வியாழன், 29 ஜூலை, 2021

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்!

 *துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்!*


*வள்ளலார் பாடல்!*


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்  *சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கம்* தலைப்பட்டேன்* - என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே *வான் நாட்டார்* *புகழ்கின்றார்*

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!


துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் என்கிறார் வள்ளலார். *துன்மார்க்கம் என்றால் எந்த மார்க்கம் ?* 


*உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கத்தை சார்ந்தது என்கிறார்*. 


அப்படியானால் *மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சாதி.சமயம் மதம்சார்ந்த  மார்க்கங்கள் எல்லாம் துன்மார்க்கங்களே* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற்று அங்கும் இங்கும்


போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை* *உணர்த்தி* எல்லாம்


*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ*

*என்பிள்ளை ஆதலாலே*

*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்த பரநாதாந்த வரை ஓங்கு

நீதிநட ராஜபதியே.!


உலகில் தோன்றிய சாதி சமய மதம் சார்ந்த நெறிகள் யாவும் *பேய்பிடித்த பைத்தியக்காரத்தனமாக* போருற்று (சண்டைப்போட்டு) *இறந்து வீண்போய் கொண்டுள்ளார்கள். *இன்னும் உயிர்கள் அழிந்து வீண்போகாதபடி காப்பாற்ற வேண்டும் என்பதே ஆண்டவரின் அவசரமான விருப்பம்*.


ஆதலால் *புனிதமுறும் சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து அம்மார்க்கத்தின் வழியாக *உண்மையான மெய்ப்பொருளை(கடவுளை)* மக்களுக்கு உணர்த்தி வெளிப்படையாக காட்டி உண்மை ஒழுக்க நெறிகளைப் பின்பற்றச் செய்து *மரணம் அடையாமல் காப்பாற்றி பேரின்ப சித்தி சுகநிலை அடைந்திட புரிந்திட செய்திட வேண்டும்*.


அதற்கு தகுதியான  *ஒரே நபர் நீ தான்* *என்பிள்ளை* ஆதலாலே *இவ்வேலை புரிக என்று ஆணை இட்டுள்ளேன்*.

மனத்தில் வேறு எதையும் நினைத்து மயங்கிட வேண்டாம்.பயம் கொள்ள வேண்டாம் என்று *மெய்ப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முழு சம்மதத்தோடு வள்ளல்பெருமானுக்கு அந்த உயர்ந்த  பொருப்பை அளிக்கிறார்* 


*துன்மார்க்கத்தை அழித்து சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிக்க இறைவனால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார்.*


மேலும்  சொல்லுகிறார்!


*பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்*  *ஓர்*

*பவநெறி* *இதுவரை பரவியது* அதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி *நீ*

*புன்னெறி* *தவிர்த்தொரு* *பொதுநெறி எனும்வான்*

*புத்தமு தருள்கின்ற* *சுத்தசன் மார்க்கத்*

*தன்னெறி* *செலுத்துக* என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே! 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகிறார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையைத் சிரமேற்கொண்டு வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1872 ஆம் ஆண்டு மாற்றம் செய்து வடலூரில் தோற்றுவிக்கிறார்*.


*மக்கள் சுத்த சன்மார்க்க சங்கத்தில்  உறுப்பினராகும் தகுதிகள் என்ன* ? என்பதை வள்ளலார் சொல்லுகிறார். 


*சுத்த சன்மார்க்க தகுதிகள்*


சுத்த சன்மார்க்கத்திற்கு *முக்கிய  தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் கை விட்டவர்களும் காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில்  ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும்.*

*கொலை புலை தவிர்த்தவர்களும்.மேலும் ஜீவதயவு உடையவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்*.


*இவர்கள்தான் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலியவைகளை தவிர்த்துக் கொள்வார்கள்*.


மேலும் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்* *முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்ககூடாது*.


*சமய மதங்களில் சொல்லிய காட்டிய பொய்யான பலப்பல தத்துவ தெய்வங்களை வணங்காமல் வழிபடாமல்*.

*வள்ளலார் காட்டிய உண்மைக்கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மைக் கடவுளை அறிந்து தெரிந்து உணர்ந்து புரிந்து வணங்கவும் வழிபடவும் வேண்டும்*.


*வள்ளலார் பாடல்!*


உருவராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்

*ஒருவரே உளார் கடவுள்* கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி

இருவராம் என்றும் மூவரே யாம் என்றும் இயலும் 

ஐவர்கள் என்றும்

எருவராய் உரைத் துழல்வதென் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ.! 


*ஒரு உடம்பில் ஒரே உயிர்தான் இருக்கமுடியும் இருக்கவேண்டும்*. *இரண்டு மூன்று ஐந்து உயிர்கள் இருக்கிறது என்றால் எவ்வாறு நம்ப முடியாதோ* ! அதேபோல் உலகத்தை இயக்குவது *ஒரேக் கடவுள்தான் உண்டு என்பதுதான் உண்மை* என்பதை மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவாகப் பதிவு செய்கிறார்.


*அந்த ஒரேக்கடவுளைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே* 


அந்தக் கடவுளுக்கு *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!*

என்று பெயர் சூட்டியவரும் வள்ளலார் ஒருவரே. 


*வானாட்டார் புகழ்கின்றார்*


*பஞ்ச பூதங்களில் கலந்தவர்களில் வானத்தில் கலந்தவர்கள் உயர்ந்தவர்கள்*


*வானாட்டார் என்பது மரணத்தை வென்று வானத்தில் (ஆகாயத்தில்) கலந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அருளாளர்கள்.* அதாவது *மாணிக்கவாசகர்* போன்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள்.. 


(கடவுளிடம் எவரும் சேரவில்லை கலக்கவில்லை.)


அவர்கள் துன்மார்க்கத்தை தொலைத்து சுத்த சன்மார்க்கத்தை நிறுவிய

வள்ளலாரைப் போற்றி புகழ்கின்றார்கள் என்கின்றார். 

*ஏன்என்றால்?  அவர்களுக்கு எது உண்மை மார்க்கம்  எது பொய்யான துன்மார்க்கம் என்பதை அறிந்தவர்கள்* மேலும் அவர்கள் பொது உணர்வுடன் வாழ்ந்து முக்தி சித்திப் பெற்றவர்கள் ஆவார்கள் அவர்கள் வள்ளலாரைப் போற்றுகிறார்கள். 


*இனி சுத்த சன்மார்க்கம் எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.*


*வள்ளலார் பாடல்!*


*பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே*

*சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே* - 


*சொன்மார்க்கத்*

*தெல்லா உலகும் இசைந்தனவே* *எம்பெருமான்*

*கொல்லா* *நெறிஅருளைக் கொண்டு*.!


*இறைவனால் படைத்த எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தாரால் மட்டுமே முடியும்.*


*சாதி சமய மதத்தை பின்பற்றிக் கொண்டு சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அருள்பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்*.


உலகினில்  உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை! (அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு