வியாழன், 9 ஜூலை, 2015

நான் சந்தித்த மாயை !

நான் சந்தித்த மாயை !
ஆளைப் பார்த்தால் அழகில்லை
பேசிப் பார்த்தால் பொங்கும் அழகு .
அன்பிலே அவர்தம் உள்ளம்
அடங்கியது என் இல்லத்தில்.
தொட்டால்தான் சூடு ஏறும் அவர்
தொடாமலே ஏறியது அறிவு சூடு
அணைத்தால் தான் இன்பம் .அவர்
அணைக்காமல் வந்தது பேரின்பம்.
அழகை நேசித்தால் பயன் இல்லை
அன்பை நேசித்தால் பயன் உண்டு .
புற அழகை பார்க்காமல்
அக அழகைப் பார்த்தேன் .
தெளிவு இல்லாமல் இருந்தேன்
தெளிவுப் பெற்று சென்றேன்.
நினைவுகள் எல்லாம் கனவுகளாக மாறியது
கட்டுக்கு அடங்காமல் கனவிலே மிதந்தேன்.
தேடியது எல்லாம் பொய்யானது
தேடாமல் வந்தது மெய்யானது .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு