புதன், 2 செப்டம்பர், 2015

ஒரு மனிதன் நல்லவரா ? கெட்டவரா ?

ஒரு மனிதன் நல்லவரா ? கெட்டவரா ?

ஒருமனிதன் நல்லவரா ? கெட்டவரா ? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அவருடைய மரணம் தான் முடிவு செய்கின்றது.

எவ்வளவு பட்டம் பதவி,புகழ் இருந்தாலும் அவர்களுக்கு  மரணம் வருவதற்கு முன்  .நோய் இல்லாமல் ,மருத்துவமனையில் படுத்த படுக்கை இல்லாமல், சிகிச்சை இல்லாமல்,மருந்து உட்கொள்ளாமல்  உடலுக்கும் உயிருக்கும் துன்பம் இல்லாமல் மரண வேதனை இல்லாமல் உயிர் போக வேண்டும்.

மனித சமுதாயத்திற்கு நல்லதை செய்பவர்களுக்கு விகாரமான துர் மரணம் வரவே வராது.

அப்படி சென்றவர்கள்  தான் உயர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று இயற்கையால் போற்றப் படுவார்கள் .

மரணம் இல்லாமல் வாழ்பவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள்.அவர்கள் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிப்பவர்கள்.அவர்களுக்கு இறைவன் மரணத்தைக் கொடுக்க மாட்டார்.

அந்த வரிசையில் உயர்ந்து நிற்பவர் தான் திரு அருட் பிரகாச வள்ளலார் .அவருக்கு இயற்கையாலும் செயற்கையாலும் மரணம் கிடையாது.

அவர் என்றும் மறைமுகமாக மக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்து கொண்டே இருப்பார்.

அவரது கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் செயல்களுக்கும்,என்றும் அழிவு கிடையாது நிலைத்து நிற்கும். அதுவே இறைவன் கொடுத்த நல் வரவாகும்.

மக்களுக்கும் உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல் வாழ்ந்தால் மகிழ்ச்சியுடன் இன்பமுடன் வாழலாம் .

அவர்களது மரணம் நீட்டிக்கப்படும்,துர்மரணம் எக்காலத்தும் வரவே வராது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு