செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பொம்மைக் கடவுளை வழிபடாமல் உண்மைக் கடவுளை வழிபாடு செய்யுங்கள் !

பொம்மைக் கடவுளை வழிபடாமல் உண்மைக் கடவுளை வழிபாடு செய்யுங்கள் !


உலகில் உள்ள  கடவுள்கள் யாவும் பொம்மைக் கடவுள்கள்.உணர்வு ,உணர்ச்சி ,ஆற்றல்,ஒளி ,சக்தி,இல்லாத கடவுள்கள்.

அவற்றை வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை, எல்லாமே ஜடப் பொருள்கள்,

அந்த ஜடப் பொருள்கள், உங்கள் விண்ணப்பங் களையும்,வேண்டுதல் களையும்,ஏற்று நண்மைகள செய்ய முடியாது.

எல்லாமே பொய்யான  கற்பனை கதைகளில் வரும் கதா பாத்திரங்கள்.அதாவது தத்துவங்கள்.தத்துவங்கள் என்பது கருவிகள்..கருவிகள் நமக்கு நன்மையை செய்யாது.

எனவே உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளியாகும்..அவற்றை வழிப்பட்டால் எல்லா நன்மையையும் உண்டாகும்.

இருளைப் போக்குவது ஒளியாகும்.அதேபோல் நம்முடைய அக இருளைப் போக்குவது ஆன்ம ஒளியாகும்...ஆன்ம ஒளியை புறத்தில் ஒளியாக வைத்துள்ளார் நம்முடைய அருள்வள்ளல் அருட்பிரகாச வள்ளலார்....

தினமும் உங்கள்  வீட்டில் ஒளியை வைத்து வழிபாடு செய்யுங்கள்.உங்களின் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.உங்களைப் பிடித்துக் கொண்டு இருந்த துன்பம் என்னும் இருளைப் போக்கி எல்லா நன்மைகளும் கிடைக்கும்..

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல்!

எய்வகை சார் மதங்களிலே பொய்வகை சாத்திரங்கள்

எடுத்து உரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றுஎன்று அறியீர்

கரிபிடித்துக் கலகம் இட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர்

அழி உடம்பை அழியாமை யாக்கும் வகை அறியீர்

உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே !

என்றுதெளிவாக பதிவு செய்து உள்ளார்...

பொய்யான மதங்களில் பொய்யான சாத்திரங்களை சொல்லி பொய்யான தெய்வங்களை படைத்து,மக்களை அறியாமையில் தள்ளி விட்டார்கள்.

குருடன் யானையைக் கண்ட கதைப்போல் கற்பனை தெய்வங்களைப் மக்களுக்கு அறிமுகப் படுத்தி மக்களை அலைய விட்டு விட்டார்கள்.மக்கள் கோவில் கோவிலாக அலைந்து கொண்டு, நேரத்தையும் பொருள்களையும் அழித்துக் கொண்டு உள்ளார்கள்.

ஒரே தெய்வம் என்ற உண்மையை மறைத்து பல கடவுள்கள் உள்ளதுபோல் கல்லையும் மண்ணையும்,வைத்து ஆலயங்களைக் கட்டி,பொய்யான,சடப் பொருள்களை உருவங்ளாக வைத்து கடவுள் என்று பல பெயர்களை வைத்து,மக்களை முட்டாள்களாக மாற்றிவிட்டார்கள்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மையை மக்களுக்கு போதித்து உண்மையான வழியைக் காட்டி,புறத்தில் ஒளியை கடவுளாக வைத்துள்ளார் வள்ளலார்.

அந்த ஒளிதான் உங்கள் உயிரையும்,உடம்பையும், குடும்பத்தையும் காப்பாற்றும்.அதுவே இருளைப் போக்கும் ஒளியாகும் என்பதை உணர்ந்து ஒளியை வைத்து வணங்குங்கள், வழிபாடு செய்யுங்கள்.எல்லா நன்மையையும் உங்கள் இல்லம் தேடிவரும்.

மேலும் ஒரு பாடல் !

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல  செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திரு அருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி இன்பம் தந்தீரே !

தெய்வங்கள் பல உண்டு என்று நினைத்து சொல்லும் சமய வாதிகளுக்கும் ,மத வாதிகளுக்கும் பொய்யான கலையை உருவாக்கிய வர்களுக்கும்,அவற்றைப் பின் பற்று வோருக்கும் அறிவு என்பதே இல்லை என்றும்.

எனக்குக் கொடுத்த அறிவை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்,அறியாத மக்களை காப்பாற்ற வேண்டும் என்று, இறைவன் இடம், மக்களுக்காக வேண்டுகின்றார்.

நமது அருள்வள்ளல் வள்ளலாரின் கருணையை எப்படிப் போற்றுவது ,பாராட்டுவது,வணங்குவது,அவருக்கு நிகர் அவரே !

எனவே பொம்மைக் கடவுளை விட்டுவிட்டு உண்மைக் கடவுளான ஒளியை வணங்குங்கள் வழிபடுங்கள்,எல்லா நன்மைகளும் உங்களைத் தேடிவரும்....

அன்புடன் ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896,..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு