திங்கள், 20 ஏப்ரல், 2015

அருட்பெருஞ்ஜோதி அகவல் திருநாள் !

அருட்பெருஞ்ஜோதி அகவல் திருநாள் !

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் ஒரே இரவில் 1596,வரிகள் அடங்கிய ''அருட்பெருஞ்ஜோதி அகவல்''
18--04--1872,ஆம் ஆண்டு ( ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் 8.ஆம் நாள் வியாழக்கிழமை ) அன்று எழுதி உலக மக்களுக்கு அருளி உள்ளார் .

வள்ளல்பெருமான் எழுதிய ''அருட்பெருஞ்ஜோதி அகவல்'' தினத்தை சன்மார்க்க அன்பர்கள் ,அருட்பெருஞ்சோதி அகவல் தினமாக, அகவல் பாராயணம் செய்து வழிப்பட்டு கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இந்த ஆண்டு 21--4--2015,ஆம் நாள் சித்திரை 8,ஆம் நாள் ,ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களிலும்,சன்மார்க்க அன்பர்கள் ,அகவல் பாராயணம் செய்து ,பசித்த ஏழைகளுக்கும் ,மற்றும் உள்ள அன்பர்களுக்கும் அன்னதானம் செய்து வழிபாடு செய்வோம்.

ஆகவே இத்தகைய சிறப்பு மிகுந்த தினத்தில், அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அகவலை பாராயணம் செய்தால்,எல்லாத் தீமைகளும் ஒழிந்து நன்மை விளைவிக்கும் என்பது ஆண்டவரின் கட்டளையாகும்.

கவல் பாராயணம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு