செவ்வாய், 7 ஜூன், 2011

புருவ நடுவில் உள்ள அமுதம்

ஆன்மநேய அன்புடைய சகோதரி அவர்களுக்கு வந்தனம் 

நம்முடைய புருவமத்தியில் உயிர் ஒளி என்னும் ஆன்மா இருக்கிறது 
அதற்கு பெட்டி என்பது பெயராகும் அந்த பெட்டியில் உள்ள உயிர் ஒளியில் 
அமுதம் என்ற ஆற்றல் வாய்ந்த திரவம் இருக்கிறது.அது இறைவனால் 
வைக்கப்பட்டுள்ள பொக்கிஷமாகும்,அதை எடுத்தால்தான் மரணத்தை 
வெல்ல முடியும்.அதை எடுக்க பல ஜானிகள் பல வழிகளை காட்டியுள்ளார்கள் 
அவர்கள் காட்டிய வழியில் சென்றவர்கள்,முழுமை பெறாமல் மரணத்தை 
தழுவி விட்டார்கள்.

வள்ளலார் வந்துதான் அந்த பெட்டியிலுள்ள பொருளை எடுக்க சரியான வழியை 
காட்டினார்கள்.அந்த வழி என்ன வென்றால் அன்பு ,தயவு, கருணை என்னும் 
சாவியைப் பெற்றால்தான் அந்த பெட்டி திறக்கும்.வேறு எந்த வழியாலும் அந்த 
பெட்டி திறக்காது என்றார் .

அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ 
பெருக என அது திறக்கும் பெருந திறவு கோலும் 
எட்டும் இரண்டும் தெரியாதே ஏன் கையிலே கொடுத்தீர் 
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் 
அட்டி செய நினையாதீர் அரை கணமும் தரியேன் 
அரைக கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக 
வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் உம ஆணை 
மணி மன்றில் நடம புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !

என்று வள்ளலார் இறைவனை கேட்கிறார்.வள்ளலாருக்கு பெட்டியும் 
அதில் உள்ள பொருளும்,அதை திறக்க வேண்டிய சாவியும் கிடைத்து 
விட்டது,ஆனால் அவரால் திறக்க முடியவில்லை,அவருக்கு சாவி எப்படி 
கிடைத்து என்றால்,அவர் உண்மையுடன் வாழ்ந்தார்,பல தெய்வங்களைப் 
பற்றி பக்தி பாடல்களை பாடினார்.யோகம,தவம,தியானம் போன்ற 
அனைத்து செயல்களிலும்,ஈடுபட்டார்,பசி பட்டினி யோடு இருந்து இறைவனை 
இடைவிடாது தோத்திரம் செயதார்கள்.அதனால் அவருக்கு இறைவன் 
பெட்டியையும் காட்டினார் பெட்டியிலுள்ள பொருளையும் காட்டினார் 
அதை திறக்கும் திறவு கோளையும் அதாவது சாவியும் கொடுத்தார் .
ஆனால் சாவியை போட்டால் பெட்டி திறக்க வில்லை ஏன் திறக்க வில்லை 
எதனால் திறக்க வில்லை என்பதை உணர்ந்த வள்ளலார்.ஆண்டவரிடத்திலே 
கேள்வியை கேட்கிறார் .

அதற்கு ஆண்டவர் விளக்கம் தருகிறார் .என்மகனே நீ என்னை இடைவிடாது 
போற்றி புகழ்கின்றாய் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது.ஆனால் 
நீ இந்த உலக உயிர்களுக்கு என்ன செய்தாய்,அதை உன்னால் முடிந்ததை 
செய் பிறகு அந்த பெட்டியை திறக்கும் வழியை சொல்லுகிறேன்,என்று 
சொன்ன வுடன்,வள்ளலார் தெளிவடைகிறார்.சுய நலத்துடன் நாம் வாழ்ந்தால் 
அருள் கிடைக்காது என்பதை உணர்ந்து வள்ளலார் வடலூரில்,1867--ஆம் 
ஆண்டு ஏழைகளின் பசிப்பிணியை போக்கும் தருமச்சாலையை 
அமைக்கிறார்,

அந்த தருமச்சாலையை அமைத்து சாதி மதம் சமயம் என்ற பேதமில்லாமல் 
அனைவருக்கும் பொதுவான உணவு வழங்கும் முறையை உலகத்திலே 
எங்கும் இல்லாத ஒரு செயல் பாட்டை உருவாக்குகிறார்.அன்று தொடங்கிய 
அந்த தருமச்சாலை இன்றுவரை தொடர்ந்து உணவு வழங்கப் பட்டுவருகிறது 
என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

அதன் பின்தான் வள்ளலாருக்கு அருள் வைக்கப்பட்டுள்ள பெட்டி, சாவி 
போட்டவுடன் திறந்தது அதை வள்ளலாரே சொல்கிறார் 

பாடல் வருமாறு ;--

காலையிலே என்றனக்கே கிடைத்த் பெரும் பொருளே 
களிப்பே ஏன் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே 
மேலையிலே இம்மையிலே வொருமையிலே தவத்தால் 
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச 
சாலையிலே யொரு பகலில் தந்த தனிப்பதியே 
சமரச சன்மார்க்க சங்கத்தலை யமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்த மொழி அணிந்தாடும் 
மாநடத்து ஏன் அரசே என் மாலை அணிந்தருளே !

வடலூரில் வள்ளலார் தருமச்சாலையை ஆரம்பித்த பிறகுதான்,அருள் 
வைக்கபட்டுள்ள கண் புருவ பூட்டு திறக்கப்பட்டது ,அவை திறக்கப்பட்டவுடன் 
அருள் என்னும் அமுதம் தன்னுடைய உடல் முழுதும் ஊற்று போல் 
நிறைந்தாகும்.அத அருள்அமுதம்தான் ஊன உடம்பை ஒளி உடம்பாக
மாற்றினார் மரணத்தை வென்றார் என்பது வள்ளலார் காட்டிய வழியாகும்,

அந்த அமுதம் எப்படி வந்தது என்பதை அருட்பா அகவலில் தெளிவு 
படுத்துகிறார்.

தோலெலாங் குழைந்திடச சூழ்நரம்பனைத்தும்
மேலேலாங் கட்டவி விட்டு விட்டியங்கிட

என்பெலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட 
மென்புடைத் தசை எலாம மெய்யுறத் தளர்ந்திட 

இரத்தம் அனைத்தும் உள் உருகிடச சுக்கிலம் 
உரைத்திட பந்தித்து ஒரு திரளாயிட 

மடல் எல்லாம் மூளை மலர்ந்திட அமுதம் 
உடல் எல்லாம் ஊற்று எடுத்து ஓடி நிரம்பிட 

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத் 
தண்ணிய உயிர்ப் பிணிற் சாந்தம் ததும்பிட 

உண்ண்கை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய்த் துடித்து அலறிட வளர செவித் துணை களிற 
கூயிசைப் பொறி எல்லாம் கும்மெனக் கொட்டிட 

மெய் எல்லாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக் 
கை எல்லாம் குவிந்திடக் கால் எலாம சுலவிட 

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட 
இனம் பெறு சித்தம் மியைந்து களித்திட 

அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப் அமைந்திடச 
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட 

அறிவுரு அனைத்தும் ஆனந்தம் மாயிடப் 
பொறியுறு மான் மதம் போதமும் போயிடத் 

தத்துவ அனைத்தும் தாமொருங் கொழிந்திடச 
சத்துவ ஒன்றே தனித்து நின்று ஓங்கிட 

உலகெலாம் விடய உளம எலாம மறைந்திட 
அலகிலா அருள் ஆசை மேற் பொங்கிட 

என்னுளத் எழுந்து உயிர் எலாம மலர்ந்திட 
எண்ணுலத்ஓங்கிய என்தனி அன்பே !

என்று அமுதத்தின் தன்மையை விளக்கமாக சொல்லியுள்ளார் 
அமுதம்தான் அந்த பெட்டியில் உள்ளது,அந்த பெட்டி ஆன்மாவில் 
உள்ளது அதை திறக்க அன்பு தயவு கருணை என்னும் உயிர்
இறக்கம் தோன்றினால்தான் அமுதம் சுரக்கும்.வேறு வகையில் 
அமுதம் சுரக்காது என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான 
கருத்துகளாகும்.

என்னை தூக்கி விட்டது யாதெனில் தயவு என்னும் கருணைதான் 
தூக்கி விட்டது வேறு எதுவும் என்னை தூக்கி விடவில்லை என்பது 
வள்ளலாரின் வார்த்தைகளாகும்.

நம் சிற நடுவில் இருக்கும் அமுதம் மனித குலத்திற்கு அனைவருக்கும்
வைக்கப்பட்டுள்ளது.அதுவே இறை அருளாகும் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு