புதன், 1 ஜூன், 2011

நண்பருக்கு கடிதம்

உங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையாகும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு --அறங்குலவு தோழி இங்கே நீயுரைத்த வார்த்தை ,அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம்மொழி கேள்,உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்,உருவதுடன் பிறத்தல் பல பெருவதுமாய் உழலும் ,மறங்குலவு அணுக்கள் பலர் ,செய்த விரதத்தால் மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால் இறங்க்களில் ஏன் பேசுதலால் என்பயனோ,நடஞ்செய் இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே ;-என்கிறார் வள்ளலார் உண்மையான பெய்ப்போருளை விட்டு மாண்டு போகிறவர்களை குருவாக  ஏற்றால் நாம் அடைய வேண்டிய மெய்ப்பொருள் கிடைக்காது என்பது சத்தியமான உண்மையாகும்.வல்லாருக்கு குரு யார் என்பதை வள்ளலாரே சில்கிறார் ;--மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெரும்ஜோதி !என்கிறார் அதனால் தான் வள்ளலார் தன்னுடைய படத்தை மண்ணினால் செய்து கொண்டு வந்து காட்டிய போது கிழே போட்டு உடைத்து விட்டார் ,ஏன் என்றால் நமக்கு பின்னாடி வருபவர்கள் உண்மையான கடவுளை விட்டு விட்டு நம்மை கடவுளாக வழிபாடுவார்கள்,அந்த நிலைமை வந்து விடக் கூடாது,என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்துள்ளார். தன்னை யாரும் வணங்க்கவோ வழி படவோ கூடாது,எல்லாம் வல்ல நம் இறைவனையே தொழுவீர் ,புன்மார்க்கத்தவர் வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் என்றார் .இதி இருந்து நாம் புரிந்த கொள்ள வேண்டாமா? உலகில் உள்ள அனைவருக்கும் குருவாக இருப்பவர் ,நம்மை படைத்த இறைவன் அருட்பெரும் ஜோதிதான் என்பதை புரிந்து கொண்டால் மெய் அறிவு தானே விளங்கும் ,இதுவே நமக்கு வள்ளலார் காட்டிய உண்மை வழியாகும் உண்மை உணர்வோம் உண்மை வழியில் வாழ்வோம்.;-அன்புடன் கதிர்வேலு .   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு