வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu
அன்பரே ஜீவகாருண்யம் என்பது இதுவரையில் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் மற்ற உயிர்களிடத்தில் வாங்கிய கடனை அடைப்பதாகும்.நாம் பலகோடி பிறவிகள் எடுத்துள்ளோம்,எத்தனை உயிர்களின் உழைப்பில் வாழ்ந்துள்ளோம் என்பது தெரியாது.முதலில் நம்முடைய தாய தந்தையர்கள் மூலமாக நாம் இந்த உலகத்திற்கு வந்துள்ளோம்,அதற்கு முன்னாடி எத்தனை தாய தந்தையர் என்பது நமக்கு தெரியாது,அவரக்ளுடைய உழைப்பிற்கு என்னபதில் சொல்லப்போகிறீர்கள்.அவர்களுடைய உழைப்பு எவ்வளவு என்று கணக்குத்தெரியாது.அதனால் தான் ஜீவகாருண்யம் என்பது நாம் வாங்கிய கடனை திருப்பித்தருவதாகும்.கடனை திருப்பித்தராமல்ம்கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்.அதனால் முதலில் ஜீவகாருண்யம் என்பது மிகமுக்கியமாகும்.நமக்கு முன்னோடிகள் இதை தெரியாமல் தனக்காக் தவம்,யோகம்,தியானம்.,காடு ,மலை போன்ற இடங்களுக்கு சென்று வீணாக அழிந்து போய் விட்டார்கள்.ஊசியின்மேல் காலூன்றி ஒருகோடிகாலம் தவம் செய்யினும் காண்பரிதாம் கடவுளாகி எகிறார் வள்ளலார்.எவ்வகைதான் தவம் செய்யுனும் மெய்தரிதாம் தெய்வம் என்கிறார் வள்ளலார்.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரித்ல் வேண்டும் ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் எண்கிறார் வள்ளலார்.அதனால் வள்ளலார் முதன் முதலில் எழைகளின் ப்சியைப்போக்க தருமச்சாலையை தோற்றுவித்தார்.அதன் பின் தான் அவருக்கு எல்லா ஆற்றல்களும் கிதைத்தன எனபதை அவரே திரு அருட்பாவில் எழுதிவைத்துள்ளார்.மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெருபயன் விளைவுகளெல்லாம் தருமச்சாலையிலே ஒரு பகலில் கிடைத்த பெரும்பதியே என்கிறார்.ஆதலால் அன்பரே நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தால் தெளிவாக பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் அன்பிற்கு என்னுடைய அறிவார்ந்த வாழ்த்துக்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு