வியாழன், 23 ஏப்ரல், 2015

தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !

தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !


அருட்பெருஞ் ஜோதி ......அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை ....அருட்பெருஞ் ஜோதி 

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர் தஞ் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே 
கவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர் தமக்கே ஏவல் கழிப்பாற் செய்ய 
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ !...

பராபரன் உண்மை என்னும் தலைப்பில் ...வள்ளல்பெருமான் பாடல் 

உலகில் உள்ள எல்லா உயிர்களும் இறைவன் படைத்தது என்று உணர்ந்து அந்த உயிர்களுக்கு வரும் துனபங்களான ,பசி,பிணி,தாகம்,இச்சை ,எளிமை,கொலை பயம் போன்ற துன்பங்களைப் போக்கி மகிழ்ச்சி அடைய செய்விப்பதே மனித குலத்தின் இயற்கை குணமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

மேலும் அவர்களின் செயல் அனைத்தும் திருவருளின் செயல் என்பதை அறிந்தேன் என்கின்றார் . அவர்களையே உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாழ்த்தி அவர்களுக்கு திருவருள் திருநெறி என்னும் அருளை வாரி வழங்குவார் என்றும். அவர்களைப்  பின்பற்றி உலக மக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்றும் .அவர்களுடைய அருள் செயல்களை எண்ணி ஓதிட என்னுடைய வாய் பறையாய் அறைகின்றது என்கின்றார் .

வள்ளல்பெருமான் வலியுறுத்திய ஜீவ காருண்ய தொண்டினை சிரமேற்க் கொண்டு ''தீப அறக்கட்டளை '' யின் சார்பாக ,சிறப்பாக செயலாற்றிக் கொண்டு வருகின்றது.

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய உணவு வழங்கும் செயல்பாட்டை சென்னை நகரில் உள்ள முக்கிய இடங்களில் தினமும் 6000,ஆயிரம் நபர்களுக்கும்,  ஏராளமான பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும்  உணவு வழங்கிக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஆதரவற்ற ஏழை எளிய குடும்பகளுக்கு அரிசி,ஆடை,வழங்கிக் கொண்டும்,பிணியால் வாடும் பிணியாளர்களுக்கு பிணியை போக்கியும்  தொண்டு செய்து கொண்டு வருகிறார்கள் .

மேலும் கல்வி பயிலும் ஆதரவு அற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அவர்கள்  மேற்படிப்பிற்காக கல்வி உக்கத்துகையாக தீபம் அறக்கட்டளை யின் சார்பாக அவர்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு பணம் கொடுத்துக் கொண்டும் வருகின்றார்கள் ..

சென்னை வேளச்சேரி ''தீபம் அறக்கட்டளையின்'' சார்பாக நடமாடும் நித்திய அன்ன தருமச்சாலை ஆறாம் ஆண்டு விழா 17--05--2015 ஆம் தேதி ,மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்

அவர்களின் அறப்பணி மிகவும் சீரும் சிறப்புமாறு வளர வளம்பெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டுமாய் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்,

தீபம் அறக்கட்டளையின் சார்பாக தொண்டு செய்யும் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும்,அவர்களுக்கு உதவி செய்யும் கருணை உள்ள தயவாளர்களுக்கும்,அவர்களால் பயன் பெரும் அனைத்து ஆன்மநேய அன்புள்ளங்களுக்கும்,அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு வருகைதரும் அன்பு உள்ளங்களுக்கும்  இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன் .

இங்கனம் ;--
செ ,கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
108,C,நந்தா இல்லம்
வள்ளலார் வீதி
வய்யாபுரிநகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002
SELL ;--9865939896 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு