வியாழன், 9 ஜூலை, 2015

தெரிந்ததும் ,தெரியாதததும் !

தெரிந்ததும் ,தெரியாதததும் !

நானோ படிக்காதவன்
படித்தவரிடம் சேராதவன்

கட்டுரைகள் தெரியாது
கவிதைகள் புரியாது.

இலக்கணமும் தெரியாது
இலக்கியமும் புரியாது

காவியமும் தெரியாது
காப்பியமும் புரியாது

வரலாறு தெரியாது
வாழ்வியலும் புரியாது

சரித்தரமும் தெரியாது
சமூகமும் புரியாது

ஆட்சியும் தெரியாது
அதிகாரமும் புரியாது.

சாதியும் தெரியாது
சமய மதமும் புரியாது.

சாத்திரமும் தெரியாது
கோத்திரமும் புரியாது .

இயற்கையும் தெரியாது
செயற்கையும் புரியாது

ஆத்திகமும் தெரியாது
நாத்திகமும்  புரியாது

சித்தர்களும் தெரியாது
முத்தர்களும் புரியாது

கடவுளும் தெரியாது
மாயையும் புரியாது

உயிர்களும் தெரியாது
உட்பொருளும் புரியாது

ஆன்மாவும் தெரியாது
ஆண்டவரும் புரியாது

நல்லதும் தெரியாது
கெட்டதும் புரியாது.

பொருளும் தெரியாது
அருளும் புரியாது .

தீ வினையும் தெரியாது
நல் வினையும் புரியாது..

பாவமும் தெரியாது
புண்ணியமும் தெரியாது.

எனக்கு தெரிந்தது எல்லாம்
அன்பு,தயவு,கருணை.

நேர்மை,உண்மை சத்தியம்,
ஒழுக்கம்,ஜீவ காருண்யம் ,

கொல்லாமை, புலால் உண்ணாமை .
உயிர்களின் பசியைப் போக்குவது .

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமை

இதைவிட வேறு ஒன்றும்
தெரியாது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு