அருளின் அருமை,அருளின் பெருமை,அருளின் ஆற்றல் !
அருளின் அருமை,அருளின் பெருமை,அருளின் ஆற்றல் !
1,அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே !
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே !
2,அருள் உறின் எல்லாம் ஆகும் இது உண்மை
அருள்பெற முயல்க என்று அருளிய சிவமே ---
3,அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே ---
4,அருள் பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே ---
தெருள் இது எனவே செப்பிய சிவமே ---
5,அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே ---
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே ---
6,அருட்சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ் சுகம்
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சிவமே ----
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சிவமே ----
7,அருட் பேறதுவே அரும் பெறற் பெரும் பேறு
இருட் பேற் அறுக்கும் என்று இயம்பிய சிவமே ---
இருட் பேற் அறுக்கும் என்று இயம்பிய சிவமே ---
8,அருட் தனி வல்லபம் அதுவே எல்லாஞ் செய்
பொருட் தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே ---
பொருட் தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே ---
9.அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள் நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே .
பொருள் நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே .
இப்படி ஒன்பது நிலைகளின் அருளின் அருமை,பெருமை, ஆற்றல் களை ஆண்டவர் வள்ளலாருக்குக் தெரிவித்து உள்ளார்
இந்த அருள் நிளைகளைப் பெற்றவர்கள் மரணத்தை வென்று ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழலாம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு