வியாழன், 29 ஜூலை, 2021

அறிவு இருந்தும் அருள் விளக்கம் இல்லை !

 *அறிவு இருந்தும் அருள் விளக்கம் இல்லை*


மனித தேகம் எடுத்த ஆன்மாக்களுக்கு மட்டுமே *அறிவு விளக்கமும் அருள் விளக்கமும்* கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது. 


*அறிவு விளக்கம் அருள் விளக்கம் இருந்தும் நாம் ஆன்மீக அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஞானிகள் போதகர்கள் ஆட்சியாளர்கள் சொல்வதைக் கேட்டு வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அதற்கு காரணம் என்ன ?* 


*வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம்.*!


ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும்.

இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பஞ்ச பூத தேகங்களே உரிமையாக இருக்கின்றன என்றும்.


*அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும்* என்றும்.


*ஆதலால் ஆன்மாக்களுக்கு உயிரும் உடம்பும் கொடுத்ததால் ஆன்மாக்களுக்கு ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்பட்டது.*


*ஆன்மாக்களுக்கு ஜீவதேகம் கொடுக்கபடாவிட்டால் அறிவும் அருளும் இருந்தும் மூடம் உண்டாகும் என்பதால் ஜீவதேகம் கொடுக்கப்பட்டது.*


*இங்குதான் நாம் கவனிக்க வேண்டியதில்லை அவசியம்* 


*பூதகாரிய ஜீவதேகம் எடுப்பதற்கு மாயை முதற்காரணமாக இருப்பதால் அந்த மாயையின்  விகற்ப ஜாலங்களால் ஆன்மாக்களுக்கு பசி தாகம் பிணி  இச்சை எளிமை பயம் கொலை போன்ற ஏழுவகையான அபாயங்களை அடிக்கடி தேகத்திற்கு கொடுக்கப்படுகின்றது*.


அவற்றை நீக்கிக் கொள்ளத்தக்க அறிவும் அருளும் அன்பும் ஆன்மாவிற்கு இருந்தும். *கரணேந்திரங்கள் சகாயங்களைக் கொண்டு*  தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டிய சுதந்தரம் ஆன்மாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.


*அந்த சுதந்தரத்தை பயன்படுத்திக் கொள்ளாமலும் கரணங்களை தன் வசமாக மாற்றி கொள்ள தவறியதாலும் மனம் போனபடி போவதற்கு அனுமதி வழங்கியதாலும்*

அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. *அதனால் ஆன்மலாபம் பெற முடியாமல் ஆன்மாக்கள் தங்களுக்கு கொடுத்த உடம்பை இழந்து இழந்து  உடம்பை மாற்றிக் கொண்டே உள்ளது.*


*பலவிதமான வழிமுறைகள்*


ஆன்மலாபம் பெற்று ஆன்ம இன்பத்தை அடைவதற்கு பலஞானிகள் பல அருளாளர்களும் பலவிதமான வழிமுறைகளைச்சொல்லியும் ஆன்மாக்கள் முழுமையான அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறமுடியாமல் தவித்துக் கொண்டே உள்ளது.ஆதலால் யார் யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள் என்கிறார் வள்ளலார்


*வள்ளலார் பாடல்*


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என் இனி நீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே


எண்டகு சிற் றம்பலத்தே எந்தை அருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!


மேலே கண்ட பாடலில் எளியதமிழில் புரியும்படி சொல்லி உள்ளார்.


*மாயையின் விகற்ப  ஜாலங்களாகிய பசி பிணி தாகம் இச்சை எளிமை பயம் கொலை போன்ற செய்கைகளைக் கொண்டே  ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் பெறவேண்டும்*.

அவைதான் சரியான நேர்வழி என்பதை வள்ளலார் அருள்பெற்று ஆன்மலாம் அடைந்து மரணத்தை வென்று மக்களுக்குச் சொல்லுகிறார்.


*முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் ஜீவகாருண்யத்தைக் கொண்டே ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டும்* ஆன்மநேய உறவு உடைய ஜீவன்களைக் காப்பாற்றினால் நம்முடைய  ஜீவனையும் உடம்பையும் வெளியேற்றாமல் அருளால் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை.


எனவேதான் *அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார் வள்ளலார்*.


கடவுளிடம் அருளைப் பெறுவதற்கு ஜீவர்களிடத்து ஜீவர்கள் உயிர் இரக்கமான பரோபகாரம் செய்வதே தயவு என்பதாகும். ஒவ்வொரு ஜீவர்களிடத்தும் தயவு செய்வதே கடவுள் சம்மதம் என்று சத்தியமாக அறியவேண்டும்.


*சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப்பெறுதலும்*. *சிறிய வெளிச்சத்தைக்கொண்டு பெரிய வெளிச்சம் உண்டாக்குவதுபோல்*.

*ஜீவதயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெறவேண்டும்*. 

*என்று தெளிவான விளக்கத்தோடு சொல்லுகின்றார்*.


*ஜீவகாருண்யம் இல்லாதபோது அறிவு விளக்கம் அருள் விளக்கம் தோன்றாது.அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது*.  


*மாயையின் மாயா ஜாலத்தை மாற்றுவதே ஜீவகாருண்யம்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு