செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அருள் ஒளியில் கலந்த வள்ளலார் !

அருள் ஒளியில் கலந்த வள்ளலார் !


அன்பார்ந்த ஆன்மநேய உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் என்றும் வந்தனம் .

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது வேறு ,மற்ற ஞானிகள் பெற்ற அருள் நிலை என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மைத் தெரியாமல் சமய, மதவாதிகள் உளறிக் கொண்டு உள்ளார்கள் .

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியில் கலந்து உள்ளவர் .

உலகில் தோன்றி வாழ்ந்த அருளாளர்கள் பஞ்ச பூதங்களான,நீர் ,நிலம்,அக்கினி ,காற்று,ஆகாயம் போன்ற பூதங்களில் கலந்து உள்ளார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைத்த பஞ்ச பூதங்களில் கலந்து உள்ளார்கள்,உண்மையான இறைவனுடன் கலந்து கொள்ளவில்லை.

வள்ளல்பெருமான் மட்டுமே உண்மை இறைவரான அருட்பெருஞ்ஜோதி ஒளியில் கலந்து ஐந்தொழில் வல்லபம் பெற்று ஐந்தொழில் செய்து கொண்டு இருப்பவராகும்.

கர்ம சித்தர்,யோக சித்தர்,என்பவர்கள்,இம்மை இன்பவாழுவு ,மறுமை இன்பவாழ்வு வாழ்ந்து பஞ்ச பூதங்களில் கலந்து உள்ளார்கள்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு  என்பதை எவரும் பெறவில்லை,அதன்படி எப்வரும் வாழவில்லை..

பேரின்ப சித்திப் பெரு வாழ்வு என்பது ,ஞான சித்திப் பெறுவது,ஞான சித்திப் பெற்றால் மட்டும் போதாது.இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மையான இறைவன் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட  ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் மட்டுமே.

ஏன் என்றால் எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தன்உயிர்போல் நேசித்தவர்..

வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடியவர்.

அதனால் இறைவன் அருளை முழுமையாக பெற்றவர்.

கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்....

இன்னும் உண்மையான கடவுள் யார் என்பதே தெரியாமல்..தத்துவங்களான உணர்வு இல்லாத மொம்மைகளை வைத்து கடவுள் என்று நினைத்துக் வழிபாடு செய்து கொண்டு வருகின்றார்கள்.

சமய மத வாதிகள் செய்த சூழ்ச்சியினால்,அவர்களும் அழிந்து  மக்களையும் அழித்து கொண்டுஉள்ளார்கள்.

வள்ளலார் மட்டுமே இறப்பு பிறப்பு இல்லாமல் வாழும் தகுதியைப் பெற்றவராகும்.

மற்ற ஞானிகள் அனைவருக்கும் மீண்டும் மனிதப் பிறப்பு உண்டு,அவர்கள் ஞான சித்திப் பெறவில்லை,

எவரும் ஞான தேகம் பெறவில்லை,ஞான தேகம் என்னும் ஒளிதேகம் பெற்றால் மட்டுமே மரணம் இல்லை,மீண்டும் பிறப்புஇல்லை. அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்...சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்.

உண்மைத் தெரியாமல் மற்ற ஞானிகளை ஒப்பிட்டு வள்ளலாரைப் பற்றி பேசுவது அறியாமையாகும்.முட்டால் தனமாகும்.

இறைவன் தேகம் ஞானதேகம்,இறைவன் தேகம் யார் பெருகின்றார்களோ அவர்கள் மட்டுமே இறைவனுடன் கலக்க முடியும்.

வள்ளலாரே சொல்லுகின்றார் !

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாகா வரம் எனைப்போல் பெற்றவரும்...

தேவா நின் பேரருளை என் போலப்  பெற்றவரும்

எவ்வுலகில் யார் ? உளர் நீ சற்றே அறை..

என்று இறைவன் இடமே கேட்கின்றார்...இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ?..

மேலும் வள்ளலார் மறைந்து விட்டார்,ஒளிந்து கொண்டார் என்பது எல்லாம் தவறான செய்தியாகும்.அறியாமையாகும்.

வள்ளலார் இறைவனுடன் கலந்து கொண்டார்.அதனால் வள்ளலார் இப்போது இந்தஉடம்பில் இருந்து எல்லா உடம்பிலும் எல்லா உயிரிலும்,எல்லா ஆன்மாக்களிலும்,கலந்து கொண்டு இருப்பேன்என்று தெளிவாக விளக்கமாக சொல்லி உள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வந்து என்னுடன் கலந்து கொண்டார் என்பதை அவரே விளக்கமாக தெளிவாக விளக்கி பாடலில் பதிவுசெய்துள்ளார்கள்.

என்சாமி எனது துரை என்னுயிர் நாயகனார்
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்கு உள்ளே எனது
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்.
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின் தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே.....

இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் ....

என்னும் பாடல் வாயிலாக இறைவனுடன் கலந்துகொண்டேன் என்கின்றார்..

இறைவன் இருக்கும் இடங்கள் எல்லாம் வள்ளலார் இருப்பார் என்பது பொருளாகும்.

வள்ளலார் பெற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வு மனிததேகம் பெற்ற அனைவரும் பெறலாம்,பெறமுடியும்.என்பதை சொல்லுவதுதான் வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை கடைபிடித்து முறையாக சரியாக முழுமையாக உண்மையை அறிந்து வாழ்ந்தால் மரணம்இல்லாப் பெருவாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு