ஆன்மாவின் குடும்பம்!
*ஆன்மாவின் குடும்பம்!*
ஆன்மாக்கள் பஞ்சபூத இவ்வுலகில் வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
*ஆன்மா தனித்து வாழ்வதற்கு இங்கு வாய்ப்பு இல்லை. தனித்து வாழ்வதற்கு இவ்வுலகில் வாடகை வீடு கிடைப்பதில்லை*
*எனவே ஒரு புதிய குடும்பத்தை ஆன்மா ஏற்படுத்திக் கொள்கிறது*
*குடும்பத்தின் விபரம் வருமாறு*!
வள்ளலார் குடும்ப கோரம் என்னும் தலைப்பில் சொல்லியதை சுருக்கமாக சொல்கிறோம்.
*ஆன்மாவிற்கு முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்த குழந்தை அஞ்ஞானம் என்னும் மூடப்பிள்ளை உயிர் என்னும் ஜீவன் என்பதாகும்* *அந்த ஜீவன் ஆன்மாவை விட்டு பிரிவதே இல்லை*.
*முதல் பிள்ளை மூடப்பிள்ள என்பதால் இரண்டாவது மனைவி கட்ட நேர்ந்தது*.
*ஆன்மாவிற்கு இரண்டாவது மனைவி மாயை என்பதாகும்*
*மாயையைக்கு பிறந்த குழந்தைகள்*
*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கு குழந்தைகள்* *நான்கு குழந்தைகளும் ஆன்மா மாயை சொல்லும் பேச்சை கேட்காத தருதலைகளாக இருந்தன.*
*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்குபேரும் கூட்டு களவாணிகள்*
ஆதலால் *மூன்றாவது மனைவியாக காமியம் என்னும் கன்மத்தைக் கட்டிக் கொண்டது*.
*கன்மத்திற்கு பிறந்த குழந்தைகள் மூன்று அவை*.
*வாதம் பித்தம் சிலேத்துமம் என்பதாகும்*.
*ஆன்மாவைத் சேர்த்து மொத்த குடும்ப உறுப்பினர்கள் 12 நபர்கள்*.
*12 நபர் வாழக்கூடிய வாடகை வீடுதான் மனிததேகம்* *இந்த 12 நபர்களுக்கும் உருவமற்ற அருஉருவம் என்னும் அணு உணர்ச்சி ஒளித்தன்மை உடையதாகும்..*
*மனித தேகத்திற்கு ஆறாறு முப்பத்தாறு முக்கிய தத்துவங்களால் ஆன உள் உறுப்புக்களைக் கொண்டு தாங்கி இயங்கிக் கொண்டு உள்ளது*
*வாடகை வீட்டிற்கு வசூல் செய்து கொடுக்கும் வாடகை வீட்டின் தலைவர்கள்தான் வாத பித்தம் சிலேத்துவம் என்பதாகும்* *வாடகை என்பதுதான் குடிக்கூலி என்னும் உணவு (பிண்டம்) என்பதாகும்*
*வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றும் வரையில் ஆன்மாவானது வேறு வேறு வாடகை வீட்டிற்கு தன் குடும்பத்துடன் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்*
*இதில் மாயை என்னும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கரணங்கள்*.
*புற உறுப்புகளான கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பு போன்ற உறுப்புக்களை தன் வசமாகமாற்றுக்கொண்டு இஷ்டம் போல் செயல்பட்டுக்கொண்டே உள்ளது*.
*மாயை கன்மம் என்னும் இரு மனைவிகளும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மா சொல்வதை கேட்காமல் தங்கள் விருப்பம்போல் செயல்படுவதால் சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியாமல் ஆன்மா வேறு வேறு வாடகை வீடாக மாற்றிக்கொண்டு தவியாய் தவிக்கிறது.*
*பக்குவம் உள்ள ஆன்மா* !
*அபக்குவம் உள்ள ஆன்மாக்களை மேலே கண்ட சிக்கலில் இருந்து மீட்க வந்தவர்தான் பக்குவம் உள்ள ஆன்மா என்னும் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று பெயர்பெற்ற பரசுத்தமான பக்குவ ஆன்மாவாகும்*
*ஆன்மாவின் குடும்பத்தின் உறுப்பினர்களான 12 நபர்களையும் வாடகை வீடான (ஜீவதேகம்) உடம்பையும் அழிக்காமல் அருளினால் மாற்றம் செய்து சொந்த வீடான ஆன்மதேகத்தில் வாழும் வழியைக் காட்ட வந்தவர்தான் ஆன்மஅருள் தேகம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வள்ளலார்*
நாமும் வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து. *ஜீவதேகமான வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி ஆன்மதேகம் என்னும் அருள்தேகத்தில் பேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வோம்*
மாயையும் என்னும் மனைவியையும் கன்மம் என்னும் மனைவியையும் அடக்கும் பாடல் !
*வள்ளலார் பாடல்!*
*பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை* *நீதான்*
*பெற்றவுடம் பிது* சாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன்*
*இனிநின்*
*உபகரிப்போர்* *அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்*
*அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது* *நீ*
*அறியாயோ* என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
*சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே*.!
மேலும்...
கன்மம் எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
*கங்குகரை காணாத கடல்போலே வினைகள்*
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
நடத்தினை நின் நடத்தைஎலாம் சிறிதும் நடவாது
என்முன் இருந் தனைஎனில் நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் *என்னையறி யாயோ*
*எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.*!
மேலே கண்ட பாடல்கள் போல் தத்துவவெற்றி என்னும் தலைப்பில் 20 பாடல்கள் ஆறாம் திருமுறையில் பதிவு செய்துள்ளார்.
படித்து உணர்ந்து தெளிவுபெற்று பயன் பெறவும்.
*ஆன்மாக்களின் வாழ்க்கை முறை குழப்பத்திற்கு அடிப்படைக் காரணம் சமயங்கள் மதங்கள் காட்டிய ஆன்மீக வாழ்க்கை வழிமுறைகளே என்று சொல்லி குடும்பகோரத்தை நிறைவு செய்கிறார்* !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு