ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எழுவகைப் பிறவி !

எழுவகைப் பிறவி !

இந்த மனித தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு ,அதுபோல் ஒவ்வொரு உயிர் இனங்களுக்கும் ஏழு பிறப்பு  உண்டு.அதேபோல் நாம் தாவரங்களில் இருந்து மனித தேகம் கிடைக்க பல கோடி பிறவிகள் எடுத்துள்ளோம்.

எல்லா பிறப்புகளிலும் மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ளப் பிறவியாகும்.மனிதப் பிறவிக்கு கொடுத்த ஏழு பிறப்புகளின் முடிவுக்குள், இறைவன் அருளைப் பெற்று பேரின்ப நிலையை அடைய வேண்டும்.அப்படி அடையவில்லை என்றால்,கிழ்ப்  பிறவிக்குத் தள்ளப்படும்.

அதைக் கருத்தில் கொண்டுதான் பிறந்த பிறப்பில் இதில்தானே நித்திய வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து வாருங்கள் என்று வள்ளல்பெருமான் அழைக்கின்றார்.

பிறப்பின் ரகசியம் !

ஒவ்வொரு ஏழு பிறப்புகளிலும் ஒவ்வொன்றில் ஆனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறு பிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் ,மண்ணில் மறைந்து இருந்து ,மறு கல்பத்தில் தோன்றி ,இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்தும் பிறந்து முடிவில் இத்தேகம் கிடைத்தது.

இந்த மனித தேகத்திற்கும் ஏழு பிறவி உண்டு ;--

யாதெனில் ;- கர்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியா  இருப்பது  ஒன்று.1,அவயவாதி உற்பத்தி காலம் ஒன்று ,2,பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று .3,குழந்தைப் பருவம் ஒன்று.4,பாலப் பருவம் ஒன்று. 5,குமாரப் பருவம் ஒன்று.6, விருத்தப் பருவம் ஒன்று.7,ஆகப் பிறவி ஏழு .

இவ்வாறே தாவர முதலிய வற்றுக்கும் உண்டு.

மேலும் ஸ்தூலப் பிறப்பு,ஏழு,7,சூட்சமப் பிறப்பு ஏழு ,7,காரணப் பிறப்பு ஏழு 7,

ஆதலால் மேற்குறித்த ஸ்தூலப் பிறப்பு,..சூட்சமப் பிறப்பு..யாதெனில் ;--சாக்கிரம் 1,சொப்பனம்,2,சுழுத்தி ,3,சாக்கிரத்தில்சொப்பனம்,4,
சாக்கிரத்தில் சுழுத்தி,5,சொப்பனத்தில்,சொப்பனம்,6,சொப்பனத்தில் சுழுத்தி7,,....அகப் பிறப்பு ஏழு 7,

காரணப் பிறப்பு,;--மனோ சங்கல்பங்கள் எல்லாம் பிறவி.ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு ,

மனித தேகத்தில் அகத்தில் உள்ள ஆன்ம ஒளியில் உள்ள அருளைப் பெற்றால்,ஏழு பிறவிகளும் நீங்கி , நினைப்பு மறைப்பு என்ற திரைகள் நீங்கி ஊன உடம்பை  ஒளி உடம்பாக மாற்றம் செய்து,கடவுள் நிலையை அடையலாம் என்பது சுத்த சன்மார்க்க kolkaiyaakum.

இதுவே பிறவியின் இரகசியமாகும்.

அன்மநேயன் ஈரோடு ,செ, கதிர்வேல்.



  . 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு