புதன், 2 செப்டம்பர், 2015

படித்ததும் ,படிக்காததும் !

படித்ததும் ,படிக்காததும் !

ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் ,அவரவர்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள்.

காதல் ஆகட்டும்,கட்டுரைகள் ஆகட்டும்,கவிதைகள் ஆகட்டும்.கதைகள் ஆகட்டும்,அறிவியல் விஞ்ஞானம் ஆகட்டும்,வேறு எதுவாக இருந்தாலும்,அவர்களின் எண்ணங்களை,உணர்வுகளை,பேச்சு மூலமாகவோ .எழுத்து மூலமாகவோ,கருவிகள் மூலமாகவோ  வெளியிடவும், தெரியப் படுத்தவும் விரும்புகிறார்கள்.

அதே நேரத்தில் அவர்களுடைய கருத்துக்களை அதிகமாக மக்கள் விரும்பினால் மகிழ்ச்சி அடைகின்றார்கள்,விம்பவில்லை என்றால் சோர்வும் மனக் குழப்பமும் அடைகின்றார்கள் .

காரணம் என்ன ?

நாம் மக்களுக்கு தெரிவிப்பது எதுவாக இருந்தாலும் ,அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லாததை ,சொல்லியதை மக்களுக்குத் தெளிவுபட சொல்ல வேண்டும்.எழுத வேண்டும். இல்லையேல் பயன் தராது

நாம், ஞானிகள் அருளாளர்கள் ,அறிவியல் ,விஞ்ஞானிகள் மற்றும் யாராக இருந்தாலும் மற்றவர்கள் எழுதியதை ,கண்டு பிடித்ததை அறிந்து படித்து அதைத்தான் மக்களுக்குத் தெரியப்படுத்தி  வருகின்றோம்,

இந்த உலகில் உள்ளது இல்லாதததை  எவராலும் கண்டு பிடிக்கவே முடியாது .படிக்கவே முடியாது எழுதவே முடியாது,ஏன்பேசவே முடியாது.ஏன் என்றால் எல்லாமே இங்கு இந்த உலகத்தில்உள்ளதுதான்.

அதனால் யார் எழுதினாலும்,பேசினாலும்,கண்டு பிடித்தாலும் நாம் வியப்பு அடைய வேண்டியது இல்லை.

எல்லாமே ;--உரு வடிவம்,,  வரி வடிவம்,  ஒலி வடிவம்,  .. ஒளி வடிவம் .அளி அவ்டிவம் என்ற ஐந்து  வடிவத்துக்குள் எல்லாம் அடங்கி விடுகின்றது..

கடவுள் !

இந்த உலகமும்,,உலகில் உள்ள உயிர் களையும்,..கிரகங் களையும்,..பொருள் களையும், தத்துவங் களையும்,..தத்துவி களையும்,..எல்லா செயல் களையும்,..எல்லா இச்சை களையும்,..எல்லா பயன் களையும்,...எல்லா அனுபவங் களையும்,...எல்லா ஞானங் களையும்,

உலகில் உள்ள மற்றை எல்லா வற்றையும் படைத்து ..காத்து,..அழித்து,..பக்கும் வரவைத்து,..விளக்கஞ் செய்வித்து செய்கின்ற ஐந்தொழில் செய்கின்றவர் யார் ?

கண்களுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டு இருப்பவருக்குத் தான் கவுள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இன்று வரையில் அந்த உண்மையானக் கடவுள் யார் ? என்பதை கண்டு பிடிக்க எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.அவர் எங்கு இருந்து செயல் படுகின்றார் என்பதையும்.தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த அதிசய அற்புதமான பெரிய பேர் உண்மையைக் கண்டு பிடித்தவர்தான் ''திரு அருட்பிரகாச வள்ளலார் '' என்பவராகும்.

அவர் ஒரவர் தான் இதுவரையில் எவரும் கண்டு பிடிக்க முடியாத  ,சொல்ல முடியாத ,எழுத்தால் எழுத முடியாத,எவராலும் பார்க்க முடியாத  உண்மையைக் கண்டு பிடித்தவராகும்.

அவர் கண்டுபிடித்த உண்மையானக் கடவுள்தான் ''அருட்பெருஞ்ஜோதி '' என்னும் உண்மைக் கடவுளாகும்.

அவர் மனித உருவமாகவோ,வேறு தத்துவ உருவமாகவோ,இல்லை.''அருள் பெரிய ஒளி'' உருவமாக உள்ளவராகும்.

அந்த அருட்பெருஞ்ஜோதிதான் அனைத்தையும்,இயக்கிக் இயங்க வைத்து கொண்டு உள்ளதாகும்.

நான் வள்ளலார் கொள்கைகளை பின் பற்றுவதின் நோக்கமே அந்த உண்மையை அறிந்து கொண்டதால் தான்.. அந்த உண்மை தான்.அவர் மீது எனக்கு பற்று வந்ததின் நோக்கமே, அந்த அனுபவமே ...அதுதான்.உண்மை

சாதி,,சமயம்,மதம்,போன்ற பற்றுகள் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு மார்க்கத்தை கொடுத்தவர்தான் வள்ளல்பெருமான் என்பவராகும்.

அவர் தோற்றுவித்த பொது மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற மார்க்கமாகும்.இது தனி மார்க்கமாகும்.இந்த தனித்த மார்க்கம் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகும்.

மனிதர்களாகிய நாம், ஒரு பொதுவான உண்மையை தெரிந்து கொண்டு ,துன்பம்,துயரம்,அச்சம்,பயம் போன்ற துன்பங்கள்  இல்லாமல் ,மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து உண்மை அறிந்து ஒழுக்கமுடன் வாழ்ந்து நற்பயன் பெற வேண்டுமாய் அன்புடன் ஆன்மநேய உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு