ஆண் பெண் உருவம் தோன்றும் விதம்!
*ஆண் பெண் உருவம் தோன்றும் விதம்.!*
*வள்ளலார் பாடல்!*
*விண்ணிடத்தே முதன் *முப்பூ* *விரியஅதில்* *ஒருபூ*
*விரிய* *அதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்*
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
கட்டவிழ வேறொரு பூ விட்ட *எழு பூவும்*
*பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்*
பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.!
*பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி!*(அகவல்)
*கரு உற்பத்தி*
ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் விதம் யாதெனில்?
*மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் பிரகிருதி ஆன்மா என்னும் ஏழும் கூடி சுக்கில சுரோணித சம்பந்த சேர்க்கையால் சப்த தாதுவாய் ஒன்று சேர்ந்து சிருஷ்டிக்குக் காரணமாயின* என்கிறார் வள்ளலார்.
ஆதலால் *ஆண்பாகம் சேராது பெண் உருவப்படாது*.
*பெண்பாகம் சேராது ஆண் உருவப்படாது*
நாம் உண்ணும் உணவை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய உறுப்புக்களுக்கு
(தத்துவங்களுக்கு) ஊட்டுகின்றது.மறுபடியும் இரண்டுமணி நேரத்திற்குள். மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறிக்கும் திரவத்தை *சுக்கிலமாக்கி*
( விந்துசக்தி) *இரண்டரை பாகமாக்கி கோசநுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும் பிரமந்திரத்தில் அரையும் சேர்த்து*.
மற்ற சக்தியைக் கொண்டு உடம்பில் அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புள் அழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளியேற்றுகிறது. *இவ்வாறு உட்ம்பின் செயல்பாடுகளை சொல்லி மாளாது* சுருக்கமாக சொல்லுகிறேன்..
*ஆணில் மூன்று பெண்ணில் நான்கு*
மேற்படி சுக்கிலத்தின் செயல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமானது.
ஆணின் சுக்கிலத்தில் மூன்றாவன.. *ஆகாசம்.பிரகிருதி ஆன்ம உணர்ச்சி* இவைகள் ஒருமித்துச் சுக்கிலமாகத் தடித்து கோசத்தடியில் செம்பரத்தம் பூவிதழ்போல் மூன்றும் ஒன்றாய் அடுக்கியது போல் இருக்கும்.
பெண்ணிடத்தில் நான்காவன.
*பிருதிவி(மண்)* *அப்பு(நீர்)* *தேயு(உஷ்ணம்)* *இயமான்ன்*
*(காற்று)* ஆக நான்கும் ஒருமித்தப் பல்லி முட்டைபோல் நான்கு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் பெண்ணின் யோனிக்குள் இருக்கும்.
*ஆணும் பெண்ணும் உணர்ச்சியுடன் உடல் உறவு கொள்ளும்போது ஆணிடத்தில் உள்ள ஆகாசம் பிரகிருதி ஆன்மா ஆகிய மூன்றும் பெண்ணின் சுரோணித பையில் சென்றுவிடும்*.
*பெண்ணிடம் உள்ள பிருதிவி அப்பு தேயு இயமானன் என்னும் நான்கும் உணர்ச்சியால் வெளிப்பட்டு மேலே சொல்லியுள்ள ஆணிடம் உள்ள மூன்றும் பெண்ணிடம் உள்ள நான்கும் ஆக ஏழு விதமான அணுக்களும் கூடி ஒருமித்துச் சுக்கிலம சுரோணித சம்பந்தப்பட்டு பெண்ணின் கருவறைக்குள் சென்று பிண்டமாகும்.*.
இதற்கு சப்த தாது என்று பெயர் அதாவது. *தோல்.
அஸ்தி.தசை.
மூளை.சுக்கிலம்.இரத்தம்.இரசம் ஆக ஏழும் சேர்ந்து உடம்பு உற்பத்தியாகிறது*.
நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.
*ஆன்மா என்னும் ஒளி ஆணின் சுக்கிலத்தில் வந்து தங்கி.பெண்ணின் சுரோணிதத்தில் கலக்கும் போது உயிர் என்னும் ஜீவன் ஏழுவித அணுக்களின் கூட்டுக் கலவையால் பெண்ணிடத்தின் கருவறையில் தோன்றுகிறது*.
*ஆன்மா என்னும் ஒளியும்* *உயிர் என்னும் ஜீவ ஒளியும்* சேர்ந்து இயங்குவதற்கும் இவ்வுலகில் வாழ்வதற்கும்.
அனுபவிப்பதற்கும் பஞ்சபூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்படுவதுதான்
உடம்பு என்னும் வீடாகும்*
பெண்ணின் கருவறையில் பயங்கர இருட்டுல் தான் ஏழுவிதமான அணுக்களைக்கொண்டு உடம்பு பின்னப்படுகிறது
*ஆண் பெண் புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும்.இடது புறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும் என்கிறார் வள்ளலார்*
கருவறையில் *ஐந்தமாதம் வரையில் குழவியாயிருக்கும்காலம் ஒன்று*. *அவயங்கள் உற்பத்திகாலம் ஒன்று*. *பிண்டம் வெளிப்படும் காலம் ஒன்று*. *குழந்தைப்பருவம் ஒன்று*. *பாலப்பருவம் ஒன்று*. *குமாரப்பருவம் ஒன்று*. *விருத்தப்பருவம் ஒன்று* *ஆக ஏழு பருவங்கள் உண்டு.*
*இவ்வாறே தாவரம் முதல் எல்லாப் பிறவிகளுக்கும் பொருந்தும்*
*சிருட்டி ஞாயம்* என்ற தலைப்பில் வள்ளலார் மிகத்தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.
சுருக்கமாக சொல்லியுள்ளேன்.
சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது?
மனிததேகம் எடுத்த பஞ்சபூத ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதே சுத்தசன்மார்க்கம் சொல்லித்தரும் ஆன்ம இன்ப லாபமாகும்.
நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஜீவ தேக அணுக்களை(அழிக்காமல்) கரைத்து பிரித்து வெளியேற்றிவிட்டு ஆன்மாவை அருள்தேகமாக மாற்றிக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் சொல்லித்தரும் சாகாக்கல்வி என்பதாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு