புதன், 4 ஆகஸ்ட், 2021

சரியை கிரியை யோகம் ஞானம் !

 *சரியை கிரியை யோகம் ஞானம் என்றால் என்ன*?


*வள்ளலார் பாடல்!*


*சரியைநிலை நான்கும்* *ஒரு கிரியைநிலை நான்கும்*

*தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்*


*உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்*

*ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்*


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்

பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 


என்னும் பாடலை தன் அருள் அனுபவத்தால் கண்டு அனுபவித்து *அனுபவமாலை என்னும் தலைப்பில்* பதிவு செய்கிறார்.


*ஆன்ம இன்ப லாபம் அடைவதற்கு ஆன்மீக அருளாளர்கள் காட்டிய படிகள் 16. அவை*


சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் வரிசையில் 

ஒவ்வொன்றிலும் நான்கு படிகள் உள்ளன.


சரியையில் சரியை

சரியையில் கிரியை

சரியையில் யோகம்

சரியையில் ஞானம்


கிரியையில் சரியை

கிரியையில் கிரியை

கிரியையில் யோகம்

கிரியையில் ஞானம்.


யோகத்தில் சரியை 

யோகத்தில் கிரியை

யோகத்தில் யோகம்

யோகத்தில் ஞானம்


ஞானத்தில் 

சரியை 

ஞானத்தில் கிரியை 

ஞானத்தில் யோகம்

ஞானத்தில் 

ஞானம்*


*என்னும் 16 படிகள் உள்ளன*


மேலே கண்ட 16 படிகளில் சென்று கடவுளைக்கண்டு அருளைப் பெறுவதற்கு நமக்கு காலம் நேரம் போதாது அதற்குள் மரணம் வந்துவிடும்.


எனவே வள்ளலார் *ஞானசரியை யில் இருந்து தொடங்கி* ஞானத்தில்

கிரியை ஞானத்தில்

யோகம் *ஞானத்தில் ஞானம் என்னும்  நான்காவது படியில் கடவுளைத் தொடர்பு கொண்டு  அருளைப் பெற்று மரணத்தை சுலபமாக வென்று விடலாம் எனபதை தெளிவாகச் சொல்லுகிறார்.* 


*அருளைப் பெறுவதற்கு நான்கு வகையான ஒழுக்கமே முக்கியமான வழியாகும்*


1. *ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கம்.*

2. *ஞானகிரியை என்பது கரண ஒழுக்கம்*.

3. *ஞானயோகம் என்பது ஜீவ ஒழுக்கம்*.

4. *ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்* 


*மேலே கண்ட நான்கு ஒழுக்களில் முதல் ஒழுக்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்*.

*அதாவது ஜீவர்களுக்கு (உயிர்களுக்கு) உண்டாகும் *பசி பிணி தாகம் இச்சை எளிமை பயம் கொலை* போன்ற துன்பங்களைப் *புறப்புறக் கருவிகளான *கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பைக் கொண்டு* 

*அத்துன்பங்களைப் போக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்*


*எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்*


இரண்டாவது ஒழுக்கம் கரண ஒழுக்கம். *மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளை* *வெளியில் செல்ல விடாமல் *கடவுள் விளங்கும் இயங்கும் இடமான ஆன்ம சிற்சபையில் இடைவிடாது மனதைச் செலுத்துவதே *சத்விசாரம்* *என்னும் கரண ஒழுக்கமாகும்*.


*இந்த இரண்டு ஒழுக்கங்களை முழுமையாக அதி தீவிர முயற்சியுடன் கடைபிடித்தால் ஜீவஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களும் தானே கைகூடும்.* *அதாவது கடவுள் போனஸாக அதாவது இலவச பரிசாக  வழங்குவார்.*  


நாம் முக்கியமாக தெரிந்து கொள்வது யாதெனில் ?  


*உலகில் பல ஞானிகள் பல கடவுள்களை பலப்பல உருவங்களில் பல இடங்களில் புறத்தில் ஜட தத்துவங்களைப் படைத்துள்ளார்கள்* *அதில் எந்தக் கடவுள் உண்மையான கடவுள். எந்தக்கடவுள் உயிர் உணர்வு உள்ளவர். பேசும்கடவுள்யார்? பேசாத கடவுள்யார் ? என்பது தெரியாமல் எல்லாக் கடவுள்களையும் வணங்குகிறார்கள் வழிபடுகிறார்கள்*  *ஆதலால் நாம் கடவுளை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாமல் அருளைப்பெற முடியாமல் மரணம் அடைந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்*.


*ஆன்மா உயிர் உடம்பு உள்ளவைகளையே கடவுள் விளங்கும் ஆலயமாக்க் கருதி உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடாகும்* 


*உண்மைக் கடவுள் ஒருவரே !  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதைக் கண்டுபிடித்து உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்* 


*அந்தக் கடவுள் மனித தேகத்தில் இயங்கும் இடம் உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே மூலையின் மத்தியில் உள் ஒளியாக இருந்து உயிரையும் உடம்பையும் இடைவிடாது இயக்கிக் கொண்டு இருப்பதே ஆன்மா என்னும் உள்ஒளியாகும்* 


*அந்த உள்ஒளியான ஆன்மாவானது வேறுபாடு இல்லாமல் உருவ பேதம் இல்லாமல் எல்லோருக்குள்ளும்  ஒரேத்தன்மை உடையதாக இருக்கின்றது* *ஆதலால் புறத்தில் கடவுளைத் தேடாமல் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே சத்விசாரம் என்னும் கரண ஒழுக்கமாகும்.*


*வள்ளலார்பாடல்*

*எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே*

*இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்*


கவ்வைபெறு *குருடர்கரி கண்டகதை போலே*

*கதைக்கின்றார்* *சாகாத கல்விநிலை அறியார்*


நவ்வி விழியாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்

*ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்*


செவ்வைபெறு *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

*சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே*.! 


மேலே கண்ட பாடலை ஊன்றி படித்து பொருள் உணர்ந்து தெரிந்து கொள்ளவும்.


உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக *ஞானசரியை*

*என்ற தலைப்பில் 28 பாடல்கள் ஆறாம் திருமுறை நூலில் எழுதி வைத்துள்ளார்*. 

அந்த பாடலில் கண்டுள்ளவாறு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.


*ஞானம் என்பது உயர்ந்த அறிவு உயர்ந்த அருள் என்பதாகும்.*


உயர்ந்த அறிவையும் உயர்ந்த அருளையும் பெறுவதே ஞானசரியை

ஞானகிரியை

ஞானயோகம்

ஞானத்தில் ஞானம் என்னும் ஒழுக்க நெறிகளாகும்


*அகம்என்பது ஆன்மா*.  *அகப்புறம் என்பது ஜீவன்.* *புறம்என்பது கரணங்கள்.* *புறப்புறம் என்பது இந்திரியங்கள்*.

*இவை நான்கும் சேர்ந்ததே உடம்பாகும்* 


*இவ் உடம்பையும் உயிரையும் அழிக்காமல்  ஆன்மாவுடன் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலப்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*


கடவுளுடன் கலப்பதற்கு அருள்தான் முக்கியமானதாகும் அருள் வழங்கும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதால் அவரையே தொடர்புகொண்டு அருளைப்பெறுவோம்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொள்ள இடைத்தரகர்கள் தேவை இல்லை. இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கம் மட்டுமே முக்கியமானதாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருவருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு