புதன், 3 பிப்ரவரி, 2016

உடல் பிணியும் உயிர் பிணியும் போக்கும் மருந்து !

உடல் பிணியும் உயிர் பிணியும் போக்கும் மருந்து !ஒவ்வொரு மனிதருக்கும் உடல் பிணியும் ,உயிர் பிணியும் வந்து கொண்டே இருக்கின்றது..அதனால் பல துன்பங்களும் துயரங்களும்,அச்சமும், பயமும் வந்து,இறுதியில் மரணம் வந்துவிடுகின்றது.

நம்முடைய துன்பங்களை தீர்த்துக் கொள்ள கடவுளைத் தேடி பல ஆலய வழிபாடுகளும், செய்து கொண்டு வருகின்றோம்.

அதிலும் தீர்வு காண முடியவில்லை என்றால் தியானம்,யோகம், தவம் போன்ற காரியங்களில் ஈடு படுகின்றோம். அதிலும் தீர்வுகாண முடியவில்லை என்றால் பல மந்திரங்களை சொல்லியும், சிலமந்திரங்களை பதிவு செய்து வீட்டில் வைத்து ஒலியை கேட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

இதனால் நம்முடைய உடல்பிணியும் ,உயிர்ப் பிணியும் தீர்ந்து ஒழிந்து விடுகின்றதா ? என்றால் தீந்தபாடும் இல்லை ஒழிந்த பாடும் இல்லை.
காரணம் என்ன?

நாம் உண்மைதெரியாமல் எதைச் செய்தாலும்,அதனால் எந்த பயன் இல்லை..உண்மைத் தெரிந்து எதையும் செய்ய வேண்டும்.
வள்ளல்பெருமான் நமக்கு உண்மையான வழிப்பாட்டு முறையும்,உண்மையான மந்திரமும் சொல்லி வழிக் காட்டி உள்ளார்..

மந்தரங் களிலே உயர்ந்த உண்மையான மந்திரம் ;--

நாம்எப்போதும்
''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ''

என்னும் உண்மையான மந்திரத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே இருந்தால்,அதுவே நல்ல மருந்தாக, நம்முடைய உயிர்பிணி,உடல்பிணி எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்து விடும்..

அருட்பெருஞ்ஜோதி அகவலில் மிகத் தெளிவாக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார்..

உடற் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட் சிவ மருந்தே .....

சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம்
தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே....

மரணப் பெரும் பிணி வாரா வகை மிகு
காரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே....

நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும்
உரை தரு பெருஞ் சீர் உடைய நன்மருந்தே....

என்று தெளிவாக விளக்கி வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
நம்முடைய உடம்பில் உள்ள ஆன்மாவில் அருள் மருந்து என்னும் ஞான மருந்துஉள்ளது.அந்த மருந்து எல்லா துன்பங்களையும் தீர்க்கும் மருந்தாகும்.ஆகவே ஆன்மாவைத் திறக்கும் மந்திரம்தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் மகா மந்திரமாகும்.

மேலும் வழிபாடு விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக வழிபாடு செய்ய வேண்டும் என்கின்றார்.

நாம் உணர்வு இல்லாத ஜடப் பொருள்களாகிய ,பொம்மைத் தெய்வங்களைத் தேடி ஆலய வழிபாடு செய்து கொண்டு வருகின்றோம். அதனால் எந்த பயனும் இல்லை...என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் ஒரு ஜோதியை ஏற்றி வைத்து, அதன்முன் அமர்ந்து ஜோதியை இடைவிடாமல் கண்களில் பார்த்துக் கொண்டு ''மகா மந்திரமான ..அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பருங்கருணை அருட்பெருஞ்ஜோதி'' என்னும் மகா உயர்ந்த மந்தரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்..

அதுதான் உங்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உள்ள இருளைப்போக்கி ஒளியைத் தருவதாகும்.

உங்களின் உயிர்ப்பிணி, உடல்பிணி அனைத்தும் தொலைந்து அழிந்து மறைந்து போய்விடும்...உங்களின் குடும்பம் குறைவு இல்லாமல் நிறைவான மகிழ்ச்சியுடன் இருக்கும்...

மேலே கண்டபடி செய்து வாருங்கள்,பின் அதன் உண்மை என்னதென்று உங்களுக்கே தெரியும்..

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித்தரப்படும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

உங்களின் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896,,,,,04242401402,....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு