திங்கள், 6 ஏப்ரல், 2015

உண்மைக் கடவுள் ஒருவரே !

உண்மைக் கடவுள் ஒருவரே !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே உண்மையானக் கடவுள் யார் ? என்பதே தெரியாமல் இருந்தது .

சமயங்களும் மதங்களும் ,தத்துவங்களான பொருள்களையே கடவுள் என்று அறிமுகப் படுத்தி இருந்தார்கள் .அந்தக் கடவுள்கள் எல்லாம் அழிந்துப் போகக் கூடிய கடவுள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் வள்ளல்பெருமான் .

எல்லா அண்டங்களையும்,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும், எல்லா கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,

எல்லா தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,

மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருள் சத்தியால்,
தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,

எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,
சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் ,தமக்கு ஒரு வாற்றானும் ,ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமையாக இயங்கி இயக்கிக் கொண்டு இருபவர்தான்

அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுளாகும்.

அந்தக் கடவுள், ஆணோ,பெண்ணோ,அலியோ (அதுவோ ) அல்ல .அது அருட் பெரோளியாகும்

அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும்,நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றவர் ஒருவரே

அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுளாகும்.

மற்றபடி உலகில் உள்ள அனைத்துக் கடவுள்களும் பொய்யானக் கடவுள்கள் என்பதை உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் படைத்தவர்கள் அறிவாலே அறிந்து கொள்ளவேண்டும்,

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு