வள்ளலாரின் அருள் அனுபவ பாடல் !
கண்புருவப் பூட்டு (5258) கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு ( 5259 ) சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5260 ) ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5261 ) ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் ( 5262 ) மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி ( 5263 ) துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு ( 5264 ) சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரை ( 5265 ) சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5266 ) வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு ( 5267 ) அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம் ( 5268 ) நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்குகையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு ( 5259 ) சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5260 ) ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5261 ) ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் ( 5262 ) மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி ( 5263 ) துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு ( 5264 ) சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரை ( 5265 ) சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு ( 5266 ) வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு ( 5267 ) அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம் ( 5268 ) நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு லிதாவிற்கு நன்றி --அன்புடன் கதிர்வேலு ஆன்மநேய அன்புடைய லலிதாவிற்கு வாழ்த்துக்கள் . திரு அருட்பாவில் உள்ள பாடல்களில் மிகவும் முக்கியமான பாடலாகும் . இந்த பாடலின் கருத்தை புரிந்து கொண்டாலே போதும் இரண்டு கண்களுக்கும் மத்தியில் இருக்கும் ஆன்மாவை அதாவது உயிர் ஒளியை மாயா சக்திகளாகிய புறத்தில் காணும் கண்கள்.உண்மையை பார்க்காமல் பொய்யைப்பார்த்து கொண்டு இருக்கிறது,என்று மறைகள் சொல்லுகின்றன,ஆனால் அந்த உண்மையை மறைகள் உணர்ந்தும் அதை தொடர்பு கொள்ளாமல் வேறு வேறு விதமாக நினைந்து பாடிக்கொண்டு இருந்ததுவே அல்லாமல் அதனுடன் ஐக்கிய மாக வில்லை என்கிறார் வள்ளலார் . ஆனால் அதை நான் கண்டேன் நான் அதுவானேன் ஆதலால் சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு,தனித்தனியாக இருந்த உயிர் ஒளியும் அருட்பேர்ஒளியும் ஒன்றாக சேர்ந்து விட்டது என்று தேவர்களும் மூவர்களும் என்னைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றன ஆதலால் இந்த பிறப்பில் எனக்கு அனைத்தும் கிடைத்து விட்டன,என்னுடைய துன்பமெல்லாம் நீங்கி விட்டது யார் எதைப் பற்றிப் பேசினாலும் எனக்கு கவலை இல்லை என்னுடைய பிறவிப்பயன் முற்றுப் பெற்று விட்டது இனிமேல் நான் அருட்பெரும் ஜோதியுடன் இருப்பேன் என்று பெருமைபட விளக்குகின்றார் வள்ளலார். என்னுடைய ஐயர் அருட்பெரும்ஜோதியின் அரசாட்சியை எனக்கு வழங்கி விட்டார் அதை பார்த்துக் கொண்டு இருந்த வேதம் ஆகமம். புராணம்,போன்ற அனைத்தும் அதை இயற்றிய அருளாளர்களும் இது என்ன அதிசயம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களாம் அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கலாம் . வள்ளல பெருமான் தான் கண்ட காட்சிகளையும் அனுபவித்த அனுபவங்களையும் மற்றவர்கள் பேசும் பேச்சுகளையும்,தனக்கு ஆண்டவர் அளித்த அருட் கொடையும் அதனால் தான் செய்யும் செய்கைகளையும்,மிக அற்புதமாக விளக்கும் பாடலாகும். மனிதனாக பிறந்த அனைவரும் ஆண்டவரை எப்படி அடைய வேண்டும் என்ற வழி முறைகளையும் அனைவரும் புரிந்து அறிந்து,அனுபவத்தில் கொண்டுவரும் வாழ்க்கை முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார் நமது வள்ளல பெருமான் , ஆதலால் வள்ளலார் சென்ற பாதையை விட்டு வேறு பாதையில் செல்லாமல் அவர் காட்டிய ஜீவகாருண்யம் பரோபகாரம்,இறைவனை இடைவிடாது நினைக்கும் சத் விசாரம் என்ற இரு பாதையும் சம்மமாக கொண்டு செயல்பட்டால் நமக்கும் வள்ளலாருக்கு கிடைத்ததுபோல் கிடைக்கும். அருள் என்பது கடவுள் தயவாகும் அந்த அருளை நாம் பெறுவதற்கு ஜீவ தயவும் ஆண்மநேயமும் மிக முக்கியமாகும். தயவு என்னும் கருணைதான் என்னை மேலே ஏற்றி விட்டது,அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்,அந்த ஒருமை என்பது.நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை மறந்து விடக் கூடாது.இதுவே ஒருமையாகும் ஆதலால் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம உயிர்போல் எண்ண வேண்டும். நம்மால் எந்த உயிர்களுக்கும் எந்த நேரத்திலும் துன்பம் விளைவிக்கக் கூடாது இதுவே நமக்கு வள்ளலார் காட்டிய ஆண்மநேயமாகும்.ஜிவகருனையாகும் இந்த பாடலை வெளியிட்ட லலிதா அவர்களுக்கு என்னுடைய அன்பு கலந்த பாராட்டுக்கள். அன்புடன் ;--ஆன்மநேயன் .கதிர்வேலு |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு