மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்று !
*மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்று !*
*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்*
*மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம்*
என்று வள்ளலார் அழுத்தமாக கண்டிப்பாக சொல்கிறார்.
கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதலும். மனைவி இறந்தால்
கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளுதலும்
மூட பழக்க வழக்கங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன.
ஒருஆணும் ஒரு பெண்ணும் இனைந்து வாழவேண்டும் எனபதையே திருமணபந்தம் என்பதாகும்.
குடும்பம் என்பதாகும். *அதற்கு அடையாளமாக ஆண் பெண்ணுக்கு கட்டுவதே மங்களகரமான மஞ்சள் கயிற்றால் ஆன தாலியாகும்*.
*ஏதோ ஒரு காரணத்தால் கணவன் இறந்தால்* *சிறிய வயதுடைய பெண்ணாக இருந்தாலும்* *மனைவி தாலி அறுக்க வேண்டும்*.
*பூ சூடக்கூடாது*.
*பொட்டு வைக்கக் கூடாது*. *கூந்தலை கலைத்துவிட வேண்டும்*
*வெள்ளை ஆடை உடுத்தி* *விதவைக் கோலத்தில்* *பெண்கள் காட்சி அளிக்கவேண்டும்.*
*என்ற கொடுமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டது*
மேலும் அந்தனர்களில் பெண் விதவைக்கோலம் மிகவும் கொடியது.
*மொட்டை அடித்து மொட்டைப்பாப்பாத்தி என்ற வழக்கம் அதிகமாக இருந்து வந்தது*
*சமுதாயத்தில் மதிப்பில்லை*
விதவைகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு இல்லை. *சமுதாயம் கணவன் இழந்த பெண்களை தள்ளி வைத்து வேடிக்கை பார்த்தது ஒதுக்கியது.*
வெளியில் செல்வோர் *விதவைப்பெண் எதிரில் வந்தால் *சகுனம் சரியில்லை என்றும் போகும் காரியம் தடைபடும் எனக்கருதி அந்தப் பெண்ணைத் திட்டிக்கொண்டே பயணத்தை நிறுத்தி விடுவார்கள். *வீட்டில் வெளியில் நடக்கும் எந்த நல்ல காரியத்திற்கும் விதவைப் பெண்களை முன் நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள்*.
கலந்து கொள்ளவும் வேண்டாம் கண் முன்னாடி வரவே வேண்டாம் என ஒதுக்கியே வைப்பார்கள்.
*அந்த மூட பழக்கவழக்கத்தை ஒழித்தவர் வள்ளலார்* கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்குதல் வேண்டாம் என்ற புரட்சியைக் கொண்டு வந்தவர் வள்ளலார்.
*ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நீதி வழங்க வேண்டும் என்றார்*
*வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தி*.
*ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைப்பாட்டை போதித்தார்*.
*ஆண்கள் பலதாரங்கள் செய்து கொள்ளலாம் என்பது தவறு*
மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.
முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்றாலும் வேறு ஒருபெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
இப்படி ஆண்கள் பலதாரங்கள் செய்து கொள்ளலாம் என்று சாதி சமய மதங்கள் ஆதரவு தந்து அனுமதி வழங்கி உள்ளன.
அதேபோல் கணவன் இறந்தால் மனைவி வேறு திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள். கேள்வி எழுகின்றது நியாயம் தானே. *ஆண்கள் தவறுசெய்தால் புண்ணியத்தில் சேர்ந்து விடுமாம் பெண்கள் தவறு செய்தால் பாவத்தில் சேர்ந்துவிடுமாம்*
*(கடவுள்களுக்கும் இரண்டு மூன்று மனைவிமார்கள் உண்டு)* *கடவுளுக்கும் திருமணம் செய்து வைக்கும் மேதாவிகள் இவ்வுலகில் உண்டு*.
இந்த *மூடநம்பிக்கையை குழித்தோண்டி புதைக்க வந்தவர்தான் வள்ளலார்*
*(வள்ளலாரே தந்தை இராமய்யாவின் ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தவராகும்)* தன் தந்தையின் உண்மை தெரிந்தும் யாராக இருந்தாலும் செய்தது தவறு தவறுதான் என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.
ஆணுக்கு ஒருநீதி பெண்ணுக்கு ஒருநீதி இருக்ககூடாது என்பதால்.
*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் என்றும்* *அதேபோல் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும்* அனைவருக்கும் சம உரிமையைக் கொண்டுவந்தவர் வள்ளலார்.
*ஒத்தாரும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் எவரும் ஒறுமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்றார்*
*கற்பு என்பதும் ஒழுக்கம் என்பதும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும் சமமானதாகும்*
சன்மார்க்கத்தில் ஒரேத் தாரம்தான் (ஒரேத்திருமணம்).
பல தாரத்திற்கு இடம் இல்லை என்பது வள்ளலார் கட்டளை அதுவே சன்மார்க்க கொள்கையின் பண்பாடாகும்.
*மேலும் வேறு ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.
கணவன் இறந்தாலும் மனைவி இறந்தாலும் யாரும் இவ்வுலகை விட்டு வெளியே போகமுடியாது.
*அருள் பெறுகின்றவரை யார் இறந்தாலும் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டே வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்* மீண்டும் வேறு ஒரு உருவத்தில் பிறந்து *கணவனும் மனைவியும்* சந்திக்கும் வாய்ப்புகளும் உண்டு.
*ஆதலால் இறந்தவிட்டார்*.
*பிரிந்துவிட்டார்* *காணாமல் போய்விட்டார்* *என்ற எண்ணத்தில்.*
*மனைவியும் தாலி வாங்கவேண்டாம் கணவனும் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டாம்*.
*வள்ளலார் சொல்லியவாறு மூடநம்பிக்கையை புறம்தள்ளி விட்டு இப்போது பெண்களின் விதவைக்கோலம் காணாமல் சமுதாயம் மாற்றம் அடைந்து வருகிறது*
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மான உரிமை வழங்க வேண்டும் என்ற சட்ட ரீதியான கொள்கை முடிவு வளர்ந்து கொண்டே வருகிறது.
*இதுவே வள்ளலார் கண்ட புதுமைப் பெண்களின் வளர்ச்சியாகும்* அதற்குமேலும் வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு