கருத்துள்ள நாடகம் என்றும், எமக்கு சிறந்த நடிகன் என்ற பரிசும் மாவட்ட அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது,அந்த சிறந்த கதைக்கு வசனம் எழுதி இயக்கியவர் "லூர்தமேரி" என்கின்ற தமிழ் ஆசிரியை அவர்கள்,இன்றுவரை மறக்கமுடியாத நினைவில் நிற்கும் அற்புதமான நாடகம் அது..*
*அதில் இருந்து எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை தொற்றிக் கொண்டதற்கு அந்த நாடகமே ஒரு காரணமாகும்*
*நம்மை படைத்து இயக்கும் கடவுள் நம்மை எங்கே அழைத்து செல்வார் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது!*
*நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை !*
*அடுத்து சென்னையில் சினிமா தயாரிப்பு அலுவலகம் திறப்பு !*
தொடரும்...
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணை !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
*9865939896*
1 கருத்துகள்:
https://youtu.be/bgVyPf30Zb8
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு