புதன், 2 செப்டம்பர், 2015

எது பிடிக்கும் !

எது பிடிக்கும் !

என்னைப் பிடித்தால் என்னுடைய கருத்தும் பிடிக்கும்.!

என்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னுடைய கருத்தும் பிடிக்காது.!

அகம் சுத்தமாக இருந்தால், அனைத்தும் சுத்தமாக இருக்கும்.!

அகம் கருத்து இருந்தால் அனைத்தும் கருத்துத் தான் இருக்கும்.!

எண்ணங்கள் எப்போதும்  நல்லதையே நினைக்க வேண்டும் !

நல்ல எண்ணங்களே நல்ல மருந்தாகும் !

தீய எண்ணங்கள் தீராத துன்பங்களைத் தரும்.!

அன்புள்ள செயல் அனைத்தும் அரும் பெரும் செயலாகும் !

அன்பு இல்லாத செயல் அனைத்தும் விரயம் ஆக்கி விடும்.!

பிறர் துன்பத்தைப் போக்கும் செயல், நம்மை தூய்மைப் படுத்தி விடும் !.

பிறரை இன்பம் அடையச் செய்தால்  நாம் இன்பம் அடைவோம்,!

புன்னகையோடு வாழ்ந்தால் பொன் நகைத் தேடி வரும்.!

அச்சத்தை தவிர்த்தால் இச்சை விலகி விடும்.!

எதிரிகள் இல்லாத வாழ்க்கை இன்பமான வாழ்க்கை !

உயிர்க் கொலை செய்தால் உன் உயிர் போய் விடும்.!

தன்னுடைய அறிவே தனக்குத் துணையாகும்.!

மனதை அடக்கினால் மடமை நீங்கி விடும். !

புத்தி விரிந்தால் பூமியும் விரியும் !

சித்தம் விரிந்தால் சத்தம் அடங்கி விடும்.!

அகங்காரம் அடங்கினால் அனைத்தும் அடங்கிவிடும் !

தயவு உள்ள இடத்தில் தர்மம் நிலைக்கும் !

கருணை உள்ள இடத்தில் கடவுள் வருவார் !

கடவுள் உள்ள இடத்தில் கர்மங்கள் நடைபெறாது.!

அருள் பெரும் நிலையே அனைத்தும் பெரும் நிலை !

அருள் பெற்ற ஆன்மாவுக்கு அழிவு என்பதே இல்லை !

அருளே மருந்து அதுவே மரணத்தை நீக்கும் !

நல்லதை நினைப்போம் நலம் பெற வாழ்வோம்.!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு