ஞாயிறு, 18 ஜூலை, 2021

மூட பழக்க வழக்கங்கள்!

 *மூட பழக்க வழக்கங்கள்!*


மக்கள் அளவுகடந்த மூட பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வருகின்றனர். *ஏன்? எதற்காக ? என்று தெரியாமலே செய்து வருகின்றனர். அவற்றை எல்லாம் *கண்மூடி வழக்கம்* என்கிறார் வள்ளலார்.


வள்ளலார் பாடல் !


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே


உலைவறும் இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர் *வன் மனங்கரைத்துத்* *திருவமுதம் அளித்தோய்*

*சித்தசிகா மணியேஎன் திருநடநாயகனே*.! 


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்கள் எல்லாம் மண்மூடிப்போக வேண்டும் என்று *வள்ளலார் கொடுக்கும் முதல் அடியும் கடைசி அடியும் மரண அடியாகும்*.


வள்ளலார் சொல்லி 147 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உண்மை அறியாமல் கண்ணை மூடிக் கொண்டுதான் பின்பற்றி வருகிறோம்.


 *உதாரணமாக காதுகுத்தல் மூக்கு குத்தல் வேண்டாம் என்கிறார்*.


குழந்தை பிறந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் மொட்டை அடித்து காது குத்தும் பழக்கம் வழக்கம் இன்றுவரை உள்ளது. ஆண்களுக்கு கடுக்கன் இடுதலும்.

பெண்களுக்கு தோடு முதலியன அணியும் பழக்கமும் உள்ளது.


அதேபோல் பெண்களுக்கு மூக்கு குத்தி மூக்குத்தி அணிவதும் பழக்கமாக உள்ளது.


ஆண் குழந்தைகளுக்கும் மூக்கு குத்தும் பழக்கம் இருந்தது. இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்து ஒருவர்பின் ஒருவர் இறந்துவிட்டால்.

மூன்றாவது ஆண் குழந்தைபிறந்தால் .இதுவாவது தங்கட்டும் என்று பெண்குழந்தைக்கு மூக்கு குத்துவதுபோல் ஆண் குழந்தைக்கும் மூக்குக் குத்தி மூக்கன் என்று பெயரிடும் பழக்க வழக்கமும் இருந்தது.

இப்போது நாளடைவில் அந்த பழக்கம் குறைந்துவிட்டது.


*காது குத்துவதையும்*.

*மூக்கு குத்துவதையும் வள்ளலார் கண்டிக்கிறார்*


*மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் கொடியேற்றி பேருபதேசம் செய்த தருணத்தில் வள்ளலார் சொல்லியது*  


இப்படியே காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் (ஆண்டவர்)  *ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் (ஆண்டவருக்கு) சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா* என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பட்சத்தில், 


காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலட்சியம் தோன்றினால், *நிராசை உண்டாம்*, ஆதலால், 


*சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில் மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம்* செய்கின்ற பலனாகிய *நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்* என்று சன்மார்க்கிகளுக்குத் தெளிவாக சொல்லுகின்றார்.


*மனித உடம்பை படைத்த இறைவன்*


 96 தத்துங்ங்களையும் (ஆறு ஆதாரங்களையும்) படைத்து அவைகளை  இயக்கும் *உயிரையும் ஆன்மாவையும்* அவை அவைகள் இயங்கும் இடத்தையும் படைத்து. *உள் உருப்புக்கள் வெளி உருப்புக்கள் யாவையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து அதனதன் வேலைகளை ஒழுங்காக செயல்படவும்     *மிகவும்* 

*அற்புதமாகவும் அதிசயமாகவும் பிரமிப்பை உண்டாக்கும் விதத்தில் எவராலும் செய்யமுடியாத வகையில் படைத்துள்ளார்*.


மேலும் *கண் காது மூக்கு வாய் சிறுநீர் துவாரம்.மலத்துவாரம் என்னும் ஒன்பது  துவாரங்களைப் படைத்த* இறைவனுக்கு.

*காதில் கடுக்கன் இடுதலும் மூக்கில் மூக்குத்தி போடவும் சம்மதம் இருந்து இருந்தால் அவரே காதிலும் மூக்கிலும் ஓட்டைப்போட்டு (துவாரம்) அனுப்பி இருக்க மாட்டாரா? என்பதை அறிவு கூர்ந்து சிந்தித்து விசாரம் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்*. 


*மக்களின் குணம்* 


நம் உடம்பில் விருப்பம் போல் துளையிட்டு *(அதாவது நல்ல சுவரில் ஆணி  அடிப்பது போல்)* காதிலும் மூக்கிலும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நகைகள் அணிவதற்காக ஓட்டைப்போடுவது ஆண்டவருக்கு சம்மதம் இல்லை என்கிறார். *ஆண்டவர் படைத்த உடம்பில் துவாரம் போடுவது அணிகலன்கள் அணிவது உடம்பை அழிப்பது இயற்கைக்கு மாறான செயலாகும் என்கிறார்*  


*இறந்தபோது நடக்கும் சம்பவங்கள்* 


*ஆசையாக காதிலும் மூக்கிலும் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் விரல்களிலும் தகுதிக்கு தகுந்தவாறு நகைகளை அணிந்து கொண்டீர்கள்*.


மரணம் வந்துவிடுகின்றது அவர்கள் ஆசையுடன் போட்டு இருந்த நகைகளை எல்லாம் கழட்டாமல்  அப்படியே போட்டு இருக்கட்டும்.

அவரே கொண்டு போகட்டும்  என்று விட்டு விடுகின்றீர்களா? ஒரு கிராம் கூட விடாமல் கழட்டி எடுத்துக் கொள்கிறீர்கள் *இது என்ன ஞாயம்* ? என்று சிந்திக்க வேண்டும். 


*செத்த பிணத்திடும் இருந்த ஆபரணங்களை  சாகும் பிணங்கள் பறித்துக்கொள்கிறது*


காது அறிந்து ஊசியும் கடைவழிக்கு வாராது காண். என்பதுபோல் *இறைவன் படைத்தை உடம்பையும் உயிரையும் ஆன்மாவையும் காப்பாற்றத் தெரியாமல் *கண்டதை எல்லாம் உடம்பின் மேல் பூசிக்கொண்டும் அணிந்து கொண்டும் அலைவது. சாதி சமய மதங்களின் ஆன்மீகத்தின் கலையுரைத்த கற்பனை செயல்களாகும்.*  


உண்மையை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து பற்று அற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு